நீ ஒரு தீபாவளி...

தீபாவளி கவிதை

நீ ஒரு தீபாவளி...

நீ சொன்ன வாழ்த்தொளியே எனக்கு ஆரம்ப தீபாவளி

உன் சிரிப்பொலியே எனக்கு பட்டாசுஒலி!

உன் மௌனம் எனக்கு பழைய ஆடை!
உன் புன்னகை எனக்கு பட்டாடை,புத்தாடை!

உன் குறுஞ்செய்தி எனக்கு இனிப்பூட்டும் பலகாரம்

இனி வரும் தீபாவளி என்ன ஒய்யாரம்
இனி உன் தொடர்பில் நாளெல்லாம்
நான் காணும் தீபாவளியய் அரங்கேற்றம்!

கவிதை மாணிக்கம்