மக்களுக்கான மகத்தான சேவைகளை செய்து வரும் மருத்துவர் கு.கனிமொழி

சாதனைப் பெண்மணிகள்

மக்களுக்கான மகத்தான சேவைகளை செய்து வரும் மருத்துவர் கு.கனிமொழி

சென்னையை சேர்ந்த பல் மருத்துவர் மற்றும் பரவுநோயியல் வல்லுநருமான மருத்துவர் திருமதி.கு.கனிமொழி அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பொது  சேவையில் ஈடுப்பட்டுள்ளார்.
 
அவர் நம் சமுதாயத்துக்குச் செய்த பணிகளைப் பாராட்டி 25க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப் பட்டுள்ளது. அதில் சில விருதுகள்,மனிதம் காப்போம் விருது, பாரத் ராஜஸ்ரீ விருது, மகளிர் தின சாதனையாளர்கள் விருது 2020, கொரோனா வாரியர் கௌரவ விருது, ஸ்டார் வாரியர், கருணைச் சான்றிதழ், மணிமலை சாரல் விருது, குறள் மாமணி விருது, மணிமகுடம் விருது, இந்திய நட்சத்திர விருது, சேவை தென்றல் விருது, பெண்கள் ஊக்கமளிக்கும் விருது 2022, அன்னம் மீட்ட கை சுடர் விருது ,இரட்டைக் கொடி மணி விருது,தேச மணி சுடர் விருது, அட்சயம் ஒளிச் செம்மல் விருது, சேவை ஆளுமை விருது,
 ஏ.நேச மணி வீர விருது,  தன்யிஷ்கு (tanishq) கொண்டாடும் புதுமைப்பெண் விருது,
வீரமங்கை விருது, சேவை ஆளுமை விருது.


குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலத்தில்,நம் நாட்டில் கொரோனாவிற்கு தவிர பிற மருத்துவ சேவைகள் முடங்கி இருந்த காலக்கட்டத்தில்,  நம் நாட்டின் மக்களுக்காக  பற்கள் சம்மந்தமான பிரச்சசைனைகளுக்கு இலவச  மருத்துவ ஆலோசனைகளை இவர் வழங்கியுள்ளார். இந்த சேவையால் பலர் பயனடைந்துள்ளனர்.இதை  தவிர, சென்னை முழுவதும் பல இலவச பல் மருத்துவ முகாம்களையும் இவர் நடத்தியிருக்கிறார். மேலும், கொரோனா காலக்கட்டத்தில், நம் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு  நிகழ்ச்சிக்காக அகில இந்திய வானொலி All India Radio- கோடை எஃப்எம் யில்  உரையாடியுள்ளார். அதேப் போல் கொரோனா காலத்தில், தீவிரமான  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ,மருத்துவமனையில் அனுமதி பெறுதல், இரத்த தேவை மற்றும் அவசர ஊர்தி ஆகிய செயல்களை ஏற்பாடு செய்துக் கொடுத்துள்ளார்.
கூடுதலாக, "கொரோனாவுக்கு எதிராக நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்"  என்கிற தலைப்பில் மே 30, 2021 அன்று  
நேரு யுவ கேந்திரா (இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்) சார்பில் இலவச யோகா நிகழ்ச்சியை பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்துள்ளார். மேலும், பற்களில் ஏற்படும்  பிரச்சனைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வுக்கு   பல கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.

இவர், பல ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.