காத்திருப்பு

புதுக் கவிதை

காத்திருப்பு

வருவேன் என்றால் '
வந்து விட வேண்டும்
நட்டுவைத்த முல்லைச் செடி
பூப்பூத்து விட்டது

ஒரு பெருமழைக்குப் பின்
 தெருவில் வெள்ளம் தேங்கிவிட்டது

குட்டையாக இருந்த நிழல்
 நெடிது
வளர்ந்து விட்டது

காலையில் போன புறா
இருள் கவியும் முன்
கூடுதிரும்பி விட்டது

நான் எறிந்த சொல்லொன்று
வானத்தைப் போய் 
தொட்டு விட்டு
மீண்டும் என் கைக்கு
வந்து விட்டது.

வருவேன் என்று சொன்னால்
வந்து விட வேண்டும்
ஒரு கூட்டுக்குள 
அடைத்து வைத்த பறவை
எத்தனை நேரம்தான்
மரக்கிளையை
கொத்திக்கொண்டே இருக்கும்?

தங்கேஸ்