வீர மங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் கவிதை

வீர மங்கை வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியார் 
பிறந்த தினம்!

கணவனை/ நாட்டு மக்களைக் கொன்ற நவாப்பைக் கொல்ல
கங்கணம் கட்டிய 
பாரதி கண்ட புதுமைப் பெண்!
 
ஆயுதம் ஏந்தி போராடிய 
முதல் இந்திய விடுதலைப் போராளி!
சபதமிட்டு பிரிட்டிஷ் படையை வென்று இந்திய விடுதலைக்கு 
வித்திட்ட முதல் வீரமங்கை!

ராமநாதபுரம் 
சமஸ்தான இளவரசி! 
சிவகங்கை சீமை 
வடுகநாதனின்  மனைவி!
எண் மொழி  கற்ற பன்முக வித்தகி!
உருதுவில் பேசி ஹைதர் அலியை திகைக்க வைத்த திறமைசாலி!
அடக்கு முறையை எதிர்த்து ஆளுமையாம் மகளிர் சக்தியை மண்ணுக்கு உணர்த்திய 
துணிச்சல்காரி! 

ராமாயணம்/மகாபாரதம்/இதிகாசம் உபநிஷத்களை தலை கீழ் பாடமாக கற்றறிந்த  சகலகலாவல்லி!
கல்வி/விளையாட்டு/ சிலம்பம் ,
வாள், ஈட்டி ,அம்பு 
எறிதலில் திறமைசாலி!

ஆங்கிலேயனின் கொடியை இறக்கி அனுமன் கொடியை பறக்கச் செய்து
சிவகங்கையை மீட்டெடுத்த தாரகை!

சிதைந்த கோட்டை சீரமைப்பு, விவசாயம் விரிவுபடுத்தல், 
ஆறுகளை அகலப்படுத்தல், கால்வாய்களை தோண்டுதல் 
கோயில் செப்பனிடல் 
 போன்ற பணிகளை 
செம்மையாக ஆற்றியவள்!

இளம் வயது முதல் 
இறக்கும் வயது வரை பயமறியாமல்,
பல்லாங்குழி/ அம்மானை ஆடும் வயதில் வாள் போர் பயிற்சி கற்றவள்!

முதல் தற்கொலை படை கண்ட *குயிலி* யின் நெருக்கமானவள்!
தன்னைக் காட்டிக் கொடுக்காத *உடையாளுக்கு*  நடுகல் நட்டு 
தன் திருமாங்கல்யத்தை 
முதல் காணிக்கையாக்கி 
வீர அஞ்சலி செலுத்தியவள்! 

வீரத்தில் ஜான்சி ராணிக்கும் முன்னோடியாகி,
தேசப்பற்று மிக்க 
தமிழ் போராளியாகி,
ஹைதர் அலி /மருது பாண்டியர் உதவியுடன் திண்டுக்கல் படையோடு வெள்ளையனை திண்டாட வைத்த
வீரமங்கை வேலுநாச்சியின்
பிறந்த தினத்தில் அகமகிழ
மண்ணிலிருந்து விண்ணுக்கு
ஜனன தின வாழ்த்துக்களை பகிர்வோம்!

முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன் .,
வாலாஜாபேட்டை.