மகிழ்ச்சி FM கலாம் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

கலாம் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

மகிழ்ச்சி FM கலாம் விருது  கவிதைப் போட்டி கவிதைகள்

மகிழ்ச்சி FM கலாம் விருது  கவிதைப் போட்டி கவிதைகள்

001. இளைஞர்களின் இதயம்

வாழ்க்கைக்கு வழிகாட்டிய மாமனிதர் கலாம்/
ராமேஸ்வரத்தில் பிறந்த ரத்தினம் இவர்/
இளைய தலைமுறையின் இதய நாயகன்/
எதிர் காலக் கனவை நினைவாக்க/
கனவு காணுங்கள் என்ற கனவு நாயகன்/
மாணவர்களைச் சிந்திக்கச் செய்த சிற்பி/
சிந்திப்பது மட்டுமல்ல சிகரம் தொட/

ஊக்குவிக்கும் உன்னத மனிதர் இவர்/
நம்பிக்கை எனும் மூலதனத்தை விதைத்தவர்/
இவர் விதைத்த விதை விருட்சமாய்/
வளர்ந்து பல சாதனைகள் செய்கிறது/
அறிவின் அன்னை நீயே அன்பரே/
ஆண்டவன் எங்களுக்கு அளித்த வரம்/
அணு ஆராய்ச்சியில் அற்புதம் படைத்தாய்/
உங்கள் அறிவியல் பணி அறப்பணி/
இல்லறம் துறந்த இனியவன் நீரே/
என்றும் எங்கள் கனவு நாயகன்/
ஏழ்மையிலிருந்த போதும் ஏற்றம் கொண்டவர்/
உண்மையான மனிதனாய் வாழ்ந்து காட்டினாய்/
நின் குணத்தால் என்றென்றும் ஐயா/
நாளைய பொழுது உன்னுடையது தோழா/
எழுந்து வேகமாக ஓடு உனக்காக/
எட்டுத் திசையும் காத்துக் கிடக்கிறது/
என்று எங்களை என்றும் ஊக்கப்படுத்தினாயே/
உன் அயராத உழைப்பினால் உயர்ந்தாயே/
இன்றைய மாணவர்களுக்கு
வழிகாட்டினாயே ஐயா/
மாணவர்களே கைப்பேசியில்

பொழுதைத் தொலைத்தது போதும்/
உன் அறிவோடு சிறிது நேரம்/

உரையாடுங்கள் உயர்ந்த இடத்திற்குச்
செல்லுங்கள்/
அதுவே கலாம் ஐயாவின்
கனவாகும் /

இர.உஷாநந்தினி சதீஸ்குமார்
கோவை.

 

002. அக்னியின் நாயகன்
 

இளைஞர்களின் கனவு நாயகனே...!!

அறிவு களஞ்சியத்தின் அற்புதச் சிற்பியே...!!

விஞ்ஞானிகளின்
மனதிற்கு விடிவெள்ளியே...!!

தலைமை பொருப்பேற்றாலும்
தனித்துவமான  ஒளிவிலக்கே...!!

மாணவர்களின்
எண்ணங்களை கொள்ளை கொண்ட கொடை வள்ளலே...!!

கோபுரக் கலசத்தில் உள்ள காந்த சக்தியே...!!

ஏவுகணையால் எதிர்காலத்திற்கான

மாற்றங்களைக் கொணர்ந்த மாமனிதனே...!!

அரசியலையும் ஆராய்ந்து குடியுரிமைக்காக

குரல் கொடுத்தக் குமரனே...!!

அக்னிச் சிறகெனும் ஆழ்கடலின்

முத்துக்களின் எழுத்தாளனே...!!

நீவீர் வாழ்ந்த காலத்தை வலைத்தளமாக

வளம்வரச் செய்வோமே...!!

அரு.நச்செள்ளை
சேலம்.

 

003.ஏவுகனை  நாயகன்.      

 இந்தியாவை உலகரங்கில் தலை நிமிர வைத்தீர்                     

மாற்று திறனாளிகளுக்கான 

எடை குறைந்த காலிப்பர்  தந்தீர்.             

செய்தித்தாளை  விற்பனை செய்த  தாங்கள் கலாமில்லாத 

செய்தித்தாள் இல்லையென சரித்திரம் படைத்தீர்.                       

இளைய  சமூகம்  முன்னேறிட  அரும்பாடுபட்ட  ஆசானே.                         

ஒரு வினாடி கூட  வீணாக்காது இத்தேசம் 

முன்னேறிட  பணியாற்றிய  உழைப்பின்  சிகரம் நீவிர்.            

நாஸா  தன்னை  நாடியபோதும் 

தேசத்திற்காக  உழைத்த நாயகனே                      

அக்னி  சிறகு தந்த  அணையாத  ஜோதியே.                    

எளிய  வாழ்வு. நேர்மையான  உழைப்பு.                     

மாணவர்களுக்கான பொன்மொழிகள் தந்து 

தரணிஎங்கும்  புகழ்பெற்றவர்.           

மழை பெய்ய வேண்டும்  மரங்கள் 

இன்றே  நடட்டும் உங்களுடைய கரங்கள் என்றீர்...                             

தங்களுடைய  வழி நடப்போம்  நாங்கள்....                     

சு.முருகன்.

பட்டதாரியாசிரியர்

அரசுமேல்நிலைப்பள்ளி.

சுந்தர பாண்டியபுரம்.627858

தென்காசி மாவட்டம்.           

                      

004. காலம் கண்ட கலாம்

 அறிவென்னும் ஆண்டவனின் அருளோன் மனிதன் \\     
 அறிவாக்கம் ஆக்குதலின்  உடைமை  முனைவன் \\  
  இருளென்னும் ஆய்வகத்துள் அறிவைச் செலுத்தி \\      
  கருவுடைய விண்ணதனை விளக்கால்  நோக்கி  \\             
  செருவுடைய பாரதமாய்ப்  பாரோரைப் பார்க்க \\
  குருமதியர் பெறுமறையர் கலாமென்னும்  ஆயர்.\\
  கலியுகத்துக் குறுமொழிகட்  கிணங்கா திருந்தார்  \\
   பலிவிழுகும் எனத்தெரிந்தும் தெளிவாய்  இருந்தார் \\

   பழியுலகைப் பழிக்குமாறு படைப்பை ஆக்கி \\
   பாரதத்தாய்  பெற்றமக்கள் பெருமை சேர்த்தார் \\         
   வறுமையிலே வளர்ந்தவகை மறந்தார் இல்லை  \\
   எளிமைதனைக் காலமெல்லாம் மறுத்தாரும் இல்லை \\
   தலைமகனாய்த் திருமுகமாய் அமர்ந்த போழ்தும் \\
   நெறிமறைய தர்மநேர்மை வளர்க்கக் கண்டோம் \\
   உறவுமுறை நட்பொன்றே நயந்தார்   நித்தம் \\
   நிறைவுடைய நினைவகத்தே உறைகின்றார் என்றும் \\
   அறிவாலே  அடையுலகை  அடைந்த மேலோர்  \\
   நெறியாளும் குறிக்கோலை அடைந்த வல்லோர் \\

      சரித்திரத்தில் சாதனையர் இடத்தில்  முந்தர் \\

   சாத்திரங்கள்  பேசுமெங்கள் கலாமின்  வாழ்க்கை.\\
   சத்திரங்கள் கூறுமவர் நித்திய வாழ்க்கை \\

    புத்திரர்கள் கோடியெனக் கொஞ்சிப் பழகி \\

    பள்ளிவளர் பிள்ளைகளைப் பழகிப் போந்தார் \\
    எல்லையில்லா மாமனிதப் புகழும் உற்றார் \\    
                 
    - ஆபா,

      ஆவுடையார் கோயில்
     புதுக்கோட்டை மாவட்டம்    
               .
     

005.

இளைஞர் கைகளில் இந்தியா

இந்தியாவின் தன்னலமற்ற ஏவுகணை நாயகனாய்//
இளைஞர்களின் எழுச்சி வீரனாய் மிளிர்ந்த//
விஞ்ஞானத்தில் பற்பல மாற்றங்கள் நிகழ்த்திட//
மெய்ஞானத்தில்   சிறந்து விளங்கிய ஞானபீடமே//

நொடிப்பொழுதில் வரும் மாற்றம் நிரந்தரமில்லை//
படிப்படியாய் வளரும் ஏற்றும் அழிவதில்லை//
 பொய்யான வேதமதனை தகர்த்திடும் ஆற்றலாய்//
மெய்யான  பிரதிபலிப்பாய் வந்தது வார்த்தையே//

மண்ணில் மகத்தான படைப்புகளை உருவாக்கி//
விண்ணில் சென்ற போதும் இளைஞர்களின்//
வியப்பூட்டும் அன்பிற்கு பாத்திரமாக திகழ்ந்து//
வெற்றிச் சிகரமாய் தடைகளைத்  தகர்த்து//

அணுசக்தி  திட்டத்தில் அணுஅணுவாய் சாதித்து//
அற்புத இயற்கையே  எதிர்காலமென போதித்து//
வாழ்வுதனை நாட்டிற்காய் அற்பணித்த  கலாமே//
வல்லரசு கனவை நிறைவேற்றுவோம் நாங்களே//

கவிஞர் முனைவர்
செ.ஆயிஷா
பல்லடம்.

006. 

தேசத்துக்கு தோள்கொடுத்த நாயகன்..!

வறுமையைக் கொல்வதற்கு எறும்பினாய் ஆனாய்..

செய்தித்தாள் விற்பனையில் சேதி சொல்ல வந்தவன் நீ..!

ஏவுகணை நாயகன் என்று மூவுலகும் போற்றுதுனையே

சர்வ காலமும் பேசுது 'கலாம்' என்று

சர்வகலாசாலையும் பேசுது கலாம் என்றே ..!

வீசும் காற்றும் பேசுது உன் பெயர் சொல்லியே..!

தேசம் கொண்டது பெருமை..

நேசம் கொண்டனர் தேசத்தினர்..!

ஒளியாக இருந்து வழிகாட்டும் மொழிதந்தாய்..!

பொன்னென போற்றும் கண்ணான சொல்லெடுத்தாய்..!

உளிகொண்டு செதுக்கினாலும் உன்மொழிபோல வாராதென்று

மாணவக்குழந்தைகள் தேனமுது குடித்த

வண்டாக மகிழ்கின்றார்..!

என்ன வித்தை செய்தாய் உன்னைச் சரணடைய..?

அறிவினைச் செதுக்கும் உளியாக இருந்தாய்

ஞானம் வளர்க்கும் மொழியாக இருந்தாய்..!

அக்னி சிறகுகள் விரித்தே அகண்ட உலகம் படைத்தாய்..!

ஆழ்ந்த இளைஞரின் கனவை நனவாக்கச் செய்தாய்..!

தேசத்தின் சொத்தென்பார்..அறிவுக்கு முத்தென்பார்..

நேசத்தின் வித்தென்பார் பாசத்தின் ரத்தமென்பார்..

உன் எளிமையின் வாசம் கபடமற்ற சிரிப்பு

நாட்டைப்பற்றிய சிந்தை இளைஞர்களின் விந்தை..

எல்லாம் கலாம்..கலாம்.. நூல்களே உன் சொத்தென்றாய்..

வால்கள் எல்லாம் வானளவு காசு காண

வாலாட்டித் திரிந்தாலும்

சிகரமாய் நின்றாய் சில்லறைகள் சேர்க்கும்

சிறுநரிக் கூட்டத்தில் அன்னப்பறவையாய்

வெளுத்த பாலாக வெண்மையாக இருந்தாய்..!

முதற்குடி மகனாய் முத்தாக பணிபுரிந்தாய்..

முதற்குடி மகன் பதவி பெருமை கொண்டது

நீ அலங்கரித்த இருக்கையை எண்ணி..!
கனவை  காணாதே கனவை  நனவாக்கென்று

இளைஞனின் எழுச்சியாக நின்றாய்..!

உன் சிரிப்பில் ஒரு கவர்ச்சி இருக்கிறது 

அது  பெண்களை வீழ்த்தும் வீணர்களின் சிரிப்பல்ல...!

அது அறிவின் வீச்சு..!

எதிர்காலம் நீதானென்று  நலம் பயக்கும்

நற்பாதை காட்டித் தந்தாய்..!

இன்னும் சிறிது  காலம் இருந்திருக்'கலாம்'

என்றழுகிறது இந்தியக் குழந்தைகள்..!

விண்ணில் இருந்து விழுமியப் புன்னகையுடன்

எழுமின் நீ என்று இளைஞர்களுக்கு வழிகாட்டு..!

இந்த  தேசத்தை தோளில் சுமக்க தீரத்தை ஊட்டு..!

அவர்கள் சுமப்பது இந்த தேசத்தின்

வளர்ச்சியை என்று அவர்களுக்கு ஞானம் கொடு..!

வீழ்ந்தாலும்  விதையாய் வீழ்வேன் 

மரமாய் எழுவேன் என்ற தத்துவத்தின் மாதிரி 'கலாம்'

ஆமாம் அப்துல் கலாம்.

- சு.ருவைதா பேகம் 
இளங்கலை கணிதவியல்  முதலாமாண்டு, 
விநாயகா  கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
கீழப்பழுவூர்.

 

007.

அப்துல் கலாம்

தமிழகத்தின் கடைக்கோடி என்பது ராமேஸ்வரம் !

அங்கு பிறந்த கடைக்குட்டி நீதானே!

தமிழகத்தின் நல்வரம் !

உன் மரம் வளர் கவிதை

எனக்கு மிக விருப்பம் !

நின் கருத்துகள் ஆழ படித்தால்
இளைஞரெல்லாம் ஆவாரே!
சிறந்த அறிவில் கர்ப்பம் !

உன் அக்கினி சிறகுகள்
உயரபறந்து புகழில் சிறந்தது !
ஆனாலும் என்னவோ-உன்
மனமும் முகமும் குழந்தையாய்
மாறி அல்லவா சிரித்தது !

வீணையோடு சேர்ந்து
விண்வெளியினை மீட்டினாய் !

பாரதமும் சிறப்பென்று பாருக்கு- ஏவு
கணையோடல்லவா காட்டினாய் !

இந்திய மகுடத்தில் நீயொரு
ஜொலிக்கும் ரத்தினமாம் !

உனை
இதயத்தில் நினைக்கிறோம்!

முனைவர்,
ஜோ. ஜெயா
முதல்வர்,

விநாயகா  கலை மற்றும் அறிவியல் மகளிர்
கல்லூரி,
கீழப்பழுவூர்.

008.

அப்துல் கலாம்

மானிடம் போற்றும் மாமனிதா!

மதம் கடந்த மாற்றானாய்
நம்பிக்கையின் ஊற்றானாய்
இளைஞர்களின் ஆசானாய்!

இல்லறம் துறந்து
பல நல்லறம் தந்தவனே
ஈகை குணத்தில்
உண்ணலம் துறந்தவனே!

வாழும் போது ஒளி தந்து
மறைந்த பின்னும் வழி தந்து
விந்தை உலகின் மாயவனே
கொஞ்சமும் மாசற்ற தூயவனே!

குழந்தை சிரிப்பில் தாலாட்டி
கொள்கை பிடிப்பில் நீரூற்றி
சாதி மதம் நீ கடந்து
பல சாதனை மரங்களை நட்டாயே!

விதைக்குள் புதைந்த வீரியத்தை
உன் புத்தக வடிவில் மீட்டெடுத்து
அக்னி சிறகாய் நீ இருந்து
பல அற்புத சாதனை படைத்தவனே!

நானிலம் போற்றும் நல்லவனே!

முதல் குடிமகன் ஆனபோதும்
முறைதவரா தூயவரே!

தலைமுறை கடந்த தலைமகனே!

உன் தடங்களை தொடரும் வெகுசனமே!

காசு பணங்கள் சேர்க்காமல்
காரணம் காரியம் தேடாமல்
கடமை ஒன்றே என்றிருந்தாய்
கண்ணியச் செல்வன் நீதானே!

விண்ணுலகம் சென்றாலும்
விண்மீனாய் ஒளிவிடுவாய்!

உனைப் போல் ஒருபிறப்பை
இவ்வுலகம் இனியறியா!

கண்ணீர் சிந்தி
கண்களே அழுதிட
காயங்கள் சொல்லி
வார்த்தைகள் தேம்பிட,

உம் பாதம் பணிந்து நின்று
உம் பாதையில் பயணிக்கிறோம்!

முனைவர்,
௭ஸ்.கிரேசி ராணி,
தமிழ்த்துறைதலைவர்,
விநாயகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி,
கீழப்பழுவூர்.

 

 009.                
 மனிதருள் மகத்துவர்.      

மண்ணில் பிறந்தோர் எத்தனை எத்தனையோ!!!      

அவரில் மகத்துவர்  அப்துல் கலாமே!!!                 

ஏவுகணை நாயகனாய் உலகைவியக்க வைத்தவர்!!!                       

அக்கினி சிறகாய் சோதனைகளை வென்றவர்!!!                          

எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்தவர்!!!               

சாகும்வரை நல்லது மட்டுமே சொன்னவர்!!!          

ஊழல்கரை படியாத உன்னதத் தலைவர்!!!             

நாசாவின் நம்பிக்கை நாயகராக இருந்தவர்!!! 

எளிமைக்கு அடையாளமான அரசியல் தலைவர்!!!            

குடியரசுத் தலைவர் பதவிக்கு உயர்வளித்தவர்!!!!               

கோட்டுப் போட்ட காந்தியாய் வாழ்ந்தவர்!!!         

இளைய சமுதாயத்தை விழிப்படையச் செய்தவர்!!!                             

அமைதிக்கு ஆத்மார்த்த சொந்தம் அவரே!!!               

தன்வாழ்வை சரித்திரம் ஆக்கிக் கொண்டவர்!!!!        

வல்லரசுகளை மதி நடுங்க வைத்தவர்!!!!     

இந்தியாவின் மகோன்னத மா மனிதர்!!!      

ஆடம்பரம் இல்லாத அன்பு மனிதர்!!!!                    

பேச்சுத் திறத்தால் மனிதரை வென்றவர்!!!!      

இவரது இறப்புக்கு உலகையே அழ வைத்தவர்!!!!                          

அவர் இந்தியாவின் கனவு நாயகன்!!!                  

தனக்கென வாழாத உயர்ந்த மனிதர்!!!              

மாணவர்களின் நிரந்தர கதா நாயகன்!!!                       

அனைவரின் மனம் கவர்ந்த நாயகன் !!!           

மனிதருள் மகத்துவர்  அப்துல் கலாமே!!!!    

 

சித்திரக்கவி முனைவர் பீ.ரகமத் பீபி ,

திருவையாறு                     
                              
010.

 அப்துல்கலாமுக்கு ஒரு சலாம்..!

அன்பு உள்ளம் கொண்ட மனிதர் !!!

அறிவியலே இவரைக் கண்டு அதிசயிக்குமே !!!

தொழில்நுட்பமும் அணுசக்தியும் அழகாக கையாண்டவர். !!!

எத்தனை துறைகளில் எண்ணற்ற சாதனை !!!

அனைத்தும் தோல்விகளால் கற்ற படிப்பினை !!!

அக்னி சிறகுகளில் அனைத்துக் கண்டோம் !!!

அனைத்து மதத்தையும் தாண்டிய மனிதர் !!!

எளிமையும் நேர்மையும் இரு கண்களாக !!!

ஏவுகணை வீரராக ஏற்றம் கண்டவர் !!!

குடியரசுத்தலைவர் என்ற கிரீடம் சூட்டினாலும் !!!

குடியாட்சியில் தனிமனிதனின் அருமை உணர்ந்தவர் !!!

மனிதனின் பதவி நிரந்தமற்றது என்றுணர்ந்து !!!

மனிதனாக எப்பொழுதும் காட்சியளித்த உத்தமர் !!!

ஏழ்மையிலும் வாழ்வை ரசித்த அற்புதர். !!!

மென்மையான இதயம் கொண்ட வலிமையானவர் !!!

மாணவர்களை மதித்த அரவணைத்த ஆசிரியர் !!!

வல்லரசாக இந்தியாவிற்கு வழிகள் சொன்னவர் !!!

கனவிலும் நினைவிலும் என்றும் சலாம். !!!

காலம் போற்றும் நிரந்தர கதாநாயகன் !!!
கலாம்.

தி.மீரா
ஈரோடு

011.            
  இந்தியாவின் ஏவுகணை நாயகன்..!

கனவு நாயகனே உன் கண்ணில்
எனது அறிவுக்கு விடை கிடைத்தது
ஏவுகணை நாயகனே கனவு காணுங்கள்
என்று இளைஞனுக்கு ஊக்கம் கொடுத்தாய்
அக்னி சிறகை எழுதி எங்களை
ஊரெல்லாம் பறக்க கற்றுக் கொடுத்தாய்
இந்தியா வீரத்தை பறைச் சாற்றிய நாயகனே
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தாய்
இல்லற வாழ்வை துறந்து மக்களுக்காக
நாளும் உழைத்து
மக்கள் மனங்களில் இடம் பிடித்தாய்
எளிமைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கினாய்
உனது வாழ்வை பள்ளி மாணவனும் பேசுவான்
சரித்திர நாயகனே கலாம் விதைத்த விதை
மரமாகி பூவாகி காயாகி பழமாகி

இளைஞர் உள்ளத்தில் எழுந்து நிற்கிறது
மண்ணை விட்டு மறைந்தாலும்

உன்னை விட்டு பிரிய மாட்டோம்
வாழ்க உம் புகழ் வளர்க இந்திய வல்லரசாக.......

ம.செ.அ.பாமிலா பேகம்,

நாகர்கோவில்                 

 

012.                   

அப்துல் கலாம்

அக்டோபர் பதினைந்திலே தென்கோடி மூலையில்

 அமைதியாய் பிறப்பெடுத்த எங்கள் கலாமே

அகிலம் போற்ற வாழ்ந்து மறைந்த  புனிதமே

ஈரேழு உலகமும் புகழ வாழ்ந்த  

ஈடு இணையில்லா விஞ்ஞான செல்வமே

விண்வெளி பொறியியல் வியக்க படித்த அறிவுப்பெட்டகமே

விண்ணில் முதன் முதலாய் ரோகிணி 1
ஏவச் செய்த  விந்தையே

இந்தியாவின் முன்னேற்ற முதல் படியே

ஆயுத வல்லரசு பெயர் பெறச் செய்தவரே

சவால்கள் இல்லாவிட்டால் சாதனையே இல்லையென்றீர்

வெற்றி கனவுகளின் வைகறை  மணியோசை
நீரே
காரிருள் நீக்கிய கதிரொளி சிற்பியும் நீரே

அன்பு கொண்ட முகம் ஆதாய இல்லாத குணம்

உயர்ந்து நிற்கும் களிறொத்த தோள்கள்

ஊக்கம் கொண்ட தீர்க்க கண்கள்

எளிமை வடிவம்  எறும்பின் உழைப்பு

ஏவுகணையில் உலக அழைப்பு

ஐயம் நீக்கும்
 தொலைநோக்குப் பார்வை

ஒற்றுமை வளர்க்கும் அறிவியல் சேவை

காலம் முழுதும் மறவா காவியமே

காலத்தை வென்ற எங்கள் கலாமே

உமக்கே செலுத்துவோம் என்றும் சலாமே....

கவிஞர். செ. கிரேஸ் பரிமளா,

லால்குடி

013.

அக்னிச்சிறகு...!

மலர்களுக்கு சிரிப்பைத் தந்தாய்
மாணவர்களுக்கு கனவு தந்தாய்
குழந்தைகட்கு அன்பைத் தந்தாய்
இளைஞருக்கு எழுச்சி தந்தாய்
மதம் மொழி இனம் கடந்து
மக்களை நேசித்தாய்!

தலைமுறை தாண்டி
மனிதர்(ம்) வாழ யோசித்தாய்
அக்னிச்சிறகுகளை அனைவருக்கும்
அணிவித்தாய்!

உனக்கென எதையும் எண்ணாமல்
விண்ணையும் மண்ணையும்
உயிராய் கருதினாய்..
அப்துல் கலாம்… நீ
ஒற்றை வார்த்தையில்
உருவான இந்தியக் கவிதை!

எழுத எழுத முடிவில்லாமல் நீளும்
உன்னைப் பற்றி
தற்காலிகமாய் முடிக்கிறேன்
வைக்காது விட்ட முற்றுப்புள்ளியுடன்..

டாக்டர். கோ. தரணி ராஜன்
துணை முதல்வர்
ஶ்ரீ நாராயணி சிபிஎஸ்இ பள்ளி,ஶ்ரீபுரம்,வேலூர்.

 

014.

இந்தியாவின் எழுச்சிமிகு நாயகன் கலாம்..

பல கோடி மக்களை
கனவு காண சொன்னதால்
கனவுநாயகன் என்று ஆனாயே..
அக்கினியாய் உனது சிறகை
நீ விரித்ததுக் கண்டு
ஏவுகணைகளும் உனைக்கண்டு
எழுந்து நிற்கின்றன...

எங்களை தூங்கவிடாமல் துரத்தும் கனவினை
நனவாக்கிட ஊக்கமளித்த
உத்தமன் நீ..
தான் கொண்ட கொள்கையில்
குன்றாக நின்று
இளைஞர்களின் மனதினில்
எழுச்சி நாயகனாக முளைத்தீர்கள்...

மதங்களைக் கடந்த மாமனிதனாய்
மாணவர்களுக்கு வழி காட்டினீர்கள்...
விண்தனில் ஏவுகணைகளை ஏவியே
வியக்கத்தக்க சாதனைகளை புரிந்தீர்கள்..
ஏற்றம் மிகு கவிதைகள் பல தந்தே
எழுச்சி நாயகனாய் வலம் வந்தீர்கள்..
இலகுவான மாற்றுக்கால்தனை கண்டறிந்தே
வலிமிகுந்தோரின் வலிதனை குறைத்தீர்கள்..

எண்ணற்ற மரக்கன்றுகளை நட சொல்லியே
இயற்கையோடு இணைந்திருந்தீர்கள்..
மதம் பிடிக்காத மாமனிதரே
நீர் பதவியேற்ற பின்தான்
குடியரசு தலைவர் எனும் பதவியும்
சந்தனம் அள்ளி பூசிக்கொண்டு மணம் வீசியது ....

கனவுகளின் பிடியில்

சாமானியன்களும் சாம்ராஜ்யங்களை

ஆள்வதற்கு அடியெடுத்து வைத்து
சரித்திரத்தில் இடம்பெற துணிந்தனர்..

இந்தியாவை வல்லரசாய் மாற்றிட முனைந்திட்ட இமயமே..
இதோ... இந்து மகா சமுத்திரமாய்
சூழ்ந்துக் கொண்டீர்கள்
இளைஞர்களின் மனதினை...

