வெல்லும் ஆற்றலை உடையவள் பெண் 057

புதுமைப் பெண் விருது கட்டுரைப்போட்டி

வெல்லும் ஆற்றலை உடையவள் பெண் 057

வெல்லும் ஆற்றலை உடையவள் பெண்

 அழகே தமிழே அழகிய தமிழ் மகளே,  தெத்துப்பால் தெறிக்க முத்துக்கள் சிரிக்கும் எழிலே பெண்மைக்கு பெயர் போன இத்தாய் திரு நாட்டில் பெண்மையை பற்றி எழுதியதில் பெருமை அடைகிறேன்.

களத்து மேடு ஏறினாலும் கட்டந்தரையில் இருந்தாலும், வானம் ஏறிச் சென்றாலும் வயக்காட்டில் இருந்தாலும் ஆணுக்கு நிகர் பெண் என்றார்கள். ஆனால், ஆணுக்கு மேலானவளை பெண் ஆணுக்கு நிகர் என்பதே ஒத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு, ஆணுக்கு, மேலானவள் என்றால் எப்படி ஒத்துக் கொள்ள முடியும் ஏட்டிலும் பாட்டிலும் மட்டுமே பெண்ணை ஏற்றுக் கொள்வது நியாயமா அக்காலத்தில் பெண்களை அடிமைகளாக விற்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால், இன்று சொந்த வீட்டிலேயே அடிமையாக அவமானப்பட்டு ஓரங்கட்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும், பெண்களின் அவல நிலையை என்ன சொல்வது பெண் என்பவள் மாவை பதப்படுத்துகிற புலி காரத்தைப் போல, வாழைத்தண்டில் பரவி கிடக்கிற கல்லை கரைக்கிற மருந்தைப் போல, தீக்குச்சிகளின் தலையில் மௌனமாக உட்கார்ந்திருக்கிற கரி மருந்தை போல, சீதள வெற்றிலைக்குள் சிறை கொண்ட சிவப்பைப் போல விளங்குவாள் தடைகளை தாண்டி சாதனை புரிபவளே பெண் என்பதே பெருமைப்பட வேண்டிய ஒன்று இசை அரசிகளாய், விளையாட்டு வீராங்கனைகளை, எழுத்தாளராய் மிகச் சிறந்த நிர்வாகியாய் பெண்கள் சுடர் விட்டு எரிகின்றனர் .

இத்தனை செய்தாலும் பெண்ணை பாலியல் நோக்கில் பார்க்கும் அவலம், இச்சமூகத்தில் நோய் போல பரவி விட்டது. இதனால் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி மனதுயர் அடைகின்றனர். பெண் ஒரு போக பொருள் அல்ல, அழகு சாதன பொருள் அல்ல என, ஒவ்வொரு கணமும் நிரூபிக்க வேண்டும்.

பெண்ணின் மூளை மென்மையானது மொழி மையம் அவள் மூலையில் அதிகம் உள்ளது. 14 15 வயதில் பையன்கள் சொற்களை கோர்த்து சரளமாக பேசத் தயங்குவார் பெண் பிள்ளைகளோ பொழிந்து தள்ளுவர் மீனவப் பெண்கள் கணவன்மார்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பின்னர் பத்து பதினைந்து பெண்களாக படகு செலுத்தி கடலுக்குள் மூழ்கி கடல்பாசியை கடலோடு விளையாடி கஷ்டப்பட்டு காசு சேர்க்கும் கடற்பரப்பு பெண்கள் இன்றோ உடல் உழைப்புக்கு மேலாக வேலை செய்து கணவன் சுமையை குறைக்க படாத பாடு படுகிறார்கள்.

இக்காலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகர் என்றாலும், பெண்ணுக்கு துணை நிற்பவர்கள் ஆண்கள் தான். சரித்திர சாதனை படைக்க தோளாகவும், சறுக்கி விழ நேரும்போது தாங்கிப் பிடிக்கும் தோழாகவும், ஆண்கள் விளங்குகிறார்கள் .

பெண்மையை போற்றத் தெரிந்த இந்த காலத்து ஆண்கள் அவர்கள் பெண் என்பவள் பெரும் சக்தி ஒன்றை பலவாக்கும் பேராற்றல் உடையவள். பெண்கள் மகத்தானவர்கள் அவர்கள் கண்ணீர் துளிகளுக்கும் திராவக திறன் உண்டு துவண்டு விழாதே துணிவாக எழுந்து நில் கலைத்தாலும், சளைக்காதே உதிர்ந்தாலும் சருகுகள் சரித்திரமாய் மாறும் வானம் வசப்படும் வெற்றி நமதே .

-A . மதுமிதா,

7A இந்திரா காந்தி தெரு ,

கக்கன் காலனி கே கே நகர்,

திருச்சி 21