காதல்.. காதல்...காதல்... 053

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல்.. காதல்...காதல்... 053

காதல் காதல்
உன்னை மனதில் நினைத்தே உயிரில் கலந்தே
உருகினேன்
எண்ண ஏற்றங்கள் ஏக்கத்தோடு பவனி வர
வந்த காதல் வானவில்லாக
வளர்கின்ற பிறையோடு
வளர்ந்தே வந்ததே
எந்தன் காதலே

உன்னைத் தாலாட்ட
நினைவுத்
தொட்டில் கட்டி
நித்தமும் ஊஞ்சலாட

வந்திட்ட
வண்ணநிலவு
வஞ்சியின் அழகினில் குறைய
மனசிம்மாசனத்தில் மண்டியிட்டே அமர்ந்தாளே
மானசீகமாய்

ஆதாம் ஏவாளுக்குப்
பின்னே
அடுத்தகாதல் நம் காதலே
மனதில் கோட்டை கட்டி மன்த்தனைத் துணைக்கழைத்து
துயிலாமல்
தாலாட்டி
தஞ்சமென வந்திட்டாளே
தங்கரதமானவளே

எந்தன் மனரதத்தில்
ஏணி வைத்து ஏறியே ஏற்றங்கொண்டே வந்தே நெஞ்சில் தஞ்சமென
கொஞ்சி
விளையாடியவளே
எங்குலங்காக்கும்
தேவதையே

எந்தன் நினைவுப் பந்தலில்உந்தன் முகத்தோரணம்
நித்தமும் உலா வந்தே
கனா காணவைக்குதடி
எந்தன் தங்கமே
என்னுயிரின் உயிரே


முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை