அறிவோம் அம்பேத்கர் 022

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவோம் அம்பேத்கர் 022

அறிவோம் அம்பேத்கர்

இந்திய அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்

 தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய மாமேதை

 சமுதாயத்தை முன்னேற்ற துடிக்கின்ற உணர்வு

 தனிமனித உரிமைகளை மீட்டுத் தந்த தலை சார்ந்த பெரியோர்களுள் முதன்மை

 மனிதகுலம் உயர்வடைய இந்தியாவில்

 மடமைகளை கிழித்து எறிந்த வீர சிங்கம்

 தாழ்த்தப்பட்ட மக்கள் தரையில் அமர்ந்து

 கல்வி கற்பதை விரும்பாத புரட்சியாளர் 

நூலகம் திறந்து நூலகம் மூடும் வரை 

நூல்கள் பற்பல கற்று உயர்ந்த கல்வியாளர்
 கால்களிலேசெருப்பணிந்து நடப்பதற்கும்
 கருவறைக்குள்சென்று வழிபடுவதற்கும்

 வேல்விழியால் கலப்புமணக்காதலுக்கும்

 வேற்றுமை நீக்கி மக்கள் வாழ்வதற்கும்
 

பொது குளத்தில் அனைத்துபிரிவினரும்

 பேதமின்றி நீர் அருந்துவதற்கும்

மேதைவென்றெடுத்தவர்     தாழ்ந்தோரை நிமிரச் செய்தவர்.
 இந்தியஅரசியலமைப்புச்சட்டத்தைஉருவாக்கிய தலைமை 

பார் போற்றும் விடுதலை போராட்ட வீரர் 

தீண்டாமை என்னும் கொடிய நோய்அகற்ற

 தெருவெங்கும் புரட்சி வெள்ளம் பரவச்செய்தவர்

அறிவோம்அம்பேத்கர் அவர்களை நாளும்

 அவர் வழியில் நடப்போம் புகழ்சேர்ப்போம்!

 கவிஞர் ந.மலர்க்கொடி தலைமை ஆசிரியர் பெரம்பலூர்