டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் 072

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

டாக்டர் பீமாராவ்  அம்பேத்கர் 072

*டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்!*

ஏழைத் தந்தை, வறுமைக் குடும்பம்,
எல்லாம் கடந்து, வீட்டை மறந்து,
வெளி நாட்டில் பயின்று, மேதையானவர்.

தலைசிறந்த மனிதர், சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், அரசியல்வாதி,
இந்திய அரசியலமைப்பின் தந்தை!

மனித பாகுபாடுகளை களைந்து எரியுங்கள்
சமத்துவத்தை நிலை நாட்டுங்கள்!
தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி
உலக நாடுகளுக்கெல்லாம் உரக்கச் சொன்னவர்.

இந்த இருபதாம் நூற்றாண்டு
இன்று போற்றி மகிழும்
நம் இந்தியாவின்
இரண்டாம் தந்தஇந்த இருபதாம் நூற்றாண்டு
இன்று போற்றி மகிழும்
நம் இந்தியாவின்
இரண்டாம் தந்தை!

சட்டங்களாலும் பல பட்டங்களாலும்
இந்தியாவின் மானத்தைக்
காத்தவன்!

அஞ்சாதே! நிமிர்ந்து நில்! என்ற
பகுத்தறிவு தந்திரங்களை
மக்கள் நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர்!

மத்திய அரசின் பரிந்துரையால்
தன் நாட்டிற்கான புதிய சட்டங்களை இயற்றி
அதைத் திட்டங்களாய்ச் செயல்படுத்தியவர்!

சட்டம் பயில்வோர்கள்,
சமத்துவம் போற்றுவோர்கள்- என
ஏனைய மக்களின் குருவானவர்!

சட்ட மேதை, அறிவுச் சுடரொளி,
ஆற்றலின் அடைமொழி, அகிம்சையின் தத்துவம்,
உண்மையின் உருவம், அடக்கத்தின் அடையாளம்,
எழுச்சியின் அறிமுகம், புரட்சியின் பூர்வீகம்,
இந்தியாவின் கலங்கரை விளக்கம்,
மாமேதை, புரட்சியாளர்,
பீமாராவ்  ராம்ஜி, டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்.

- திருமதி  ச. இராமலக்ஷ்மி

ராஜபாளையம்

சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி

விருதுநகர்.