என்றென்றைக்குமாய்...

தபால் தினம் கவிதை

என்றென்றைக்குமாய்...

என்றென்றைக்குமாய்...

கல் தோன்றி மண் தோன்றிய 
காலத்தே வாழ்ந்து வந்த அஞ்சல்துறையும்
தபால் தலையும் தொழில்நுட்பத்தின் அசாத்திய 
வளர்ச்சியின் துணை கொண்டு காணாமல் 
போனது எழுத்துக்களால்  உறவை வளர்க்கும்
கடிதமும் தபால் துறையும் தபால்காரரும் 
மாறுவேடம் அணிந்து புதியதோர் உலகம்
செய்ய வந்ததோ தகவல்களை பரிமாறிக் கொள்ள 
நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்து
இன்று நம் விரல் அசைவில்
நிற்பதால் தபால்காரர் மணி ஓசையோடு
வேறு பல நிகழ்வுகளும் நினைவுகளில்
மட்டும் தங்கிப் போனது என்றைக்குமாய்….

முனைவர்.
ப்ரியா நாகராஜன்,
திருவனந்தபுரம்.