தமிழரின் பெருமைகள் 012..!

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமைகள் 012..!

தமிழரின் பெருமை

 கிராமிய தாலாட்டு..

ஆராரோ ஆரீராரோ ஆராரோ ஆரீராரோ
சேற்றிலே பூத்த குவளம் மலரே
செதுக்கி வைத்த அழகு பதுமையே
சீமத்தொரபோல நீயிருக்காய் எந்தன் தங்கமே
சிவந்த வண்ணத்தில் சித்திர தேர்போல
நான் செய்த புண்ணியமோ என்னவோ 
மகாராஜா போல நீ உதித்தாயே
இருந்தாலும் என்னபாவம் செய்து விட்டு. 
இந்த ஏழைகுடிலில் நீ உதித்தாயோ.
தூளிகட்டி நான் உன்னை தாலாட்ட.
என் தங்கமே கண் அயர்வாய்.
வெண்குருதி புகட்டிடவே ஆசை கொண்டேன்.
இந்தபாலைவன வாழ்விலே என்செந்நீரை தேயிலைக்கு.
வியர்நீராய் தினந்தினம் கொடுப்பதால் இன்று.
கண்ணீர்தான் சுரக்குதடா என் ஆசைமகனே
உன்ஊதாரி அப்பனுக்கு கொள்ளிவைக்க உதித்தாயோ
இல்லை குலம்பெருக விடிவெள்ளியாய் உதித்தாயோ
அட்டைக்கடி பொறுத்து பெரியதொரைகத்தல் பொறுத்து
உன்னப்பன்அடி பொறுத்து வாழ்வாதார சுமைபொறுத்து
என் தலைச்செல்வமே உனக்கு ஊன்சோறு ஆடை கொடுத்திடுவேனே அறிவுச்சுடரையும் கொடுத்திடுவேனே.
என்தங்கமே நீயெனக்கு என்ன தந்திடுவாயோ
நம்மினத்தின்விடியலை என்கருவறைகூலியாய் தந்துவிடு கண்ணே

 2. *தமிழ்* *காப்பியங்கள்*, *சிலப்பதிகாரம்*                               காலத்தால் அழிக்க முடியாத  பெண்மையை போற்றும் முதன்மை காவியம்                       இளங்கோவன் எழுதிய ஐம்பெரும் காப்பியங்களில்  முதன்மையானது தான் சிலப்பதிகாரம்                        பெண்ணின் பெருமையை, வீரத்தை முதன்முதலாக காப்பிய வடிவில் உணர்த்திய புரட்சிக் காவியமாகத் திகழ்கிறது சிலப்பதிகாரம்                                            பெரியோர்களின் சம்மதத்தினால்  இல்லறத்தால் இணைந்து அன்பால் கோவலனும் கண்ணகியும் வாழ்ந்து  வந்தனர்                                            விதி விளையாடியது என்னவோ கண்ணகி வாழ்வில்  கோவலன் கொண்ட மாதுவால்                                                    ஆடல், பாடல் சிறந்து விளங்கிய மாதவியின் அழகில் மயங்கிய கோவலன்.                      உன்னதமான உத்தமியே மறந்து மாதவியின் மாதுவால்  தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்தான்.                  
அன்பான மனைவியை நாடினான் பிறகு அக்கணமே இருவரும் ஒற்றுமையாக புறப்பட்டார்கள் புது விடியலுக்காக.                                                      
எனினும் வறுமையின் காரணமாக  கோவலனிடம்.                                                                     தன் காற்சிலம்பை விற்று பணம் பெற முயன்றால் கண்ணகி.                       பாண்டிய வீரர்களால் சிலம்பு களவாடப்பட்டது.                                                           தவறு செய்யாத கோவலனுக்கு மரண தண்டனை  வழங்கப்பட்டது.நீதி நிலைநாட்டப் புறப்பட்டாள்
கண்ணகி  மதுரைக்கு உண்மைநிலையை அறிந்த பாண்டிய மன்னனோ அக்கணமே இறந்தான்                                                    கோவலன் இறந்த கோபத்தினால்  மதுரையை எரித்தாள் கண்ணகி      சிலம்பினைக்கொண்டு அதிகாரத்தை  எதிர்த்ததால் சிலம்பு அதிகாரம் என இரண்டும் சேர சிலப்பதிகாரமானது                           நீதியும் நிலைநாட்டப்பட்டது    புரட்சிப்பெண் கண்ணகியால்...   *மணிமேகலை* 

