அன்பின் அண்ணல் அறிஞர் அண்ணா...! 013

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் கவிதை போட்டி

அன்பின் அண்ணல் அறிஞர் அண்ணா...! 013


அன்பின் அண்ணல் அறிஞர் அண்ணா 

காஞ்சியின் மைந்தர் நாட்டின் மூத்தத்தலைவர்

மொழிகளில் வல்லவர் முற்போக்கு சிந்தனையாளர்

மூன்றெழுத்து முழக்கத்தின் முன்னோடி முனைவர்

பேச்சில் அனல்பறக்கும் ஆற்றலில் அலைகடல்

கழகத்தின் கடவுள் கவித்தமிழின் காவியத்தலைவன்

தமிழுக்காக தன்னையே ஆர்ப்பணித்து ஆர்ப்பரித்தவர்

தலைவருக்கெல்லாம் தலைவராம் தவிர்க்கமுடியாத தனயனாம்

அண்ணாவின் பார்வையில் அகிலமே அதிர்ந்தது

அறிஞர்கள் போற்றும் ஆககவியான பேரறிஞர்

அமைதியில் காந்தி அதிரடியில் நேதாஜி

பெருந்தகை பெரியாரின் போர்படை தளபதி

நாட்டிற்கு தமிழையே பெயராக சூட்டியவர்

போறாமை இல்லாத பொறுமையுடைய பண்பர்

 திராவிடத்தின் திரவியம் திரைக்கடல் திலகம்

நூற்றாண்டு கடந்து நிற்கும் போராளி

பகுத்தறிவு, சுயமரியாதை மிக்க தன்மானச்சிங்கம்

பொன்மொழிகளின் மகுடம் போர்படையின் உரிமைக்குரல்

எழுத்துக்களால் எழுச்சியை ஏற்றமாய் தந்தவர்

ஏழைகளின் ஏக்கங்களை துடைத்த பங்காளன்

மதிப்பதில் அண்ணலுக்கு நிகர் அண்ணலே

தமிழ் இருக்கும் இடங்களில் எல்லாம்

தமிழ்த்தேசிய தலைவராய் தலைநிமிர்ந்த தயாளன்

வாசிப்பை உயிராகவும், புத்தகங்களை உடலாகவும்

தன்னோட உரைநடையில் உற்சாகத்தில் உணர்த்தியவர்

ஆகாயத்திற்கு எல்லை வரையறுக்க வகையில்லை

அண்ணாவின்  புகழைப்பாடத தலைவர்களின் தலையில்லை

அன்பிலும், அறத்திலும், ஆற்றலிலும் அறிஞர்

பேராண்மைமிக்க பேரரிஞர் அண்ணாவின் மேன்மை

என்றும் என்றென்றும் மாறாத காவியம்

அண்ணா சரித்திரம்
அவரே நிரந்தரம்.


- பி.பத்ரிநாராயணன்
ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை
இராஜபாளையம்.