இன்னும் பல காலம் உங்கள் பாதம்
இம்மண்ணில் படவில்லையே என்று
இம்மண்ணின் மைந்தனாய் உமை தாங்கிய
இப்பூமி அன்னை எண்ணி ஏங்குகிறாள் ஐயா...
ஒப்பனைகளில்லா ஒப்பற்ற தலைவனே
உந்தன் பாதம் பணிந்தே
உன்னை வணங்கி மகிழ்கின்றோம் ஐயா...

கவிஞர் சசிகலா திருமால்
கீழபழுவூர்.

           
015.  

சரித்திரத்தின் ஒப்பற்ற தலைவன்...

மாணவர்கள்களின் ப்ரியன்
இளைஞர்கள்களின் தலைவன்
கடற்கோடியில் பிறந்த கனவு நாயகன்…
காலம் போற்றும் கதாநாயகன்...

விருதுகள் பல பெற்ற விருதாளன்
மனிதநேயமிக்க பண்பாளன்..
ஆயிரம் பெருமைகளைக் கண்டாலும்
ஆசிரியன் என்பதில் ஆசை கொண்ட
அற்புதமான மனிதன்...

இளைஞர்களின்  மனதில் ஆசானாய்
சிம்மாசனமிட்டு அமர்ந்தாய்...
சாதிக்கத் தூண்டும் வல்லமையை
நல்லறங்களாய் எடுத்துரைத்தாய்...
உந்தன் எண்ணமதில் விரிந்தது எல்லாம்
விண்கல கனவுதானே..
தன்னைத் தாங்கிடும் தாய்நாட்டினை
வல்லரசாக்கும் எண்ணம்தானே..

சரித்திரம் கண்ட சங்கத்தமிழனே
உமது நூல்களால் சிறகு விரிக்கிறது
இன்று எங்கள் கனவுகள்..
விண்வெளியும் விழிவிரித்துக்

காத்துக்கிடக்கிறது உன் வரவிற்காய்..

வீசும் காற்றும் கடலலையோடு
உன் புகழ் பேசியே மகிழ்கிறது...
நீங்கள் காற்றோடு கலந்தாலும்
என்றும் எங்கள் உயிரினில் கரைந்திருக்கின்றீர்கள் ஐயா...
நீங்கா புகழோடு நிறைந்திருக்கும்
சரித்திரத்தின் ஒப்பற்ற தலைவன்
ஐயா  நீங்கள்..
வாழ்க கலாம்... வளர்க வல்லரசு..

கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கீழபழுவூர்.

 

016.        

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின்
தந்தை...

அறிவினை செதுக்கும் உளியாய் இருந்தாய்
ஞானம் வளர்க்கும் மொழியாய் இருந்தாய்...
ஞாலம் போற்றும் மகானாய் இருந்தாய்..

அக்னி சிறகுகள் விரித்தே
அகண்ட உலகம் படைத்தாய்..
நூல்களே உன் சொத்தென்றாய்..
முதற்குடி மகனாய்
முத்தாக பணிபுரிந்தாய்..

ஒளியாக உமது பொன்மொழிகளால்
உளியாக உள்ளமதை செதுக்கிட செய்தாய்...
இளைஞர்களின் எழுச்சி நாயகனுமானாய்...
விஞ்ஞான புறாவாகி  அக்னி சிறகுக்கொண்டு வானளந்தாய்...

அறிவாற்றலோடும், அறிவியலாற்றலோடும் அகிலமளந்தாய்...
அசாதாரண சூழ்நிலைகளையும் சாதகமான சூழலாக்கி
சாதனைகள் பல கண்டாய் ...
இந்திய விஞ்ஞான வளர்ச்சியின்
தந்தையுமானாய்...

இதோ... இங்கே பாருங்கள்...
இன்னும் சிறிது  காலம்
இருந்திருக்கலாம் "கலாம்"
என்றழுகிறது இந்தியக் குழந்தைகள்..
மீண்டும் பிறந்து வாருங்கள்
வல்லரசாகட்டும் இந்தியா...

- கோ. ஶ்ரீஆதேஷ்
 கீழபழுவூர்.

              
017.

அப்துல் கலாம்

விஞ்ஞானத்தில் எழுச்சி கொண்ட மனிதர் !

வாழ்க்கைக்கு வழிகாட்டிய மாமனிதர் !

இராமேஸ்வரத்தில் பிறந்து !
சரித்திரம் படைக்கும்
இளைய தலைமுறையினரின்
எதிர் கால கனவை நினைவாக்கிட !

கனவு காண வலியுறுத்தி !

காணும் கனவுக்கு உயிர் கொடுத்த வல்லவரே !

சிந்திக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் !

சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்
கொண்டு போராடிடு !
சாதிக்க துடிக்கும் உன் எண்ணமே !

சாதனையாளராக உன்னை மாற்றி விடுமே!

விழித்தெழுந்து உன் முயற்சியை
கடை பிடித்திடு மனிதா !

விண்ணுலகம் பாராட்டும் புகழை
கரம் பிடித்திடு தோழா !

நம்பிக்கை எனும் மூலதனத்தை வைத்தே !

தன்னம்பிக்கையின் பலத்தோடு வெற்றி
காண்பாய் ! விரைவில்…

கணத்த இதயமும் கலங்கி விடுமே!

கலாம் பிரிவின் துயரத்தை நினைத்து!


ஜே.ஆண்டணிபிரகாஷ்
தஞ்சாவூர்.

018.

கலாமின் கனவுகள்...!

கலாமின் கனவுகள் நினவாக//
நாளைய சரித்திரம் உன்னை பார்க்க...!
எல்லாம் புகழும் உன்னை வந்து சேர//
எதிர்காலம் தூண்களை இவ்வுலகம் போற்றி பாட...!
எல்லா கனவுகளும் மெய்ப்பிக்க//
இன்றைய தலைமுறை சிறந்து விளங்க...!
கலாமின் கனவுகள் நனவாகட்டும்...!

எண்ணங்கள் உண்மையாகட்டும்//

மற்றவர் இயங்கும் கற்கள் எல்லாம் மலர் மாளையாகட்டும்...!
கண்களை மூடிக்கொண்டு கனவுகளை காணாதீர்//

கனவுகளுக்கு உயிர் கொடுத்து தூக்கத்தை துரத்திடு..!
எட்டி வைத்து ஏணிகளை உருவாக்கு//
எல்லாம் உன்னை வந்து சேரும்..!
கல்வியை கற்க சொல்லி கொடுங்கள்//
கோழையாக வாழ சொல்லாதீர்கள்..!
கலாமின் கனவுகள் நனவாகட்டும்..!
ஏழை பணக்காரன் என்று வேறுபாடு இல்லை//
எட்டிப் பிடிக்க பல ஏணிகள் உண்டு //
எல்லாம் உனது வசத்தில்//

கல்வி என்னும் ஆயுதம் கொண்டு...!

கலாமின் கனவுகள் நினைவாகட்டும்...!

            சுமித்ரா.த BA.LLB.
                 தர்மபுரி.
.

019.

 மேதகு A.P.J அப்துல் கலாம்

காலத்தை வென்ற கலாம்! - ஏற்ற
காலத்தில் வந்த கலாம்! - எதிர்
காலத்தை கணித்த கலாம்!
நெஞ்சில் காவியமான  கலாம்

அணுவுக்குள் அணுவாய் மலர்ந்த கலாம்!
அணுவுக் கணுவாய் உயர்ந்த கலாம்!
அணு விஞ்ஞானியான கலாம் - இறை
அணுவுக்குள் ஒன்றிய கலாம்!

வலை தளங்களில் வலம் வந்த கலாம்! இந்திய
வள மொன்றே குறிக்கோளான கலாம்!
விண்ணில் ஏவுகணை எய்த கலாம்! - இந்திய
மண்ணின் புகழை உலகில் உயர்த்திய கலாம்

எளிமையின் சிகரம் அப்துல் கலாம்!
ஏற்ற தாழ்வு இல்லா அப்துல் கலாம்!
உலகத்தார் உள்ளத்துள் நிறைந்த கலாம்! -

ஐனாதிபதி உம்மைப் போல்

கண்டதில்லை அப்துல் கலாம்!

கல்விச் சாலைகளில் மலர்ந்த அப்துல் கலாம்!
கற்போர் இதயங்களில் வளர்ந்த கலாம்!
கனவு காணுங்கள் என்று சொன்ன கலாம்! -

அவர் நினைவை நம்மிடம் விட்டு நீங்கிய கலாம்!

இராமேஸ்வர மண்ணின் மைந்தன் கலாம்!
இராஷ்டிரபதி பவனின் மன்னன் கலாம்!
உண்மை உழைப்பு உயர்வு கலாம்! - நம்
உறவை விட்டு என்றும் நீங்காத கலாம்!

விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும்

உம்ஞானம் ஒன்று போதுமப்பா!
அஞ்ஞானம் இந்நாட்டில் மலர

எங்கள் அப்துல் கலாம் வேணுமப்பா

          -  கவிஞர் மீரா (எ) மீனாட்சி சுந்தரம்,
       பல்லடம்

 

020.      

கனவு காண அழைத்தவரே கணவானே.
எளிமையின் நாயகனே எல்லோருக்கும் பிடித்தவரே.
அன்பை விதைத்து அறிவியல் வளர்த்தவரே.
ஆசானாய் அறிவியலராய் ஆட்கொண்டவரே
இனிமையாய் பேசி இன்முகம் காட்டியவரே
ஈடில்லா புகழோடு ஈசன் பாதம் அடைந்தவர்
உண்மையாய் உழைத்து உயர்ந்த உத்தமரே
ஊரெல்லாம் உம் வழி செல்ல பாதை அமைத்தவர்
எளிமையின் அடையாளம் எல்லோரும் விரும்புபவர்
ஏவுகணை நாயகன் எண்ணங்கள் ஏற்றம்
ஒற்றுமை பதாகையை ஏந்திய ஒப்புரவாளர்.
ஓசையின்றி ஓராயிரம் சாதனை படைத்தவர்
சவால்களை வென்ற சாதனை நாயகன்
விருதுகள் தேடி செல்லவில்லை நீவிர்.
உம்மைத் தேடி உம் பாதம் சேர்ந்தது.
உங்களைப் போல் இனி ஒருவர் பிறப்பாரோ
கலாமிற்கு ஒரு சலாம் போடுவோம்..!


- ல. மதுமதி லட்சுமணன்
  உதவி தலைமை ஆசிரியை,

   நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி ,

   உசிலம்பட்டி

   மதுரை மாவட்டம்

021.

நம்பிக்கை சுடரானவரே!
நன்னெறியின் வடிவானவரே!
இராமேஸ்வரத்தின் நிலவே!
இனியச்சொல் உடையவரே!

ஏழாவது குழந்தையானாய்!
எளிமையாகவே வாழ்ந்தாய்!
ஒற்றுமையை கடைபிடித்தாய்!
ஓய்வில்லாமல் உழைத்தாய்!

நீதிக்கதைகளை கேட்டாய்!
நேர்மையாகவே நடந்தாய்!
மாணவர்களின் விடியலானாய்!
மாற்றங்களை நிகழ்த்தினாய்!

ஆசிரியர்களை மதித்தாய்!
ஆசானாகவே உயர்ந்தாய்!
அறிவுக் களஞ்சியமானாய்!
அறிந்ததை எடுத்துரைத்தாய்!

சமயவேறுபாடுகளை களைந்தாய்!
அன்பினாலே வென்றாய்!
சாதிமதங்களை கடந்தாய்!
சரித்திரப்புகழை அடைந்தாய்!

இந்தியனாக செயலாற்றினாய்!
இதயங்களை கொள்ளையடித்தாய்!
படிக்கும்போதே சம்பாதித்தாய்!
பகுத்தறிவோடு உழன்றாய்!

பணிவோடு இருந்தாய்!
பாராட்டுகளை பெற்றாய்!
வரலாறுகளை அறிந்தாய்!
வான்கவியாய் உருவாகினாய்!

தமிழ்மொழியை நேசித்தாய்!
தமிழனாகவே வலம் வந்தாய்!
இந்தியத்தாயை போற்றினாய்!
இதயத்துடிப்பினில் வாழ்கிறாய்!

    கவிஞர் இனியன் பாலா.சென்னை-56

  

022.

புத்தனாய் சிரித்திருக் கலாம்

உழைப்பால் உயர்ந்திருக் கலாம்
எண்ணத்தில் தெளிவிருக் கலாம்
லட்சியம் எட்டி பிடித்திருக் கலாம்
வாழ்விற்கு உதாரணமாய் இருக் கலாம்

பகவத் கீதை படித்திருக் கலாம்
புலால் உண்ண மறுத்திருக் கலாம்
ஏவுகணைகள் தொடுத்திருக் கலாம்
புத்தனாய் நீயும் சிரித்திருக் கலாம்

முதல் குடிமகன் ஆயிருக் கலாம்
ஆசிரியராய் பணி செய்திருக் கலாம்
எளிமையாய் வாழ்வு வாழ்ந்திருக் கலாம்
மேடையிலே உயிர் மாய்த்திருக் கலாம்

அங்கம் குறைந்தவர் உபகரணம்
எடை குறைத்திருக் கலாம்
அவர் மனதில் நிலைத்திருக் கலாம்
இதயத்தின் அடைப்பு நீக்கும் குழல்
விலை குறைய செய்திருக் கலாம்
மரணத்தையும் நீ மரணித்திருக் கலாம்

சர். கணேஷ்,
விருதுநகர்

 

023.

கலாம்

இராமநாதபுரம் ஊரில் கலாமின் பிறப்பு
ஏழ்மை எளிமை வளர்ப்பு தமிழ் மொழி
ஈர்ப்பு தாய் மொழியின் வார்ப்பு கல்வி
கலஞ்சிய சிரிப்பு !

கற்றதும் கற்ப்பிப்பதும் கலைஞரின் ஏற்பு
அப்துல் கலாமின் அறிவாற்றல் நல்நெறி
பாதைபயணம் தூய்மையின் தூரிகை
வரைந்தது வானவில் அழகிய அற்புதமான
ஓவியம் !

கலாமின் சமத்துவம் சமதர்மம் சமாதானம்
தூதாக துணையோ காவியம் தன்னல
மில்லா சுயநலமில்லா பொது நலமே‌

உழைப்பு ஆனது !

கண்டுபிடிப்பு அச்சாணி கொம்பு
ஏறி உச்சாணியில் கலாமின் விஞ்ஞான
அறிவு கூர்மையான திறமை ஏவுகணையின்
நேர்மை வாய்மையே வெல்லும்
அணைவரும் வாழ்த்தி வணங்க பாராட்டும்
பார்போற்றும் தமிழரின் புலமை !

உரிமை வளமை வலிமை உயர்வின்
தலைநகரில்‌ தலைமைஆட்சியில்
பதவி வகித்தார் !

ஆணவமில்லா அற்புத சுடர் ஒளி பேரும்
புகழும் நிலைத்தது மணமாகாத மகான்
மனிதநேயத்தின் உத்தமர்‌ அணைவரையும்‌

தாய்பாச நட்புறவு இவர் பிறப்பு

நம்நாட்டுக்கு மகத்துவம் மாபெரும் வரம்

மரம்வளர்ப்பதில் அறிவுரையில் கரம் பிடித்து
சாதனை படைத்தவர்அவர் விருப்பப்படி !

நானும் அரசமரம் வேப்பமரம் வளர்த்து
நிறைவேற்றியது மகிழ்ச்சி மனதுக்கு

புகழ்ச்சியில் சிகரம் கைதட்டி !

கொண்டாடிடகளைப்பில்லை கலாம்
இன்றும் ராமேஸ்வரத்தில் மக்களுடன் நாள்
தோறும் மரணமில்லா மணமில்லா வாடா
மல்லமலராய் வல்லரசு நாடாகுமா
நம் இந்திய நாடு என்ற
ஏக்கத்துடன் கலந்துரையாடலில்
கலங்கரை விளக்கம் மாக ஒளி வீசி !

தமிழ் பேசி தவப்புதல்வராக அப்துல்கலாம்

இறப்பு இல்லா பிறந்த நாள் விழா கொண்டாடி
வாழ்கிறார் அப்துல் கலாம் வாழ்க !

- சொல்லரசிவீணைதேவி,

 பெங்களூர்,

 வாடமல்லி.

 

024.

ஒரு ஓடை நதியானது...

மீனவக்குடும்பம், ஏழ்மையின் பங்காளி.
படிப்பு,உழைப்பு தன்னம்பிக்கை மூல ஆதார நதிமூலம்.

ராமேஸ்வரத்தில் ஒரு சிறு ஓடை தனது பயணத்தை துவக்குகிறது.

இயற்பியல், வானவியல் அத்தனையிலும் இவன் அறிவுப் புதையல்.

விண்வெளி  பனித்துளி, ஒவ்வொரு மணித்துளியும் விண்வெளி
பணித்துளி யானது.

செய்தித்தாள் போட்டவன் செய்தி நாயகன் ஆனான்.

செயற்கைக்கோள் நாயகன் அக்னிச் சிறகுகளை பொருத்தினான்.

அறிவுவளமும், மனிதவளமும் சேர்ந்த இந்தியப்பெருங் குடி
மகனானான்.

மூன்று கிலோ எடைக்கொண்ட கால்களை
(போலியோ செயற்கை கால்கள்)

முன்னூறு கிராமாக மாற்றிய வித்தகன்.

மாணவர்களை வழிநடத்திய
புத்தகம் (ன்).

ஒரு கோடி விருட்சக்கன்றுகளை நடவேண்டிய வியூகம்.

அதற்காக உன்னிடத்தில் நடிகர் விவேக் (கேம் (Came) விவேகம்.

கற்றவன், கல்லாதவன் விரும்பிய அறிவொ(வா)ளி நதி.

ஏழை, செல்வந்தன் விரும்பிய முதலாளி நதி.

ஆண், பெண் அனைவரும் விரும்பிய பங்காளி நதி.

கிராமம், நகரம் விரும்பிய விருந்தாளி நதி.

மேகாலயாவின் மேகக் கூட்டங்களிடையே வெள்ளி

(நரைத்தலைவன்)நதி ஓடை ஐக்கியமாகிப்
போனது.

தமிழக தலைமகன், இந்திய குடிமகன்.

ஒரு சிறு ராமேஸ்வர ஓடை, நதியாகி,

புதுப்புனல் ஆகி பிரவாகமாய்

சாகாவரம் பெற்ற சாகரம் (சாகசம்)ஆகி நிற்கிறதே.

    தன. மகேஸ்வரி.
     கடலூர்.

025.    

 அக்னிசிறகே! கலாமே!
இராமநாதபுரம் இராமேஸ்வரத்தில்  உதித்த ஒளியே!
எளிமையின் விளக்கே!
குடியரசு தலைவராய் குடிமக்களை காத்திட்ட குலமே!
அரசியல் ஆட்சிக்கு சாட்சி இவரே!
உம் ஈடில்லா சிறப்பைக் கண்டு வியந்தோமே!
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தொண்டாற்றிய

ஏவுகணை நாயகனே!
விண்ணிலும் மண்ணிலும் உம் புகழ் தடம் பதித்து
அக்னிச்சிறகாய் உலாவர கண்டோமே!
வியத்தகு சாதனை வித்திட்ட ஏழ்மையின் வடிவமே!
இந்தியாவை வல்லரசாக்க வல்லமை

கனவு படைத்தோரே!
உம் அயராத உழைப்பு ஆகாயமே வியக்கும்

பெருமை உடையோரே!
அப்துல் கலாம் அவர்கள் புகழ் ஏட்டில் மட்டுமன்று
என்றும் எங்கள் மனதிலே!
இனி‌ வளரும் இளம் தலைமுறையினர்களிடம்

பறைசாற்றுவோமே!
வாழ்க கலாம் புகழ்...
                ச.பிரியங்கா
                மதுரை. 
            .

026.

காலத்தை வென்ற கலாம்...!

ராமேஷ்வர நாயகனே
இலட்சியத்தின் பிறப்பிடமே

எத்திக்கும் புகழ்பரப்ப
ஏற்றமே தர வந்தவரே

ஏழைப் பங்காளனே
ஏவுகணை நாயகனே

அறிவியலின் அதிசயமே
அணுகுண்டின் மகத்துவமே

செயற்கை காலது பொருத்தவே
சேவை மனங்கொண்டு உழைத்தவரே

ஏழைக்கிரங்க ஏகலைவனானவரே
குழந்தைகளின் அறிவுப்பசிக்கு
தீனியானவரே

இந்தியா வல்லரசாக கனவு கண்டவரே
கனவு என்பது

உன்னை உறங்கவிடாமல் செய்வது
தான கனவென்றவரே

இலட்சியங் கொண்டு வாழ்ந்தே
இலட்சங்களைத் தோற்கடித்தவரே

மேகலாயா மண்ணில் உயிர் பிரிய
மக்களின்மனதில் விஸ்வரூபமாக
நின்றவர்

அக்காவின் உதவியால் கல்வி கற்றவரே
புன்னகையோடு பொன்னகையை
கழற்றிக் கொடுத்தாரே தமக்கையே

காலத்தை வென்ற கலாமே
உனக்கு எந்தனது சலாமே

பட்டொளி வீசிப்பறக்குது உந்தனது
பாராயணம் நாடு முழுவதில்லாமல
உலகம் முழுமைக்கும்

கலாம் வாழ்க காலங்கள்
வாழ்த்தட்டுமே நித்தமும் எம்மையே

- முனைவர் கவிநாயகி
  சு.நாகவள்ளி
    மதுரை.

 

027.  
              
 உத்தம மனிதர்
காலத்தால் பொறிக்கப்பட்ட இந்தியாவின் பெருமை/
கடின உழைப்பால் களம்கண்ட  கலாம்/

பொறுமை பெருமை திறமை கொண்டவர்/
கடமை கண்ணியம் காத்த கலாம்/

ஏழையாய் பிறந்து எளிய வாழ்க்கை/

ஏணியாய் உயர்ந்து அறிய வைத்தவர் /

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
திடங்கொண்டவர்/
 காரண காரியம் தெரிந்தே செய்தவர் /

அனைவரையும் அரவணைப்பதில் ஆதங்கம் கொண்டவர் /

அனைவருக்கும் அற்புதம் உணர்த்தவே வந்தவர் /

ஏர்பைலட்  ஆகவே எண்ணம் கொண்டார்/

ஏவுகணையால் புகழ் உச்சியை அடைந்தவர்/

ஏற்ற தாழ்வு பார்க்காத பவித்திரமானவன் /

ஏற்புடைய வாழ்க்கையை வாழ்ந்த உத்தம மனிதன் /

- கே சுகுமாரன் M.Sc.M.A.
  143/1 திருகையிலை இல்லம்
  கோபால் நகர் ஓய்எம்ஆர் பட்டி .

    திண்டுக்கல்..624 001.

 

028.

அக்னிச் சிறகு

அழகாய் மலர்ந்த நிலவு
ஆயிரம் நட்சத்திரங்களில் சிறந்து விளங்கிய
அழகிய உயிர் ஓவியம்
அணு அளவும் அச்சம்  இன்றி தன் உயிரையும் துச்சமாக்கியவர்.

அன்பாய் அமைதியாய் அகிலம்
போற்றும் நாயகனானவர்/

ஆற்றலாய் ஆதரவாய் ஆண்ட
செயல்வீரனானவர்/

இனிமையாய் இன்முகத்துடன் வலம் வந்த இமயமானனவர்/

ஈடில்லாத உழைப்பாலே உயர்ந்த உத்தமரானவர்/

உவகையுடன் மாணவர்களின்

நலனில் பற்று கொண்டவர்/

ஊர் போற்றும் உத்தமனாம் எங்கள்
ஏவுகணை நாயகனானவர்/

எண்ணம் போல் எளிய வாழ்க்கை
வாழ்ந்த வள்ளளானவர்/

ஏறுகொண்ட பார்வையும் ஏற்றம் கொண்டு

வாழ வழிவகுத்தவர்/

ஐயம் பலவற்றை களைந்து மாணவர்களின்

கல்வியில் தீபம் ஏற்றியவர்/

ஒன்றே குலம் ஒருவனே

தேவன் என்று வலம் வந்தவர்/

ஓராயிரம் கணவு காணுங்கள் என்று
ஓங்காரமாய் குரல்
கொடுத்தவர்/

ஔவை வழியில் நின்று இந்தியாவின்
குடியரசு தலைவரானவர்/

அஃதே எங்கள் ஆசை
மீண்டும் வந்தால் அதே பதவியில் ஆள/

வாழ்ந்துவிட்ட உனது காலம் பொற்காலம்
அனைவரும் வணங்கும் அற்புத காலம்
அரசாங்கமே அதிர்ந்த
நற்காலம்
வரவேண்டும் இனி ஒரு காலம்
அதிலும் உமக்கே இது போன்ற காலம்!!!.


- து. பவானி

 இடைநிலை ஆசிரியர்
 திருவள்ளூர்

                  
 029.

இளைஞர்கள்  போற்றும் கலாம்

இளைஞர்கள் மனதில் நீங்கா ஒளிவிளக்கே

அக்கினிச் சிறகின் அக்கினி நாயகனே

வானியல் அதிசயம் கண்ட விஞ்ஞானியே

ஏவுகனைகளை சிறப்பாக பரிசீலனை செய்தவனே

எழிமையே உனது வாழ்க்கை வரலாறு

தனக்கென்று எதுவுமே தேடி வைக்கவில்லை

நாட்டு மக்களைச் சொந்தமாய் கொண்டவனே

நாடு போற்றும் சரித்திர நாயகனே

இளைஞர்கள் படை உனது படை

ஏழைகள் நெஞ்சில் நிரந்தர முதல்வர்

எங்குமே கண்டதில்லை உன்போல் தலைவன்

காலம் கடந்தாலும் நெஞ்சில் வாழ்கிறாய்

கருத்தாய் மக்கள் மனதில் நிற்கிறாய்

கலாம் உன்னை நாடு போற்றுதே

காலத்தால் அழியாது உன் நாமம்

கலாம் உனக்கு ஒரு சலாம்

-  துறையூரான் றிபாஸ்,

   பொத்துவில்,
    இலங்கை.

 

030.
 அப்துல் கலாம்

பாற்கடலில் படுத்து உறங்கும்

பரந்தாமன் போல்

ஆகாயம் பார்...
கடலை அளவெடுக்க தென்கோடியில்

பிறந்து வளர்ந்த அமுதே

கடல் மீது கவிதை எழுதிய உன் கைகள் பார்

மீது யாவருக்கும் கனவு தாலாட்டு பாடுவது பார்..

வறுமை வானத்தை கிழித்தெறிந்த உன்

விழிகள் ஒவ்வொருவரையும் வாழச் சொல்லுது பார்...

