தமிழரின் பெருமைகள்..! 07

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமைகள்..!  07

தமிழர்களின் பெருமை
முன்னுரை: 
தமிழ் மொழியாம் இனிய மொழியாம் . தமிழ் பேசும் மறவன் தமிழர்கள்.தழிழர்கள் இனிமையான மொழி பேசும் மக்கள். தமிழர்கள் பலம் வாய்ந்த மக்கள்.தமிழர்கள் என்றால் இனிமை.
தமிழ் மொழி: 
தன் மொழியை தாய் போல் நேசித்து சங்கம் வளர்த்த தமிழர்கள் . இலக்கியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை , திருக்குறள் , ஆத்திசூடி போன்ற பல நூல்கள் படைத்த தமிழர்கள். கற்பனை மற்றும் கருத்துக்கள் நிறைந்த நூல்கள் படைத்த தமிழ் மக்கள்.  பாரதியார், திருவள்ளுவர்,பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் கொண்ட தமிழ் நாடு. தமிழ் மொழி எங்கள் உயிர் மொழி என்ற தமிழ்ர்கள்.
குடும்ப அமைப்பு: 
தமிழர்களின் பெருமை குடும்பம் . தாய் தந்தை பாட்டி தாத்தா என்ற அமைப்பு கொண்ட குடும்பம் அமைப்பு. தமிழ்நாட்டின் பெருமை குடும்பம் அமைப்பு .பாசத்தின் அமைப்பு கொண்ட குடும்பம் அமைப்பு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தையின் அழகு தமிழர்கள். 
விருந்தோம்பல்: 
பசிக்கு உணவு தரும் மக்கள் தமிழர்கள். உணவு மகத்துவம் அறிந்த தமிழர்கள். வந்தவர்க்கு உணவு தரும் மக்கள். குணத்தின் மகிமை அறிந்த தமிழர்கள் . நம் நாட்டின் பெருமை உணவுகள் . பல இனிப்புகள் கொண்ட நாடு நம் நாடு. வள்ளலார் தந்த அமைப்பு அனைவருக்கும் உணவு . போன்ற பல சிறப்பு கொண்ட தமிழர்கள்.
கட்டிடக்கலை: 
தஞ்சாவூர் கோயில் சோழர்களின் சின்னம் . கட்டிடக்கலையின் மகத்துவம். நம் நாட்டின் கோயில் பேசும் நம் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் சிற்பக்கலை . ஓவியங்கள் பேசும் தஞ்சாவூர் . நம் நாட்டின் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை கட்டிடக்கலையின் சிறப்பு .கல்லனை கட்டிடக்கலையின் நுட்பம். நாகரிகம் வளர்த்த தமிழர்கள். 
கலைகள்: 
சிற்பக்கலை, ஓவியங்கலை, நாட்டியம்,இசை,நாடகம், தற்காப்பு கலை போன்ற பல கலைகளின் வித்தகர் நம் தமிழ் மக்கள். 
விவசாயம்: 
சூரியன் கடவுளை வணங்கும் தமிழர்கள். மழை மூலம் பல காய்கறிகள் கனிகள் வளர்த்த தமிழர்கள் . விவசாயம் தன் உயிர் போல கருதும் தமிழர்கள். ஏற்றுமதி இறக்குமதி சேமிப்பு என விவசாயத்தை மதிக்கும் தமிழர்கள். தமிழர் திருநாள் பொங்கல் விழா விவசாயத்தை மதிக்கும் தமிழர்கள் . 
அரசியல் புரட்சி: 
டாக்டர் அம்பேத்கர் சட்ட புரட்சி செய்த அறிஞர். அனைவரும் சமம் உணர்த்திய அரசியல் அமைப்பு.
பழங்கால ஆட்சிமுறை: 
மன்னர்கள் காலத்தில் தமிழ் நாடு மலர்ந்தது சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் ஆட்சி செய்த நாடு . தமிழ் போற்றும் மக்கள் தமிழ் மொழி சிறப்பு அறிந்த மன்னர்கள். இன்னும் பல மன்னர்கள் வாழ்ந்த நாடு நம் தமிழ் நாடு .
வீரம் : 
சுதந்திர நாடாக மலர போற்றிய வீரர்கள் வீரத்தமிழச்சி வேலுநாச்சியார் , பெரியார் ,பாரதி,வ.வு.சி ,முத்துராமலிங்கத்தேவர் இன்னும் பல புரட்சி யாளர்கள் நிறைந்த நாடு தமிழ் மொழி பேசும் தமிழ் நாடு.
கலாச்சாரம் : 
சேலை கலாச்சாரத்தின் அடையாளம். விருந்தோம்பல் . அன்பு பாசம் குடும்ப அமைப்பு போன்ற பல நல்ல குணங்கள் நிறைந்த தமிழ் நாடு .
மருத்துவம் : 
சித்த மருத்துவம் பல தாவரங்களின் மதிப்பு உணர்ந்த தமிழ் மக்கள் . உணவு தான் மருத்துவம் .உணவே கடவுள் என்று உணர்த்திய தமிழ் மக்கள்.
முடிவுரை: 
தமிழ் மொழி பேசும் மக்கள் . பாசத்தின் அடையாளம் வீரத்தின் சின்னம் நம் தமிழ் மக்கள் . தமிழ் மொழியை போற்றும் வோம் . தமிழ் தாய் மொழி பேசி மகிழ்வோம் . தமிழர்களின் பெருமை ஒற்றுமை . தமிழ் நாடு மலர செய்வோம் .


-மு.விக்னேஷ்வரி தூத்துக்குடி மாவட்டம்