தமிழர் பண்பாடு...! 016

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர் பண்பாடு...! 016

தமிழர் பண்பாடு
முன்னுரை
தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம். தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
தமிழர் கலாச்சாரம்:
தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்ட, திருத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஓர் இயங்கியல் பண்பாடே.

"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்." 
பாவாணர் கூறுவது போல, பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம், நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. முன்னது 'அகக்கூறு ' பின்னது 'புறக்கூறு'. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு, நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு. தமிழர் பண்பாடு இவ்விரண்டிலும் மெச்சத்தக்கது.

பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறுப்பது கடினமாகினும் ஓர் அறிவுசார் மதிப்பீடு செய்ய முடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டா. மாறாகச் சைவ சமயத்துக்குத் தமிழர் பண்பாட்டுடன் ஓர் இறுகிய தொடர்பு உண்டு.
தமிழர் கலாச்சாரம்:
                               அன்று தொட்டே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய தமிழர்கள் முத்தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் இயல், இசை, நாடகம் என ஆய கலைகள் அறுபத்தினான்கும் தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றுகின்றன.
கலாச்சாரம் எனப்படுவது வாழ்வியல் பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள், கலைகள் போன்றவற்றின் மூலம் வெளிப்படும் மக்களின் பிரதிபலிப்பாகும்.
தமிழர்கள் வேட்டி சேலை எனும் ஆடை கலாச்சாரத்தை உடையவர்கள் இவர்கள் அதிகம் இந்து சமயம் சார்ந்தவர்கள் இவர்களது வாழ்வியல் வழிபாட்டு முறைகள் போன்றன அதிகளவான சடங்கு சம்பிரதாயங்களை கொண்டு காணப்படுகின்றன.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வரும் நிகழ்வுகள், திருமணம், புதுமனைபுகுதல், தொழில் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளை சுப நிகழ்வுகளாக கொண்டாடி தமது கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்களாக விளங்கினர் தமிழர்கள் தமது பண்பாடு கலாச்சாரங்களை வெளிக்காட்டும் மாபெரும் கோவில்களை அமைத்திருந்தனர்.
இது தமிழர்களின் கட்டட கலை சிற்பக்கலை ஓவிய கலை, நாட்டிய கலை போன்ற கலைகளையும் இறை நம்பிக்கையையும் பல தலைமுறைகளை தாண்டி உலகத்துக்கே பறை சாற்றும் அதிசயங்களாகும்.
தமிழ் நாட்டில் அமைந்துள்ள “தஞ்சை பெருங்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தில்லை நடராஜர் கோவில் இவை போன்ற ஆயிர கணக்கான கோயில்கள் தமிழர் கலாச்சாரத்தை வெளிக்காட்டும் உலகமே வியந்து பார்க்கும் அதிசயங்கள் ஆகும்.
மேலும் மங்கல இசை வாத்தியங்களின் புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், உடுக்கு, பறை, மணி மற்றும் சங்கு போன்ற இசைக்கருவிகள் தமிழர் கலாச்சார இசைக்கருவிகளாகும்.
தமிழில் எழுந்த ஒப்பற்ற இசைப்பாடல்கள் தமிழர்களின் இசை ஆர்வத்தை எடுத்து காட்டும்.
என்றும் பெருமை மிக்க சங்கப்பாடல்கள் ஜம்பெரும் காப்பியங்கள், பதினெண் கீழ் மேல் கணக்கு நூல்கள், கம்பராமாயணம் பல நூறு மாபெரும் இலக்கிய வரலாற்றை கொண்டவை.
தமிழ் கலாச்சாரம் நடனம், நாடகம், கூத்து போன்ற எம் மண்ணுக்குரிய கலைகளை கொண்டதுவே தமிழ் கலாச்சாரம் காதலும் வீரமும் அன்பும் இயற்கையும் மனிதமும் கலைகளும் ஒருங்கே சங்கமிக்கும் தமிழ் கலாச்சாரம் என்றைக்கும் பெருமைக்குரியதாகும்.
இன்றைய நிலை
இன்றைய சமுதாயமானது உலகமயமாதல், மேனாட்டு கலாச்சார மோகம், தொடர்பாடல் வலுப்பெற்றமை போன்றவற்றால் நமது பண்பாட்டு கலாச்சாரத்தின் உடை, உணவு, கலை என்பவற்றில் இருந்து விலகி செல்கின்ற தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது.
தன் இனத்தினுடைய அடையாளங்களான பண்பாடு மற்றும் கலாசாரத்தை விட்டுக் கொடுப்பது தனது பிறப்புரிமையை விட்டுக் கொடுப்பதற்கு சமனான செயலாகும்.
வெளித்தோற்றத்தில் பிற பண்பாட்டை கலாச்சாரத்தை பிரதிபலித்து காட்டினாலும் தமிழரின் தனித்தன்மை கொண்ட பண்பாடு கலாச்சாரம் என்பன ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தப்படுவதாகவே இருக்கும்.