லட்சியம் கொண்டோர்க்கு உன் பாத வழி

தானே வழிகாட்டி

செயற்கை கால் படைத்து இயற்கை அழகு கண்டாய்

செயற்கைக்கோள் விடுத்து வெறுவாயும்

செவ்வாயாய்  மாற்றினாய். ..

 ஒவ்வொரு தோல்விலும் நியூட்டனையும் மிஞ்சினாய்

நியூயார்க்கையும் நீ மிஞ்சினாய்

 அணுகுண்டு வெடிவைத்து அண்டை நாட்டு

செவிக்கு இந்திய தாயின் தவக்கோலம் காட்டினாய். ..

படகோட்டி பார்த்தவரே இந்திய

தாய்க்கு தலை மகனாய் ஆனவரே. ..

உன் தலை முடி ஆயிரம் கவிதை எழுதும்

உன் குழந்தை முகம் ஒவ்வொருவரையும் ஞானியாக்கும்
 அறிவியல் விஞ்ஞானியாக்கும்...

மீண்டும் வா அப்துல் கலாமே சூரியனின்

தென்திசையும் மானிட சுழற்சியின்

கோலத்தையும் கண்டு சொல்ல...

அ. சிவகுமார்
நரசிங்கபுரம்
திருவண்ணாமலை

 

031.    

எங்கள் அப்துல்கலாமே....

செய்தித்தாள் விற்றாய் பின்னாளில்,...
தலைப்புச் செய்தியாய் வந்தாய்...
விண்ணில் பறக்க  ஆசை கொண்டாய்...
உந்தன் முயற்சியால் விண்கலத்தைப்
பறக்கவிட்டாய் ஆகாயவானில்...

உலகமே உற்றுநோக்கியது இந்தியத் திருநாட்டை...
தமிழனான நீ பொக்ரான் சோதனையில்
செய்த சாதனையை...
தமிழ்மொழியில் பயின்றாய்...
தரணி வியக்கும் அளவில் பல சாதனைகள் புரிந்தாய்...

எம்மதமும் சம்மதம் ஓர் இந்தியக் குடிமகனாக,...
குத்துவிளக்கை ஏற்றி வைத்தாய் மெழுகுவர்த்தியால்...
பாரத தேசத்தின் பதினோறாவது
மக்கள் குடியரசுத் தலைவராகவும்...
இரண்டாவது ஆசிரியராகவும், முதல் அறிவியல் அறிஞராகவும்...

இரண்டாவது தமிழராகவும் சிறப்புற பொறுப்பேற்றாய்...
எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நீ தந்தாய்...
ஏறும் மேடைகளிலெல்லாம் யாதும் ஊரே யாவரும் கேளிர்...
 என்று தொல்காப்பியத்தை சொன்னாய்...

வாழ்ந்த நாட்களில் பசுமையைப் போற்றினாய்...
மாணவர்களின் மனதில்

இலட்சியத்தையும் உச்சமாய் பதியச்செய்தாய்...
வே(சோ)தனைகள் தாங்கினாய்...

துவண்டு போகாமல் சாதனைகள் பல செய்த
ஏவுகணை நாயகர்...
யுகம் பல கடந்து காலமும் சொல்லும்...
கலாம் அவர்களுக்கு வீர வணக்கம் என்று....

கலாம் கலாம் சாதிக் கலாம் சாதனைகளை
சரித்திரம் வரை நீடிக் கலாம் !

- லோக சுந்தரம்
பென்னாகரம்,தருமபுரி .

 

032.

வியக்க வைக்கும் விஞ்ஞானி..

"விஞ்ஞானம் வல்லரசு என்னும் வார்த்தைக்கு,

வடிவமாய் விளங்கும் கலாம் அவர்கள்,

உறங்கும் போது மட்டும் கனவுகண்ட

எங்களை, வாழ்வில் உயர்வதற்கும் சாதிப்பதற்கும்

கனவு காண வைத்த‌ வழிகாட்டி.

இந்தியாவை உலகமும் திரும்பிப் பார்த்தது,

உங்களின் அணு ஆராய்ச்சிக்குப் பிறகு.

கதைகளில் மட்டும் கதாநாயகனை கேட்டோம்,

நிஜ வாழ்வில் கதாநாயகனை கண்டோம்,

உங்களின் பேச்சிலும் சிந்தையிலும் வடிவிலும்.

நம் நாடு பெற்றெடுத்த தவப்புதல்வன்,

அயல் நாடுகளை அஞ்சவைத்த அறிஞர்,

எளிமை நாயகன் வியக்கவைக்கும் விஞ்ஞானி,

குமரியில் பிறந்து நாட்டின் முதல்

குடிமகன் ஆனவர், எண்ணற்ற மாந்தரின்,

மனதில் ஒளிரும் அகல்விளக்கு அப்துல்கலாம்."

- ரா.வஞ்சித்குமார்,
 திருப்பூர்.

                    
033.                      
 

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்!!

ராமநாதபுரத்தில் பிறந்த

விலையில்லா ரத்தினம் இவர்!!

 அறிவிலே வியக்கும் அரிய புதையல் இவர்!!

 அண்டை நாடுகளுக்கு அடிமை ஆகாமல்!!

 தன் அறிவை சொந்த நாட்டுக்கு

தானம் தந்த தந்தை இவர்!!

 எளிய தன் உறவிலே இறைவனை

காட்டிய உயிர் தெய்வம் இவர்!!

 சிறு குழந்தைகளின் உள்ளத்திலலேயும்

உழைப்பை தூண்ட ஓடும் குருதி இவர்!!

 கனவு காணுங்கள் அவை நிஜமாக!!
 நின்று உழையுங்கள்!! என்ற எதார்த்தத்தை

எடுத்துச் சொன்ன ஏவுகணை நாயகன் இவர் !!

விண்ணுலக பயணம் தேவை என்றாலும்

தன்னம்பிக்கையாய் கனவு காண் !!

தாவி பிடிப்பாய் ஒரு நாள் விண்ணுலகை என்றவர்!!

 மாணவர்களின் முன் மாறாத பசுமையாய்!!

 நின்று தென்றலாய் வருடிய இந்நாட்டு ஆசான் இவர்!!

தான் வாழ்ந்த குடும்பத்தையே மறந்து

மக்களுக்கு சேவை செய்து வந்த வள்ளல் இவர் !!

வாழும் காலத்திலேயே உடன் இருப்போர்

மறக்கும் கரிகாலம் இது!!

 நீயோ மறைந்த பின்னும் மனம்

மாறாமல் வீசுகிறதே உன் புகழ் இவ்வுலகில்!!

 எளிய உருவிலே எட்டாத உயரத்தை தொட்டும்!!

 எதிரிகள் இல்லாமல் எதார்த்தமாய் வாழ்ந்து !!

 நீர் விதைத்துச் சென்ற வரிகள்!!

 ஏழைகளின் மனதில் எளிமையாய் நுழைந்த
 இன்னும் எதிர்நீச்சல் போட கற்று தருகிறது!!


கவிஞர்/முனைவர்
க.எப்சிபா. எம்.ஏ.பி.எட் டி.டி.எட்.
காவேரிப்பாக்கம்

            
 034.

  அப்துல் கலாம்

தென்  கோடியில் பிறந்த முத்தே

எளிய குடும்பத்தில் ஏழாவதாய் பிறந்தவரே

எதிர்கால கனவை வெற்றியுடன்  நினைவாக்க

கனவு காணுங்கள் என்ற கனவு நாயகனே

மாணவர்களை சிந்திக்க செய்த சிற்பியே

ஆசிரியர்களை மதித்து ஆசானாய் உயர்ந்தவரே

விரிவான சிந்தனை யுடன் விண்ணில் பாய்ந்தவரே

மாணவர்களுடன் உரையாடினாய் இந்திய வல்லரசாக

மாணவர்களுடன் உரையாடி ஒற்றுமையை வளர்த்தவரே

மாணவர்களிடம் அன்பை விதைத்து பாராட்டி

உண்மை நேர்மை உழைப்பு வெற்றி

மனிதர்களின் உழைப்பு நாட்டுக்கு அவசியமே

தமிழ் மொழியை நேசித்து தலைவனாக மதிக்கப்பட்டவரே

ஏவுகணை நாயகனே ஏற்றம் கண்டவரே

இளைய தலைமுறையின் இதய நாயகனே

 தமிழர்களின் தலைவனாக உன்னை வணங்குகிறேன்

ப.பஞ்சாபகேசன்,

முதுகலை ஆசிரியர்

அரசு மேல் நிலைப்பள்ளி

பொன்பரப்பி 

அரியலூர் மாவட்டம்

 

035.

இந்தியாவின் ஏவுகணைநாயகன்


 அறிவியல் மேதை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்//

 ஆற்றல்மிகு சிறந்த அறிவியல் விஞ்ஞானி//

 இல்லறம் துறந்த இனிய பண்பாளர்//

 ஈகை உள்ளம் கொண்ட கொடை வள்ளல் //

 உழைக்கும் மக்களை கனவுகாண வைத்தவர்//

 ஊக்கமுடன் சமூகத்திற்கு அரும்பாடு பட்டவர்//

 எளிமையாய் வாழ்ந்து ஏடுகளில் இடம் பெற்றவர்//

 ஏவுகணை தந்த எழுச்சி நாயகன்//

 ஐயம்  நீக்க வந்த அற்புத ஞானி//

 ஒளியாக இருந்து மக்களுக்கு வழிகாட்டியவர் //

ஓயாப்புகழுடன் ஒளிவீசும் கலங்கரை விளக்கு//

 அக்னி சிறகுகள் தந்த அணையா விளக்கு//

 அணு ஆராய்ச்சியில் அற்புதம் படைத்தவர்//

 இராமேஸ்வரத்தில் அவதரித்த அறிவுலக மேதை//

 சரித்திரத்தில் இடம்பெற்ற சாதனை நாயகன்//

 மனிதருள் மாணிக்கமாய் திகழ்ந்த மாமனிதர்//

 தமிழ்நாட்டின் குடியரசு தலைவராய் பணியாற்றியவர்//

 இளைஞர்களின் எழுச்சி வீரனாய் மிளிர்ந்தவர்/

 விஞ்ஞானத்தில் பற்பல மாற்றங்கள் நிகழ்த்தியவர்//

 வெற்றி சிகரமாய் தடைகளை தகர்த்தெறிந்தவர்//

 தேசத்திற்கு தோள் கொடுத்த நாயகன்//

 அப்துல்கலாம்  அவர்களின் கனவை நனவாக்குவோம் //

தலைமை ஆசிரியர்
 ந. மலர்க்கொடி பெரம்பலூர்.

           
  036.   

வியத்தகு விஞ்ஞானியே....

அக்டோபரில் உதித்து அகிலத்தை ஆண்ட

ஆற்றல்மிகு அறிஞரே !!!

வறுமையிலிருந்தும் வாடாமல் வற்றாத ஊற்றாய்

வாடாமல்லியாய்  திகழ்ந்தீரே !!!

விமர்சனங்களை விதைகளாக்கி

தடைகளை உரமாக்கி
விஞ்ஞானியாய் உயர்ந்தீரே !!!

பல அறிவுத்திரட்டல்களை அறிவியலுக்கே
ஆராய்ச்சியால் உரைத்தீரே !!!

இளம் வயதிலேயே வீட்டிற்கு வீடு
செய்தித்தாள் விநியோகம் செய்தீரே....

ஆதலால் நடந்ததோ ?
செய்தித்தாள்களே வியந்து நின்று

உம் சாதனைகளுக்கு இடம் கொடுத்தது !!!

காலம் பல கடந்து போகலாம் ,
ஆனால் " கலாம் " என்ற சொல் மறைந்து போகாது ....

விண்ணில் தடம் பதிக்க விந்தையைக் கற்றுத் தந்தீர்
வியத்தகு விஞ்ஞானியாய் !!!

சோதனைகள் கடந்து சாதனைகள் 

புரிந்து சரித்திரத்தில் இடம் பிடித்தீர்
 " அக்னி சிறகுகள் " எனும்
வரலாற்றுப் புத்தகமாய் !!!

பிறப்பை சாதாரணமாய்
இறைவன் நிகழ்த்தினாலும்
இறப்பை சரித்திரமாய் மாற்றிய
இளம் சமுதாயத்தின் இமயமே !!!

உமது வேதனைகளும் சாதனைகளும்
முன் உதாரணமாய் இளைஞர்களை வழி நடத்துமே !!!

மீண்டும் ஓர் வாய்ப்பு கிடைத்தால் எழுந்து வாருங்கள்
ஏவுகணை நாயகனே !!!

கவிஞர் க. நாகவள்ளி
இயற்பியல் துறை
இளங்கலை இரண்டாம் ஆண்டு
இதயா மகளிர் கல்லூரி
கும்பகோணம்..

037.     

அக்னிநாயகன்  

இராமேஸ்வரத்தில் பிறந்த நாயகரே!
எங்களை போன்ற மாணவ,மாணவிகளுக்கு

உதாரணமாய் இருப்பவரே!
இந்தியா உங்களுக்கு கொடுத்தது குடியரசு தலைவர் பதவி!!
உங்களது கண்டுபிடிப்பால் மாற்றுத்திறனாளி

குழந்தைகளுக்கு செய்தீர்கள் பல உதவி!!
மீனவர் வீட்டில் பிறந்து கடலோடு இருந்து

விடாமல்,வான் வரை வளர்ச்சி கண்ட வள்ளவரே!
அரசு பள்ளியில் பயின்ற அறிவியல் விஞ்ஞானியே!
அறிவியல் அறிவைக் கண்டு

விஞ்ஞானமே வியப்புற்ற நாயகனே!!
வல்லமை நாடாய் மாற

அக்னியை மனதில் விதைத்தவரே!
உங்களை விமர்சனம் செய்தவர்கள் அன்று சில பேர்,
உங்களின் புகழை கூறுபவர்கள் இன்று பல பேர்!!
நீங்கள் இருக்கும் வரை

உங்களைப் பற்றி எனக்கு தெரியவில்லை,
நீங்கள் இல்லாத போது உங்களைப் பற்றி

தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை!!

ரா.நாகலட்சுமி,

பெரியகுளம்

038.

அப்துல் கலாம்

படகோட்டி மகனாகப் பிறந்தாலும்

பார்போற்றும் விஞ்ஞானி ஆனாய்

செய்தித்தாள்களைப் பகிர்ந்தாய் அன்று

செய்தியாக வாழ்கிறாய் இன்று

பிறப்பை ஒரு சம்பவமாக்கி

இறப்பைப் பெரும் சரித்திரமாக்கி

வாழ்ந்ததை எவருக்கும் அடையாளமாக்கி

அறிவு புகட்டிச் சென்றோன் நீ

ஏவுகணைகள் விண்ணைத் துளைத்தன

ஏவப்பட்ட நல்லுரைகள் எல்லாம்

எமது வாழ்க்கையைச் செயல்படுத்துகின்றன

புத்தகங்களை உள்ளடக்கிய நூலகமானாய்

புத்துயிர் பெற்றுக்கொண்டே நீயும்

புத்தகமானாய் திறமான அறிவினால்

பக்கங்களானாய் படித்தறியும் அளவுக்கு

அதிகாரம் உள்ளபோது ஆணவமில்லை

தோல்விகள் நேர்ந்தபோதும் மனச்சோர்வில்லை

முயற்சிகள் குன்றவில்லை என்றும்

முன்னுதாரணமாய் வாழ்கிறாய் இன்றும்

விண்ணில் ஏவுகணையாக மறைந்தாய்

வியனுலகத்து மனதில் புதைந்தாய்

கலாம், கனவில் வாழ்கிறாய்.....

காட்சியாகின்றன உன் கனவுகள்....

- க.ராஜேஷ்,
சிதம்பரம்,
கடலூர்.

  039.

அக்னிச் சிறகு

தென் கோடி தமிழகத்தில்
பொன் கோடி முத்துக்களாம்
கலாம் தான் நன் முத்தென
கால தேவன் கணித்து விட்டான்.
வீடெங்கும் செய்தித்தாளைப் போட்டதனால்                
விதியின் விளையாட்டை  அனுபவித்தார்.

ஆடம்பர வாழ்க்கை நிரந்தரமில்லை
எளிய வாழ்க்கையே நிரந்தரமென
அப்துல் கலாம் வான் மகிழ வாழ்ந்திட்டார்.
 பரிசாகப் பெற்ற மதிப்பு மிகு புத்தகத்தை
பாதி விலைக்கு விற்று விட்டு பெற்ற தாய்

கடன் தீர்க்க புறப்பட்டார் அப்துல் கலாம்.

இஸ்ரோ - நாசாவில் பயணித்து - கொண்ட
இலட்சியத்தால் வெற்றி   பெற்றார்.
அக்னி ஏவுகணை விண்ணில் பாய்ந்தது
அகிலமே அதைக் கண்டு   வியந்தது.
ஏவுகணை நாயகரென்றும்
அக்னிச் சிறகென்றும் - மக்கள்
 ஆராதனை செய்தார்கள்.

துணைவி இல்லாதத் துறவி
துணிவே துணையென்ற தனிப் பிறவி.
 இந்தியக் குடியரசுத் தலைமை
 இளைஞர்களின் மனம் கவர்ந்த மாட்சிமை
 அனைவருக்கும் ஆசான் - பசுமையின் விதை
 அறிவியல் மேதை - சமத்துவ தந்தை
 இந்தியாவை பாதுகாத்த     அரண்
 இந்தியாவை வல்லரசாக்கும் அவரின் திறன்.
 ஏவுகணை நாயகரின் வியர்வை துளிகள்...
 சந்திரனில் இருப்பதாக சந்திராயன் -

ரோவர் சொன்னதாமே.!?       
வாழ்க கலாமின் புகழ்.!                   

முனைவர் / கவிஞர்
அ.சை. தஸ்தகீர்
திருச்சி.

 
040

அப்துல் கலாம்
கனவு உலகின் நாயகன்
தமிழகம் கண்டெடுத்த தவப்புதல்வன்
தன்னம்பிக்கையின் ஊற்று
 சாதனையாளரின் கைத்துடுப்பு
ஆழ் கடலின் அற்புத முத்து
இயற்கையின் காதலன்
ஏவுகணையை மட்டும்
விண்ணில் செலுத்தவில்லை
உன் சிந்தனை பிறத்தால்
மனிதனின் மனதிலும் உயர்ந்தாய்
நீ வைத்து சென்றது மரம் அல்ல
உன் பெயர் பொறித்த
வரலாற்றுச் சின்னங்கள்
அழிந்தது உடல் மட்டும்தான்
உன் செல்கள்
ஒவ்வொரு துளியாய்
இம்மண்ணில் துளர்கின்றது.
அன்றோ நரைத்தவர் எல்லாம்
முதிர்ந்தவர் என்றார்
இன்று ஒவ்வொரு நரையும்
உன்னை அல்லவா நினைவூட்டுகிறது
சரித்திரத்தின் சாம்பவானே
உன் பிறப்பால் அன்றோ
ராமேஸ்வரம் புண்ணிய பூமியானது
காத்திருக்கிறோம் கனவு நாயகனே
மீண்டும் பிறந்து வா
விண்மீன்களாய் காத்திருக்கிறோம்

தா கீதா
உதவிப் பேராசிரியர்

041.

 கலாம் காலம் 

காலமே கண்ட  அற்புதம் நீ !
மக்கள் கண்ட மன்னன் நீ !
மாணவன் கண்ட ஆசிரியர் நீ !
உலகம் போற்றும்  விஞ்ஞானி நீ !
எண்ணற்ற துன்பங்கள்இணையில்லா

பாடங்கள் கற்றாய் உன் வாழ்விலே.....
நீ இருந்த ஆட்சியே நாட்டின் பொற்காலம் ......
இணையில்லா சாதனை மகிழ்ச்சியை கண்ணில் 
பார்த்தது உண்ணில் தானே இம்மக்கள் !
நீ இருந்த காலத்தில் சோதனைகள் தெரியவில்லை .....
சாதனைகள் தானே தெரிந்தது இவ்வுலகில் !
நீ செய்த பொக்ரான் சோதனை சாதனை ஆக மாறியது !
விஞ்ஞானி ஆகினாய் !

ஆசிரியர் ஆகினாய் !

குழந்தைகளின் நாயகன் ஆகினாய் !
இறுதியில் மனிதன் ஆகினாய் !
உன் காலம் எங்கள் மகிழ்ச்சிகாலம் ....
உன் காலத்தில் நான் படித்தவனானேன்..
 பட்டம் பெற்றேன் மனிதன் ஆனேன்......
 இன்று நீ இங்கு இல்லை என்றாலும் 
உன் நினைவுகள் இங்கு கொட்டி கிடக்கிறதே ....
உன் காலத்தில் நீ செய்த சாதனைக்காக......


சே.ஜனார்த்தனன்

கொடுமுடி, ஈரோடு..

042.

அறிவு தெளிவு  ஆற்றல் சிந்தனை
வாழ்வில் இருந்து சாதனை கொடுத்ததே,

காலை மாலையில் ஒளிரும் கதிராய்
புவியில் வாழ்ந்த உயர்ந்த சிகரமே

நேர்மை வலிமை செயலில் கலந்திட
உண்மை வார்த்தைகள் பூமியில் பிறந்ததே,

கடமை கன்னியம் முன்னேற்றம் வாழ்வில்
திறமை தலைமை நாட்டை உயர்த்தியதே..

துன்பம் வறுமை  கண்ணீர் தூறல்
மக்கள் மனதில் மறைந்து போனதே,

கல்வி மழை மண்ணில் பொழிந்திட
இளைஞர் வாழ்வில் வெற்றி தொடங்கியதே,

விஞ்ஞானம் மெய்ஞானம் தைரியம் பணிவு
குறையாமல் வாழ்க்கையில் புகழ்மாலை தந்து
மகிழ்ச்சியை கொடுத்ததே...

இரா.மோகனதாஸ் சிவலிங்கம்.

 

043.

அப்துல் கலாம், நாடுகளை கவனித்த மூன்றாம் அதிபதி,
உலகின் முதல் தானம், அவர் பதாகைக் காணப்படும் செய்தி.

வானம் வளரும் மத்திய விஞ்ஞானி,
காலம் தோன்றும் மக்கள் விஞ்ஞானி.

அப்துல் கலாம், அரசியல் குழுவின் ஒரு உறுப்பு,
பெருமை மற்றும் அனைத்தும் அவர் முதல் உள்ளடக்கம்.

போன் வருக்காலம் அவர் படிக்கடிதம் கல்வி,
அவர் வாழ்க்கை மாணவர்களுக்கு

பாதுகாப்பு மற்றும் ஆதரவை அளித்த வரலாறு.

அவர் சாதகம், தானியங்கி, படிக்கடிதம்,
விஞ்ஞானியின் உச்சக்கடிதம், அந்த தொழிலில் அவர் அற்புதம்.

விளக்குகள் உலகை அழித்த விஞ்ஞானி,
பதிவுகள் அற்புதம் அவர் கைகளில் காணப்பட்டன.

அவர் வாழ்க்கை வாழ்க்கைக்கு வாய்ப்பு அளித்த விஞ்ஞானி,
அவர் நாட்டின் பெருமைக்கு சக்தியை வழங்கினார்.

அப்துல் கலாம், அவர் அந்தச் சிறிய குடியில் பிறந்த பக்கத்தில்,
அவர் பரமாணு சக்தியை வளர்ந்தவர்.

அவர் வாழ்க்கை மற்றும் உள்ளடக்கம், நம்பிக்கை,
அந்தச் சிறிய குடியில் அவர் பெருமைக்கு வழங்கினர்.

அப்துல் கலாம், ஒரு பெருமை அந்தச் சிறிய குடியில்,
அவர் நம்பிக்கையை அளித்த விஞ்ஞானி.

அவர் செய்திகள், அவர் வாழ்க்கை என் கவிதைகள்,
அப்துல் கலாம், அந்த அலறிய வெற்றிக்கு பெருமை அளித்தவர்.

-து.நிவேதிதா,

கணிதம் இரண்டாம் ஆண்டு,

நாட்டு நலப்பணித் திட்டம்-7,

ஜெயராஜ் அன்னபாக்கியம்

மகளிர் கல்லூரி,

பெரியகுளம்.

                            
  044.         
 

 பற்றவைக்கப்பட்ட மனங்கள்...

நீ பற்ற வைத்த மனங்கள் எத்தனை?....
இயற்கையிடத்தில் கொண்ட விளக்க முடியா அன்பு....
புகழாரம் சூடியும் மாறிடா அதே பண்பு....
பறவைகளிடத்தில் காட்டிய

பாசத்தில் மற்றொரு வள்ளல்....
முடியாது, என்பதை அடித்தாய் உன் செயலால்....
தேசப்பற்றில் நீ செய்த  பணிகளின் நேசம்....
இளைஞரிடத்தில் உன் பொன்மொழிகள்

நம்பிக்கையை வீசும்....
மாணவர்களிடத்தில் நீ ஏற்படுத்திய வெற்றி தாகம்....
அனைத்தையும் பிரிந்து சென்றதே எங்களது சோகம்....
கடைசி நீதி நாளிலும்

மாணவர்களிடம் பேசிய படிப்பினை....
உன் அக்கினியால் இன்றும்

பற்றும் மனங்கள் எத்தனை?....
சிறகிலிருந்து பிரிந்த

மயிரிழையின் சாம்பல் வரலாற்றுடன்....  

-பொ.தேவிகா,

பெரியகுரும்பட்டி,

தருமபுரி .

 

045

ஏவுகணை நாயகன்...

அக்னி சிறகுகளால் என்னை ஆட்கொண்டவனே/
கனவுகளுக்கு பெருமை சேர்த்த கனவானே/
பொக்ரானில் நீ செய்த சோதனை/
உலகமே வியந்த சரித்திர சாதனை.../

நெஞ்சுறுதி கொண்ட அப்துல் கலாமே/
உம் வழியை பின்பற்றி நடந்திடுவோமே/
விழித்திருந்தே கனவுகள் பல காண்போமே/
இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்திடுவோமே.../

எளிமையின் உதாரணம் உன் வாழ்க்கை/
உமது சொற்பொழிவு இளைஞர்களின் தன்நம்பிக்கை/
அமைதியால் உயர்த்தினாய் உன் மதிப்பை/
விண்ணுலகும் பறைசாற்றும் உன் சிறப்பை.../

அறிவின் உளிகொண்டு அறிவியலைச் செதுக்கியவர்/
உறங்காத கனவுகளை என்னுள் தூண்டியவர்/
சோதனைகளை வென்று சாதனை படைத்தவர்/
மறைந்தாலும் வாழும் அழியாப்புகழ் பெற்றவர்/

விடியாத தூக்கத்தில் உறங்கிப் போனாய்/
எம்மை மீளாத் துயரில் ஆழ்த்தினாய்/
மண்ணில் புதைந்து நீ விதையானாய்/
இளைஞர்களின் வாழ்வில் ஒளிரும் ஒளிவிளக்காய்.../

-மை.சத்திய பாரதி,
தூத்துக்குடி.

