சிறந்த ஆளுமை கமலா ஹாரிஸ் 041

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

சிறந்த ஆளுமை கமலா ஹாரிஸ் 041

அமெரிக்காவின் சிறந்த ஆளுமை பெண் கமலா ஹாரிஸ்.

முன்னுரை:

   அடுப்பாங்கரை முதல் அமெரிக்கா வரை பெண்கள் இந்நாட்டிற்கும் உலகத்திற்கும் பெரும் ஆளுமையாக திகழ்வது பெண் இனத்திற்க்கே அது பெருமை தருவதாகும்.

 பெண்கள் நாட்டுக்கு மட்டுமின்றி  வீட்டுக்கும் சிறந்த கண்மணிகளாக விளங்குகின்றனர்.  பெண் என்பவள் மனித பிறப்பில் பெரும் காவியமாவார். மேலைநாட்டை  ஆண்ட சிறந்த ஆளுமை பெண் கமலா ஹாரிஸ் பற்றி கட்டுரையில் காண்போம்.

குழந்தை பருவமும் ஆரம்ப கால வாழ்க்கையும்:

    கமலா ஹரிஷ் 1964ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் பிறந்தார் . அவரது தாயார் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவர் பெயர் சியாமளா கோபாலன் ஹாரிஸ் என்பதாகும். இவர் மார்பக புற்று நோய் விஞ்ஞானியாக பணிபுரிந்தார்.  அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமாய்க்காவை சேர்ந்தவர்.  இவர்          ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றுகிறார்.  அவரது தங்கை மாயாவும் வளர்ந்து வந்த காலங்களில் இந்து கோயில்கள் மற்றும் கருப்பர்களுக்காக தேவாலயம் இரண்டிற்கும் சென்று வந்தனர். 

   கமலா ஹாரிசுக்கு  ஏழு வயதாக இருந்தபோது அவருடைய பெற்றோர்கள் பிரிந்தனர்.  குழந்தைகள் இருவரும் அம்மாவின் காவலின் கீழ் இருந்ததால் அவர்கள் இருவரும் தங்கள் தாயுடன் கனடாவின் கியூபெக்கில் உள்ள மாண்ட்ரீலுக்கு குடிபெயர்ந்தனர்.

   ஹாரிஸ் கியூபெக்கிலுள்ள வெஸ்மவுண்ட் உயர்நிலை பள்ளியில் பயின்றார். அதன் பின்னர் மேற்படிப்பை ஹோவார்ட்  பல்கலைகத்தில் பயின்றார்.  அங்கு அவர் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்றார்.

   1989 ஆம் ஆண்டில் அவர்  கலிபோர்னியாவுக்கு திரும்பினார்.  அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஹேஸ்டிங்ஸ் காலேஜ் ஆப் லாவில் ஜூரிஸ் டாக்டர் பட்டத்தை பெற்றார்.


தொழில்:

      கமலா ஹரிஷ் 1990 முதல் 1998 கலிபோர்னியாவில் உள்ள அலமேடா கவுண்டியில் துணை மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றினார். பணியில் இருந்த போது கொலை, கொள்ளை மற்றும் சிறுவர் கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை இவர் விசாரித்தார்.  1990களில் பிற்பகுதியில் அவர் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.   2000ம் ஆண்டு  நகர வழக்கறிஞராக இருந்த  லூயிஸ் ரென்னே என்பவரால் சமூக மட்டும் சுற்றுப்புற பிரிவின் தலைவர் பதவிக்கு கமலா ஹரிஷ் நியமிக்கப்பட்டார்.   

பிறகு 2003 ஆம் ஆண்டு நடந்த பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் தேர்தலில் தனக்கு எதிராக நின்ற ஹாரிஸ் டெரன்ஸ் என்பவரை தோற்கடித்து கமலா ஹாரிஸ் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞரானார். இந்த பதவிக்கு வந்த முதல் தெற்காசிய மற்றும் கருப்பின பெண்ணாக கமலா ஹாரிஸ் பார்க்கப்படுகிறார்.