 

 


அருகி வரும் தமிழ் பண்பாடு கலாச்சாரம்:
                                        இன்றைக்கு கலிகாலம் போல் தமிழும் இதன் பெருமை மிகு பண்பாடும் கலாச்சாரமும் குறைந்தபடி இருப்பது வேதனைக்குரியதாகும்.
நாகரகீ வளர்ச்சியும் பிறமொழி கலப்புக்களும் மேற்கத்தைய கலாச்சார ஊடுருவல்களும் இதற்கு காரணமாகும்.
இன்றைக்கு எம் மொழி என்று பெருமையாக சொல்லும் காலம் போய் ஆங்கிலம் பேசினால் பெருமை என்று நினைக்கிறார்கள். தமிழில் பேசினால் அவமானம் என்று கருதுகிறார்கள்.
இன்றைக்கு பிற மொழிகளை அரச மொழிகளாக மாற்றுவதனால் தமிழ் மொழியை விட்டு வேலை வாய்ப்பிற்காக கற்க வேண்டிய நிலை தமிழர்களுக்கு ஏற்படுகிறது.
இதனால் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டிய குழந்தைகள் கூட ஆங்கில மொழி மூலமான கல்விக்கு பெற்றோரால் திணிக்கப்படுகின்றனர். இன்றைக்கு தமிழர்களுக்கு தம் மொழி மீதான பற்று குறைவடைந்து போகிறது.
தமது பண்பாடுகளை பழக்க வழக்கங்களை மறந்து தவறான பாதையில் செல்கின்றனர்.
இந்நிலை தொடர கூடாது எமது மொழி பெருமைக்குரிய மொழி அதை பாதுகாக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும்.

 


இளைய தலைமுறையினரின் கடமை
நம் முன்னோர் உருவாக்கி கடைப்பிடித்த பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டியது எம் தலையாய கடமையாகும்.
பிறதேச கலாச்சார மோகங்களை தவிர்த்தல், எமது கலாச்சார உடைகளை அணிதல், பண்டிகைகளை கொண்டாடுதல், அடுத்த தலைமுறைக்கு இவைபற்றி கற்பித்தல் என்பன நம் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும்.

முடிவுரை:
உலகுக்கே பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சொல்லி கொடுத்த இனம் எப்போதும் எமது பெருமைகளை மறந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் இதை சொல்லி கொடுக்க நாம் தவற கூடாது.
எமது கலாச்சாரத்தின் ஆழத்தை கீழடியில் நிகழ்ந்த புதைபொருள் ஆய்வுகள் கூறும். தமிழ் என்று சொல்ல காற்றும் இசைமீட்டும்.
இருக்கின்ற பெருமைகளை கட்டி காப்பதும் அவற்றை தலைமுறை தாண்டி நிற்க செய்வதும் தமிழர்களான எம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நம் தமிழின் பெருமையை பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் “தமிழுக்கு அமுதென்று பெயர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடுகிறார்.
ஆதலால் எம் உயிரிலும் மேலான தமிழையும் அதன் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் காப்பது எம் கடமையாகும்.

அ. சிவசங்கர்.