தமிழர்களின் நிலங்களும் வாழ்வியல் முறைகளும்...! 028

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் நிலங்களும் வாழ்வியல் முறைகளும்...! 028

தமிழர்களின் நிலங்கள் 

திணை என்றால் ஒழுக்கம், பிரிவு என்று பொருள் உண்டு .சங்க கால தமிழகத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினர் அந்த வகைப்பாடு தமிழர் நிலத்திணைகள் எனப்படுகின்றது. 

சங்க கால மக்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையினையும் நிலத்தினை ஐந்து வகையாக பிரித்தனர். அந்த ஐந்து வகையான நிலமானது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப்படும். ஐந்து வகை நிலங்களுக்கு தனித்தனியாக தெய்வம் தொழில் உணவு மரம் பூ, பறவை விலங்கு போன்றவை தனியாக உள்ளது.குறிஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் முல்லை காடும் காடு சார்ந்த இடமும் மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் என்று அழைக்கப்பட்டன. பாலை என்று ஒரு நிலப்பகுதி இல்லை என்றும் மழை பெய்யாமல் நிலம் வறண்டு இருக்குமானால் அந்தப் பகுதி பாலைவனம் என்றும் பிரிக்கப்பட்டன.


குறிஞ்சி நிலத்திற்குரிய மக்கள் குறவன், குறத்தியர். முல்லை நிலத்திற்குரிய மக்கள் ஆயர், ஆய்ச்சியர். மருதம் நிலத்திற்குரிய மக்கள் உழவர், உழத்தியர். நெய்தல் நிலத்திற்குரிய மக்கள் பரதர், பரத்தியர். பாலை நிலத்திற்குரிய மக்கள்  எய்னர், எயிற்றியர்.
அதேபோல் குறிஞ்சி நிலத்திற்குரிய உணவு திணை, மலை நெல். முல்லை நிலத்திற்குரிய உணவு வரகு, சாமை. மருதம் நிலத்திற்குரிய உணவு செந்நெல், வெண்ணெய். நெய்தல் நிலத்திற்குரிய உணவு மீன். பாலை நிறத்திற்குரிய உணவு சூறையாடலால் வரும் பொருள் .
இன்றைக்கு நாம் பல்வகையான பூக்களை சூடிக் கொள்கின்றோம். பார்க்கின்றோம். ஆனால் அந்த காலத்தில் ஐந்து வகையான நிலத்துக்குரிய பூக்கள் கூறப்படுகின்றது. ஆனால் அந்த பூக்களை நாம் பார்த்ததில்லை. குறிஞ்சி நிலத்திற்குரிய பூ குறிஞ்சி, காந்தாள். முல்லை நிலத்திற்குரிய பூ முல்லை, தோன்றி. மருதம் நிலத்திற்குரிய பூ செங்கழுநீர், தாமரை. நெய்தல் நிலத்திற்குரிய பூ தாழை ,நெய்தல். பாலை நிலத்திற்குரிய பூ குரவம், பாதிரி.

அக்காலத்தில் வாழ்ந்த நமது தமிழ் மக்கள் நிலத்திற்குரிய பறவைகளையும் பிரித்து வைத்து இருக்கின்றனர். குறிஞ்சி நிலத்திற்குரிய பறவை கிளி ,மயில். முல்லை நிலத்திற்குரிய பறவை காட்டுக்கோழி, மயில் .மருதம் நிறத்திற்குரிய பறவை நாரை, நீர்க்கோழி, அன்னம். நெய்தல் நிலத்திற்குரிய பறவை கடற்காகம் .பாலை நிலத்திற்குரிய பறவை புறா, பருந்து .

ஐந்து நிலத்திற்குரிய ஊர்களையும் பிரித்து வைத்திருக்கின்றனர் நமது தமிழ் மக்கள். குறிஞ்சி நிலத்திற்குரிய ஊர் சிறுகுடி .முல்லை நிலத்திற்குரிய ஊர் பாடி, சேரி. மருதம் நிலத்திற்குரிய ஊர் பேரூர், மூதூர். நெய்தல் நிலத்திற்குரிய ஊர் பட்டினம், பாக்கம். பாலை நிறத்திற்குரிய ஊர் குறும்பு .