      
 046.                                   

 சமத்துவ தலைவர் அப்துல்கலாம்             

தமிழ் மண்ணின் சரித்திர புதல்வர்///

அறிவும் ஆற்றலும் ஒருங்கே பெற்றவர்///

அனைவரும் போற்றும் நாட்டின் நிறைவாளர்///

அரசு தொடக்கப்பள்ளியில் கல்வியை தொடங்கியவர்///

இயற்பியல் பாடத்தை திருச்சியில் பயின்றவர்///

விண்வெளி பொறியியலை சென்னையில் கற்றவர்///

விண்வெளி பொறியாளராக பணியை ஆரம்பித்தவர்///

விண்கலம் அனுப்பி சாதனை படைத்தவர்///

நாட்டின் பாதுகாப்பிற்கு வழிவகை செய்தவர்///

பேராசிரியர் பணியை துடிப்புடன் ஆற்றியவர்///

வளர்ந்த நாடாக மாற்றிட  ஆலோசனையளித்தவர்///                                    மாணவர்களுடன் எழுச்சி உரையாண்டவர்///

நான் என்ன தரமுடியுமென கேட்டவர்///

அறிவியல் வளர்ச்சிக்கு வியத்தக வியப்பாக்கியவர்///

அணு ஆயுததிட்டம் அளித்த வித்தகர்///

எண்ணங்களின் ஏற்றங்களை பெருக்கிய பண்பாளர்///

வாழ்வில் நினைத்த கனவுகளை நனவாக்கியவர்///

திறமை,பொறுமை, விடாமுயற்சி கொண்டவர்///

மரங்களை நட்டு காற்றை சுவாசிக்கவைத்தவர்///

ஐயாவின் பணிகளுக்கு பலவிருதுகள் ஊக்கமளித்தனர்///

அக்னிச்சிறகுகள், இந்தியா2020 நூலினால் புத்துணர்வளித்தவர்///

அனைவரும் விரும்பும் தலைவராக மிளிர்ந்தவர்///

ஏவுகணைநாயகன் என்பதற்கு இலக்கணம் பதித்தவர்///

வளர்ச்சி,வலிமைக்கு குடியரசுதலைவராக அலங்கரித்தவர்///

முனைவர் எ.செந்தில்வெங்கடாசலம்

ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி,

ஜேடர்பாளையம்,

நாமக்கல் மாவட்டம்.                   
 

047.

அக்னி சிறகின் நாயகனே !

அறிவியல் உலகின் தூயவனே
சந்திராயன் சவாரிவர மந்திர வித்தை புரிந்தவரே..
மனிதர்குலம் வளர்ச்சி தெரிந்தவரே
இராமேஸ்வரம் கண்டெடுத்த நன்முத்தே
மதம் கடந்து மனிதம் காத்த எம் சொத்தே
பேராசிரியப் பணியில் பெரும் கவனம் ..

இல்லற வாழ்விலோ வெறும் பயணம்.
கனவு காணுங்கள் எனக்கட்டளை இட்ட இதிகாசமே
நீ அரசியல்வாதியல்ல ஆனாலும்

உன் பின்னே ஆயிரத்தெட்டு இளைஞர்படை
உம் கனவிற்கு எப்போதும் வந்ததல்ல தடை
டெல்லி மாளிகை உனை அள்ளியெடுத்தாலும்

நீ துள்ளிக்குதித்ததென்னவோ பள்ளி

மாணவர்தம் மனதில் தான் .
அதனால் தான் மாணவரிடையே

உரையாற்றும் போது உன் உயிர் பிரிந்தது.
உலகையாளும் இளைஞர்படை

உனை நினைத்தே கனவுகாணுகிறது ..

இந்தியா வல்லரசாக  நின் வார்த்தைகள் வலிமை தரட்டும் .

நல்லரசாக என்றும் பெருமை பெறட்டும் .

திருமதி.இள.செல்வமணி
தலைமைஆசிரியை
ஊ.ஒ.தொ.பள்ளி,சித்தமல்லி.
திருவாரூர் - மாவட்டம்.

 

048.                   
   
 கலாம்


இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்

பற்பல சாதனை குவித்திருக்கலாம்

கல்விக்கெலாம் முக்கியதுவம் கொடுத்த கலாம்

மாணவச்செல்வங்களுக்கு நன்னெறி  புகட்டிய கலாம்

விண்வெளிபயணத்தை ஏவியக்கலாம்

விழிப்புணர்வை நாளும் விளக்கிய கலாம்

காலம் அவரை பிரித்திருக்கலாம்

மலர் வலையங்களும் அழுதிருக்கலாம்

சிறந்த மனிதராய் பூமியில்பிறந்தகலாம்

பரந்த மனதை மற்றவர்களுக்கு புகுத்திய கலாம்

மறைந்தாலும் உலகமே வியக்கும் கலாம்

மமண்ணுலகம் மனதில் நிறைந்த கலாம்

மீண்டும் ஒரு கலாம் பிறந்திருக்லாம்

அது நீயாக கூட இருக்கலாம்.

- பா.வெண்ணிலா பாலாஜி நெய்வேலி

 

049.           
              

அப்துல்கலாம்
 

இமயம் முதல் குமரி வரை

மக்கள் மனதில் வாழும்,

எளிமை மனிதர் அப்துல்கலாம்,

புகழ் உலகம் பேசும்.

அன்பு,அமைதி இரக்கம் இவை

அவருக்கு மிக பிடிக்கும்.

அடுத்தவரின் துயரைக் கண்டால்

ஓடிக் கண்ணீர் வடிக்கும்,

பண்பு மிக்க மனிதர் கலாம்

பார்க்க மிக எளியவராம்;

மாணவர் மனம் கொண்டாடும்

மதிப்பு மிகு தூயவராம்.

அறிவியல் ஞானி அப்துல்கலாம்

சாதனை மேல் சாதனை

செய்து காட்டி நமக்கு எல்லாம்

சேர்த்து சொன்னார் போதனை.

கவிஞர்.
ந.ஆறுமுகம்
ஏம்பலம், புதுச்சேரி

 

050.

உலகம் போற்றும் கலாம்

தமிழகத்தின் தலைமகன்,
தாயகத்தின் குடிமகனாக உயர்ந்தவன்.

அக்டோபரில் பிறந்தவர்,
இளைஞர் மறுமலர்ச்சி நாளை உண்டாக்கியவர்.

எளிமையின் உறைவிடமானார்,
எறும்புபோல் கடின உழைப்பை கொண்டார்.

கணிதத்தில் ராமானுஜரானார்,
அறிவியலில் ஆற்றல் மிக்க நியூட்டனானார்.

விஞ்ஞானியாக வலம் வந்தார்,
விண்ணியலில் எண்ணற்ற சாதனை படைத்தார்.

ஏவுகணை நாயகனாய்,
வல்லரசையும் விழி பிதுங்கி நடுங்கச் செய்தாய்.

அக்னிக்காக பங்காற்றினார்,
அக்னிச்சிறகாக வலம் வருகிறார்.

வீணையின் வித்தகர்,
விளையாட்டு குழந்தைகளுக்கு கால் தந்தவர்.

மரக்கன்றுகளை நடச்செய்தார்,
மனதார இயற்கையை நேசித்தார்.

பாரதத்தின் தலைமகனானவர்,
பலபட்டங்களுடன் பாரதரத்னாவுக்கு சொந்தமானார்.

மாணவர்களை நேசித்தார்,
மாணவர்கள் மத்தியிலிருந்தே
உயிர்துறந்தார்.

உலகம் போற்றும் கலாம்,
உலகெங்கும் வாழுகிறார்  சாதனையாளராக.

சு. உஷா சுந்தர பாய்.
சென்னை.

051.                    

   உயர்வு தரும் நாளை நோக்கி,
உதித்தது இராமநாதபுரத்தில் ஓர் சூரியன்!!!
கற்றதும் ஏனோ கை மண் அளவு,
விற்றதும் ஏதோ செய்தித்தாளை!!!
இருந்தது எதுவோ இராணுவ வீரராக,
பறக்க வைத்தது ஏதோ ரோகினியை!!!
தீச்சுடர் எங்கும் பார்க்க பரந்தது அக்னி,
பாரெங்கும் திரும்பி பார்க்க உயர்ந்தது பிரித்வி!!!
பொன்னான காலத்தை பயன்படுத்தி,
பொக்ரான் அணு ஆயுத சோதனை செய்தீர்!!!
ஆளுக்கு ஓர் தீவாக இருந்த நாட்டை,
அணு ஆயுத நாடாக நடத்தினீர்!!!
மதுவை விளக்க எண்ணிய வேலையில்,
மத்திய குடியரசு தலைவர் ஆனீர் !!!
எழுதியதோ எதிர் கால இந்தியாவை பற்றி,
எழுந்தது எதுவோ இன்றைய இளைஞர்கள் மனதில் தீப்பொறி!!!
விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியாவிற்கு
விண் உயர் புகழ் பெற்று தந்தீர்!!!
அரும்பான மாணவர்களை நேசித்து,
அந்த பூந்தோட்டத்தில் விதையாக மறைந்தீர்!!!    
                      
  - ஜெ. கமலி ஸ்ரீ ,

     பஞ்சுகாளிப்பட்டி,
     ஓமலூர், சேலம்     
                      
                   
  052.                                    
                         
     அப்துல் காலம்.
மனிதர்கள் வாழ்கிறார்கள், மாமனிதர்களோ

மக்கள் மனதை ஆழ்கிறார்கள். அதில் நீயே அழியாத அரசன்.....
வழுவிளந்து திரிந்த மனிதர்களுக்கு

அக்னிசிறகு தந்து ஆகாயம் காட்டியவர்,
கனவு காணுங்கள் என்னும் வார்த்தையால் புதுசக்தி ஊட்டியவர்....
எழுச்சி என்ற பயிரை மனதில் விதைத்த நெய்தல் நில உழவளி, ஏவுகனைநாயகன் என்ற பட்டத்திற்கு நீவிர் தானே முதலாளி......
தமிழை தலைத் தோங்க செய்த செய்கை உனது,உன்

புகழை ஒவ்வாரு நாளும் பாடும் மக்களின் மனது...
நீவிர் தானே பொறியி யல் துறைக்கு வழிகாட்டி,

இன்றும் என்றும் ஊக்கம் தருகிறோம்

மாணவர்களுக்கு உங்கள் முகம்காட்டி...
மறந்து போகாது நீங்கள் வாழ்ந்த காலம்,

எங்கள் கனவுகளுக்கு நீவிர் தானே பாலம்.

நின் பெயரை தலைமுறைகள் மறவாது எந்நாளும்....
அழியாத சுடராய் உனையேற்றி,

அதில் நின் கனவுகளை ஊற்றி,

அழியாத வெளிச்சம் தருகிறோம்

உன் பெயரை பறைசாற்றி...............

வெகுவிரைவில்.........                                  
                    
  -ஆ. பிரபாகரன்
உதவிபேராசிரியர்
நேரு தொழில்நுட்ப கல்லூரி.
கோயம்புத்தூர் 

053.

ஏவுகணை நாயகன்
ஏவுகணையின் வித்தகரே !
ஏற்றங்களை தந்தவரே!
அறிவியலின் அற்புத மே!
மாற்றங்களை தந்த தந்தையே!
ஏவுகணையை விண்ணில் ஏவி ஏற்றங்களை தந்தவரே!
மாணவர்களே வருங்கால தூண்கள் என்று நம்பியவரே!
கனவு காணுங்கள் என்று கூறிய கலைஞரே!
தனது கடைசி மூச்சை மாணவர்கள் முன் விட்டவரே!
தங்களைப்போல் இன்னொருவரை இனி காண்போமோ?
நீங்கள் நம்பிய மாணவர்கள நாங்கள்

உங்கள் கனவை நனவாக்குவோம்!

- ர.சண்முகபிரியா
புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளி
சூராணம்
சிவகங்கை மாவட்டம்.
               

 054.                        
  

வாழிய கலாம்


கடைக்கோடி கிராமத்து மைந்தன்
கலைமகள்  அருள் பெற்ற அறிஞனே !

ஈகைத் திருநாளோடு
ஈசன் புத்திரனையும் அடி  தொழுத சமத்துவனே!

ஏவுகணை நாயகனாக எழுத்தின் பிரம்மனாய்
முழு நிலவொத்த அறிவு களஞ்சியமே!

செயற்கை இதயமும் செயற்கை கால்களும் கொடுத்து
புலியின் வரிகளான  விஞ்ஞான முத்திரையே!

இளைஞரின் ஆழ்மனதை ஆழ அகழ்ந்து,
வேளாண் அறிவியலில் விழிப்புணர்வு  கொடுத்தவரே!

பள்ளி மாணவர்களின் அன்பை கொய்து
இதயக் குடலையில் மொத்தமாக நிரப்பியவரே!

நாளிதழ் விற்ற இளம்பருவம்  நாளிதழ்களில் தலைப்பு
பெயரான ஜனாதிபதியாக்கிய பாரத ரத்னா விருதாளரே!

பௌதிக பட்டப்படிப்பு தடைமுள்ளாகி முடிக்க விடாமல் ,
விமான ஓட்டுனர் ஆசையும் நிராசையாகக் கண்டவரே!

வல்லரசு இந்தியாவை படைக்க ஆளுமை  கடந்த நாடுகளிடையே
ஐ.நா. சபையில் அறிமுகமாக்கி பாரதமண்ணை அடையாளமிட்டவரே!

அகில உலகமும் அண்ணாந்து பார்த்த
பிரதிவி/ஆகாஷ்/திரிசூரன் ராக்கெட்டுகளின் நாயகனே!

குறள் வரிகளின் மனம் சுழலல்  கண்டு ஔவை தமிழுக்கும்
அர்த்தமானவரே!

தமிழும்/தமிழரும் உள்ளவரை இறந்தும் எங்களுடன் வாழும்
குற்றமில்லாத காலச்சக்கரமே!
வாழிய நின் புகழே!

முனைவர் பெ.தமிழ்ச்செல்வி,

 வாலாஜாபேட்டை

 

055.              
   

அணு ஆராய்ச்சி வித்தகர்
 

அறிவியல் பணியே அறப்பணியாக நினைத்தவர்!

 நம்பிக்கை எனும் மூலதனத்தை விதைத்தவர்

 மாணவ அறிவுக் களஞ்சியத்தின் வித்து!

 எதிர்கால மாற்றத்தை ஏவுகணையால் சாதித்தவர்!

 செய்தித்தாள் விற்பனை செய்த செய்தியின் நாயகன்!

 நேர்மை உழைப்பு எளிய வாழ்வு உடைய அக்னி சிறகு!

 அணுசக்தி திட்டத்தை விருட்சமாக்கியவர்!

வல்லரசு இந்தியாவை
உளி கொண்டு செதுக்கியவர்!

 இளைஞனின் எழுச்சியாக கனவு காண செய்தவர்!

 வீணையோடு சேர்ந்த
 கருத்துகளின் பொக்கிஷம்!

 எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்தவர்!

 குடியரசு பதவி
 மகுடமாக்கி மகிழ்ந்தவர்!

 ஏவுகணை வீரராக ஏற்றம் கண்டவர்!

 மண்ணை விட்டு மறைந்தாலும் மனதில் சரித்திரமான கலாமின் நினைவைப் போற்றுவோம்!

- முனைவர் பெ.கலைச்செல்வி
காட்பாடி

  056.

அறிவு ஊற்று ஆளுமை நாற்று...

அன்பால் அகிலத்தை ஆண்ட ராஜா

எளிமையின் சின்னமே ஏழைகளின் தங்கமே

கடல் அலைகள் கண்டெடுத்த முத்தே

நீ தமிழ்நாட்டின் சொத்து

கனவு காணுங்கள் என்று நம்பிக்கை

விதை விதைத்த கனவு நாயகன்

சாதிக்கலாம் முயற்சிக்கலாம் உருவாக்கலாம்

புதிய சரித்திரம் படுத்த இளைஞர்களின் சிங்கமே

உறக்கத்தில் வருவது கனவல்ல உன்னை

உறங்கவிடாமல் செய்வது என போதித்தவரே

சொல்லிச். சென்றவர் மத்தியில் சொன்னதை

செய்து காட்டிய யா மேதையே

விண்ணும் மண்ணும் உள்ள வரை

உங்கள் வாழ்க்கை வரலாறாகவே மாறும்

முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவை

 

  057.

அமைதியின் மருவுருவம் அப்துல் கலாம்...

வண்ண மலரெல்லாம் வாடிவிடும் என்பதனால்
என்ன மலரெடுத்து எழுத்தாணி நூல்கொண்டு
உண்மை உறைப்பதற்கே ஓராரம் புனைந்துவந்தேன்
கன்னித்தமிழென்னும் கனிமொழி அதில்தான்

அன்பகத்தில்அணையிலதாய் அமைதிக்கமை விடமாய்
பண்பகத்தில் பயனுடைதாய் பகுநாதுபலத் துறைவுளதாய்
நன்பகத்தில் நவிலுருவாய் நயமதன்திருவுருவாய்
மண்பகத்தில் மாண்புருவாய் மாநிலத்தில் அவதரித்தீர்

செய்தித்தாள்விற்பனையால் செவிக்குணவு அளித்திட்டீர்
நூல் பலப்பயின்றமையால் நுண்ணறிவுப் பெற்றிட்டீர்
திடமானமனதினணந்ததீர்க்கமான நும்செயலால்
தோல்விக்குத் தோல்விஅளித்து துடிப்புடன்செயல்பட்டீர்

எம்மதமும் சம்மதமே என்றுணர்ந்ததன்மையுடன்
உழைப்பொன்றே உயர்த்தும் என உறுதியாய் உழைத்திட்டீர்
காட்சிக்குஎளியவராய் கடுஞ்சொல்அற்றவராய்
களிப்புடன் எந்தாளும் கடமையைஆற்றிட்டீர்

விருதுகள் பலபெற்று விருதுக்குப் பெருமைசேர்த்தீர்
வியப்பெதுவும் எமக்கில்லை விரித்துரைக்க
வார்த்தையில்லை இணனயில் இராமேஸ்வரம்
இவர்பிறப்பால் உயர்ந்ததுவே ஈடிலாப்புகழின்று
இமயம் வரைஎட்டியதே

ஆசானை மதித்தெழுந்த அறிவுப்பெட்டகமாய்
அறிவியல்சாதனையால் அகிலத்தை வென்றிட்டீர்
ஆர்ப்பரிக்கும்அலைகடலுடன் அமைதியாய் துயிலும்நீர்
ஆறாதத்துயரதனில் எமையெல்லாம் ஆழ்த்திட்டீர்

பிறப்புசம்பவமாய் வாழ்க்கை சாதனையாய்
இறப்புசரித்திரமாய் வாழ்ந்திட்ட மேதை நீரே
பதவிக்கு  மரியாதை நும்மால்  கிடைத்தமையால்
பார்புகழும்பாரதத்தின் ரத்தினம் நீர்எமக்கு

ஓயாது உழைத்தீண்டு உறங்கும்நிலைகண்டு
ஓராயிரம் நீர்துளிகள் விழிகளை மறைத்திடுமே
ஓங்குபுகழ்பலபெற்ற ஒல்காஒளிக்குன்றே
உறுதியுடன் செயல்படுவோம் உமை வணங்கித்
தொழுதிடுவோம்....

   - கி சூடாமணி

    வேளச்சேரி
    சென்னை42     

058.     

அண்ணல் அப்துல் கலாம்...

இவரைப் போல எளிய மனிதர்களைப் போற்றலாம்! 
இவரின் பெயரில் கல்விச் சாலைகள் தோன்றலாம்! 

மாசறு அப்துல் கலாம் போல் மனிதர்கள் சாதிக்கலாம்!
அன்னாரது அறநெறி வாழ்வைப் போதிக்கலாம்! 

நேருஜி காமராசர் போல் இவரைப் பூஜிக்கலாம்! 
நேர்மை நேரந்தவறாமை இவரிடம் கத்துக்கலாம்! 

வாழ்நாள் என்றும் பதவி வகித்திருக்கலாம்! 
வருங்கால உலகை  யூகித்திருக்கலாம்! 

சுத்தமல்லி 
உமாஹரிஹரன்
திருநெல்வேலி.

059.

நம்பிக்கையின் நாயகனே...

ஏவுகணை நாயகனே

ராமேஸ்வரத்தில் பிறந்த முத்தே//

நம் நாட்டின் சொத்தே

இளைஞர்களின் எழுச்சி நாயகரே//

எங்களை கனவு காண வைத்த சாதனை வீரரே//

சோதனைகள் உன்னை சூழ்ந்த போதிலும்//

உன் சாதனைகளால் உலகையே

திரும்பிப் பார்க்க வைத்தவரே//

வீடு வீடாய் சிரித்தால் போட்டவர்//

உலக அளவில் செய்தித்தாளில் வர முடியும் என நிரூபித்தவர்//

இளைஞர்களின் கணவு நாயகனே//

இந்திய மக்களின் விடிவெள்ளியே//

விண்ணையும் மண்ணையும் கைக்குள்ளே

கொண்டு வரலாம் என்றவரே//

மதம் கடந்த மாமனிதனாய்//

முதல் குடிமகன் ஆனபோதும்//

முறையாய் மக்களுக்கு ஆட்சி தந்தவரே//

நீர் விண்ணுலகம் சென்றாலும்//

மண்ணுலகத்தில் என்றும் உன் புகழ் மறையாதே//

உன் பாதம் பணிந்து நின்று//

உம் பாதையில் பயணிப்போமே நாங்கள்//

நீங்கள் விதைத்த ஒவ்வொரு விதையும்//

எதிர்காலத்தில் விருச்சங்ளாய் பரவி கிடக்கும்//

வாழ்க உம் புகழ்// வளர்க உன் பெருமை//

சி. தேவி பிரியா

படுக்கப்பத்து.

 

060.

*காலத்தை வென்றிட்ட கலாம் ஏ.பி.ஜே.*
அரசு பள்ளியின் அஸ்திவாரம்
அறிவியல் உலகின் ஆன்மிகம்
எளிமை  அவர்தம்  ஆடை
கடமை  அவர்தம்  உணவு
மனிதம் அவர்தம் சுவாசம்
மாணவ உலகம் அவரின் தாகம்
விண்வெளி விஞ்ஞானி, இராணுவத் தளபதி
சிந்திக்கத் தூண்டும் சிகரம். ஆம்
நேர்வகுடு காரனை நிமிர்ந்து பாருங்கள்
சமத்துவ ரேகை தலைச்சீராய் ஓடும்
கருத்துகளைச் சுத்திகரிக்கும் காற்றாலை
தலைவன் என்றவுடனே நினைவுகளில் 
தாவி தடம் பதிக்கும் உருவம்
உன்னத தலைமைக்கு  உயர்வான
உண்மையான எடுத்துக் காட்டு
கலாம் அவரில் கலக்கம் இல்லை
கலங்கி நிற்கும் எவர்க்கும்
கலங்கரை விளக்கம் அவர்
தண்ணீரைப் போல் தூய்மை
அவர்தம் வாழ்வியல்
தன்னிகரில்லா மாமனிதர், உள்ளார்ந்த 
ஊக்க சக்தியின் அச்சாணி
இளம் பிள்ளைகளோடு இரண்டறக்
கலந்துறவாடும் மூத்தமுதன்மை குடிமகன்
சக்திவாய்ந்த உணர்வுகளை
ஆக்கப் பூர்வமான ஆசைகளை
வளர்ச்சியடைவதற்கான வழிகளை
உயர்வடைவதற்கான உறுதிப்பாட்டை
தூய்மையடைவதற்கான துணிச்சலை
விசாலமடைவதற்கான விருதுகளை
உரமாக தந்து சென்ற உற்பத்தியாளன்
எதிர்கொண்டு சமாளிப்பதே வாழ்க்கை
தோல்விக்கான காரணங்களை அக்குவேறாய்
ஆணிவேராய் அலசிப் பார்த்தவர்.
இடர்களும் பிரச்சனைகளும் 
வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்றவர்
செதுக்கி செம்மைப்படுத்திய ஆசிரியர்களை 
 சிரம் தாழ்ந்து வணங்கிய சிகரம்
இலக்கு நிர்ணயம், ஆக்கப்பூர்வமான சிந்தனை
கற்பனை கண்ணோட்டம்,நம்பிக்கை எனும்
வெற்றிக்கான இலக்குகளை கற்றுத்
தந்த நான்கு வழிச்சாலை.
அழகாக கதை சொல்லும் குழந்தை நாயகன்
ஒருவர்  இருவருக்கு சொல்லிக் கொடுங்கள்
ஒவ்வொருவரும் நடுங்கள் இரண்டு மரங்கள்
ஊக்கம் குறையாத உழைப்பில் திடம் கொள்ளுங்கள்
தோல்வி மனப்பான்மையை  துரத்தியடியுங்கள்
ஏ.பி.ஜே கலாமின் கந்தர்வ சொற்களிவை
கருத்தூன்றி செயல்படுவீர் காலத்தை வென்றிடுவீர்!
         
   - ஜோ. ரீட்டா மேரி  
தூய வளனார் கலை மற்றும்

அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
மஞ்சக்குப்பம், கடலூர் -1

 

061.

உயிராக  .......அப்துல் கலாம்...

காலம் வென்ற கலாம் ஐயா 

யாரும் ஏரெடுத்துப் பார்க்காத இந்தியாவை

உலகையே அசர வைத்த உன்னதரே

இந்தியாவின் ஏணியான ஏவுகணை நாயகரே

ஏழையின் வீட்டிலே விஞ்ஞானியாய் வளர்ந்தவரே

கடல் கடந்து சென்றாலும் தமிழனாய்

 தலை நிமிர்ந்து தமிழை பறைசாற்றியவரே 

இளையவருக்கெல்லாம் எழுச்சிமிகு இளைஞரே

கனவை மெய்யாக்கி வாழ்வை வாழ்வாக்கு

 என்று  வாழ்ந்து காட்டிய பாடமே

இந்தியாவில் முதல் குடிமகனாய் இருந்து

 தன் வாழ்க்கை தரத்தில் முதல் தரமாய்

  உயர வில்லை மக்கள் மனதில் முதல் குடி மகனாய்

 சிறியவர் முதல் பெரியவர் வரை

இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்

ஐயா உமக்கென்று சொத்துக்கள் இல்லை 

நாங்கள் உன் சொத்துக்களாக  வாழ்கிறோம்

 என்றும் எங்களின் உணர்வுகளில் உயிராக....

