சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்....

போராடி பெற்றிட்ட சுதந்திரம் தான்
ஆனால் ஏனோ போராட்டம் இன்னும் ஓய்ந்த பாடில்லை... 
ஆண்டாண்டு காலமாய் 
அடிமை இருள் அண்டி
வெந்துக் கிடந்தது வெள்ளை இந்தியா...
அண்ணலின் வெள்ளையனே வெளியேறு புரட்சியால்
புதுப்புனல் பாய்ந்தது
சீறிப்பாய்ந்தன சிறுத்தை புலிகள்
சிதறி ஓடின சிறு நரிகள்....

இருட்டில் பெற்ற சுதந்திரம் என்பதாலோ
இன்னும் விடியவே இல்லை.. 
தன்னலம் துறந்தத் தலைவர்கள்
தன்னிறைவு நித்தம் பெற்றிட
பட்டினி பசியெல்லாம் பறந்தோடட்டும்...
தீவிரவாதங்கள் தீர்ந்து போகட்டும்
தீராத வன்முறைகள் அழிந்து போகட்டும்...

பெண்ணியம் விடுதலை பெறட்டும்
கண்ணியம் அமைதி நிறையட்டும்
சுதந்திர தினமாம் இன்று
நம் சுருங்கிய இதயங்கள் விரியட்டும்...
ஊழல்  கொள்ளைகள் ஒழியட்டும்
ஏழ்மையில்லா நிலை வளரட்டும்.. 
ஆண்டாண்டு காலமாய்
அடிமைப்பட்ட சுதந்திரம் 
அடிமை விலங்கினை உடைத்தெறியட்டும்...
சுதந்திர காற்றை சுவாசிப்போம் சுதந்திரமாய்.. 

கவிஞர். சசிகலா திருமால்
கும்பகோணம்.