சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

சுதந்திர தினம் கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...

பாரினில் ஆண்டவர் அடிமை என்ற போதிலும்... 
அவன் பார்வையில் நாமிங்கு தீயென்று ஆகினும்.... 
மேலென்ன கீழென்ன பிறப்பாலே இங்கு... மேற்குடி ஆண்டதெல்லாம் போனதென்ன இன்று...
கை கட்டி வாய் பொத்தி சொன்னதை செய்யவே.... 
கை விலங்கு இரண்டு பூட்டி தரை இழுத்து செல்லவே... 
காலமிந்த காலமில்லை... அது போனதென்று சொல்லவே...
பூமி மீது பிறப்பெடுத்தோம்... பூக்களை போல் பூக்கவே... 
பள்ளி முதல் பார் முழுதும் அடிமை யாரும் இல்லையே... 
வந்தது நல்ல விடியல் என்று சொல்லடி இளைய செல்லியே.... 
சுதந்திரம் தந்த இந்த தாய் தந்தையர் மண்ணே... சொன்னதெல்லாம் செய்திடவே கண்டது இந்த கண்ணே.... பாட்டுக்கொரு பாரதியும்... 
பாருக்கொரு நேதாஜியும்... 
பிறந்த பூமி இது என்று பெருமிதம் கொள்வோம்... 
தீராத பகையொன்று.... வீழ்ந்தென்ற போதிலும்....

தீராத காதல் ஒன்று தேசத்தின் மேல் ..வையடி...
சுவாசிப்பது காற்றுஅல்ல காதல் என்று சொன்னால்....

குறையேதுமில்லையே.... அது சுதந்திரமே ஆயினும்... 
சுதேசமே ஆயினும்... நேசிப்போமே ..சுதந்திர காற்றினை சுவாசிப்போமே...

-பூ வனிதாமணி.

  கமுதி.