அண்ணா என்னும் பேரொளி...035

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும் பேரொளி...035

அறிஞர் அண்ணா என்னும் பேரொளி

துன்பினை ஏற்று
.... சுகத்தினை மறந்து//
துயருறும் மக்களின்
.... தோழன் ஆனார்//

பொய்யே புகழா
.... அரசியல் ஞானி//
பொல்லாங் கெதையும்
.... சொல்லா மானிடர்//

மானிடம் உயர்ந்திட
.... தன்னை வருத்தினார்//
ஒற்றுமை ஓங்கிட
.... உயிரையும் கொடுத்தார்//

பெய்யும் மழையாய்ப்
.... பெருகும் நதியாய்//பூமியும் செழித்திட
.... வாழ்ந்த அறிஞர்//

தனக்கா வாழாத்
.... துறவி ஆசை//
தன்னை நினையாய்ப்
.... பிறவியே என்றும்//

இதயம் கவர்ந்த
.... மூத்தத் தமிழன்//
மக்களின் இமயம்
.... உயர்ந்த முதல்வர்//

நாடே வீடென
.... நெஞ்சில் பதித்தார்//
சாதனை தன்னைச்
.... செய்து முடித்தார்//

அஞ்சாத தேசிய
... புலமையில் கம்பன்//
தவசியும் வியக்கத்
.... தன்னலம் துறந்தோன்//

தொண்டினை மறவா
.... சுடர்மிகு பேரொளி//
தனித்தமிழில் பாவிசைத்த
.... கவிதையில் வேந்தர்//

நிரந்தர மாகினார்
.... தமிழால் உயிரை//
நிரந்தரப் பாடலில்
.....வைத்தபா பேரறிஞர்//

பா. இராமர் தேனி மாவட்டம்.