பாரதீ...! 068

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதீ...! 068

 பாரதீ

முண்டாசுக்கவி என் பாரதியே!
மூடர்களை மூச்சடைக்க வைத்தவரே!
கவிதையதை எங்களுக்குள் தீயாய் பற்றவைத்தாய்!
காவியமாய் அதை யாமும் காக்க வைத்தாய்!
சொல்லொண்ணா  சொல்லோவியமே!
பெண்மையில்  வீரமதை விதைத்திட்டீர்!
விந்தைகள் பல புரிந்திடவும் உதவிட்டீர்!
பாரதத்தாயின் புதல்வராம் நீவீர்!
பார்போற்றப் புகழ்ந்திட்டோம்  காணீர் !

அன்று
அந்நியரை விரட்டினாய் சொல்லடியால்!
இன்று
அகிலமே அதிருது குண்டடியால்!
பாவையரை பார்போற்றவும்  உயர வைத்தாய்!
அவர் தேவையதை அறிந்தே கருத்து மழை பொழிந்திட்டாய்!


மண்ணடிமைத் தீர்த்தவரே!
பெண்ணடிமை முற்றிலும் தீர்ந்தால்
திவ்யமாய் திரிந்திடுவோம்!


உன் பார்வைத் தீயில்
பாவிகளை சுட் டெரித்தாய்!
பாட்டுத் தீயினால் பாரெங்கும் பரவிவிட்டாய்!
உன் பேச்சொலிகள்
எதிரிகளை பேச வொண்ணாவாக்கிவிடும்! 
பாஞ்சாலி சபதமதை எழுதிய பாரதீயே!
பார் புகழ வாழ நாங்களும் சபதம் எடுப்போம்.!

- திருமதி சு.கிரிஜா,
துறைத் தலைவர் & உதவிப் பேராசிரியர் (தமிழ்த் துறை)
திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் கல்லூரி.
தெ.கள்ளிகுளம்