அம்மா

அம்மா

அம்மா என்றால் அன்பு!

அம்மா என்றால் அழகு!
அம்மா என்றால் தெய்வம்!
அம்மா என்றால் ஆசிரியை!
அம்மா என்றால் தோழி!
அம்மா என்றால் ஆறுதல்!
அம்மா என்றால் அரவணைப்பு!

அம்மா !நீ இருக்கும் போது அத்துணை யும் கிடைத்ததே !அம்மா!

அம்மா, நீ !மட்டும் பிரிந்ததபோது!
எல்லாரும் எனக்கிருந்தும்!!

யாருமில்லாத அனாதை போல தெரிகிறதே! அம்மா!

விடிந்தபின்பும்
வீணில்உறங்குவேன்!
நீ எழுப்புதில்லை!
வீதிக்கு வரும் தண்ணீரை கூட ,!
நான் சுமக்க சம்மதிக்கவில்லை!

பெற்றுவளர்த்து! இருபிள்ளைகளுக்குநான் ,தாயான பின்பும் கூட!

என்னை நீ !சிறு குழந்தை போலவே 
நினைத்து!
என் குழைந்தைகளை கூட !வளர்த்தெடுக்க
மருத்துவச்சி போல
உதிவிய அம்மா!!

நீ பிரிந்த பின்
விடியலுக்கு முன்எழுந்து‌!விழுந்து,விழுந்து! வீட்டுவேலை பார்த்து!

விரைவு பேருந்துக்காய்
விரைந்தே! போனாலும் !சிலநேரம் விட்டுவிடுவேன்!

பிள்ளைகளை பள்ளிக்குஅனுப்கூட! ஆளில்லாதுதவித்திடுவேன்!

எல்லாச் சுமைகளையும் நான் சுமக்க!
உன்னை நினைத்து
 பலநேரம் தவித்திருக்க!

என் சுமைதாங்கியே! நீ !இல்லா வாழ்க்கை
சுமையாக தெரிகிறதே! அம்மா!

நீ!பட்ட துயரை எல்லாம்! நினைத்துப்பார்க்க வைக்கிறேதே!அம்மா!

அம்மா !இருப்பவர்கள்
அவளை நேசியுங்கள்!
அம்மாவை இழந்தவர்கள் அவளை நினைவால் சுவாசியுங்கள்!!

ஒருபோதும்! ஒருநாளும் !ஒரு கைப்பிடி சோற்றுக் காய் கையேந்த வைத்துவிடாதீர்கள்!!

கண்ணீர் வர! சம்மத்கிகாதவளை!!
கண்ணீர் வடித்து கதற விடாதீர்கள்!

உதிரம் கொடுத்து உயிர் பெற வளர்த்தவளை!

உதறிதள்ளிவிடாதீர், தோழர்களே! தோழிகளே!!

என்றும் அம்மா பாசத்தில்,, நண்பன்

கவிதை மாணிக்கம்