ஐந்து நிலத்திற்குரிய நீர்நிலைகளை எவ்வளவு அழகாக அவர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர் பாருங்கள். குறிஞ்சி நிலத்திற்குரிய நீர் அருவி நீர், சுனை நீர். முல்லை நிலத்திற்குரிய நீர் காட்டாறு. மருதம் நிலத்திற்குரிய நீர் மனைக் கிணறு, பொய்கை. நெய்தல் நிலத்திற்குரிய நீர் மணற்கிணறு, உவர்க்கழி. பாலை நிலத்திற்குரிய நீர் வற்றிய சுனை, கிணறு.

இன்றைக்கு நாம் எத்தனையோ இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அக்காலத்தில் தமிழ் மக்கள் நிலத்தை பிரித்ததோடு மட்டுமல்லாமல் தங்களுடைய இசை பறைகளையும் பிரித்து வைத்திருக்கின்றனர். குறிஞ்சி நிலத்திற்குரிய பறை தொண்டகப்பறை. முல்லை நிலத்திற்குரிய பறை ஏறுகோட். மருதமலத்திற்குரிய பறை மணமுழா, நெல்லரிகிணை. நெய்தல் நிலத்திற்குரிய பறை மீன் கோட் பறை. பாலை நிறத்திற்குரிய பறை துடி. 

தற்காலத்தில் நாம் வாசித்து இருக்கக்கூடிய வீணை அக்காலத்தில் யாழ் என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சி நிலத்திற்குரிய யாழ் குறிஞ்சியாழ். முல்லை நிலத்திற்குரிய யாழ் முல்லை யாழ். மருதம் நிலத்திற்குரிய யாழ் மருதையாழ். நெய்தல் நிலத்திற்குரிய யாழ் விளறியாழ். பாலை நிலத்திற்குரிய யாழ் பாலையாழ்.

பண் என்றால் பாடல். அதேபோல் அந்தந்த நிலத்திற்குரிய பாடல்களையும் பிரித்து வைத்திருக்கின்றனர் நமது தமிழ் மக்கள் .குறிஞ்சி நிலத்திற்குரிய பண் குறிஞ்சிப்பண. முல்லை நிலத்திற்குரிய பண் முல்லைப்பண். மருத நிலத்திற்குரிய பண் மருதப்பண். நெய்தல் நிலத்திற்குரிய பண் செவ்வழி பண். பாலை நிலத்திற்குரிய பண் பஞ்சுரப்பண்.

வாழ்க்கை வாழ்வதற்கு தொழில் ஒன்று தேவைப்படுகிறது அல்லவா? அது போல் ஐந்து நில மக்களும் தங்களுக்கு ஏற்ற தொழில்களை செய்திருக்கின்றனர். குறிஞ்சி நில மக்கள் தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் போன்ற தொழில்களை செய்திருக்கின்றனர். முல்லை நில மக்கள் ஏறுதழுவுதல், நிரைமேய்த்தல் போன்ற தொழில்களை செய்துள்ளனர். மருதம் நில மக்கள் நெல்லரிதல் களைபறித்தல் போன்ற தொழில்களை செய்துள்ளனர். நெய்தல் நில மக்கள் மீன்பிடித்தல், உப்பு விளைத்தல் போன்ற தொழில்களை செய்திருக்கின்றனர். பாலை நில மக்கள் வழிப்பறி செய்தல் மட்டுமே செய்து இருக்கின்றனர்.

ஐந்து வகையான நிலப்பகுதிகளை பிரித்த நமது முன்னோர் தமிழ் மக்கள் பொழுதுகளையும் பிரித்தனர். அந்த பொழுதுகள் பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது எனப்படுகிறது. ஓராண்டின் ஆறு பருவ காலத்தை குறிப்பதே பெரும்பொழுது .ஒரு நாளின் ஆறு பிரிநிலை குறியீடுகளை குறிப்பது சிறும்பொழுது.

