அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் 003

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் கவிதை

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் 003

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை 

 அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம் 

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வலியுறுத்தியவர் ¡
மனித நேயமும் கடவுளை அடையும் வழி என்றவர்!
அண்ணா மூட நம்பிக்கைகளை என்றுமே எதிர்த்தார்!
அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தவர்!
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை கொள்கையாகக் கொண்டவர்!
பொதுவாழ்வில் பண்புமிக்க நபராகத் திகழ்ந்தவர்!
எதிர்க்கட்சிகளையும் மதித்து நடந்தவர்!
தாய்மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தவர்!
பெரியாருடன் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டவர்!
தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டவர்!
மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தியவர்!
கண்ணியத்துடன் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்!
புத்தி சாதுர்யமாகப் பதிலளிப்பதில் மிகவும் வல்லவர்!.
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர்!
சப் பெல்லோசிப் என்ற கவுரவ பேராசிரியர் விருது பெற்றவர்!
முதலமைச்சர் பதவியில் இருந்து அழகு சேர்த்தவர்!
வளமான மேடைப்பேச்சுக்கு சொந்தக்காரர்!
தமிழகத்தை தலை நிமிரச் செய்த பேரறிஞர்!
அண்ணாவின் புகழ் என்றென்றும் ஓங்குக!


- முனைவர். கோ. சுதாதேவி, கரூர்.