மீனவன்

மீனவன் கவிதை

மீனவன்

மீனவன்.

பாதை இல்லா ஊருக்கு
பனிப் பொழியும் காலையிலே
படகு தள்ளிப் புறப்பட்டான்
பார்த்துப் போய்வா என்றவளின் கணவன்

மீனுக்குப் பாய் விரித்து
காவலுக்கு அவன் இருந்தான்
காற்றுப் பாடல் அவன் கேட்டான்
நிலவின் காட்சி அவன் ரசித்தான்

ஊர் விட்டு வெகுதூரம்
ஆள் இல்லா ஊருக்கு
படகேறி வந்துவிட்டான்
புதையல் அதை அள்ளிச் செல்ல

மீனுக்கு தூண்டில் போட்டு
படகு அது மிதக்கும்
வீட்டுக்கு தூண்டில் போட்டு
அவன் மனமும் மிதக்கும்

நள்ளிரவு நண்பகலாகும்
நாட்களும் தண்ணீரிலே 
தோன்றி மறையும்

ஊர் வந்து சேரும் வரை
தரை படாது இவன் கால்கள்
மீனோடு இவன் வந்தால்
வறுமை தொடாது இவன் வீடு


- ஹஸன் எம் பஜீத்,
இலங்கை