மகாகவி பாரதியார்

பாரதியார் நினைவு தினம் கவிதை

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் 

தமிழின் சுவை அறிந்து 
விடுதலை உணர்வை 
பாட்டினில் ஊட்டி ...
மக்களுக்கு எளிய முறையில் உணர்த்தி 
பெண்கல்விக்கு முன்னேற்றம் வகுத்து 
இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட எங்கள் புரட்சிக்கவியே! 

அக்னி பிளம்புகள் கண்ணில் தெறிக்க 
விடுதலை முழக்கம் கொண்ட 
முறுக்கு மீசை எங்கள் முண்டாசு கவி! 

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகளை ஏடுகளில் புகுத்தி அனைவரையும் 
ஒரே இனம் சகோதர சகோதரிகள் என்று ஒற்றுமை பெறச்செய்தவர். 

புத்தகமே அவர் உயிர் மூச்சு! 

கவிதையே அவர் காணும் மூச்சு! 

அடிமைத்தனம் ஒழிக்க //

குழந்தைத்திருமணம் முற்றிலும் தகர்க்க குரல் கொடுத்தவர்.  

வறுமையிலும் தமிழ் அன்னையின் பெருமையை புத்தகத்தில் மிளிரச்செய்தவர் .

அரசவைக்கவிஞர் //
இதழாசிரியர் //
பேராசிரியர் //என
பன்முகத்திறன் கொண்டவர். 

எட்டயபுரத்தின் மாணிக்கமே! 

தமிழகத்திற்கு கிடைத்த 
அறிவுப்பெட்டகமே! 

நிமிர்ந்த நடையும் 
கனத்த குரலும் 
குற்றத்தை கூட்டத்தில் போட்டுடைத்து நீதிகிடைக்க முன்வந்த 
 துணிச்சல் நிறைந்த எங்கள் 
மகா கவியே! 

சங்கீத பூங்குரல்
செந்தமிழ்  பாட்டில் 
நாட்டின் பெருமையை 
உணர்த்தி 
ஏற்றம் கண்டவர்... 

இளைய சமுதாயம் 
வளர கட்டுரைகளும் போதனைகளையும் 
ஊட்டி  சுதந்திர
போராட்டத்திற்கு பொதுக்கூட்டங்கள் அமைத்து பிரச்சாரம் மூலம்  பாடுபட்டவர்... 

அடிமையில் சிக்கிய இந்தியாவை மீட்டெடுக்க /
எட்டயபுரத்தில் பிரவேசித்து/
ஏழைப்பிள்ளைகளின் 
கல்விக்கு அதிக முன்னேற்றம்கொடுத்தவர்.

பாகுபாடு அற்றவர்!/
பாசமாய் பிள்ளைகளை அரவணைத்தவர் 

பாட்டின் மூலம் தமிழுக்கு பாமாலை தொடுத்தவர். 

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு  நாட்டை வெள்ளையரிடம் மீட்டெடுக்க அரும்பாடு பட்டவர். 

வீட்டில் அடுப்படியிலும் 
சமையல் அறையிலும் 
முடங்கிய பெண்களை 
கல்விக்கண் திறந்து வைத்து எழுதுகோல் பிடிக்கச்செய்தவர். 

நாட்டின் வளத்தையும் மொழியின் தொன்மையையும் 
பறைசாற்றி  விடுதலை முழக்கம் பெறச் செய்தவர்.. 

இளம்வயதில் 
கவிப்புலமையும் 
மாணவர்களுக்கு வழிகாட்டும்நல்லாசிரியராய் விளங்கியவர் //

தமிழ்த்தாயின் அரூயிர் புதல்வர் .
எட்டயபுரசிம்மாசனமாய் கம்பீர நடையும் 
போர் முழக்கத்துடன் 
சுதந்திரத்திற்கு பாடு பட்ட பாரதியார் புகழ் தரணியில் 
வாழியவே! 
ஐயாவின் நினைவுநாளில் வணங்குகிறேன். 


- இளம் சாதனையாளர்.

கவிஞர். ஜெ. கோகுல்., பி. எஸ். சி., எம். சி., 
எம் எஸ். சி.
மேலபுலம் புதூர்.