மணிமேகலை கோவலன் மாதவியின் திருமகளாம்
அழகில் சிறந்தவள் பண்புகளில் உயர்ந்தவளாம்
ஆயக்கலைகள் அனைத்தும் சீரும்சிறப்புமாய் கற்றவளாம்
அன்பின் வழியில் அனைவரிடம் நடப்பவளாம்                                            மன்னன் மகனின் காதலையும் புறம்தள்ளி                                           பிறவியின் லட்சியம் காக்க துறந்தவளாம்
கயவர்வசிக்கும் சிறையினையும்       கருணைஇல்லமாய் மாற்றியவளாம்                                           எளியோர் பசியை போக்கிடவே மானுடப் பிறவி                                                                                                         எடுத்து இவள் அக்ஷயபாத்திரம் பெற்றவளாம்      
பசிப்பிணி மருத்துவ காப்பியமாய் மணிமேகலையாம்
வாதம் புரிந்து மனங்களை வென்றவலாம்                                                   இவள் வாழ்வின் அர்த்தம் கண்டவளாம்
புத்தசமய கருத்துக்களை     புவியில்பரவி வந்தவலாம்        அறவழி நிற்றல் சிறப்பென்று கூறியவளாம்
அதை அறிவிக்க வந்தவளே மணிமேகலையாம்
காலப்போக்கில் துறவு காப்பியமே மணிமேகலையாம்

 *தமிழரின்* *பெருமை*   *வீர* *விளையாட்டு*                                                     அடுத்து நாம் காண்பது வீரத்தமிழரின் அடையாளம்.
வீரவிளையாட்டு                                                       *ஜல்லிக்கட்டு* 

