அறிவர் அம்பேத்கர் 047

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவர் அம்பேத்கர் 047

ரத்தினகிரி தந்த நாட்டின் சொத்து
விருது பெற்ற மாண்பகம் பொருந்தியவரே
 பாங்கான தலைவரே பக்குவமான தலைவரே
 சாதி என்னும் சாவுக்கு சவுக்கடி கொடுத்தவரே
 மக்களுக்காகப் போராடிய மிகச்சிறந்த மகானே….. 
மூடநம்பிக்கைகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தவரே
 சமுதாயத்திற்காகப் போராடிய மிகச்சிறந்த மாமேதையே 
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அறிஞரே 
 அமெரிக்கா சென்று கல்வி பயின்ற
 இந்தியர் என்ற பெருமைக்குரியவரே…..
 ஆசிரியராக இதழியலராக எழுத்தாளராக புரட்சியாளராக
 பன்முகம் கொண்ட பேராற்றலே மேதையே
 இந்திய மண்ணில் அரசியல் சாசனத்தின்
சட்டத்தை பாங்காய்  பக்குவமாய் வடித்தவரே…
 விதிப்படி வரட்டும் எதிர்கொள்ள வேண்டிய
 முயற்சிகளை எதிர்கொள்ளவும் 
கடமையை கண்ணாக கொண்டவரே…
 பாராட்டிற்கு மதி மயங்காமல் 
கடமையை செய்யும் கட்டளை விதித்தவரே
உ ன்னை அறிந்து உன்னை உருவாக்கு 
தயங்கி நின்றால் நீயே தடைக்கல்லாவாய் 
முயன்றால் நீயே முன் உதாரணமாய் 
விழுந்தாய் விழுந்தால் விஸ்வரூபம் எடு
 மனதில் உறுதி கொண்டு போராடியே ……
தனக்கென வாழ தனி பெருந்தகையே
ஆலமரத்தின் விழுதுகளை போல
ஆணிவேரினை தளராத குணம் கொண்டவரே
விடா முயற்சி கொண்டு விஸ்வரூப வளர்ச்சி கண்டவரே…..
உம்மை வணங்குகிறேன் உம்மை வணங்குகிறேன்…

-முனைவர் ப. விக்னேஸ்வரி 
உதவிப்பேராசிரியர்
 தமிழ்த்துறை
 நேரு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி 
கோவை