கை முறுக்கு பாட்டி

பாட்டி கவிதை

கை முறுக்கு பாட்டி

கை முறுக்குப் பாட்டி"


தடம் புரண்ட 
தன் 
வாழ்க்கையை சரி செய்ய ,
தண்டவாள பேருந்தில் 
கூவிக் கூவி 
விற்றுக்கொண்டிருந்தாள் 
அந்த 
கை முறுக்குப் பாட்டி ......

அவள் 
வாழ்க்கையை போலவே 
அவள் முறுக்கிலும் 
அத்தனை வளைவுகள் !!!
இருந்தும் 
ஒவ்வொரு பெட்டியிலும் 
ஒவ்வொரு நம்பிகைக்கொண்டு 
அவள் 
(வாழ்க்)கை முறுக்கு 
விற்றுக்கொண்டிருந்தாள் !!

தன் பசி 
தீர்க்க எழுந்த சுயநலமா ???
இல்லை 
பிறர் பசி தீர்க்க வந்த 
புண்ணியமா , அவள் முறுக்கு ???
தெரியவில்லை!!!!

பின் ,
ஒரு நிறுத்தத்தின் 
தேனீர் கடை வாசலில் ,
நான் 
அரையனா சில்லரைக்காக 
நிற்கையில் ,
அந்த 
நடை பாதை 
பிச்சைகாரனுக்கு 
அவள் போட்ட 
ஒரு ரூபாயில் தெரிந்தது ,
அவள் 
கை முறுக்கின் புண்ணியம் !!!!!!!!!

 

கனி விஜய்,
திருவண்ணாமலை