பெண்ணின் பெருமை 056

புதுமைப் பெண் விருது கட்டுரைப்போட்டி

பெண்ணின் பெருமை 056

முன்னுரை:

" மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல
மாதவம் செய்திட வேண்டும் அம்மா"
              .                    -கவிமணி

       அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று கூறினார் அவ்வை.
அதிலும் மானிடப் பிறவியில் பெண்ணாகப் பிறப்பது பெரிய வரம் என்கிறார் கவிமணி.
     பெண்களே நாட்டின் கண்கள்.
அத்தகைய பெண்ணின் பெருமையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பெண்ணின் பெருமை:

             'கல்வி அறிவில்லாதவர் கண் இல்லாதவர்'
என்பது போல பெண் கல்வி இல்லாத வீடு இருண்ட வீடு.
   'அடுப்பு ஊதும்பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்ற காலம் போய், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களே என்ற நிலைக்கு உயர்ந்துள்ளோம்.

        அன்று உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப்படைத் தேவைகளுக்கு கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை.
பாரதியார்,பாரதிதாசன், பெரியார் போன்ற தலைவர்களின் முயற்சியால் இன்று பெண்கள் சுதந்திரமாக உள்ளனர்.

ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று இல்லாமல் ஆண்களையும் தாண்டி பல  துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர்.

*விண்வெளி துறையில்- கல்பனா சாவ்லா
*கல்வியில்- சாவித்திரி போலே *மருத்துவ துறையில் -முத்துலட்சுமி அம்மையார்
*விளையாட்டு துறையில்- P.Tஉஷா,வில்லியம் சகோதரிகள் *அரசியல் துறையில்- அம்மா இந்திரா காந்தி ஜெயலலிதா
*விஞ்ஞான துறையில் - மேடம் கியூரி *காவல்துறையில் - கிரண்பேடி *வீரத்திற்கு  ஜான்சி ராணி,வேலு நாச்சியார்
     இன்னும் தீயணைப்பு துறை, எல்லை பாதுகாப்பு படை ,விமான ஓட்டுனர் இதுபோன்ற பல துறைகளில் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

     நாட்டின் வளர்ச்சிக்கான ஆசிரியர் துறையிலும் மருத்துவத்துறையிலும் பெண்களையே அதிகமாக தேர்வு செய்து வருகின்றனர். ஏனெனில் பொறுமையாகவும் அன்பாகவும் அக்கறையோடும் கவனிப்பார்கள் என்பதற்காக.

      ஏனென்றால் பெண் என்பவள் அன்பின் இலக்கணம்.
   பூவை போல் மென்மையானவள் எதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமை உடையவள்.

பெண்  பொறுமையானவள் என்பதால்தான் பூமிக்கு பெயர் பூமாதேவி ,ஆற்றின் பெயர்களில் எல்லாம் பெண்ணின் பெயர்களையே தேர்ந்தெடுத்து வைத்துள்ளனர்.

முடிவுரை:

        பெண்கள் பல துறைகளில் சாதிக்க  ஆண்களின் ஊக்குவிப்பு மற்றும் அவர்கள் கொடுக்கும் சுதந்திரமே.
    "போற்றுவோம் போற்றுவோம் பெண்மையை போற்றுவோம்     உயர்த்துவோம் உயர்த்துவோம் பெண்களை உயர்த்துவோம் மதிப்போம் மதிப்போம் பெண்களை மதிப்போம்"
                      நன்றி

          க.மகாலட்சுமி M.A.,B.Ed. ஆசிரியை,
          ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ,                  
           வீரசிகாமணி,
          சங்கரன்கோவில்,
         தென்காசி மாவட்டம்.