அண்ணல் அம்பேத்கர் 071

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அண்ணல் அம்பேத்கர் 071

அண்ணல் அம்பேத்கர்...

அம்பேத்கர் சிறுவயதில்
கல்வி கற்க சிரமங்களைப் பட்டவரே

அம்பேத்கர்
என்றால்
தந்தைஎன்றே பொருளாம்
அனைத்து
மக்களுக்கும்
தந்தையானவரே

இந்திய
விடுதலைக்குப்
பின்னர்
நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக
பதவி வகித்தவரே

நாட்டு முன்னேற்றத்தின் நாடி ஆனவரே
உயிர் நாடி ஆனவரே

இந்திய 
சட்டத்தைக்
கொண்டு வந்த மாமேதையே

தீண்டாமை என்ற நோயை வேரறுத்து சாதியை தீயிட்டுக் கொளுத்தியவரே

பீமாராவ்ராம்ஜி
என்றே பெயர் வைத்த தனது ஆசிரியரின் மேல் கொண்ட அன்பால்

தனதுபெயருக்குப்பின்னால்
ஆசிருயரின் பெயரான அம்பேத்கர் இணைத்தே தனது பக்தியை வெளிப்படுத்தியவரே

பரோடா மன்னரின் அவையில் பணி புரிந்தவரே
படைத்தலைவராக இருந்தவரே

கல்வியைத்
தொடர பரோடா
மன்னர்
வள்ளலானாரே

ஒடு்க்கப்பட்ட மக்களின்
வாழ்க்கையை 
முன்னேற்றுவதற்காக
பாடுபட்டவரே

இரட்டை வாக்குரிமை என்ற சட்டத்தைக்கொண்டு வந்தவரே

காந்தியின். சொல்கேட்டு நடந்தே
தனித்தொகுதுச்
சட்டமே கொண்டு வந்தவரே

குடிமக்களின் நலனுக்காக பல சட்ட பிரிவுகளைத்
தொகுத்தவரே

சமூக ஆவணங்களைப்
படைத்தவரே
பௌத்தமத்ததின் மேல் ஈடுபாடு கொண்டவரே

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்றானவரே
எங்கள் அம்பேத்கரே..!

-முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.