மறத்தமிழனின் வீரம் தன்னை மாண்புடனே விரைந்து உரைக்க அடையாளமாக காணப்பட்ட தமிழரின் பண்பாட்டு பாரம்பரிய கலாச்சாரத்தோடு கூடிய தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
மாண்புடனே விரைந்து உரைக்க, மின்னல் வேக விளையாட்டாக
 ஜல்லிக்கட்டு இருந்தது
மீசையை முறுக்கிய
படி வீரர்கள் களத்தில் இருந்தன.
முண்டாசுப் புலவன் போல பெருமையை வாழ்ந்தனர்.
மூக்கணாங் கயிறற்ற காளையினை
மெத்த வீரம் விளைந்திருக்கும்
மேதகு வீரர்கள் வளைத்து நின்று
மைதானம் முழுவதையும் சுற்றி வந்து
மொத்தமாக அடங்கும் வரை கட்டியடக்கி
மோகனப் புன்னகை சிந்தும் முறைமகளை நோக்கி
மௌனமாய் கண்களிலே பார்வை கலந்து
கண்டுகளிப்போம் ஜல்லிக்கட்டு வீரனாக ரசித்தோம். ஜல்லிக்கட்டை பற்றி இன்னும் கூற வேண்டும் என்றால்
ஜல்லிக்கட்டு சிந்து சமவெளி நாகரிகத்தில் இது எங்களின் வீர விளையாட்டு என்றும் மூத்த குடி விளையாட்டு என்றும் போற்றப்படுகிறது, இலக்கியங்களில் போற்றப்படுகிறது தொப்புள் கொடி
தொல்குடித் தமிழரின்
தொப்புள்கொடி உறவு.
அந்த
சங்ககாலத் தொடர்ச்சியின்
வாழ்க்கைப் பதிவு நமக்கு உணர்த்துகிறது.
நாங்கள்
எதிரியாக அல்ல
காதலியாகவே
காளையை அணைவோம்.
எங்கள்
தெய்வம் போலவே
தினமும் தொழுவோம்.
இது
சல்லிக்கட்டு விளையாட்டு
ஒரு சரித்திரம் திரும்பும்
நடைபோட்டு வாழ்ந்து வந்தார்கள்
உழவரின் வாழ்வியலான
காளைக்கு
ஒரு நாள் நடக்கும்
உற்சவத் திருவிழா நடைபெற்றது
மனிதனும் விலங்கும்
விளையாடும்
மகிழ்ச்சி பொங்கும்
மறவர் பெருவிழா கொண்டாடப்பட்டது
சாவைத் தொட்டுப்
பொட்டு வைத்தே
மல்லுக்கட்டும் வீரன்தான்.
காளையை அடக்கி
மீசையை முறுக்கும்
ஜல்லிக்கட்டு சூரன்தான்.
கன்னியவளின்
கடைக்கண் பார்வை விழ
எண்ணி அடக்கி
வென்றிடுவான்.
குத்தும்ஆயிரம்
கொம்புகள் முன்னே
நெஞ்சை நிமிர்த்தி நீட்டிடுவான்.
வாடி வாசலைத்
தேடிப்போயே
காளை வரக்காத்திருப்பான்.
ஓடிவரும் புயலின் மேலே
புலியாய் பறந்து சுழன்றிடுவான்.
காளைத் திமிலின் மேலே
வியர்வைகளாலே
வெற்றித் திலகம்
தீட்டிடுவான்.
வீரன்  என்ற பட்டம் தாங்கி
தோளில்மாலை சூட்டிடுவான்.
தெருவில் நின்ற
தேவதை பார்க்க
ஊர்வலமாக வந்திடுவான்.
காதலி யவளின்
கரங்கள் பற்றி
கனவுகளோடு வாழ்ந்திடுவான்.
இப்படி வாழ்ந்த
எங்கள்
வீரமறவர் திருநாளை
தலைமுறை தாண்டிக்
காத்திடுவோம்.
தமிழரின் உயரியப்
பண்பாட்டை
உயிரைக் கொடுத்துப்
போற்றிடுவோம்.
இது
வேறு எங்கும் இல்லாத
தமிழ்ப் பண்பாட்டின்
வேர்த் தடங்கள்  உருவாவதற்கு முன்
ஏறு தழுவுதல்
முல்லை நில அடையாளமே
மருத நில வணிகமே
பாலை நில வாகனமே
தமிழ் பண்பாட்டின் 
சின்னமே
மெல்ல உன்னைத்
தழுவுகிறேன் 
எந்தன் வரிகளிலே
இயற்கையோடு
இயைந்து வாழ்ந்த 
கூட்டமிது
வேளாண் வாழ்க்கையோடு
பிணைந்துவாழ்ந்த
இனமிது....
விலங்குகளின் 
முன்னுரிமை இது
சங்ககால முதல்
இந்தக்காலம் வரை
தொன்றுதொட்டு
வரும் வரலாறு இது
வாரீர் வந்து பாரீர்...
எத்தனை பீட்டா
அமைப்பு வந்தாலும்
வணிகம் இல்லாத
தமிழனின் தனித்துவம்
இது......
வாரீர் வந்து பாரீர்
மெல்ல அரவணைத்து 
முதலும் முடிவும்
காளையை 
தெய்வமென வணங்கி மீண்டும் அதன் செருக்கின்  திமில்
அடக்கி தமிழன்
விளையாடும் 
கைதேர்ந்த கலை இது
வீரமுள்ள காளையர்கள்
தமிழ் மறம் அறம் வளர்த்து
போற்றுகின்ற விளையாட்டிது.....
வாரீர் வந்து பாரீர்
சீறுகின்ற காளையதனை கொம்புசீவி
மஞ்சளிட்டு பொட்டிட்டு
மாலை அதனை சூடி
சல்லி கழுத்தில் கட்டி
கொஞ்சம் வணக்கமிட்டு 
காளையர்கள் விரட்டுகின்றன
மஞ்சுவிரட்டு இது...
வாரீர்...வந்து பாரீர்
தமிழன் கடமை இது
தமிழின் வரலாறு இது
மாற்றான் வந்து மாற்ற 
நினைத்தாலும் மாறாத
கலாச்சாரம் இது....
வாரீர்...வந்து பாரீர்...
திமில் பெருத்த
காளை தனை
நிலத்தில் முட்டி மோதி
வீரக்காளையர்கள்
இணைநின்று பெருவளம் கொண்டு
மோதும் களம் அதில்
போட்டியிட்டு மெல்ல
அதன் திமிலடக்கி
வெற்றிபெறுவான் 
தமிழன் தமிழினமே
சீரும் காளையும் 
சில நேரம் மிச்சமில்லை
காளையும் காளையரும்
சமவெற்றி தமிழ்மண்ணுக்கு பறைசாற்றும் போட்டிஇது.....வாரீர் வந்து பாரீர்
உயிர் உத்தரவில்லை
என்றாலும் 
வீரம் பத்திரமாகும்
தமிழரின் பண்பாடு இது
வாரீர்..வந்து பாரீர்...
கலித்தொகை முதல்
புறப்பொருள் வெண்பா
மாலையிலும் பள்ளு
பாடல் தன்னை
தமிழினிம் போற்றும்
கலாச்சாரம் இது....வாரீர் வந்து பாரீர்
தமிழினம் காப்போம்
ஏறுதழுவுதலைக் காப்போம்
இது நம் கடமை 
இது நம் உரிமை
இது நம் பெருமை, இதோட நம் தமிழரின் பெருமையான மானிடரின் முதல் தொழில் விவசாயம்
மண்ணில் வேளாண்
தொழில் விவசாயம்
மண்ணை உழுது
வளமாக்க உதவியது
மானிடரின் துன்பம்
போக்க உதவியது
மண்ணில் எளிதாக
பயிரிட காளைகள் உதவியது
மானிடரின் நண்பனாக
காளை போற்றுவோம்
மண்ணில் விதைகள்
விதைத்திட காளைகள்
விதைத்த தானியம்
வீடுசேர விவசாயம் செழிக்க
உழைத்திடும் ஏற்றத்
தோழன் காளைகள்
தோழனை மகிழ்விக்க
ஏர் தழுவுதல் கொண்டாடினோம். போகப் போக
ஏர் தழுவுதல் பின்நாளில் வீரவிளையாட்டாய்
இந்நாளில் ஜல்லிக்கட்டாய்
உலகத் தமிழர்கள்
முகவரியாய் கொண்டாடுகிறோம்

