திருக்கார்த்திகை

திருக்கார்த்திகை திருவிழா கவிதை

திருக்கார்த்திகை

கார்த்திகையாம் கார்த்திகை திருக்கார்த்திகை
வேலவனை கொண்டாடும் ...

கார்த்திகை முத்துவேலவனை கொண்டாடும் கார்த்திகை 

அறுபடை வீடு கொண்டவனா ஆறு நட்சத்திரமாய் பிறந்தவனாம் எங்கள் 

ஆறுமுக நா முருகனே அழகன் என்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருள் இன்றி 

உலகில் பொருளை ஏதும் முருகா என்று கூற வைத்த 

முருகனே சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா
என்று அவ்வையை கேட்ட 
முருகா


முருகன் சுடராக
என்ற முருகன் எங்களை வாழ வைக்க வந்த 

முருகா வரம் தந்த முருகா கார்த்திகை பெண்கள் வளர்க்க 

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை பிறந்தவனே 

கார்த்திகைத் திருநாளில் அவதரித்த பௌர்ணமி  பௌர்ணமிப் புதல்வனே 

பௌர்ணமியாய் முழு நிலவில் தவழ்ந்த தங்கப் புதல்வனே முருகனே எங்கள் 


தரணி காக்க வந்தவனே எங்களை ஆள வந்த முருகனே தவம் இருந்து பெற்ற உந்தன் அன்னை உன்னை

திரு கார்த்திகை திருநாளை ஜோதிமயமாக்கிய

முருகா கார்த்திகை மைதா கந்தா கடம்பாக்
கதிர் வேலா என்று உன்னை கொஞ்சிட வைத்த 

முருகா உன்னை பாடிட வைத்த முருகா எல்லா வளமும் எல்லோருக்கும் 

அருள வந்துடு முருகா நித்தமும் அருள வந்திடு முருகா சஷ்டி கவசமாய் நின்று 

சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று குழந்தைகளை வரமாகக் கொடுக்கும் இறைவா 

குழந்தை வரம் கொடுக்கும் நினைவா குமரா வேலவா 


குன்று
இருக்கும் இடம் என்று கூற வைத்த முருகன் இனிய புகழ்கிறோமே 

எண்ணியே பாடுகிறோமே நாங்களே இனிய புகழால் கண்ணிமை பாட எங்கள் 

இதயத்தில் வந்திருக்கும் முருகா வா முருகா வா அருள்தா முருகா


முனைவர்
கவிதாயினி
சு.நாகவள்ளி
மதுரை.