பெண்களுக்கான இலவச மைக்ரோகிரீன்ஸ் காளான் வளர்ப்பு பயிற்சி பிப்ரவரி 11ல் நவக்கரையில்
காளான் வளர்ப்பு பயிற்சி
கோயம்புத்தூர், பிப்ரவரி 11:
AJK கல்வி குழுமம் மற்றும் AJK Innovation Incubator Foundation (AIIF) இணைந்து, பெண்களுக்கான இலவச பயிற்சி மற்றும் மைக்ரோகிரீன்ஸ் மற்றும் காளான் வளர்ப்பு குறித்த செய்முறை பயிற்சி முகாமை 2026 பிப்ரவரி 11ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, நவக்கரை, கோயம்புத்தூரில் அமைந்துள்ள AJK கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்த உள்ளன.
இந்த பயிற்சியின் சிறப்பம்சங்களாக, மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பு (7 முதல் 14 நாட்களில் அறுவடை செய்யும் முறை), காளான் வளர்ப்பு (வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய முறைகள்), குறைந்த செலவில் தொழில் தொடங்கும் வழிகாட்டல், வருமானம் மற்றும் வியாபார மேம்பாட்டு திறன்கள் குறித்து விரிவான செய்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளது. பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பெண்கள் முன் அனுமதியுடன் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்கப்படும்.
நிகழ்வு விவரங்கள்:
தேதி: 11.02.2026
நேரம்: காலை 9.30 மணி
இடம்: AJK கலை மற்றும் அறிவியல் கல்லூரி , நவக்கரை, கோயம்புத்தூர்
தொடர்புக்கு: 63817 04819
AJK Group of Institutions AIIF

Comments (0)