காமராசர்...

காமராசர்...

காமராஜர் !!

இது பெயர் அல்ல! அரசியலின் வழித்தடம் !!

இவர் விருது பட்டியில் பிறப்பும் !!இளமையில் வறுமை ஏற்பும் !!

இவர் தந்தை இழப்பும்!

கல்வியை கைவிட்டு! ஜவுளிக்கடை தன்னில் பணிதொட்டு!! 

கடும் சுதந்திர போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு!! காங்கிரசில் இணையப்பட்டு! உப்பு சத்தியாகிரக போராட்டங்களால் சிறைப்பட்டு!!

 காங்கிரஸுக்கு, தமிழ்நாட்டில் தலைமை ஏற்கப்பட்டு!

வரதராஜிலு! ராஜாஜி மேல் பற்று கொண்டு! வறுமையில் வாடியும் நாட்டுப்பற்றில் வாடாது எண்ணம் கொண்டு!!

தமிழக முதல்வராய் அரியணை பூண்டு! தளராதசிந்தையோடு ஆட்சியில் சிறப்பு கொண்டு!!

 எட்டு மந்திரிகளை வைத்துக்கொண்டு! எட்டு பிடிக்க முடியா! கனரக தொழில், விவசாயம், அணைக்கட்டுகள்! இன்னும் பலஎன! 

எரியும் மின்சார உற்பத்தியில் முதலிடம் தமிழ்நாடு என பேரும் கொண்டு! ஏழை மாணவர்கட்கு கல்வி கண் திறந்து! மதிய உணவும் சேர்த்துக்கொண்டு!

 மகத்தான பொற்கால ஆட்சியை நிலைநிறுத்தி! மாசற்ற மனிதராய் தரணியில் தன்னை உயர்த்தி !!

நேருவுக்கு கூட,, துயரில் ஆலோசனை கூறி !!

நேச நாடுகள் ரஷ்யா! அமெரிக்கா ,,!கூட,, செல்ல வான்வூர்தியில்ஏறி!

 எதிரியையும் நட்பாளியாக்கி! எளியவராய் தான் மட்டுமல்லாது, தன் மந்திரிகளையும்நேர்மையில் ஏழ்மையாக்கி! என்றென்றும் இவர் போல் யார் என்று!! எக்காலத்திலும் வெல்லவே!! முடியாதே! என்று !!

வியப்புக்ளாக்கிய ஓர் அதிசயம் !

மண்ணோரும் விண்ணோரும்!போற்றும் ஒர் பேராயம்!!

-கவிதை மாணிக்கம்