தமிழரின் பெருமை என்று  சொல்லக்கூடிய தஞ்சை பெரிய கோயில் ராஜ ராஜ சோழன் பற்றி கட்டிய தஞ்சை பெரிய கோயில்           
 தமிழரின் பெருமையான இராஜராஜ  சோழன் பற்றிய புகழ் மாலை 

தஞ்சை பெரியகோயில் 
 மாபெரும் பொக்கிஷம்
அளித்த
ராஜராஜ சோழன்....
நெல் விளையும்
தஞ்சைகட்டிடக்கலையின் உச்சமான தஞ்சை பெரிய கோயிலை 
பாரத நாட்டிற்கு
தந்தருளிய
பாரத பேரரசன் இராஜராஜ சோழன்...
கோபுரம் ஏறிய தமிழ்
சிவலிங்கத்தின்
உயரம்  பன்னிரண்டு
அடி கொண்டது...
தமிழரின் உயிர் எழுத்து
பன்னிரண்டு.. 
சிவலிங்க பீடத்தின உயரம் 18 அடி
தமிழின் மெய்யெழுத்து
பதினெட்டு கோயில்
கோபுரத்தின் உயரம்...
இருநூற்றுப் பதினாறு
தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள்.
இருநூற்றுப் பதினாறு
சிவலிங்கத்திற்கும்.. 
நந்திக்கும் உள்ள இடைவெளி
இருநூற்று
நாற்பத்தேழு.
தமிழ் மொழியின்
மொத்த எழுத்துக்கள்
இருநூற்று
நாற்பத்தேழு.
தலைமுறை கடந்தும் நேர்மையாக நிற்கிறது
தமிழனின் பெருமை.
ராஜராஜ சோழனின் திறமை நேர்மையாய்
தலை நிமிர்ந்து 
நித்தமும் நிழல் சாயாது. 
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
ஆற்றல் குறையா
உன் திறம் கண்டு.
திகைக்கின்றேன் மன்னா.            தமிழராய் பிறந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்..
வீரத்திலும், காப்பியத்திலும், கோயில் நகரமான தஞ்சை தமிழரின் பெருமையை சொல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது, என்னைக் கவர்ந்த விஷயங்களை நான் பெருமையாக கூறியிருக்கிறேன், நன்றி
                                               -வி.கணேஷ்பாபு, ஆரணி ,திருவண்ணாமலை மாவட்டம்.