தமிழர்களின் பெருமைகள் 017.

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் பெருமைகள் 017.

தமிழரின் பெருமைகள் 

முன்னுரை
"தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்” என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர் பண்பாடு, உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. பலவித துறைகளிலும் அவர்களின் உயர்ந்த சிந்தனை மற்றும் சாதனைகளை காண்போம். 
 இயற்றமிழ் :
உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள் தமிழர்கள். அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஐம்பெரும் காப்பியங்களே. வீரச்சுவை, இனிமைச் சுவை, மருந்து, இயற்கை என்று அனைத்திற்கும் பழங்காலத்தே படைப்பு கண்டவன் தமிழனே. உலகின் உயிர்வளம், இயற்கை வளம், செல்வ வளம், போர்த்திறன், செயல் திறன், அரசியலமைப்பு போன்றவற்றை தனது காப்பியங்களிலேயே கண்முன் நிறுத்தி வியக்க வைத்துள்ளனர் தமிழர்கள்.
 இசைத்தமிழ் :
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையின் பொருள்களிலிருந்து - அவற்றின் ஒலிகளிலிருந்து இசையை அமைத்துக் கொண்டனர். குயிலின் குரல் இனிமையைக் கேட்டு மகிழ்ந்ததைப் போல், தாம் கேட்டு இன்புற்ற பறவைகளின் இனிய ஒலிகளிலிருந்தும், வண்டுகளின் ரீங்காரத்திலிருந்தும், மூங்கிலின் ஒலியிலிருந்தும் பெற்ற இன்னிசையைத் தமிழ் இசையாக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள். எனவே தமிழருக்கே உரிய தமிழ் இசை என்பது, இயற்கையிலிருந்து பிறந்தது.  இசைத்தமிழ் தமிழர்களின் குறைவில்லாத செல்வம். தமிழர்கள் நெஞ்சில் நிறைந்த செல்வம்.
தமிழர்களின் கட்டிடக்கலை
கல்லணை :
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களாலும் கண்டறிய இயலவில்லை. 

மாமல்லபுரம் :
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.
திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு காரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது  மூன்று வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களை யும் கணக்கிட்டு அதற்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,எப்படி பாராட்டாமல் இருப்பது.
கடல் நடுவே ராமேசுவரம் :
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள்,590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும்.தமிழர்களின் சிந்தையும் கடின உழைப்பும் அபாரமானது.


தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை அருள்மொழித்தேவன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை விமானத்தை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே .ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. 
முடிவுரை
மொழியில் உயர்ந்தது தமிழ்மொழியே - பண்டு
முதல் நாகரிகமும் பழந்தமிழ் மக்களே
என்னும் கூற்றுக்கு ஏற்ப வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கும் தமிழருக்கும் உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் தமிழினம் விதைத்துள்ளது என்று தானே அர்த்தம். எனவே தரணி போற்றும் தமிழரின் பண்பாட்டை எந்நாளும் போற்றுவோம்.வாழ்வில் உயருவோம்....

-சு.சுஷ்மிதா

முகவரி: சாமியாபுரம் கூட்ரோடு,(கிராமம்),

பட்டுக்கோணாம்பட்டி (அஞ்சல்),

பாப்பிரெட்டிப்பட்டி (வட்டம்),

தருமபுரி (மாவட்டம்)

அஞ்சல் எண்: 636905