ஆ ரொசாரியோ ராணி உசிலம்பட்டி.

 

062.

கலாம்
ஒரு கீதா ரகசியம்..

வாழ்ந்தவர்க்களின் வரைமுறை

வாழும் தலைமுறைக்கு வாழ்வியல் சூத்திரம்...

நீ வாழ்ந்தபோது நாங்கள் வாழ்ந்ததில் பெருமை...

அய்யா உனக்குள் மனிதம் மயங்குகிறது.....

நீ பல மாறுதல்களுக்கெல்லாம் மய்யமானவன்... 
மனிதப்பண்பாட்டின் உச்சம்...
மனிதநேயத்தின் அளவீடு வாழ்வியல் அகராதி....
சன்மார்க்க போதினி......
நாளை நீ வாசிக்க வேண்டிய புத்தகம்...

நீ அனுகுவோருக்கு ஆனந்தக் கோகுலம்....
அன்புப்பிள்ளைகளின் வேடன் தாங்கல்..
நீ விதைத்த விதை ஒருநாள்

வல்லரசு என்ற கனி கொடுக்கும்.

கவிஞர். சசி துரை
ஆண்டிபட்டி,
தேனி

063.

காலத்தை வென்ற கலாம்...

அறிவியல் தன் ஆசையை நிறைவேற்றிட....

இறைவன்.... அனுப்பி வைத்தாராம்....
ஈடு இல்லா ஒரு இனியவரை....

உலகெங்கும் பல மரங்கள் நட்டவர் .....

ஊருராய் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை....

தன் உள்ளத்தால் உசுப்பி விட்டவர்....

எளிமையாய் இருந்தே.... ஏற்றம் படைத்தவர்....

ஐயமின்றி சொல்லுவேன்.... இவருக்கு இணை இவரே என்று....

ஒற்றுமையை நிலை நாட்ட.... ஓயாமல் பாடுபட்டவர்....

ஒளவை தமிழையும்
அறிவியலுக்கு இணையாய் நேசித்தவர்....
 
எட்டுத்திக்கும்.... புகழ்பாடும்....எம் தமிழ் மகன் இவர்....

முக்காலமும் வென்ற மூத்த மகன் இவர்....

மண்ணுலகை அழகு படுத்தியவர்....

விண்ணுலகத்தை வியப்பில் ஆழ்த்த சென்றிருக்கிறார்....

இறப்பே இல்லை இவருக்கு....

இயற்கை என்பது உள்ளவரை.... அதிலே இதயங்கள் என்பது....

வாழும்வரை....

கவிப்பிரியை கார்முல்லை
 ( ஆ. சந்தியா.M. A, B. Ed)

வெங்கடேசபுரம்

064.

கலாமுக்கு ஒரு சலாம்! 
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தவப்புதல்வரே!
குடியரசுத் தலைவராகக் குடிமக்களின் மனங்கவர்ந்தவரே!
அறிவியல் துறையில் அறிவுதனை அர்ப்பணித்தவரே!
விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத் தொட்டவரே!

ஏவுகணை நாயகனென ஏற்றமிகு பெயரெடுத்தவரே!  
அணு சோதனையில் அணுக்கமாய்ப் பணியாற்றியவரே!
பேராசிரியராகச் செயலாற்றிப் பெருமை சேர்த்தவரே!
இந்தியா 2020  நூலில் இனிய திட்டங்கள் சொன்னவரே!

நவரத்தினமாய் சிறந்து பாரதரத்னா பெற்றவரே!
முனைவர் பட்டங்களால் மகுடம் சூட்டப்பட்டவரே!
தலைமை அறிவியல் ஆலோசகராய் தனித்தியங்கியவரே!
அனைவரையும் அரவணைத்து ஆட்சி செலுத்தியவரே!

அக்னி ஏவுகணையில் அக்னியாய் செயல்பட்டவரே!
பிருத்வி ஏவுகணையில் பிணைப்பாய் இருந்தவரே!
ஆகாஷ் ஏவுகணையில் ஆகாயம் அடைந்தவரே!
இந்தியாவின் புகழை விண்ணில் சேர்த்தவரே

கவிதை எழுதுவதில் கனிவு காட்டியவரே!
வீணை வாசிப்பதில் ஆர்வம் கொண்டவரே!
கடுமையாக உழைப்பதை வழக்கமாக ஆக்கியவரே!
கற்பனைத் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவரே!

சமுதாயக் கடமைகளைச் செவ்வனே செய்தவரே!
பெண்களின் கல்வியை ஆதரித்து முழங்கியவரே!
மரங்களை நட்டுவைத்து மனங்களில் நின்றவரே!
மீண்டும் வருவீரென கனவு காண்கிறோமய்யா!
      டி.என்.இமாஜான், சிங்கப்பூர்.

065.

அக்னி சிறகுகள்..


சேது தந்த சீதனமே எங்கள்.. செழுமை தேசத்தின் 
அற்புதமே..!

புதியவை தேடிய  பொற்காலம்..!
புதினங்கள் நாடிய வருங்காலம்..!

தலைநகர் பெருமையில் உனது வரவு...
வள்ளுவன் குறளில் வரும் பொருளாய்..!

உணர்வு கொண்ட மனித நேயமே..!

ஊனம் நீக்கிய பெரும் வரமே..!

தெய்வ படைப்பே தென் பொதிகையே ..!

தென்றல் போல நீயும் எளியவரே..!

முதல் குடிமகனாய் முடிசூட்டி ..!
முகவரி தேசத்திற்கு  நீயாக ..!

அறநெறி தவறாத அரசியலை..!
அடித்தளம் கொண்டு நீநடந்தாய்..!

மனிதபுனிதன் நீயென மக்கள் பேசிட..!
மாண்பு செய்திட்ட மாமணியே..!

அக்னி சிறகுகள் உன் சிறப்பு..!
அண்டம் தேடுது உன் படைப்பு..!

அறிவியல் உலகு உனை போற்றிடவே ..!
அன்னை தேசம்  அழைக்குதையா..!!!

வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்

066.

எழில் மகனே..!

திரையாடும் அலைோசையின் கரைதனிலே பிறந்த
எளில் மகனே எளிமையின் சின்னமே
விமானியாக இலக்கு கொண்டு வண்ணங்கள் பூசிய
கனவுகள் பலக் கண்டிருந்தாய் ஏழ்மையில்
உழன்ற உன் குடும்பம் காக்க
திட்டமிட்ட நேர்க் கோட்டில் பயணித்த
உன்னிடம் வலை விரித்துக் களியாடியதோ
இறைவன் வகுத்த விதியும் உனக்கெதிராக
பாதை மாறியதுன் இயற்பியல் ஆர்வத்தாலே
யாருமறியா விமானியாகக் கனவுலகில் பறந்திருந்தாய்
கடந்து வந்த அனுபவங்கள் நல்கிய
தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியால் பேராசிரியராக  உலகம்
வியக்கும் அணு விஞ்ஞானியாக, ஏவுகணையின்
தந்தையாக இளைய சமுதாயத்தைக் கனவு காணச்
சொன்னாய் தேசத்தின் முதல் குடிமகனாக
எழுச்சிக்கு ஔி நல்கிய தீபமே
இளைய சமுதாயத்தின் வழிகாட்டி
உன்னை என்றும் நினைவில் கொள்ளுமே!!

முனைவர்.
ப்ரியா நாகராஜன்,
திருவனந்தபுரம்.

 

067.

சலாம் கலாம் சலாம்!

( தேசியக்கொடியும் அசைந்து சொல்லும்

என்ற பாடலைத் தழுவி கலாம் ஐயாவிற்காக நான்

எழுதிய கவிப்பாடல் இது)

 விஞ்ஞானமோ மெய்ஞானமோ வியந்து சொல்லும்!

சலாம் கலாம்..,கலாம்

 விண்ணும் மண்ணுவென்ற சரித்திர நாயகா!

சலாம் கலாம்.., கலாம் சலாம்!..

 சிற்றார் இளைஞர்களின்  நேச நாயகா!
 சலாம் கலாம்.., கலாம் சலாம்!..

இலட்சியக் கனவுகளை வென்ற இலட்சியத்தலைவா!
சலாம் கலாம்..,கலாம் சலாம்!..

பொன்மொழிகள் போற்றும் பொன்மொழித் தலைவா!
சலாம் கலாம்..,கலாம் சலாம்!..

புலமையின் விதையோ,காவிய படைப்போ!
சலாம் கலாம்..,கலாம் சலாம்!..

பலக்கலைகளை பயின்ற பன்முகத் தலைவா!
சலாம் கலாம்..,கலாம் சலாம்!..

ஏவுகணை படைப்பினில் ஏடுகள் போற்றிய!
சலாம் கலாம்..,கலாம் சலாம்!..

வல்லரசு இந்தியாவின் வரைபட நாயகா!
சலாம் கலாம்..,கலாம் சலாம்!..

நாடே போற்றும் நற்குணத் தலைவா!
நாளை வெல்வோமே,உங்களின் கனவை!..

சலாம் கலாம்..,கலாம் சலாம்!..

- கவிமாமணி
 ச.கலைச்செல்வி
 பத்திரிக்கை நிருபர்.

068.

ஏவுகணை நாயகன் கடைக் கோடி கண்டெடுத்த
முதல் குடிமகனே//

வாழ்வில் எளிமையும் வாக்கினில் சுத்தமும்//

நாவினில் நாணயமும் செயலில் சிறப்பும்//

உள்ளத்தில் உறுதியும் பதவியில் பணிவுமாய்//

அக்னிச் சிறகாய் அறிவுக் களஞ்சியமாய்//

ஆற்றல் நிரம்பி ஆளப் பிறந்தவராய்//

ஈகையில்  வள்ளலாய் உள்ளத்தில் குழந்தையாய்//

ஊக்கத்தில் என்றும் உயிர் மூச்சாய் //

எளிமையின் மறுவுருமான மனித நேயமாய்//

எல்லோர் மனத்தையும் அறிவால் கவர்ந்தாய்//

ஏராளமான பட்டத்திற்கும் விருதுக்கு  சொந்தமாய்//

அறிவியலில் மறுமலர்ச்சியும் இளைஞர்களின்
எழுச்சியுமாய்//

ஓயாமல் ஓடி உழைத்த உத்தமரே//

ஓயாமல் படித்து ஓராயிரம் அறிவை வளர்த்தவரே//

அறிவியலின் விந்தையே ஆராய்ச்சியின் நாயகரே//

தினமும் உறக்கத்தில் காணும் கனவையே//

நினைவில் என்றும் செயலாக்க வைத்ததவரே//

எட்ட முடியாத சாதனைகளை எட்டியே//

உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவரே//

பசுமை இந்தியாவை பார்க்கச் செய்தவரே//

உம் கனவு பலித்ததால் உம் ஆசியுடன்//

பல ஏவுகணைகள் வின்னை நோக்கி பறந்ததே//

பெ.சித்ரா இளஞ்செழியன்
பள்ளி முதல்வர்
ஓஎப்டி ,திருச்சி 16

 

069.

ஜனங்களின் மனங்களில் வாழும் ஜனாதிபதி!

இராமேஸ்வரத்தில் உதித்த ரவியே !
இராஜ்ஜியத்தின் அதிபதியான ராஜாவே!

ஜனங்களின் மனங்களில் வாழும் ஜனாதிபதியே!
தனக்கென எதுவும் சேர்க்காத குணாதிபதியே!

குழந்தைகளை நேசித்த குடியரசுத் தலைவரே!
குணத்திலும் பண்பிலும் கோபுரமாய் உயர்ந்தவரே!

இந்தியாவில் பிறந்த ஏவுகணை நாயகரே!
எந்த நேரமும் நாட்டின் சேவகரே!

இந்தியா வல்லரசாக நாளும் உழைத்தவரே!
இளைஞர்களைக் கனவு காண அழைத்தவரே!

தூக்கத்தில் வருவதல்ல கனவு −உன்னை
தூங்க விடாமல் செய்வதே கனவென்றவரே!

கனவு மெய்ப்பட கடின உழைப்பை
கரம் பற்ற கனிவாய் உரைத்தவரே!

துணிந்து எதிர்கொள் கடின சூழ்நிலையை!
துளித்துளியாப் அவை சிதறிடும் என்றவரே!

குழந்தைகள் மனங்களை எளிதில் படித்தவரே!
குடிசை மக்களையும் உயர்த்தத் துடித்தவரே!

எளிய வாழ்வைத் துணை கொண்டவரே!
இனிய பேச்சால் அனைவரையும் கவர்ந்தவரே!

அக்னிச் சிறகை விரித்த அப்துல்கலாம் அவர்களே!
சிகரம் தொட்டுப் பறந்த குடியரசுப் பறவையே!

பல்துறையில் சிறந்த பல்கலைக்கழக பேராசிரியரே!
பாரதரத்னா விருது பெற்ற பன்முகத் திறமையே!

விண்வெளியை ஆய்வு செய்த அறிஞரே!
வீணையும் இசைத்த  இசைக் கலைஞரே!

எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டானவரே!
எங்கள் தலைவரென எல்லோரும் கொண்டாடியவரே!

உண்மையும் உழைப்பும் கொண்டு உயர்ந்தவரே!
பண்பின் சிகரமாய்த் திகழ்ந்த அண்ணலே!

விண்ணிலும் மண்ணிலும் வியப்பைத் தந்தவரே!
விஞ்ஞானப் பகலவனாய் வடகிழக்கில் அஸ்தமித்தவரே!

காலம்  உங்களை என்றும் மறவாதே!
ஞாலத்தில் உங்கள் புகழும் மறையாதே!

இளைஞர்களின் எழுச்சி நாளாகும் உங்கள் பிறந்த நாள்!
இம்மக்கள் மகிழும் நாளாகும் நீங்கள் உதித்த நாள்!

பிறந்தநாளில் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்!

 கவிஞர் ஆதி
9/4C, திருமலை நிவாஸ்
8 ஆவது தெரு
திருமலைப்ரியா நகர்
புதூர், அம்பத்தூர்
சென்னை : 600 053

 

070.

விண்வெளியின் நாயகனே !
விடிவெள்ளியாக மிளிர்ந்தாயே !
வீசும் வெளிச்சத்திலே
படரும் ஒளியாக வந்தாயே !
நவீன காலத்திலும்
நயமாக உம்புகழ் பாடுகிறோம் !
ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் உம்மையே நாடுகிறோம் !
விண்வெளி நாயகனே கனவுகளின் காதலனே !
ஒவ்வொரு ஏவுகணையும்
அயராமல் உம்பெயர் சொல்கிறதே !
உம்மோடு பயணிக்க துடிக்கிறதே !
உங்களை எண்ணும் எங்கள் இதயம் போலவே !
மீண்டுமொரு கலாம் வேண்டும்
மீண்டெழுந்து காலத்தோடு போராட வேண்டும் !
இறந்தும் பிறந்த சாதனை வீரனே !
நீ இன்றியும் உணர்கிறோம்
நினைவில் இருக்கும் உம் பெருமைகளை !
நிதர்சனமான நியாபகங்களாக !

- கவிஞர் கு. ஜனனி,
  நாமக்கல்.

 

071.

கனவு காணுங்கள்...

கண்டது எல்லாம் பொன்னென்று கனவு
காணுங்கள்...

கொண்டது எல்லாம் வரமென்று நினைவில்
வாழுங்கள்...

விஞ்ஞானம் வென்றது விண்ணில் சந்திரனை
தொட்டவுடன்...

மெய்ஞ்ஞானம் பிறந்தது மண்ணில் கணினியை
கண்டவுடன்...

சூரியனை தொட்டுவிட மீண்டும் ஒரு
அவதாரம்...

நெருப்பை அள்ளிவிட தேடும் மற்றொரு
அங்கீகாரம்...

கலாம் கனவு பலித்துக்கொண்டு இருக்கிறது
உலகில்...

காலம் கடந்து ஓடிக்கொண்டு வருகிறது
வாழ்வில்...

-இதயவன்.
நன்மங்களம்

சென்னை.

 

072

கலாம்

ஏவுகணை நாயகனே!
     ஏற்றமிகு  எம்தலைவா!
காவியமாய்  வரலாற்றில்
    கனிந்திட்டாய் கலாமய்யா!

நானென்ன   தரமுடியுமென
    நல்லதொரு இயக்கமதை
ஈனமான ஊழலை
    ஒழிப்பதற்கே தொடங்கிட்டார்.

குடியரசுத்  தலைவரே!
     குடிமக்கள் காவலரே!
நடிக்கவே தெரியாத
    நல்லிதயம் கொண்டவரே!

பேராசிரியப்  பெருந்தகையே!
     கூராகியது இயற்பியலே!
     கூர்த்த நதி கொண்டவரே!

கற்பதிலே ஆர்வம்!
    கனித்தமிழில் வீரம்!
சொற்கோவைத் தங்கமாய்ச்
     சொற்பொழிவும் ஆற்றிடுவார்!

செயற்கைக்கோள் உருவாக்கி
     சிந்தையிலே நின்றவர்.
அயல்நாடும் போற்றிடவே
     அடுக்கடுக்காய் ஏவுகணைகள்!

அக்னியும் பிருத்துவியும்
     அகிலத்தை  ஈர்த்தன.
அக்னிச்  சிறகுகளும்
     மக்களை ஈர்த்தது.

அரிமாவாய் திறங்காட்டிய
     அடலேறே! அப்துல் கலாமே!
உரிமையுடன் வாழ்த்திடுவோம்!
    உலக நாயகன் அப்துல் கலாமை!

முனைவர் கிருட்டிணதிலகா
போரூர்.
சென்னை.

 

073.

அப்துல் கலாமென்ற ஜோதி

வறுமையை சுவீகரித்து வெளி வந்த கால விண்மீனே.
மிதித்த சைக்கிள் வானளக்க அடித்தளமானது.
அக்னிக் குஞ்சொன்றென முண்டாசுக்கவி இயம்பிய
அணையா எரிநட்சத்திரம் நீவீர்.
ஏவுகணை இன்னும் உம் பெயர் தாங்கி எழும்பி நிற்கிறது.
எடுத்த வகுப்பு மாணாக்கர் இன்னும் சுடரொளிகின்றனர்.
அத்தனை பிரமாண்டத்தையும்
இத்தனை எளிதென எண்ணிய
எளிமையின் எளிமையே.
சிரிக்கும் புத்தரின் சின்னச் சோதனையை
ஆபரேஷன் சக்தியென அதிரச் செய்த பொக்ரான்
இன்னமும் கலாமென வியாபித்து நிற்கிறது.
அக்னிசிறகுக்குள் அடைக்கலம் என்ற நீவிர்
அகண்ட உலகம் கைகளில் என
ஆக்க சக்தியாக்க தூண்டுகை இட்டீர்கள் இளைய திரிகளை.
அன்பின் பிம்பம் நீங்களென
தேடி வந்தனர் மழலைச் செல்வங்கள்.
அன்பின் சரணாலயத்தில் தெரித்து

சிதறின மத்தாப்பு புன்னகைகள்.
இனி யாரும் இல்லை என்ற வெற்றிடம்

நிரப்ப மீண்டும் பிறப்பீர்கள்தானே.
கனவு காணச் சொன்னதால் கனவு காண்கிறோம்.
நனவாய் நீவிர் அவதரிப்பீர்.
நீங்கள் கலாம் என்ற ஈற்றின் ஆதி.
அப்துல் கலாமென்ற ஜோதி.

ப. தாணப்பன்
திருநெல்வேலி

           

074.

பாரத தாயின் ஓப்பற்ற தலைமகன்..!

இராமேஸ்வரம் பெற்று  கொடுத்த தமிழ்மகன்
ஆற்றிய சாதனைகளோ தாராளம் அறிவோம்
பெற்ற விருதுகளோ ஏராளம் உண்மை
வகித்த பதவிகளோ கணக்கிலை நாட்டில்
குடியரசு தலைவர் பொருளாதார  நிபுணர்
விஞ்ஞானி தொழில்நுட்ப வல்லுனர்
நல்லாசிரியர் என்று பலவும் அறிவோம்
பல்துறையில் சாதனை புரிந்த மகத்துவர்
எம்மதமும் சம்மதமாய் வாழ்ந்த சமத்துவர்
பாரதத்தை உழைப்பால் உயர்த்திய உத்தமர்
அறிவியல் கவிதை எழுத்து பேச்சு
அனைத்து துறையிலும் சாதித்த வித்தகர்
ஒற்றுமை  ஒலித்திட்ட ஒப்பிலா  தலைவர்
வேற்றுமை வேரறுத்த வேந்தர் இவரென்பர்
அச்சத்தை துச்சமாக்கி உச்சம் தொட்டவர்
தனது நாட்டுக்காய் தன்வாழ்வை அற்பணித்தார்
நாடி நரம்பெல்லாம் தேசப் பற்று
உடல் முழுதும் அறிவு ஊற்று
அலறச் செய்தார் அந்நியரை அணு ஆயுதத்தால்
பன்முக மன்னனிவன் ஏவுகணை நாயகன்
காலத்தை வென்றவர் ஞாலத்தை அசத்தியவர்
பாலத்தால் கவிபாலத்தால் பாரில் புகழ்பெற்றார்  
நாட்டை. வல்லரசாக்க கனவு கண்டார்
ஆசிரிய பணியை அதிகம் விரும்பினார்
விருதுகளால் கிடைத்ததா உனக்கு பெருமை
விருதுகள் உன்னை அடைந்ததால் பெற்றதா பெருமை

அரங்கநாயகி கண்ணன்
தருமபுரி

 

075.

கலாமுக்கு சலாம்...

எளிய உருவம் தாங்கி எடுத்துக்காட்டாய் விளங்கியவரே !

ஏவுகணையின் தந்தைக்கு தகுந்தவரே !

அக்னி சிறகின் ஆசிரியராய் திகழ்ந்தவரே !

அறிவியல் ஞானம்  ஏந்தி எண்ணற்ற பெருமைக்கு உரியவரே !

மக்கள் நலன் கருதியாய் வாழ்ந்த மாமனிதரே !

அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட அன்பு உருவ ஜீவரே !

இளைஞர் அணியை திரட்டி நின்றவரே !

எதிர்கால சின்னம் இளைய தலைமுறை என்றவரே !

பதவியில் இருந்த போதும் பணிவுடன் நடந்தவரே !

கிராமப்புற நலன் கருதியாய் பூமியில் அவதரித்தவரே !

மாணவர்களின் மனதைக் கவர்ந்து  வாழ்ந்து கொண்டிருப்பவரே !


- கவிஞர் முனைவர்

 சை.சபிதா பானு,

 காரைக்குடி

 

076.

உந்துசக்தி நாயகன்...!

கனவு காணுங்கள் என்ற மந்திரத்தால்
இளைஞர்களின் எதிர்காலத்தை உள்ளத்தில் கொண்டு
இயங்கு சக்தியாய் இருந்து இந்தியாவின்
வளர்ச்சிக்கு உந்து சக்தியாய் அமைந்தவர்

அணுகுண்டு வெடிப்புக்கு அடித்தளம் இட்டு
அகிலம் போற்றும் பணியை சப்தமின்றி செய்து
இந்தியாவின் முதல் குடிமகனாய் அமர்ந்து
இந்தியர்களின் மனம் எல்லாம் நிறைந்தவர்

வாழும் காலம் வரையிலும் வாசிக்கவும்
 வாசித்ததை போதிக்கவும் எண்ணம் கொண்டு
 தள்ளாத வயதிலும் தனியாக ஆர்வம்கொண்டு
 தான் பெற்ற கல்வியை அனைவருக்கும் அளித்தவர்

விண்வெளிக்கு மட்டுமான கார்பன் உலோகத்தை
செயற்கை காலுக்கு பயன்படுத்தி பல்லாயிரம்
குழந்தைகள் எளிதில் நடப்பதற்கு காரணமானவர்

நீர்வழிச் சாலைகள் என்னும் அற்புதத் திட்டம்
அன்னை பாரதத்தின் வளமைக்கு வட்டம்
 நீர்மேலாண்மை எனும் மையக்கருத்தோடு சூழல்பாதுகாப்பை
 சீர்படுத்தும் மகத்தான திட்டம் தந்தவர்

உங்கள் வழிநடந்தால் சாதாரண

மனிதனும் சாதனையாளன் ஆகலாம்


ப. பாக்கியராஜ்
பாரத மிகுமின் நிறுவனம்
திருச்சி.

 

077.

கலாமின் கல்வி அறிவுரை

கலாமின் கல்வி அறிவுரை நம்
வாழ்க்கையை அழகாகவும் ஆனந்தமாகவும் மாற்றும்//
மாணவர்கள் கஷ்டம் வரும்போது
கண்ணை மூடிக்கொள்ளக்கூடாது.
கண்ணை திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்
என்றும்//
மாணவர்களின் இலட்சியத்திற்காக
ஒரு முறை வந்தால் கனவு
இரு முறை வந்தால் ஆசை
பல முறை வந்தால் இலட்சியம்
என்றும்//
கைரேகையை மட்டும் பார்த்து
எதிர்காலத்தை தீர்மானிக்காதே
ஏனெனில்,
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு
என்று
மூடநம்பிக்கையை நம்ப வேண்டாம்
என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்//
மாணவர்களின் கல்வி முறையும்
சிந்தனை முறையும் எப்படி
இருக்க வேண்டும் என்று
அழகாக எடுத்துரைத்தார்//
இதுபோல் பல அறிவுரை
கேட்க நாங்கள்
காத்திருக்கிறோம்
எப்போது மீண்டும் பிறந்து வருவாய்...
ஏவுகணை நாயகனே!

ஜீ. தேன்மொழி
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி
திருச்சி - 22

 

078.

கலாம் என்னும் புத்தகம்

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும்
ஓர் அற்புத புத்தகமே !
பல புத்தகங்களைப் பார்க்கலாம்
சிலவற்றைப் படிக்கலாம்
ஏதேனும் ஒரு சில  புத்தகங்களை
 மட்டுமே பின்பற்றலாம் அவற்றுள் ,
 பார்க்க, படிக்க, பின்பற்றத்தக்க
 ஒரு நூல் கலாம் என்னும் புத்தகம்
 
ஆம்! அவரின் சட்டை முதல் அட்டை வரை
அவர் வாழ்வோ வாடை நிலம்
நிலமோ கோடை வாஸ்தலம்
படிப்பு எட்டு(ந்)தூரம்
பறவையாய் பறக்க ஆசை
ஆசான் பார்த்தார் பறக்கவிட்டார்
சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு
தூண்டுகோல் கிடைத்தது
 துவளாத மனதிற்கு...