   இவர் நவம்பர் 2007ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் நகர வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஒரு ஜூரிஸ் டாக்டராக அவர் முதன் முதலாக போதை பொருள் கடத்துபவர்கள் உயர்நிலை கல்வி மற்றும் டிப்ளமோ படிக்கவும் வேலை தேடவும் வாய்ப்புகளை உருவாக்கினார். 

முக்கிய பணிகள்:

   கமலா ஹரிஷ் சான் பிரான்சிஸ்கோவின் டிஏவாக இருந்த காலத்தில் எல்ஜிபிடி குழந்தைகள் மற்றும் பதின்ம வயதிற்கு எதிரான குற்றங்களை மையமாகக் கொண்டு சிறப்பு குற்ற பிரிவை உருவாக்கினார்.  அவர் ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவு அளித்தார். மேலும் அவர் ஒரே பாலின தொழில் சங்கங்களை எதிர்த்தார்.

   ஹாரிஸ் தனியுரிமைகளின் அடிப்படையில் கலிபோர்னியா சட்டத்தை பின்பற்றுமாறு வலியுறுத்தி சுமார் 100 மொபைல் ஆப் படைப்பாளர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதன் படி எந்த ஒரு டெவலப்பரும் ஆப்பை நிறுவும் போது தனியுரிமை கொள்கையை வெளியிடாவிட்டால் ஒவ்வொரு பதிவிறக்கத்தின் போதும் அவர்களுக்கு 2500 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
  
12 பிப்ரவரி 2015 அன்று அவர் "பீரோ ஆஃப் சில்ரன் ஜஸ்டிஸ்" என்கிற பெயரில் புதிய அமைப்பை துவங்கப் போவதாக அறிவித்தார் பிற்பகுதியில் இதற்கான பணியகம் அமைக்கப்பட்டதுக்கான நீதி வளர்ப்பு, பராமரிப்பு,குழந்தை பெறுவது மற்றும் பள்ளி சச்சரவு போன்ற சிறுவர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது.

குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை:

    கமலா ஹாரிஸ் டக்ளஸ் எம்ஹாஃப் என்பவரை 22 ஆகஸ்ட் 2014 அன்று திருமணம் செய்து கொண்டார். தற்சமயம் அவர் இருக்குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.
இவரது சகோதரி மாயா ஹாரிஸ் எம்.எஸ்.என்.பி.சியின் அரசியல் ஆய்வாளராக இருக்கிறார். இவரது மைத்துனர் டோனி வெஸ்ட் அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரியாக இருந்தார். தற்சமயம் இவர் உபெர் நிறுவனத்தின் பொது ஆலோசகராக இருக்கிறார்.

  முடிவுரை:

    இன்றைய பெண்கள் கமலஹாரிஸ் போன்று இன்னும் எதிர்காலத்தில் உருவாக வேண்டும். இவரை போன்று உருவாகி படித்து பட்டம் பெற்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் சிறந்த ஆளுமையாக திகழ வேண்டும்.  பெண்கள் மன தைரியம் எப்போதும் அதிகம் இருக்க வேண்டும்.  பெண்கள் பலசாலியாகவும் புத்திசாலி நிறைந்த பெண்களாகவும் வீட்டிற்கும் நாட்டிற்கும் கணவனுக்கும் கணவனை சேர்ந்த குடும்பத்தாருக்கும் தாய் தந்தையுடன் பிறந்தவருக்கும் எல்லோருக்கும் சிறந்த ஆளுமை பெண்ணாக திகழ வேண்டும். பெண்கள் எப்போதுமே சிறந்த பெண்ணாக வலம் வர வேண்டும்  இப்பாரினிலே.  பெண்கள் என்றுமே நம் நாட்டின் இரு தூண்கள் போலாவார். 

எழுதியவர்:

கே. நஜீமா ஜமான்.
நாகூர்.