சிறு பொழுதின் நேரங்கள் மணிக்கணக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. காலை 6 முதல் 10 மணி வரை. நண்பகல் 10 முதல் 14 மணி வரை. எற்பாடு 14 முதல் 18 மணி வரை. மாலை 18 முதல் 22 மணி வரை. யாமம் 22 முதல் 2 மணி வரை. வைகறை 2 முதல் 6:00 மணி வரை. அதே போல் பெரும்பொழுதும் அவற்றின் உடைய தமிழ் மாதங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. இளவேனில் சித்திரை, வைகாசி. முதுவேனில் ஆனி, ஆடி. கார் ஆவணி, புரட்டாசி. கூதிர் அதாவது குளிர் காலம் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள். முன்பனி மார்கழி ,தை மாதங்கள். முன்பனி மாசி, பங்குனி என மாதங்களின் வாரியாக  பெரும் பொழுதுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்டவைகள் அனைத்தும் கருப்பொருள்கள் எனப்படுகின்றன. அதாவது அந்தந்த மக்களின் வாழ்க்கைக்கு உரிய தெய்வம், மக்கள், புள், விளங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண் ,தொழில். இந்த 14 பொருள்களும் கருப்பொருள்கள் எனப்படுகின்றன. அகப்பொருள் பாடல்களில் இவையே கருப்பொருள்களாக பின்புலமாக அமைய அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக உரிப் பொருள்.

தலைவியும் தலைவனும் கூடுதல், பிரிதல் தலைவனிடம் தலைவி ஊழல் கொள்ளுதல், எதிர்பார்த்து காத்திருத்தல், காலம் நீடிக்கும் போது வருந்துதல் இவையே உரிப்பொருள்கள் எனப்படும் .

உரி பொருளாகிய இந்த வாழ்க்கை ஒழுக்கமே முப்பொருள்களிலும் முதன்மையாகும் .

குறிஞ்சி திணைக்கு உரிப்பொருள் புணர்தல். பாலை திணைக்கு உரிப்பொருள் பிரிதல். முல்லைத் திணைக்கு உரி பொருள் இருத்தல். நெய்தல் திணைக்கு உரிப்பொருள் இரங்கள்.மருதம் திணைக்கு உரிப்பொருள் ஊடல். இவற்றுடன் கைக்கிளை மற்றும் பெருந்திணை ஆகியவை சேர்ந்து ஏழு அகத்திணைகள் ஆகின்றன.

குறிஞ்சியும் புணர்தலும் தலைவனும் தலைவியும் தனிமையில் ஒருவரை ஒருவர் கூடி மகிழும் நிலை புணர்தல் எனப்படும்.

முல்லையும் இருத்தலும் தலைவி தலைவன் கூறிய பருவம் வரை தன் கற்புத்திறன் காத்து அப்பருவம் வந்தவுடன் தன் தலைவனோடு இன்புற இல்லத்தில் இருக்கும் நிலை இருத்தல் ஆகும். 

மருதமும் ஊடலும்.
தலைவன் மாறுபட்டு போதல் இயல்பே. அவ்வாறு மாறுபட்டு போகின்ற தலைவனை தன் வழிப்படுத்துவதற்காக தலைவி கையாளுகிற கருவி ஊடல். 

நெய்தலும் இரங்கலும்.
கடல் மேல் சென்ற தலைவன் வராததால் அவன் நிலை குறித்து தலைவிக்கு ஏற்படும் ஏக்கம் இரங்கல் ஆகும்.

பாளையம் பிரிவும்.
பிரிவு எல்லா நிலைகளிலும் அமையக்கூடியது கூடிய பின் பிரிதலும், இல்லத்தில் இருந்து பின் பிரிதலும் பாலை நிலத்திற்குரியது ஆகிறது .

நமது முன்னோர்கள் பிரித்து வைத்த இந்த நிலங்களின் அடிப்படையிலும் காலங்களின் அடிப்படையில் தான் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வீரம், கலை, கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல், கொடை,நாகரிகம், வாழ்க்கை இவைகள் அனைத்தும் ஐந்து நிலப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதனுடைய வாழ்க்கை முறைகளையும் கூறிய நம் முன்னோர்களின் சிறப்புக்கு எங்கேயும் ஈடாகாது.

பொ.ச.மகாலட்சுமி
M.A., B.Ed ., M.Phil.,
கோவை.