திருச்சி ,சென்னை, டெல்லியென  சிறகடித்தார்
தான் கண்ட கனவை உலகம் காண
 அணுகுண்டாய் வெடிக்க வைத்தார்
 பார் போற்ற பக்குவப்பட்டார்
 ஏவுகணை நாயகன் அமைதியாய்......

 தேடி வந்தது பதவி
 இயற்கை சூழ இந்தியாவை
 வல்லரசாக மாற்ற வேண்டுமென
 கனவு கண்டவர் காண சொன்னவர்
 எத்தனை பணிகள் வந்தாலும்
 ஆசிரியர் பணி மீது அளவு கடந்த அன்பு கொண்டது
 கலாம் என்னும் நூல் .

 எல்லோரும் இருக்கையில் திருடி விட்டான் எமன்
யாருக்கும் தெரியாமல்  பரவாயில்லை. அவனுக்கு
 பாவமன்னிப்பு கொடுப்போம் இறைவா!.......
கற்ற பாடம் மறந்து விடுமா என்ன?
 நம் மனதில் ஆணி அடித்தாற் போல் தழும்பாய் உள்ளது
 கலாம் என்னும் நூல்

 எல்லோரும் வாசிப்போம் நேசிப்போம் சுவாசிப்போம்
 பேய்க்கரும்பு சென்று......


முனைவர் ஆ.சுதாகர் ,
முதுகலைத் தமிழாசிரியர்,
 ஸ்ரீ வித்யா கிரி பதின்ம மேல்நிலைப்பள்ளி ,
புதுவயல்- 630108
 சிவகங்கை மாவட்டம்.

 

079.

மக்கள் மனதில் என்றும் வாழும் அப்துல் கலாம்!

உன்னை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கையில் வளரலாம்!
உங்கள் படைப்பு அக்கினிச் சிறகுகள்!
அதுதான் உங்கள் அழியா நினைவுகள்!
உங்களைப் போல் மாறவேண்டும் என்பது என் கனவு!
அது என்றும் அழியாத உன் சாதனையின் நினைவு!
கனவு காணுங்கள் என்று உரைத்தீர்!
ஆனால் நீங்களே இன்று மறைந்தீர்!
உன்னை நினைக்கும் மக்கள் கோடானகோடி!
நாங்கள் என்றும் வருவோம் உன்வழி நாடி!
அழியாமல் இருக்கும் உன் சாதனை!
நீ இல்லை என்பது எனக்கு வேதனை!
நாங்கள் அனைவரும் கேட்கிறோம் உன்னை!
மீண்டும் நீ பிறக்க வேண்டும் இந்தியக் குடிமகனாக......!

- சுமித்ரா.சா
வேதியியல் பிரிவு முதலாம் ஆண்டு

போடூர் கிராமம்

பென்னாகரம்,(தருமபுரி)

 

080.

தவப்புதல்வன் அப்துல் கலாம்

இராமேஸ்வரம் ஈன்றெடுத்த பெரும் முத்தே...!

 இந்திய நாட்டின் மாபெரும் சொத்தே...!

ஏழையாய் பிறந்தாலும் ஏணியாய் உயர்ந்தவனே....!

உருவமோ எளிமை இலட்சியமோ இமயம்...!

எட்ட முடியாத சாதனைகளை எட்டி...!

வாழ்வில் சாதித்து காட்டிய சகாப்தமே...!

மாணவர்களின் பிரியனே ஏவுகணை நாயகனே...!

இளைஞர்களுக்கு மறுமலர்ச்சியாம்

உனது பேச்சுக்கணைகள்...!

மதங்களைக் கடந்துநின்ற மக்களின் முதல்வனே...!

உலகத் தலைவர்களில் உன்னதத் தலைவனே...!

விண்ணுலகையும் மண்ணுலகையும்

ஆய்ந்திட்ட அவதாரமே...!

அக்னி சிறகுகளைத் தந்த பொக்கிஷமே....!

அணுசக்தியின் ஆரம்ப வித்தகத் தவப்புதல்வனே...!

ஞாலமும் கலாமிற்கு சலாம் அடிக்கும்...!

உன் கனவும் நினைவாகும் வெகுவிரைவில்...!

இல்லறம் துறந்து நல்லறம் தந்தவனே...!

காலமும் கொண்டாடும் அறிவியல்  மாமேதையே...!

இந்தியாவை வல்லரசாக்கிட வழிகாட்டிய பிதமகனே...!

புன்னகைத்த பூமுகம் இன்று நிழற்படமாய்...!

நடந்த வழி எனக்கு பாடமாய்....!

தமிழ் மண்ணில் நீ புதைக்கப்படவில்லை...!

 தமிழர்கள் ஒவ்வொரு மனதிலும் விதைக்கப்பட்டுள்ளாய்....!!!


திருமதி. க.பிரியா,

உதவிப் பேராசிரியர்,

நிர்மலா மகளிர் கல்லூரி,

கோயம்புத்தூர்

 

081

டாக்டர் ‌ அப்துல் கலாம் ......

ராமேஸ்வரத்தில் பிறந்த எங்கள் ரத்தினமோ 1//

அணுகுண்டு சோதனை செய்த சாதனை 2//

பாரத ரத்னா விருது நாயகரோ 3//

எங்கள் பயணத்தின் வழிகாட்டி நீ 4//

அக்னி சிறகு எளிய மனிதரோ 5//

இந்தியா குடியரசுத் தலைவரானார் நீ 6//

குடிமக்களின் அன்பு தலைவரானார் நீ 7//

அறிவியல் தந்தையே அன்பு விந்தையே 8//

பார் போற்றும் எங்கள் பண்பாளரோ 9//

மாணவர் எழுச்சி நாயகன் நீ 10//

கனவு காணுங்கள் என்று சொன்னீரோ 11/

இந்தியா வல்லரசாக மற்ற நினைத்தரோ 12//

சோதனைகள் கடந்து சாதனை வென்றவர் 13//

மழலை குரல் உன் பேச்சாகும் 14//

இந்தியா உந்தன் உயிர் மூச்சாகும் 15//

போற்றி படிக்கிறேன் உம் பாதம் 16//

 

-மா.சந்திர சேகரன், ‌

வையக்கவுடண்பட்டி,

தென்காசி மாவட்டம்.

 

082.

கலாம் நாயகன்

மாணவர் உள்ளம் கவர் மன்னர்/
பேணிடும் பண்பினில் உயர் வேந்தர்/
தேனீயின் உழைப்பெனவே வாழந்த மனிதர்/
நானிலமே பின்பற்றும் நயத்தகு புனிதர்/
எளிமையில் நிறைவைக் கண்ட எழிலாளர்/
வலிமையான தேசத்திற்கு வழியமைத்த வித்தகர்/
தொழில்நுட்பத்தில் முன்னணியாய்

அறிவியலைக் கைகொண்டு/
ஏவுகணை கண்டறிந்து இமயம் கொண்டவர்/
பழகுவதில் குழந்தையாய் பண்பிலே உயர்ந்தவராய்/
வாசிப்பதில் தீவிரமாய் செயலில் சிறப்பாய்/
கல்வியின் கைகொண்டு கவனம் குவித்தவர்/
பதவிகள் உயர்ந்தாலும் குணத்தில் மாறாமல்/
பாரினில் சிறப்புற பாரதத்தை உயர்த்தியவர்/
வானை அளந்திடவும் நிலவை அறிந்திடவும்/
மாணவர் உள்ளத்தில் கல்வியை நிலைநிறுத்தியவர்/
மனிதரில் புனிதராம் ஏவுகணை நாயகனை/
மனதினில் விரித்து வாழ்வில் சிறப்போம்.


      -  இளையவன் சிவா,
        நரசிங்காபுரம்.

 

083.

எங்கள் கலாம் ஐயா

தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினர்

பள்ளி முதலவர்
பெரு முயற்சியால்

நேரில் பார்க்க மாணவர்
கூட்டம்

ஆசானை வரவேற்க ஆசிரியர் பெருந்திரள்

சாதனை விஞ்ஞானி
சாமானிய மக்களோடு

நேரில் வந்தார்
கைகுலுக்கி வாழ்த்தினார்

மேடையில் முழுக்கம்
அருமையான உரை

மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

வினாவும் விடையும்
சிறந்த பரிமாற்றம்

தொலைநோக்கு பார்வையை அருகில் கண்டோம்

பெரிய மாமனிதர்
எளிமையாய் காட்சியளித்தார்

வாழ்வில்  நற்பேறு
கலாம்ஐயாவை கண்ணுற்றது

 எம்கனவில் இன்றும்
உயிர்ப்புடன் வாழ்கிறார்...

ச.குமார்
 உதவிப்பேராசிரியர்,
தமிழ்த் துறை,

இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி.
இராஜபாளையம்.

 

084

களம் பல கண்ட கலாம்

கனவு கொண்டவரே... கற்பனை செய்தவரே

வார்த்தை வலிமையோடு வாழ்க்கை எளிமையோடு

திருமகன் தமிழகத்திலே திருநாட்டின் குடிமகனே

எழுதிய எழுத்து எண்ணற்றவர்களுக்கு தலையெழுத்து

உருவாக்கிவரே ஏவுகணைகளோடு

உழைத்தவரே சிந்தனையோடு

இளைஞர்களுக்கு ஊக்கத்தோடு

ஆலோசனை கொடுத்தவரே

இதயம் துடிக்க புண்ணியம் பெற்றவரே

விண்ணுலகத்தில் நடக்கும் நிகழ்வு காட்டியவரே

இந்திய விஞ்ஞானத்திற்கு அடித்தளமாக இருந்தவரே

விழியின் இமையோடு பார்க்க வைத்தவரே

அக்னி சிறகுகள் எழுதிய காகிதமே

அறிவு பெறுவதற்கு புத்தகமே ஆயுதமே

சம்பவமாக வாழாமல் சரித்திரமாக வாழ்தவரே

கவிஞர் சுஜி மாதேஸ்

பெரியபுளியம்பட்டி

 

085.

 கலாம்

 இளம் பிள்ளைகளை இதயத்தில் தாங்கி

 மூத்த குடிமகனாய் முன் உதாரணமாய்

 வழிகாட்டி வாழ்ந்த வான்வெளி வித்தகர்

 குழந்தைகள்சிந்திக்கவும்,குடும்பத்தைநேசிக்கவும்

 வழிகாட்டியதந்தையாய் வள்ளுவரின் திருக்குறளை

 எங்கும் ஒளித்து ஏற்றம் பெற செய்து

 செல்லும் இடங்களில் செல்ல குழந்தைகளிடம்

 கேள்விகள் கேட்டு கேடயமாய் பதிலளித்தவர்

 பூமியின் முதல் புதுமையான விஞ்ஞானி

 இளம் குழந்தைகளிடம் இனிமையாய் கேட்க

 கடவுள் என கண்ணிமைக்கும் நேரத்தில்

 பதிலாக வந்து பத்து மதிப்பெண் பெற்றார்

 அடுத்த மாணவனும் அழகாக எழுந்து

 குழந்தையே விஞ்ஞானி கூறிய மாணவனுக்கு

 நூறு மதிப்பெண்களை
 நுண்ணறிவுக்கு கொடுத்தவர்

 எந்தப் பகுதி பிள்ளைகளையும் எளிதில்

 நெருங்கி பயிற்சிகள் கொடுத்த பகலவன்

 இளைய தலைமுறையின் மாபெரும் கதாநாயகன்

 கலாம் என்பதே காலத்தின் வரலாறு

 மாணவர்களிடம் மின்சாரம் பாய்ந்தது போல்

 உற்சாகத்தை கொடுத்தவர்
 உயரிய வழிகாட்டிய

அப்துல் கலாம் அவர்களே ஆகையால்

அவர் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி
 நாளாக இதயத்தால் ஏற்றுக்கொண்டு

 உள்ளம் மகிழ்ந்து

 உறுதுணையாய் போற்றுகின்றோம்


- இரா. வாசுகி பொன்னரசு,

அரசுப் பள்ளி ஆசிரியர்
 கள்ளக்குறிச்சி

 

086.

அப்துல் கலாம் உங்களுக்கு சலாம்.

விண்ணிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கின்றீர் இந்தியாவை ...

நான் மறக்காமல் கடமையை ஆற்றுகின்றீர்கள் ...

எங்கு இருந்தால் என்ன நான் ...

உங்களுடன் இருப்பது உங்களுக்கு தெரியாதா?

நிலவின் தென் பகுதியில் நான் இருக்கிறேன் ...

இஸ்ரோ என்னை கண்டுபிடித்து அனுப்பியது ...

உலக நாடுகளில் வல்லரசு ஆகியது ...

பூமிக்குள் இருக்கும் இந்திய நாடு ...

ஏளனம் பேசுபவர்கள் முடங்கி உள்ளனர் ...

இந்தியாவின் பெருமையை பேச மறுக்கின்றனர் ...

என் மாணவ கண்மணிகளின் ஒவ்வொரிடத்தும் ...

மறைந்தாலும் அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறேன் ...

இனி நிலவின் தென்துருவம் எனது வசம் ...

கண்மணிகளே மறவாதீர் அறிவியல் ஆக்கத்திற்கே...

உங்களின் நினைவு நானாகிப் போனேன் ...

என் நினைவெல்லாம் நீங்களாகிப் போனீர்கள் ...

வாருங்கள் நிலவினை பூமிக்கு நிகராக மாற்றுவோம் ...

என்றும் உங்களுடனே இருக்கும் கலாம்.

- பொ.ச.மகாலட்சுமி,
  தலைமையாசிரியர்,
  கோவை.

 

087.

சரித்திர நாயகன்

கனவு காணுங்கள் நினைவில் வாழ! என்று//
கற்றுக் கொடுத்தவர் ஏபிஜே அப்துல் கலாம்//
வறுமையில் பிறந்தாலும் கல்வியோடு வாழ்ந்தவர்//
பரிசாக பெற்ற புத்தகம்! ஊருக்கு
பணமாக மாறியதை எண்ணி கண்கலங்கினார்//
நாளை விண்ணில் பறப்போம் என்று!.... தெரியாமல்//

விடா முயற்சியும் தொடர் பயிற்சியும்
இந்தியாவின் 11 வது குடிமகனாகியது//
உலகமே! வியந்த இந்தியன்!
தமிழ்நாட்டின் அக்னி நாயகன்//

ஆடம்பர வாழ்க்கை இல்லை
இளைய சமுதாயத்தின் மீது நம்பிக்கை
திருக்குறள் திருக்குர்ஆன் மீது பற்று கொண்டவர்//

மாணவரிடம் உரையாற்றி
கேள்வி மழைகளை பொழிந்தார்//
இந்தியாவின் எதிரி என்ற கேள்விக்கு
வறுமையும் வேலையின்மையே-என்ற
பதில் அவர் நெஞ்சை உலுக்கியது//
இலகுவான செயற்கை கால்களை உருவாக்கி
போலியாவால் பாதித்த குழந்தைகளை நடக்க வைத்தார்//
எஸ்எல்வி-3 விண்கலத்தை விண்ணில்
பறக்க விட்டு வெற்றி பெற்ற மாமனிதர்
எங்கள் ஏ பி ஜே அப்துல் கலாம்//


- கவிஞர் முனைவர்
தே. செந்தமிழ்ச்செல்வன்
79/66 திருவள்ளுவர் நகர்
பண்ருட்டி தாலுக்கா
கடலூர் மாவட்டம்.

 

088.

ஏவுகணை நாயகன்...

 

இராமேஸ்வரத்தின் புதல்வன்!

 

கடின உழைப்பும் பல்நோக்கு சிந்தனையும்!

சைவ உணவும் மண்ணெண்ணெய் ஒளியில் படிப்பும்!

தோல்விக்கு அஞ்சாமல் வெற்றியை நிலைநாட்டியவர்!

இறுதி ஊர்வலத்தில் ஏராளமான நட்சத்திரங்கள்!

எளிமை தோற்றமும் ஆன்மிக ஈடுபாடும்!

அற்புதமான பேச்சாளர் செய்தித்தாளில் தொடக்கம்!

காந்திய கொள்கையும் பணிவான நடத்தையும்!

தன்னடக்கமும் கறை படாத நேர்மையும்!

இசை ஞானமும் கீர்த்தனைகளிலும் ஆர்வம் மிக்கவர்!

நன்றி மறவாமையும் நகைச்சுவை மிக்கவரும்!

வெகுளித்தனமும் குழந்தைத்தனமான சிரிப்பும்!

மூச்சும் நின்றது ஊக்குவிப்பும் நின்றது

எதிர்கால சந்ததியினர்க்கு!


மா.ராதா ஆசிரியர்
தருமபுரி மாவட்டம்.

 

089.

சாதனை நாயகன்...

சாதாரண குடும்பத்தில் பிறந்து ,!
 சாதனை நாயகனாய் உயர்ந்து!
இராமேஸ்வரத்தை, இராஜ்யங்களுக்கு

எல்லாம் உயர்த்தி காட்டியவர் !

இரகசியமாய் அணு ஆயுத சோதனை வெற்றியும் கண்டவர்!

 பள்ளி பருவத்திலே செய்தித்தாள் விநியோகம்!
 பாரே,போற்ற, செய்தித்தாளில்

உம்பெயர் வந்தது உம்அறிவுவியூகம்!
ஏழ்மை குடும்பத்தில் பிறந்தது

ராமேஸ்வரத்தில்! ஏற்றமிகு ஜனாதிபதியாய் உயர்ந்தது
இந்திய வரலாற்றில்!

ஆசிரியப் பணியிலும் ஆச்சரியப்பட வைத்தது!

அரும்பணியை அன்பு மாணவர்களுக்கு அளித்தது !

  எல்லா மதத்தவரிடமும் பாசம்நேசம்காட்டும் பண்பாளர் !
  ஏற்றிய மெழுகுவர்த்தியில் ஒளிவிடும் குத்துவிளக்கில்!
  ஏற்றியவரால் விளக்கம் சொன்னவர்!

 மாணவர்களிடத்தில் எழுச்சியூட்டியவர்!

நண்பர்களே,, உறங்கும்போது வருவது அல்ல கனவு !!
 நம்மை உறங்கவிடாமல் வருவது கனவு!
 
  என்அழுகையில் என் தாய் சிரித்த நாள் ,
  என் பிறந்தநாள் !
  என்ற வார்த்தையால் உலகையே!!

தாயைத் திரும்பி பார்க்க வைத்தவர் !!

தோரியம்  ப்ளூட்டோனியம் கொண்டு!
  தோற்றுப்போகாத பொக்ரான் அணுஆயுதம் சாதனைகண்டு!
   ஐநா உறுப்பு நாடுகள் விதித்ததடைகளை தாண்டி !
  ஐக்கிய நாடுகளே! வியக்க அணுகுண்டு சோதனை காட்டினீர்!

இந்த நாட்டிற்கு வேண்டி!
   ஆய்த தடைகளை மீறி, அன்னை இந்திரா காந்தி தொட்டு!
  அடல்பிகாரிவாஜ்பாய், நரசிம்ம ராவ்போன்ற பிரதமர்கள் தொட்டு,

   ரகசியமாய் ,ரஷ்ய அமெரிக்க வியக்க!
   ராட்சச பொக்ரான்அணுஆய்த சோதனை,

சாதனையாய், விண்ணில் பறக்க!

  அப்துல்கலாம் என்ற உயரம் குறைந்தவர்!

அகிலமே பாராட்ட உலக அணு ஆயுத வானில்உயர்ந்தவர் !

   இயற்கையை நேசித்தவர்!

மரக்கன்றுகளை ஊன்ற வழி வகுத்தவர்!
ஊன முற்றோர்களுக்காக எடை குறைந்தமாற்று கால்கண்டுபிடித்தவர்!உலகேவியக்க!

   இறுதிவரை இல்லற வாழ்வை துறந்தவர்!
 இறுதி மூச்சை கூட இனிய மேடையிலே துறந்தவர் !!

  நாற்பதுபல்கலை கழகங்களில் சிறப்புபட்டம் பெற்றவர் !
பாரத ரத்னா, பத்ம பூசன் இன்னும் பல விருதுகளை பெற்றவர்!

   உம்பிறந்தநாளை, ஐக்கிய நாடுகள் ,

உலக மாணவர்கள் தினமாக கொண்டாட வைத்த சாதனையாளரே!!

 உம் பிறப்பு ஒரு சம்பவம், ஆனாலும் !
உம்  இறப்புஒரு சாதனையாய்,
 இன்னும் ஜொலிக்கிறது!!

- கவிதை மாணிக்கம் ,
சங்கு பட்டி,

திருவேங்கடம் அஞ்சல் தாலுகா !
தென்காசி மாவட்டம்.

 

090.

ஏவுகணை நாயகனே!....

அக்னிச் சிறகில் உயர்ந்து பறந்தவரே!....

இராமேஸ்வரத்தின் முத்தே!......

தேச மக்களின் சொத்தே!....

எளிமையின் சிகரமே!....

ஈடில்லா பெருமையின் சொந்தக்காரரே!......

ஏழையாய் பிறந்தவனே!.....

களத்தில் சி றந்தவனே!....

விண்வெளியின் நாயகனே!.....

தாயகம் போற்றுபவனே!....

மண்ணின் மைந்தனே!.....

குடியரசை ஆண்டவனே!....

வீசும் காற்றும் உன் புகழை பேசும் சிறப்பு உடையவனே!....

உள்ளத்தினை உளியாக கொண்டு

செதுக்குகிறது உன் பொன்மொழியினை!...

உள்ளம் ஒன்று தான் அதில் உன் பெயரே ஒலிக்கிறது!....

கனவு காணுங்கள் என்று உரைத்த

இளைஞர்களின் கனவு நாயகனே!....

இதயத்தில் சிம்மாசனம் பிடித்து நீங்க இடம் பெற்றவரே!.....

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்

ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்

என்று சொன்னது மட்டுமல்லாமல்

சாதித்துக் காட்டிய சகாப்தமே!.....

ஏவுகணை நாயகனே ஏங்குகிறோம்

மீண்டும் ஒரு முறை இம்மண்ணில் பிறந்த வர!......

உமது புகழை போன்ற என் கவிதை வரிகள் கிடைக்கவில்லை!....

இது இந்திய தலைமகன் கலாம் ஐயாவின் பெருமை!.....

-கா.கீர்த்தனா

கூத்தன் காட்டு வளவு,          

அமரகுந்தி.

 

091

மனிதருள் மனிதராய் கலாம்...

அர்த்தமற்ற பேச்சுகள் தவிர்த்து

அலை அலையாய் வந்த தடைகள் உடைத்து

 அயராது அண்டத்தை ஆராய்ந்தவர் நீங்கள் ...

ஆயிரம் சோதனைகள் வந்த போதும்
 ஆருடம் பார்த்துக் கொண்டிராமல்
 ஆறு போல் ஓடிக்கொண்டிருந்தவர் நீங்கள் ...

 இழிசொல்லும் பழி சொல்லும்
 இன்னபிற இடைஞ்சல்களும்

இம்சைகள் தந்தாலும் இறுக்கமாக
இருக்கத் துணிந்து  சாதனை படைத்தவர்  நீங்கள் ...

ஈயம் போல் இருந்த இளைஞர்களின் இதயத்தில்
ஈகை மனத்தின் ஈர்ப்பு விசையால் நுழைந்து
அவர்களின் அறிவுக் கூர்மையை
 ஈட்டி போல் தீட்டியவர் நீங்கள்...

 உண்மைகளை உரக்கச் சொன்ன போதும்
 உய்த்து உய்த்துணர வைத்தபோதும் 

உழைத்து உழைத்து களைத்துப் போகாதவர் நீங்கள்...

 ஊண் உறக்கமின்றி தன்னலம் இல்லாமல்

ஊக்கத்துடன் தேசத்திற்காக உழைத்து

ஊடகங்களின் எதிர்மறை கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல்
 ஊர்வலமாய் வெற்றிகளை உலாவ விட்டவர் நீங்கள்...

 எதார்த்தமான எளிய மனிதர்  நீங்கள் ...

ஏணியாய் மாறி இளைஞர்களை முன்னேற்றியவர்  நீங்கள் ...

 ஐயத்தை புறந்தள்ளி நம்பிக்கை கொடுத்தவர் நீங்கள்...

 ஒற்றுமையாக மத நல்லிணக்க  உணர்வோடு
 மக்கள் இருக்க வேண்டும் என விரும்பிய மாமனிதர்  நீங்கள் ...

 ஓவியம் போல் தன் வாழ்வைத்தானே தீட்டியவர்  நீங்கள்...

 ஔவியம் அணு அளவும் இல்லாத அற்புத மனிதர் நீங்கள் ...

 இந்தியா  ஈன்ற அணுமகன் நீங்கள் ...

 விதைகளைத் தூவி இருக்கிறீர்கள்...

  முளைத்துக் கொண்டிருக்கிறது மெதுவாய் ...

 பார்த்துக் கொண்டிருங்கள் நீங்கள் ...

அத்தனையும் விருட்சமாய்
 ஓங்கி வளர துடித்துக் கொண்டிருக்கிறது ...

 உங்களின் கனவை நினைவாக்க ...


 எழுத்தாளர். ஆ.சுதா ,

 அம்பாசமுத்திரம் .

 

092.

அப்துல் கலாம் ஐயாவிற்கு ஒரு கவிதை தொகுப்பு

 பேக்கரும்பு பெற்ற பிள்ளை போர்  அணுவையும் தொலைத்து பேர்  பெற்றவரே

 வாழும் அறிவியல் துறையின் வித்தகரே

 கடமையை நமக்கு கண் என்று உரைத்தவரே

 ராஷ்டிரபதி பவனில் மலரும் பாடும் இவர் புகழ் கண்டு

 மூத்த குடிமகனாக முத்தாக பணிபுரிந்தவரே

 அறிவினை செதுக்கும் ஒளியாக இருந்தவரே

 ஞானம் வளர்க்கும் மொழியாக இருந்தவரே


 கனவே நினைவாக்கு என்ற இளைஞர்களின் எழுச்சியில் நின்றவரே

 செய்தித்தாள் விற்பனையில் சேதி சொல்ல வந்தவரே

 ஏவுகணை நாயகன் என்று உலகம் முழுவதும் பெயர் பெற்றவரே

 காணும் கனவுக்கு
 உயிர் கொடுத்த வல்லுனரே

 அன்னை தமிழ்நாட்டின் கலங்கரை விளக்கமே

 மகான் வடிவமாகி மக்கள் மனதில் தெய்வமானவரே

 வாழும் அறிவியல் துறையின் வித்தகரே

 சிற்பச் சிலையாக நிற்கும் பாரத கலாம் ஐயாவே

 ஆயிரம் சிறகுகளின் களஞ்சியம் நீரே

 அணு ஏவுகணையின் அன்னையும் நீரே

 அணு ஆராய்ச்சியின் அற்புதமும் நீரே

 ஏவுகணையின் நாயகனே ஏங்குகிறோம் மீண்டும் நீங்கள் பிறந்து வர

 கனவு காணுங்கள் என்று கூறிய கதாநாயகனே

 அறிவினை செதுக்கும் உரியாய்  இருந்தவரே

 விழித்திருக்கும் போது கனவு காண்பேன்

 இரண்டு  கண்களும் நீங்கள் தான் ஐயா

 இதயம் கலங்கி விட்டதே ஐயா உங்களின் பிரிவை நினைத்து

-  டாக்டர் ப்ரீ டா

 தூத்துக்குடி.

