நேசக்காரி..!
காதல் கவிதை

ஏய் வாசனை திரவியமே!!
ஏலக்காய் போனறவாசத்தை
உலர்ந்த போதும்
என்னுள்ளே வீசுகிறாய்!!
இளமை மாறாது கூடியபசுமையில்!!
உலர்ந்த திராட்சையாய்
ஊறும் நினைவிலே !!
சுவையூட்டுகிறாய்
முதுமை நினைவிலே!!
இளமையை ஊறவைத்து!!
ஊக்கமிழந்து உலந்தே போனாலும்!!
குறுமிளகாய்! உன் சிறுநினைவுகூட!
காரசாரமாய்
கலகலப்பு சுவைகூட்டி விடுகிறாய்!!
கடுகடுவென நீ பேசி முகம்சுழித்தாலும்!
(குழம்பாய்)
குழம்பிபோன என் இதயத்திற்கு!
தாழாது!! என்னுள் பொறிந்தேனும்!
மணம் கூட்டியே செல்கிறதே உன் நினைவுகள்!!
இஞ்சி யாய் இளமைஇருந்து! சுக்காய் சுருங்கியே போனாலும்!!
கலந்தகலவை கெடாமல்!!(நட்பு) வாசம்கூட்டும் நேசக்காரியே!!
கவிதை மாணிக்கம்
Comments (0)