அண்ணா என்னும் ஆகாயம் 007

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை

அண்ணா என்னும் ஆகாயம் 007

அறிஞர் அண்ணா எனும் ஆகாயம்


அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழியே!

அண்ணா மூட நம்பிக்கைகளை எதிர்த்தவர்!

அதிக நூல்களை விரும்பி படிப்பவர்!

ஆற்றல் மிகுந்த ஆணவம் இல்லாதவர்!

ஆழமான கருத்துக்களும் பேச்சாற்றலும் நிறைந்தவர்!

தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சாற்றலில் ஈடுஇணையற்றவர்!

அண்ணாவின் சொற்பொழிவினை கேட்க கொடுப்பினை வேண்டும்!

இலவச  பள்ளிக் கல்வித்திட்டத்தை கொண்டு வந்தவர்!

இந்தி திணிப்புக்கு எதிராக போராடியவர்!

மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என மாற்றியவர்!

ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை கொண்டு வந்தவர்!

இரண்டாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தியவர்!

ஜமீன்தாரி ஒழிப்பு திட்டத்தின் மூலமே!

இலவச பட்டாக்கள் விவசாயிகளுக்கு வழங்கியவரே!

புன்செய் நிலங்கள் மீதான நிலவரியை ரத்து செய்தவர்!

தன்னம்பிக்கை  அதிகம்  உள்ள மாமனிதர்!

தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்!

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கைக்கொண்டவர்!

சமூகநீதி, மாநில உரிமை, மொழி உரிமை சிந்தனையாளர்!

சுயமரியாதைத்  திருமணங்கள் செல்லுமென சட்டமியற்றியவர்!

எதிரிகளிடமும் அன்பும் மரியாதையும் செலுத்துபவர்!

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுயன்றவர்!

நடுவுநிலை தவறாத சிறந்த மனிதர்!

நாடகங்களை எழுதி கலைத்துறையில் முத்திரைப் பதித்தவர்

 மனித நேயம் கொண்ட மாண்பாளர்

மாற்றாரை மதிக்கும் பண்பாளர்!

சிறந்த மொழியாற்றல் தேசபக்தி நிறைந்தவர்!

சிறந்த எழுத்தாளர் பேரறிஞர்  அண்ணா!

மதுவிலக்கை நடைமுறைப் படுத்தியவர்!

மக்கள் இதயங்களில் என்றும் வாழ்பவர்!

க. விஜயசாமுண்டீஸ்வரி 
சென்னை.