 

093.

ஏவுகணை  நாயகன்

ஏழ்மையில் பிறந்து
ஏணியாய் உயர்ந்தவர்
தாழ்மையின மக்களோடு
தயவு கூர்ந்தவர்

இராமேஸ்வரத்தின் முத்தாய்
இளைஞர்களின் சொத்தாய்
பாரதத்தை உலகம்
பார்த்திட வைத்தவர்

ஏவுகணை  நாயகன்
ஏற்றத்தின் எழிலரசன்
தாவும் தன்னம்பிக்கையை
தனித்துவமாய்க் கொடுத்தவர்

எழுத்துத் துறையிலும்
எழுச்சி கண்டவர்
தழுவிய மொழியோடு
தரணியை வென்றவர்

சிறந்த விஞ்ஞானியும்
தலைவரும் ஆவார்
முன்னால் குடியரசுத் தலைவர் கலாமே

பத்ம பூசனம் விருது
பெற்றவர்
இந்தியாவை அணு
ஆயுத வல்லரசாக்கினார்

இல்லறம் துறந்த மாமுனி நீயே
மங்காது மாண்போடு உன் புகழ்

அனைத்து மனங்களைம்
அழகாய்க் கவர்ந்தவன்
அகிலமுன்னை யெப்போதும் போற்றுமே

தமிழ்நதி கிருஷ் அபி

இலங்கை

 

094.

தமிழகத்தின் ஏவுகணை நாயகனே

அக்னி சிறகில் உயர பறந்தவரே

கனவு காணச் சொன்ன இளைஞர் நாயகனே

எட்ட முடியாத சாதனைகள் புரிந்து

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தவரே

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்

ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்

என்று சொன்னதோடு அதனை சாதித்துக் காட்டிய சகாப்தமே

அறிவாற்றலால் அறிவியல் ஆற்றலை

உலகறிய செய்த அதிசயமே

கனவு காணலாம் !பறக்கலாம்! ஜெயிக்கலாம்!

சாதிக்கலாம்!  என்ற சக்தியை எங்களுக்கு 

கொடுத்த எங்கள் அன்பு நாயகனே

உங்கள் காலம் மறைந்தாலும் என்றென்றும் 

உங்கள் சாதனைகள்  பறக்கிறது அதோ நிலவில்

உலகம் உறங்கும் போது உங்கள்

சாதனைகள் விழித்திருக்கிறது

எட்டுத்திக்கும் பரவட்டும் உங்கள் புகழ்.

உலகம் அனைத்தும் வியந்து பார்க்க வைத்த

இந்த மண்ணின் மைந்தனே!

நீர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும்

மானுடர் மனதில் வாழும் மகத்துவம்.

- முனைவர்.வீ .நதியா
உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி

ஈரோடு.

 

095.

கலாம் கவிதைகள்
ஏவுகணை நாயகனே எமைவிட்டு ஏன்/
சென்றாய்! காவுவாங்க ஆளில்லா காரணத்தால்/
காலன் உனை அங்கு அழைத்தானோ?
கண்ணீர் விடுகின்றோம் நான்கு கிலோவாக/
இருந்த மரக்காளை நானூறு கிராமாக/
மாற்றி உடல் ஊனமுற்றவருக்கு உதவினாயே!
மண்ணில் இருப்போருக்கு பணி செய்தது/
போதும் என்று காலன் அழைத்தானோ?
விண்ணோருக்கு உதவிடவே. விரைந்து சென்றாயோ/
ராக்கெட் மூலம் அணுகுண்டை மட்டுமல்ல/
மல்லிகை பூவையும் அனுப்பலாம்னு சொன்னாரே/
எளிமையின் சிங்காரமாய் சிகரமாய் வாழ்ந்தவரே/
உன்தலை முடி வெள்ளை உன்/
சட்டையோ நீலம் நீயே வான்புகழ்/
தூங்கும் போது வருவது கனவல்ல/
தூங்காமல் காண்பதே கனவு என்றாய்/
பெட்டியுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றாய்/
வெளி வரும் போது அதே பெட்டியுடன்/
உலகத்தில் சிறந்த ஜனாதிபதி நீர்தான்/
ஆற்றல் நாயகனே சிம்ம சொப்பனமாக/
அறிவியல், அறிவு, அறிவியல், எழுத்து/
செயல் என பன்முக ஆற்றல் நாயகனே/
விண்ணை அளக்கலாம் மண்ணை அறிவியல்குள்/
அளக்கலாம் மரத்தை நட்டால் சுவாசம்/
பெறலாம் என்று கூறிய உத்தமனே/

கவிஞர் கீதாதயாளன் 

கோவை.

 

096.

என் கனவு நாயகன்..

காலங்கள் மாறினாலும் கனவுகள் மாறாது

விண்வெளியில் வெற்றி சூடிய நாயகனே

இளைஞரின் இதயத்துடிப்பை அறிந்த அறிஞரே

எதிர்காலத்தை எதிர் நின்று போரிடும் மன்னனே

உலக செழிப்பை உருவாக்கிய உலக நாயகனே

இளைஞர்களை கனவு காண கூறிய தலைவனே

அக்னி சிறகுகளை உருவாக்கிய அரசனே

பகைவரின் படை நடுங்கச் செய்த வீரனே

ஏவுகணையால் விண்வெளியில் வாகை சூடிய நாயகனே

புவி வளத்தை மேம்படுத்த விதை மரத்தை உருவாக்கியவரே

நீங்கள் பிரிந்தாலும் உங்கள் நினைவுகள் பிரியுமா

இளைஞர்களின் எதிர்காலமே நீங்கள் அல்லவா

என்றும் என் கனவு நாயகனே வாழ்க

 

கவிஞர் க. திருநீர் செல்வம்.

பட்டதாரி ஆசிரியர், ஓவியர்

கள்ளக்குறிச்சி

 

097.

அப்துல் கலாம் அறிவுச்சுடர்
 
 ஏவுகணை தளத்தின் வித்தை நாயகனே
 நித்தம் போற்றும்
 நில்லாத சூரியனே இளைஞர்களின் மனதின்
 எழுச்சி நாயகனே கனவு காணுங்கள்
 என்ற வசீகர வார்த்தைக்கு ஈ டுஉண்டோ இவ்வுலகில்
மக்களின் மனதில் எளிதில் இடம்பிடித்து
 விஞ்ஞானி என்றவார்த்தைக்கு எளிமையான

அர்த்தம் தந்த அன்பு உள்ளம் நீர்...
ராமேஸ்வரத்தில் பிறந்து திருச்சியில் பயின்று

ஆராய்ச்சிகளின் முன்னோடியாய் திகழ்ந்த உத்தமர் ..
நீங்கள் படைத்த அக்னிச் சிறகுகள்
ஆழமாய் மனதில் பதித்தாயிற்று
எண்ணிலடங்கா நோக்கங்களை மாணவர்களிடையே

விதைத்து சென்ற வித்தகர்
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் உங்களின்
 மன அலைகள் எங்களை நோக்கி
என்றும் பயணிக்கட்டும்....

கவிஞர். ஆர்த்தி சரவணன்
கறம்பக்குடி..

 

098.

"ஏவுகணை நாயகனுக்குப் பிறந்த நாள் கவிதை".

அக்னிச் சிறகே, அணு விஞ்ஞானியே.

ஆஷியம்மா, ஜைனுலாபுதீன்

பெற்றெடுத்த அருந்தவப்புதல்லனே.

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையே.

ஈகை மனம் கொண்ட வள்ளலே.

உலகம் போற்றும் தொழில்நுட்ப வல்லுநரே.

ஊரின் பெயரை உலகளவில் பொறித்த பொறியாளரே.

எழுச்சி தீபங்கள் போன்ற  நூல்களை வடித்தவரே.

ஏவுகணை நாயகனே, ஏழ்மையிலும் உழைத்தவரே.

ஐம்பொறிகளையும் அழகாய்

செம்மைப்படுத்தி சிகரம் தொட்டவரே.

இளைஞர்களின் மனதில் என்றும் வாழும் கனவுநாயகனே.

பத்மபூஷன், பாரத ரத்னா விருதுகளின் வெற்றிச்செம்மலே.

குழந்தைகளைக் கண்டு குதூகலித்த குழந்தையுள்ளமே.

பாரதநாட்டின் பதினோராவது குடியரசுத் தலைவரே.

பொன்மொழிகளால் இளைஞர்களின்

சிந்தனைகளைத் தூண்டிவிட்டவரே.


இந்திய மண்ணின் மற்றொரு கர்மவீரரே.

உலகம் உள்ளவரை உமது புகழ் ஓங்கி

ஒலித்துக் கொண்டிருக்கும்.

கவிஞர்.முனைவர்.
ச.மீனாட்சி,ப.ஆ (ஆ),
தாரமங்கலம், சேலம்,

 

099.

சரித்திர நாயகன் கலாம்!!!

தென்கோடி தமிழகத்தில் கடைக்குட்டியாக பிறந்து!
ஏவுகணை நாயகனாக அக்னிச்சிறகில் உயரப் பறந்து!
உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்து!
எட்ட முடியாத சாதனைகள் புரிந்து!
'கனவு காணுங்கள் ' என்ற மந்திரச் சொல்
உபதேசித்த இளைஞர் நாயகனே!
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்....
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்...
என்று சொன்னதோடு மட்டுமல்லாது அதனை
சாதித்துக் காட்டிய சகாப்தமே!
அறிவாற்றல் அறிவியலாற்றல் இவையிரண்டின்
முழு உருவமே நீங்கள் தான் 'கலாம்' ஐயா!
காலந்தோறும் வரலாறுகளே....
படிக்கத் துடிக்கும் அரிய பொக்கிஷமே!
எங்கள் 'அப்துல்கலாம்' ஐயா அவர்களே....!

 பொ.கனகலெட்சுமி ,                

தூத்துக்குடி-628002.

 

100.

அக்னிச் சிறகின் நாயகன்
ராமேஸ்வரத்தில் தோன்றிய இளம்பிறையே!
இளைஞர்களின் ஒளி விளக்கே!
படகோட்டியின் கடைக்குட்டி மைந்தனே!
வறுமையின் பிடியில் வளர்ந்தவனே!
வையம் போற்ற உயர்ந்தவனே!

ஆயுதங்கள் பல படைத்தவனே!      

அக்னிச் சிறகின் நாயகனே!
விதைக்குள் புதைந்த விருட்சமென
விண்ணைத் தாண்டி வளர்ந்தவனே!
நாசா உன்னை நாடிய போதும்

நாட்டிற்காக உழைத்தவனே!
உறக்கத்தையும் துறந்து உழைத்தவனே!
உலகை ஆளப் பிறந்தவனே!
மாற்றுத்திறனாளியின் துயர் களைந்தவனே!
மாற்றங்கள் பல புரிந்தவனே!
நாளிதழ் விற்பனை செய்தவனே!
நாயகனாய் இடம் பிடித்தவனே!
வாழும் போதும் ஒளி தந்தாய்!
வாழ்ந்த பின்னும் வழி தந்தாய்!
நானிலம் போற்றும் நாயகனே!
காலம் சொல்லும் உனது புகழ்!

மு. பாரதி, மங்களவாடி,

காயல்பட்டினம்.

 

101

அப்துல் கலாம்....

இராமேஸ்வரத்தில் ஏழைகளுக்கு பிறந்த விஞ்ஞானியே

இந்தியாவின் ஏவுகணை நாயகனும் நீயே

செய்தி தாள்கள் வினியோகித்த நீங்கள்

செய்தியாக மாறுவதற்கு கல்வியை ஆயுதமாக்கியரே

குடியுரிமை உடைய இந்தியாவின் குடியரசுத்தலைவரே

மாணவருக்கு மத்தியிலே மயங்கியபடி மரணித்தவரே

அக்னிச் சிறகுகள் உங்கள் புத்தகமே

அல்லல் படும் சகோதரிகளின் இன்னல்கள்

தீர்ப்பேன் என உறுதிமொழி எடுத்தவரே

திருமணமாகாமல் இளைஞர்களை‌ காதல் செய்தவரே

நாளைய இந்தியாவை வல்லரசாக கனாக்கண்டீரே

இளையோர்களுக்கு முன்மாதிரி நீங்கள் தானே

நீங்கள் பிறந்தத்தினமே மாணவர் தினம்

கவிதாயினி அபிதா.வி
மூணார்

 

102.

அப்துல் கலாம்...


மண்ணில்  தோன்றிய
தலைமகன்   இவரே

புதுமைகள்  செய்திட்ட
புதுஏவுகணை  இவரே

புத்தகம்   தந்திட்ட
அகராதியின் விளக்கமே

புத்துயிருக்குள் புகுந்த
விஞ்ஞான  உலகமே

கடலலையின் ஓசையே
மீனவனின் ஆசையே

கால்நடைகள் தந்ததே
விண்வெளி பாதையைக்

கார்முகிலும் சொல்லுதே
கலங்கமில்லாப் பெயரை

நீமறைந்த‌‌  பின்பும்
நாசொல்லுது உம்மூரைச்

சுயநலத்தை எறிந்திட்ட
அக்னியின்   சிறகே

சூரியனுக்கு முன்பாக
உதித்திடும்   கதிரே

பாவத்தை   நீக்கிடும்
எந்நாளும் உந்தன்ஊரே  

உம்மைப் பார்த்தாலே
நீங்கிடும் மனிதபாவமே

ஏவுகணையின் நாயகனே
மாணவனின் தோழனே

அக்னி  பிருத்வியின்
அகிலமான ஆசிரியன்

ராஷ்டிர பதிபவனின்
அந்நாள்   நாயகனே

பாரதரத்னாவின் பார்
புகழும்  விஞ்ஞானியே

என்னகொடுக்க முடியும்
திட்டத்தின் ஆசிரியரே

தொலைக்காட்சி வைக்காத
தொலைநோக்கு தமிழரே

கெளரவுப்பட்டத்தின்   சாதனைப்
புதல்வனே  என்றும்

மண்ணுக்குள் சென்றாலும்
மறையாத மாமனிதனே


முனைவர். கவிஞர்.
இரா. பாண்டியராஜன்,
த/பெ: இ. இராமநாதன்,
179, கீழத்தெரு, பாட்டம்,
பொட்டப்பாளையம்,
திருப்புவனம் தாலுகா,
சிவகங்கை மாவட்டம் - 630 61

 

103.

உன்னை மறந்து விடுவோமா?

வாய்ப்பு என்பது திறமையால் வளர்த்துக் கொள்ளும்
வெற்றிக் கனி என்பதை உலகிற்கு உணர்த்தியவன் நீ.

மகான் போல வாழ வேண்டும் என்ற அவசியம்

இல்லை மனசாட்சியோடு வாழ்ந்தாலே

போதும் என்று நிரூபித்தவன் நீ.

மக்களுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை உண்டாக்க,
உன்னை நீயே எரித்துக்கொண்டு விடியலை ஏற்படுத்தியவன் நீ.

செயற்கைக்கோளை ஏவி இந்தியர்கள் யாரென

உலகிற்கு உணர்த்தியவன் நீ.

உன் உடலையும் உயிரையும் நாட்டிற்காக  அர்ப்பணித்தவன் நீ.

சாமானிய மனிதனாக இருந்து சாதித்துக் காட்டியவன் நீ.

தேசியம் பேசிய தலைவர்களை கூட மறந்து விடுவார்கள் -

ஆனால் இந்த தேசத்தையே உயர்த்திய

உன்னை மறந்து விடுவோமா?

முனைவர் ப.சசிரேகா, சென்னை.

 

104.

அப்துல் கலாம்..


இந்திய தாயின் முதல் குடிமகன்.

கலாம் கண்ட களம் விண்கலம்.

விண்கலம் கொண்டு நம்பலம் காட்டியவர்.

கலாம்  ஆசைகளற்ற புத்தன் எனலாம்.

முதல் குடிமகனின் சொத்து இருபெட்டிகளே!

புத்தகங்கள் இவருடைய பெருஞ் சொத்து.

நாசாவிற்கு பாடமெடுத்தார் நடராஜரை கொண்டு,

தாய்நாட்டை அடையாளம் காட்டினார் வல்லராசாக

ஆட்சி செய்தார், நம்நாட்டை நல்லரசாக!

கனவு கண்டு ,கனவு கொண்டு

உலகம் முழுவதும் தன்பால் கொண்டவர்.

பாரெங்கும் கலாம் கண்ட கனவு

தீக்கனவாய் சிறகு, விரித்து சிறகடிக்க,

அக்னி சிறகுகள் விரித்த இடமெல்லாம்,

பசுமையாய்,செழுமையாய்,மாணாக்களிடம்
 புதுமையாய்!

விதைத்த விதைகள் இளைஞர்களிடம் ஆணிவேராய்,

ஊன்றிய  பசுமைக்கும் பசுமை  நாயகன்.

ஏவுகணை பேச்சு உயிர் மூச்சு.

தாரக மந்திரம் மரம் வளர்ப்போம்.

தரணி ஆள அன்பை விதைத்தவர்.

பாரெங்கும் இதய சிறகை விரித்தவர்.

மாணவரை மாண்பாக்கி இளைஞரை
 தூண்காளாக்கி,

பாரதத்தை  விண்தாண்டி சிறகடிக்க செய்தவர்


வாலிதாசன்
ஆத்தூர் வட்டம்.
சேலம் மாவட்டம்.

 

105.

அப்துல் கலாம்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அடுத்து  இந்தியாவில்

இயங்கும் குடியரசுத் தலைவராய் வாழ்ந்துமறைந்தவர்

இந்தியாவின் வால் பகுதியில் பிறந்து

தலைப்பகுதியில் ஆட்சிசெய்த  அறிவியல் ஆசான்

நாட்டின் அரச பதவியை அலங்கரித்தாலும்

மாணவர்களுக்காக தன்வாழ்க்கையை கரைத்த  ஞானி

உலகின் ஆன்மீக பூமியாகஇருந்த 

இந்திய துணைக்கண்டத்தை

பொக்ரான் வெடிகுண்டு நிகழ்வை நடத்தி

அறிவியல் நாடாகவும் பறைசாற்றிய பெருமான்


தன்  புற அலங்காரத்தில் மட்டுமல்ல

தன் வாழ்க்கையிலும் எளிமையை கடைப்பிடித்த

இந்திய துணைக்கண்டத்தின் தவப்புதல்வன்

தன்னைப் பற்றி யோசித்ததை விட

சமூகத்தை பற்றி யோசித்த துறவி

குரோமோசோம் குறைபாட்டால் கால்களை இழந்த

மாற்றுத்திறனாளிகள்  நடந்திட 500 கிராமில்

செயற்கை கால்களை கண்டறிந்த விஞ்ஞான நேசன்

 எல்லா வசதிகளுடன் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த

குடியரசு தலைவராக வாழ்ந்த தலைவர்களில்

உணவை மட்டுமின்றி உதவியாளர்களையும் குறைத்த

முதல் இந்திய குடியரசுத் தலைவர்

கனவு வெறும்  தூக்கத்தின் வெளிப்பாடல்ல

வெற்றி பெறுவதற்கான திட்டமிடல் களமென்று

மாணவர்களை நோக்கத்தோடு கனவுகாணுங்கள் என்றவர்

மாணவப் பருவத்தில் கற்றலுக்கு உரிமை கூறியவர்

இயற்பியல் பாடத்தில் உணர்வைப் பதித்தவர்

தேசத்தின் வளர்ச்சியில் ஆலோசனை வழங்கியவர்

விண்வெளி ஆய்வில் சாதனை கண்டவர்

இறக்கும் சூழ்நிலையில்கூட மாணவர்களோடு வாழ்ந்தவர்

அவரின் பூத உடலை பூமி கரைத்தாலும்

அவர்புகழின் கீதங்கள் காற்றில் பாடிக் கொண்டே இருக்கும்


கவிஞர் லோ வரகுண பாண்டியன்

உத்தரமேரூர்.

 

106.

ஏவுகணை நாயகன் கலாம் ஐயா

சரித்திர நாயகரே சாதனைகள் புரிந்தவரே

அரிதாரம் பூசாத அழகிய ஆளுமையே

எரிதழலாய் ஏவுகணை ஏவிவிட்ட ஏந்திழையே

புரிதலொன்றே மாணவர்க்கு போதுமென்ற பூமணியே!

அரசுப் பள்ளியிலே படித்துவந்த மாமணியே

முரசுகொட்டி ரோகிணியை பறக்கவிட்ட பைந்தமிழே

அரசு விருதான பத்மபூசன் பெற்றவரே

தரமாக அணுவாய்வை ஆராய்ச்சி செய்தவரே!

அணுவைப் பிளந்தேழ் கடல்புகுத்திய குறள்வழி

அணுவைப் பிளந்து பொக்ரானை வெடித்தாயே

அணுவணுவாய் ஆராய்ந்தாய் ஏவுகணை தொழில்நுட்பம்

நல்லரசை வல்லரசாய் ஆக்கிச்சென்ற வல்லவரே!

சிறகுகளை இளைஞருக்கு அக்னியால் ஆக்கியவரே

திறவுகோலாய் மாணவரின் மனம்தனை திறந்தவரே

துறவறமே வாழ்வென்று தூமணியாய் வாழ்ந்தவரே

கறைபடியாக் கரத்தோனை கரம்கூப்பி வணங்குகின்றோமா!

த.தமிழ்ப்பூங்குன்றன்
குமரலிங்கம்.

 

107.

காலத்தை வென்ற கலாம்....

கடைகோடியாம் ராமேஸ்வரத்தில்  சாதாரண

மீனவ குடும்பத்தில் உதித்த சரித்திர நாயகனே

உன்னால் முடியாது என்று நீ கூறியதும் இல்லை,

உன் போல் முயற்சியாளனை நான் கண்டதும் இல்லை

பலரது கேளிக்கும் கிண்டலுக்கும்

நீ உன் ஏவுகணையால் பதில் கொடுத்தாய்

உன் கள்ளமில்லா சிரிப்பாள் எங்கள்

உள்ளத்தை கொள்ளை கொண்டாய்

இளைஞர்களை ஊக்குவிக்க உன் போல் யாருமில்லை

உன்னிடத்தில் இனி யாரையும்

நாங்கள் வைத்து பார்க்கப் போவதில்லை

இந்தியாவை வல்லரசாக்க துடிதுடித்தாய் அந்த பொறுப்பை இளைஞர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு நீ சென்றாய்

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால்

இறப்பை சரித்திரமாகி சாதித்து காட்டிய சகாப்தமே

அழியாத உன் பழமொழிகள் ஒவ்வொருவர்

உள்ளத்திலும் ஒளியாக ஒலிக்கும்

இருளில் இருந்த இளைஞர்கள் வாழ்வில்

ன் அக்னி சிறகுகள் மூலம் எழுச்சி தீபம் ஏற்றினாய்

நிலாவில் மனிதன் தொடாத பக்கத்தை

தொட்டது சந்திராயன் 3 இதற்கு அடிக்கல் நாட்டிய வரே  நீதான்

விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன்

மீண்டும் ஒருமுறை உன்னை காண்பேனா என்று

வீசும் காற்று திசை மாறினாலும் இப்புவி

உள்ளவரை உன் புகழ் குறையாது அள்ள அள்ள குறையாத அற்புதமே

பெ.ஆனந்தி
ஆசிரியர்
தருமபுரி மாவட்டம்.

 

108.

 கலாம் கவிதை

கலாம் சலாம் சலாம் அறிவியலை அறிவாய் பார்க்காமல்
அனுபவ அறிவாய் அனுப்பவித்த அற்புத மனிதர் நம் கலாம்...
அரசியலும் அறிவியலும் இரு கண்ணாய் பாவித்து
இருள் இல்லா மனம் கொண்ட இந்திய பெருமை படிமம் நீ

இந்திய பெருமை இமயம் ஒரு காலத்தில் இன்று
இந்திய பெருமை கலாம் அறிவியலின் அற்புத வடிவம் நீ.....

விண்வெளி ஓடம் விந்தபுரிய செய்தவர் எம்
கலாம் என்றும் நிலையான புகழ் நிறைந்தவராம்....

செயற்கை காலை செயற்கையைத் தாண்டி
இயற்கையாய் வலியின்றி எளிமையாய் வலிமையாய்
வடிவமைத்தார் எம் கலாம்....

மண்ணின் பெருமை மதத்தில் இல்லை
மண்ணின் பெருமை மனதில் இருக்கு..
மறையா புகழோடு மனித விழுமத்தின் விருட்சம் நீ....

விண் மண் பெருயை வியக்க செய்த மகான்
விண்வெளி ஓட வித்தகர் முதல் குடிமகனுக்குப் பதவிக்கு
பெருமை தந்த பெருமகனார் தென்னகத்தின் தங்கம்
எம் கலாம் புகழ் வளர நாம் அறிவியல் புதுமை செய்வோம்....
கலாம் புகழை நிலை நிறுத்துவோம்....

முனைவர் உ.சுப்பிரமணியன்
உதவிப் பேராசிரியர் தமிழ்
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி

பாளையங்கோட்டை

திருநெல்வேலி 2

 

109.

