தை பிறந்தால் வழிபிறக்கும் ...

தை பிறந்தால் வழிபிறக்கும்

தை பிறந்தால் வழிபிறக்கும் ...

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற பழமொழி நமக்கு தெரியும். ஆனால்
இதன் சரியான பொருள் ஒரு சிலருக்குத்தான் தெரியும். மார்கழி மாதம் பனி
காலம் என்பதால் மேகமூட்டங்களால் சூரியன் மறைகக்கப்பட்டு இருக்கும்.
தைமாதத்தில் மேககூட்டங்கள் கலைந்து ஆதவன் வெளியே தெரிவதால் தான்
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உருவானது.
பொங்கலை நாம் தமிழர் திருவிழா என்றே அழைக்க வேண்டும். நான்கு
நாட்கள் நாம் தமிழர் திருவிழாவை கொண்டாடுகிறோம். முதல் நாள் போகி
திருவிழா பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப
நம்மிடம் இருக்கும் பழைய விஷயங்களை கலைந்து புதிய விஷயங்களை
கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து.
இரண்டாம் நாள் பொங்கல் திருவிழா இன்று எத்தனையோ
கிருமிநாசினிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் அன்றே தமிழர்கள்
சுண்ணாம்பை கிருமிநாசினியாக பயன்படுத்தினர். சூரியன் உதயமாவதற்கு
முன்பே எழுந்து வண்ண வண்ண கோலம் போட்டு புதுப்பானையில்
பொங்கலிட்டு சூரியனை வணங்குவார்கள்.
மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் சூரியனை மட்டும் வணங்காமல்
தனக்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கு வணக்கம் செலுத்தும் விழாவே
மாட்டு பொங்கல் திருவிழா.
நான்காம் நாள் காணும் பொங்கல். உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
என அனைவரையும் சந்திக்கும் திருவிழா காணும் பொங்கல். இத்தகைய
சிறப்புகளை உடைய பொங்கல் திருநாளை நாம் தமிழர் திருவிழா என்று தானே
அழைக்க வேண்டும்.
 

-முனைவர். எட். பிரியதர்ஷினி,
உதவி பேராசிரியை,
வணிகவியல் துறை,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
திருநெல்வேலி