அப்துல் கலாம் கவிதை

இராமநாதபுரம் மாவட்டம்  பெற்ற பெரும் செல்வம்

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவே வியந்த

உன்னத மனிதராம் இளைமையிலேயே பணி

வீட்டுவீட்டிற்கு  செய்தி தாள் போடும்  செயல்

மற்றவர் பார்வைக்கு அது வேலை என்றாலும்

தன் பார்வையிலோ அது தனக்கான உந்துதல்

என்றே நினைத்தாய்  இளங்கலையில் இயற்பியலாம்

ஆனால்  ஆர்வமோ விண்வெளி பொறியியல்  கல்வியாம்

உமக்கு  பல முகம் அன்னை தந்தைக்கு மகனாய்

உடன் பிறப்புக்கு சகோதரனாய் உடன் படிப்பவர்க்கு நண்பனாய்

மாணவனுக்கு ஆசிரியனாய் குழந்தைக்கு தோழனாய்

இளைஞர்களுக்கு இயக்கமாய்  என எதை விட எதைக்கூற

உமக்கு  வழங்கிய விருதுகள்  தான் எத்தனை

அதில் பத்ம பூஷன் விருது  மட்டுமா இல்லை

குடியரசு  தலைவர்  வரிசையில் நீர் என்னவோ

பதினொன்றாம்  ஆனால்  உமக்கு  நிகர்  பாரினில்  உண்டா

 பாரத ரத்னா விருது அதுமட்டும் அல்ல

பத்ம விபூஷன் விருதாம் இன்னும்  பல

தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது மட்டுமா இல்லை

 எத்தனை விருதுகள் எத்தனை  பட்டங்கள்

கனவுகளின் நாயகனே ஏவுகணை நாயகனே

மக்களின்  ஜனாதிபதி என  யாருக்கு கிடைக்கும்  இந்த பட்டம்

உம்படைப்பில்  அக்கினிச் சிறகுகள் இந்தியா 2020

எழுச்சித் தீபங்கள்   அத்தனையும்  உம் கருத்து பதிவுகள்

எதிர்கால  இந்தியா இளைஞர்  கையில்  என்றவரே

கனவு காணுங்கள் என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரரே

 கனவினை நனவாக்க உழைக்கும் எண்ணத்தை ஒவ்வொரு

 மனிதனுக்கும் உண்டாக்கியவரே கனவுகளின் நாயகனே

உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை 

உறக்கவிடாமல் செய்வதே கனவு

 இறப்பிலும் சிறப்பு  உம்  இறப்பு    யாருக்கு கிடைக்கும்  இந்த

எந்த ஆசிரியருக்கும் எந்த காலத்திலும்

கிடைக்காது இனி கிடைக்கவும்  முடியாது

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

வி.பிரியரட்சணா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நாடார் சரஸ்வதி கலை மற்றும்

அறிவியல் கல்லூரி

தேனி.

 

110.

"பல்துறை வித்தகர் கலாம்"
அறிவுக்கடலே அன்பெனும் சுடரே
எளிமையின் நாயகா பல்துறை வித்தகா
விஞ்ஞானியும் ஆராய்ச்சியாளனும் நீ  

ஏவுகனை நாயகனும் நீ
இந்திய தேசத்தின்  ஜனாதிபதி ,பாரதரத்னா
ஏ.பி.ஜே அப்துல் கலாம் என்பது உன் பெயர்
உன்னை புகழ்ந்துப் பாட கிடைத்த 

வாய்ப்பே,யாம் பெற்ற பேறு
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் -

தமிழன்னை - உன்னை  ஈன்றதற்காய்
தமிழ் வழியில் பயின்றாய் - அகிலம் தாண்டியும் அளந்தாய்
உன் ஒரு நாளைய ஏவுகணை சா(சோ)தனை
உலகின் முன்னனி தேசங்களை

மூக்கின் மேல் விரல் வைக்க செய்தது
இந்திய தேசத்தின்  மிக உயர்ந்த எளியவன்
முதல் குடிமகனாய் நின்ற எளிமை
திரிசூல், அக்னி, பிருத்வி, நாக் (ஏவுகணை) கள் ஏவ

தலைமையேற்ற திட்ட நாயகன்
ஒவ்வொரு நொடியும் வளர்ச்சியடைய

சிந்தித்து கலந்திட்ட நாயகன்
இசையை பிடிக்கும் உனக்கு -

வீணை இசைக்கவும் பிடிக்கும்
போலியோ நோயாளிக்கு ஊன்றுக்கோல்
இதய நோயாளிக்கு ஸ்டன்ட்
மனிதம் இசைவடைய உன் கைங்கர்யம்
கனவை நனவாக்கவே கனவு காணுங்கள் என்றாய்
உன் கனவுகள் யாவும் நனவாக இறை வேண்டல்கள்.
மனிதம் போற்றிய மாபெரும் தலைவன் நீ
தேசத்தின் மீது கொண்ட  அன்பாலே

மாணவர்களை வருங்கால தூண்கள் என்றீர்
சிறுவர்களையும் மாணவர்களையும்

அறிவு நீர் ஊற்றி வளர்க்க செய்த அறிவார்ந்த பெருமான்,
உன் அறிவுக்கு நிகர் எவர் வருவார்,
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் நடந்து முடியுங்கள் இவை

மனித வாழ்க்கை பற்றிய உமது பொன்மொழிகள்
வாழ்வின் முக்கியத்துவம் உணர்த்தீனீர் -

ஆம் நீ வாழும் கலைச்  சொல்லிக் கொடுத்த 

பெரும் ஆசான் கவிஞன், நூல் ஆசிரியன்,

பேராசிரியன், அக்னி சிறகுகள் படைத்த 

அமைதி சூரியன் , பல்துறை வித்தகன்,

உன்னை  படைத்த  தமிழுக்கு  நூல் படைத்து

கைம்மாறு செய்ததால் மட்டுமா?
உன் வாழ்வும் நெறியுமே உனது கைம்மாறு தானே?
போற்றுதலுக்குரிய பொன்மானே

உம்மை போற்றுகிறோம், வையம் உள்ளளவும்

வாழ்க நின் புகழ் வாழ்க,

திருமதி.ச. லீமா
தூய வளனார் கலை மற்றும்

அறிவியல் கல்லூரி (தன்னாட்சி )

கடலூர்-1

111.

கனவு காணுங்கள் இராமேஸ்வரத்தில் பிறந்த அக்னிசிறகே!                                                    

முயற்சிகளால் பலசாதனைகளை புரிந்த நாயகனே!                               

கனவு காணுங்கள் இந்தியா வல்லரசாகும்யென்று!                         

கனவுக்கே புது இலக்கணம் தந்தவரே!                                               

இயற்கையின் பற்றால் பலமரக்கன்றுகளை நட்டவரே!                                         இந்தியாவின்  வளர்ச்சிக்கு  முயற்சியால் வெற்றிகண்டாய்!         

அடக்கத்தின் இருப்பிடமாய் ஆளுமையின் பிறப்பிடமாய்!                                                                                    

இன்முகம் பூத்த இனியவராய் கலாம்ஐயா!                                             

ஈகை குணம் கொண்ட நல்லவராய்!                                                                               

உயர்ந்த படைப்பாளராய் ஊர்போற்றும் உத்தமராய்!                                         எண்ணத்தில் உயர்ந்த ஏற்றம் உடையவராய்!                                      அனைவரையும் உயரத்தில் ஏற்றிவிடும்  ஏணியாய்!                                                                                       

ஐயங்களை களைக்கும் நல்ல ஆசிரியராய்!                                        

ஒற்றுமைக்கு  இலக்கணமாக வாழ்ந்த தலைவனாய்!                       

உன்னால் முடியாதது எதுவுமே இல்லையென்று!                                 

முயற்சியால் சாதித்துக் காட்டிய வெற்றியாளர்!                                    
உன் அளவிற்கு முயற்சித்தவரை நான்;                                                       இன்றளவும் இவ்வுலகில் சிறிதளவும் கண்டதில்லை!                                               அள்ள அள்ள குறையாத அளப்பரிய!                                              அறிவியல்யென்னும் விண்வெளியில் சாதித்த  உலகமேதையே!                                

இளைஞர்களை ஊக்கவிக்கும் மாபெரும் சக்தியே!         
                   

உன் பொன்மொழிகள்  காலத்தால் மறக்கமுடியாதவை!                            அகிலமே வியக்கும்படி திகழ்ந்த உங்களுக்கு!                                        

தமிழ் அன்னையே சலாம்போடும் கலாமுக்கு!!                                                                                               

   வி.கணேஷ் பாபு ,  ஆரணி

112.

கலாம் கவிதை
தென்கோடி தந்த கடைக்குட்டியே, உன்னை
எடை போட்டுப் பார்த்தால்,
விடை தெரியாது தடை ஏது வந்தாலும்,
உடைத்தெரிந்தாய்,
சடை முடியாகவே,
கடைசிவரை வாழ்ந்தாய், உன்
பிறப்பு ஒரு சம்பவமாகவும்,
இறப்பு ஒரு சரித்திரமாக்கினாய், நீ
புதைக்கப்படவில்லை,
விதைக்கப்பட்டிருக்கிறாய். நீ
மனிதனல்ல, மாமேதை, ஆம்,
இந்நாட்டிற்கு சேவை செய்த மாமேதை.
பாந்தமில்லா, சாந்தமானவனே,
காந்த சக்தி உன்னிடத்தில்,
அன்பால் இவ்வுலகை,
அடிமையாக்கினாய், ஆம்,
இவ்வுலகமே உன்னை திரும்பி
பார்க்க வைத்தாய். உன்,
பிறந்த தினத்தை, உலக,
இளைஞர்கள் தினமாக்கி, நீ,
இறப்பில்லா சிறப்பினை பெற்றாய். உனக்கு,
குழந்தை இல்லையென யார் சொன்னது?
உன்னை உலகத்தந்தை என உரக்கச்சொல்வோம்.
உறக்கத்தில் வருவதல்ல கனவு,
இலக்கை அடைவதே கனவு, என,
உரக்கச்சொல்லி நீ,
உறங்கி விட்டாய்.
மறக்க மாட்டோம், உன்,
கனவை நினைவாக்குவோம்.
    
செல்வ. வெற்றிவேல் செழியன்,
204/1 மெயின் ரோடு,
கருவாழக்கரை & அஞ்சல்,
தரங்கம்பாடி தாலுக்கா,
மயிலாடுதுறை மாவட்டம்.
609 304

 

113.

கவியெல்லாம் கலாம்

புண்ணிய நற்றலமாம் ராமேஸ்வரத்தில்
அவதரித்த உத்தம் புத்திரனே!

ஆஷியம்மா பெற்றெடுத்த இந்திய
விண்வெளி கனவுகளின் நாயகனே!

அறிவியல் மீது அன்பு வைத்து மணவாழ்வை மறந்த
அறிவியல் காதலனே!

அக்னி சிறகெனும் நூல் தந்த இந்திய நாட்டின் பொக்கிஷமே!        

அண்ணலுக்கு பிறகு அகிலத்தில் அதிகம் ஒழித்தது

அப்துல்கலாம் என்ற உம் பெயரே!

பாதி நியுடனும் பாதி எயின்ஸ்டீனும்

கலந்து செய்ததும் ஐயா உம் கையே!

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடியது

போல் உம் வீனை இன்று அறிவியல் பாடுகிறதே!

வீணையோடு சேர்த்து விண்வெளியும் மீட்டினாயே!                      

பாரதமும் சிறப்பென்று பாருக்கு

ஏவுகணையோடே காட்டினாயே!

வைரமென பனி பொழியும் காஷ்மீர்

முதல் முக்கூடல் குமரி வரை

உமக்காக ஏங்குது ஐயா நம் பாரதமே!

வெண்ணிலாவின் தேகம் மூடும் மேகம்

விலகுமா ஐயா உம் வண்ண முகம்

காணும் யோகம் வாய்க்குமா எமக்கே!

நெய்தல் பூச்செடிகளைப் பார்த்தவாரே

கடலுக்குச் சென்றப் பரதவரே!

நீ இன்று விண்மீன்களைப் பார்த்தவாரே

விண்வெளிக்குச் சென்ற ஏவுகணையே!

கருணை கொடுக்கும்  கவின் முகிலே!

உலகமே வாழ்த்தும் ஒப்பற்ற தலைவனே!

ஆழ் கடலோர அக்னி சிறகே!

அகிலம் அளந்தாய் உம் அறிவாளே!

இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றாயே!

விண்ணுலகும் பாடும் உம் சரிதமே!

பறந்ததும் எம் அக்னி பறவையே!

மறைந்தது எம் இந்திய ஏவுகணையில் ஒன்றே!
 
 ச. திரிஜா பாலா
கும்பரையூர், கொடைக்கானல்.

 

114.

இந்தியாவின் ஏவுகணை நாயகனே

 ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களே!
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவரே!

கடுமையான உழைப்பு உழைத்தவரே!
செய்தித்தாள் விற்றவரே!

இராமேஸ்வரத்தில் பிறந்தவரே !
11- வது இந்தியாவின் குடியரசுத் தலைவரே !

மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்

விண்வெளி பொறியியல் பயின்றவரே !
ISRO - வின் விண்வெளி ஆராய்ச்சியாளரே !

ஏவுகணை நாயகன் என்ற பெயர் பெற்றவரே!
பொக்ரான் II - அணு ஆயுத சோதனையில் பங்காற்றியவரே!

இந்தியா 2020  என்ற புத்தகத்தின் ஆசிரியரே !
பல மதிப்பு மிக்க விருதுகளை பெற்றவரே !

நான் என்ன தர முடியும் என்ற இயக்கத்தை ஆரம்பித்தவரே!
சிறந்த எழுத்தாளரே! சிறப்புமிக்க கவிஞரே!

விங்ஸ் ஆஃப் பயர் என்ற சுயசரிதை எழுதியவரே !
மக்களின் குடியரசுத் தலைவராகப் புகழ் பெற்றவரே !

இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றியவரே !
வாழ்நாள் முழுவதும் சைவ உணவு உண்டவரே!

கலாமின் பிறந்த நாளே! இளைஞர்களின் எழுச்சிநாளே!
கலாமின் நினைவுகளை என்றும் போற்றுவோம்!

பெ. ராஜலட்சுமி M.A;B.Ed
ராஜபாளையம்,
விருதுநகர்.

115.

அப்துல்கலாம்


பாரதத் தாயின் தவப்புதல்வன் நீயே

ஏழையாய் பிறந்தாலும் களத்தில் சிறந்தவரை

விண்கலத்தின் நாயகனே குடியரசை ஆண்டவரே

எளிமையாக வாழ்ந்தவர் சிறந்தவர் நீரே

தமிழுக்கு பெருமை சேர்த்தவர் நீரே

தமிழனாய் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தீரே

கனவு காணுங்கள் திட்டமிடுங்கள் செயல்படுங்கள்
என்றுரைத்தவரே

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை
தேவையில்லை

 துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு  தோல்வியே இல்லை

குழந்தை பருவத்திலே விஞ்ஞான அறிவு உடையவரே

புத்தி கூர்மை கொண்டவரே வீணாகப்பொழுதை
போக்காதவரே

சாதிக்கும் எண்ணத்தை  பலருக்கும் ஊட்டியவரே

அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்து சிறந்தவரே

எளிமையாய் வாழ்வில் சிறந்து வாழ்ந்தவரே

கடின உழைப்பும் இடைவிடாத முயற்சியும்

உம்மிடமோ எல்லோரும் கற்றோம் ஐயா

எடுத்த பணியை முடிப்பதில் வல்லவரே

உள்ளத்தில் உறுதி கொண்டவர் நீரே

தோல்வியை தோல்வியடைய செய்தவர் நீரே

ஏவுகணை திட்டத்தினில் அண்டை நாட்டாரை

அலர செய்த அக்னி ஏவுகணையாரே

இயற்கையை நேசிப்பவரே ஆடம்பரத்தை
 விரும்பாதவரே

ஆசிரியரை என் அன்னை என்று பெருமையோடு உரைத்தவரே

பாதுகாத்துக் கொள்ள மறுத்தவரே

மக்களிடையே பாசத்தை வலுப்பெற செய்தவரே

எளிய மனிதரோடு மனிதராக வலம்வந்தவரே

ஏவுகணை நாயகனே எம் ஆசானே

ஏற்றமிகு சொல் வளத்தால் உம்மை

 புகழ்ந்து கொண்டே போகலாம் ஐயா

எண்ணற்ற பெருமைக்கும் அருமைக்கும் சொந்தக்காரரே

கிழக்கிலிருந்து வந்தாய் வாழ்க்கையை கடல் என்றாய்

கனவு என்ற கப்பலில் மிதந்த எங்களை

உம் அலை போன்ற மனதால் சிறை வைத்தாய்

 அறிவு என்ற கனவை எங்களுக்குள் விதைத்துச்சென்றாய்

அன்பு என்ற பண்பை அக்னி சிறகாக்கினாய்

உன்னால் முடியாதது என்று எதுவும் இல்லை

உன் அளவிற்கு முயற்சித்த வரை

நான் இன்றளவும் இந்த உலகில் கண்டதில்லை

அல்லல்ல குறையாத அளப்பறிய அறிவியல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய

 சரித்திரத்தில் முதன்மை நாயகனே நீரே

இளைஞர்களை ஊக்குவிக்க உம்போல் யாருமில்லை

குழந்தை போல் நீ சிரித்து சிறகடிக்கும்

உன் புன்முறுவல் இன்னும் எங்கள்

 நெஞ்சை விட்டு அகலவில்லை ஐயா

உம் வெகுளிதனத்தால் எங்கள் உள்ளத்தை

 கொள்ளை அடித்ததை நாங்கள் மறக்கவில்லை

பலரின் கேளிக்கை பேச்சுகளுக்கு நீர்

ஏவுகணையில் பதில் கொடுத்தாய் உன்

எளிய தோற்றத்தால் மக்கள் மனதில்

நீங்கா இடம் பிடித்தாய் ஐயா

நீர் என்றுமே அழியாத பொக்கிஷம்

அகிலமே வியக்கும் வண்ணம் வாழ்ந்தவரே

உன் நினைவுகள் நீங்காது என்றுமே....

கவிஞர் ஆ.க.ராதா
கள்ளக்குறிச்சி

 

116.

மேதகு.அப்துல் கலாம்

தமிழகத்தின் கடைக்கோடி இராமேஸ்வரம்

அங்கு பிறந்த கடைக்கோடி நீதானே...
எம் மதமும் சம்மதம் என்று வாழ்ந்தவரே...
ஆடம்பரம் இல்லாத அன்பு மனிதர்...
கந்தக துகள்களின் களஞ்சியரே..
அறிவியலின் ஆரவாரமே..
வீணை யோடு சேர்ந்து விண்வெளியை மீட்டினாய்..
ஏவுகணை நாயகரே..
இளைய சமுதாயத்தின் ஒளிச்சுடரே..
அக்னியின் சிறகு தந்த அணையா ஜோதியே..
அறிவுக் களஞ்சியத்தின் அற்புத சிற்பியே..
விஞ்ஞானிகளின் மனதிற்கு விடிவெள்ளியே..
மாற்றுத் திறனாளிகளுக் திறனாளிகளின்

சாதனைகளை வெளிக் கொணர வைத்த கலைஞரே..
தேசத்திற்காக உழைத்த நாயகனே..
செய்தித்தாள் விற்பனையில் சேதி சொல்ல வந்தவர் நீ..
அமைதிக்கு ஆத்மார்த்த சொந்தம் இவரே...
உம்மை போற்றி உம் கருத்துகளை பின்பற்றுவோர்!!!!!

ச. அட்சயா

 

117

அப்துல் கலாம்
 
கிழக்கிலிருந்து வந்தாய் வாழ்க்கை
கடல் என்றாய் கனவு என்ற கப்பலில் மிதந்த
எங்களை உன் அலை போன்ற மனதால்
கனவை கலைத்து உன் அறிவு என்ற
கனவை எங்களுக்குள் விதைத்து அன்பு என்ற
பண்பை அக்னி சிறகாய் வளர்த்து நாங்கள்
பறக்கும் போது உன்னை மண்ணில் புதைத்து
உன்னை காண விண்ணில் விடுகிறோம் எங்கள்  கனவை
என்றும் ஒரே தேசமாய் நன்றி மாண்புமிகு கலாமே.
பாரதத் தாயின் தவப்புதல்வன்
ஏழையாய் பிறந்தவன் களத்தில் சிறந்தவன்
விண்கலத்தின் நாயகன் குடியரசை ஆண்டவன்
எளிமையாய் வாழ்ந்தவன் தமிழுக்கு பெருமை சேர்த்தவன்
தமிழனாய் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்
ஏவுகணை நாயகனே!

காலமும் சாலம் போடும் கலாம் ஐயா!
வீசும் காற்றும் உன் புகழை பேசும்
பெருமை கொள்கிறது நம்முடைய தேசம்
எங்களை கனவு காணச் சொல்லி
எங்கள் கனவுகளில் வாழ்கி;ன்றீர்!
வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும்
அமைதிதான் அடிப்படை
இது அவர் வாக்கு மட்டுமல்ல
அவர் வாழ்ந்த வாழ்க்கையின் போக்கு
யாழிசையில் பிறந்த ஏழிசைக் கீதம் நீ
உன் கைக் கொடுத்தே அமைதியும் இனிமையும்
இசைச் செல்வத்தோடு பொருட் செல்வத்தையும்
எல்லோருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தாய்
மானிடக்குரலின் மகத்துவத்தை இறைவனும் வியந்திட
வாய்ப்பளித்தாய் புதிய வரலாறு படைத்திடவே
புனிதர் இளைஞர் இங்கு பங்கு!
உதய மாகும் வரலாற்றில்
உனக்கும் எனக்கும் பங்குண்டு
அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டதே என்று
பொறாமை படாத ஒரே விஷயம்
மரணம் மட்டுமே.... ஆனால்
அதையும் பொறாமை பட
வைத்துவிட்டார் அப்துல் கலாம் அவர்கள்....

இறந்தால் அவரைப் போல் இறக்க வேண்டுமென்று!!!

 முனைவர்.வீ.உமா,
 இயக்குனர், உடற்கல்வித்துறை,
 அ.து.ம மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
  நாகப்பட்டினம்.

 

118.

அப்துல் கலாம்  கவிதை

இந்நிலம் உள்ளவரை சொல்லும் பெயர் கலாம்!!

படித்த மனிதர் என்றா !! அதைவிட பிடித்த மனிதர் என்றே!!!

எப்படி, எவ்வாறு, எதற்காக, இதற்காக வாழ்வின் படிநிலை ஆய்ந்த உண்மை பொருள்...

தன் மண்  நல்லரசு, வல்லரசாக வருங்காலத்தின் நாடி பிடித்தீர்.

நித்தமும் மாணவ சித்தத்தில் விதைத்தீர் -நல் வித்து ..!
சிப்பிக்குள் இருப்பது -நல் முத்து என்று..!

கனவு காணுங்கள்!
கல்விக்கு ஆக்கமும், ஊக்கமு போதும்.!
ஏக்கமும், ஏழ்மையும் பகை என்றே..!! !!

துள்ளி விளையாடும் காலத்தே -

செய்திக் காகிதத்தைப் பிடித்தீர் .

அதனால் என்னவோ மெய்ஞானமும்

விஞ்ஞானமும் தேடி பிடித்துக் கொண்டது..!!  

 தமிழ் வழிக்கல்வி கற்று விண்ணைத்தொட்டு ..          

மண்ணுக்கு பெருமை சேர்த்தீர்..!

வீசும் காற்றில் மூச்சு காற்று கலந்த

கடலலைகள் தேடும் புகழ்பாடும்...
நறு சிந்தனைக்கெல்லாம்.. நன் நெறிகளுக்கெல்லாம்...

மாணவர்களிடம்

கொண்ட அன்பிற்கெல்லாம்..

முழு ஆளுமைக் கெல்லாம்.‌. அப்துல் கலாம்..!


ம. அருளாம்பிகை
காஞ்சிபுரம்.

 

119.

ஏவுகணை நாயகன்

இந்திய  விஞ்ஞான
வளர்ச்சியின் தந்தை

ஏவுகணை நாயகன்
என்ற போற்றுதலுக்குரியவர்

அற்புதமான பேச்சாளராகவும்
 இளைஞர்களின் முன்மாதிரியாகவும்

விளங்கிய  விவேகத்தின்
 நிதர்சனமாய் திகழ்ந்தவர்

தனது அணுகுண்டு
சோதனை எனும்

சாதனை  நிகழ்வால்
ஒட்டுமொத்த உலகையே

வியப்பில் ஆழ்த்திய
வீரத்தமிழ் மகன்

பத்மபூஷன் பாரதரத்னா
விருதுக்கு சொந்தக்காரர்

எதிர்காலம் பற்றிய
கனவுகளை மாணவர்களிடம்

வேரூன்றி துளிர்க்க
செய்த  மாமனிதர்

பல பரிமாணங்களில்
சிறந்தோங்கிய  வித்தகர்

தனது சிறுவயதில்
செய்தித்தாள்களை விநியோகம்செய்து

விடாமுயற்சியால் விண்ணைப்பிளக்கும்
வெற்றியை நிலைநாட்டியவர்

மக்கள் ஜனாதிபதியென்று
அன்போடு அழைக்கப்பட்டவர்

இந்தியாவின் எதிர்காலமாய்
எண்ணிய மாணவர்களின்

முன்னிலையிலேயே மரணித்த
 எம் சரித்திரநாயகன்

இந்தியாவை அணுஆயுத
வல்லரசாக மாற்றிய

பெருமையும் புகழும்
 இவருக்கே சமர்ப்பணம்

-மதிப்புறு முனைவர்.நா.பாரதி

 கள்ளக்குறிச்சி

 

120

கலாம் கண்ட கனவு

மண்ணின் மைந்தனாய்... ஏவுகணை நாயகனாய்...
கல்வியின் கார்வேந்தனாய்... சிறந்த தலைவனாய்...
சாதாரண மனிதனாய்... விருதின் நண்பனாய்...
அறிவியலின் அடைக்கலமாய்...
அவதாரம் கொண்ட அக்னி சிறகே...

இளைஞர்களின் இதயம் களவாடிய
கனவுகளின் கார்மேகமே...
கனவு நனவாக, எண்ணங்களை ஏற்றம் செய்தவனே...

பஞ்சமில்லா உன் புதுமைகளுக்கு கிடைத்த பரிசுகளோ
கொஞ்சம் நஞ்சமில்லை....

ஏவுகணை ஆராய்ச்சியில் ஏற்றம் கண்டு
மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்ற
மக்களின் மாவீரனே....
உன் விழி கொண்ட கனவு நோக்கியே
எங்கள் பயணம்...
அதை முடிக்கும் வரை இல்லை சயணம்...

-கவிஞர். நந்தகுமாரி
கரூர்.

 

121.

அப்துல் கலாம்
மானிடம் போற்றும் மாமனிதா
மதம் கடந்த மாற்றானாய் நம்பிக்கையின்

ஊற்றாய் இளைஞர்களின் ஆசானாய்

இல்லறம் துறந்து பல நல்லறம் தந்தவனே
 ஈகை குணத்தில் உன்ணலம்துறந்தவனே

வாழும் போது ஒளி தந்து மறைந்த பின்பும்

வழிதந்து விந்தை உலகின் மாயவனே

கொஞ்சமும் மாசற்ற தூயவனே குழந்தை

சிரிப்பில் தாலாட்டி கொள்கை பிடிப்பில் நீரூற்றி
 ஜாதி மதம் நீ கடந்து பல சாதனை
 மரங்களை நட்டாயே விதைக்குள்

புதைந்து வீரியத்தை உன் புத்தக வடிவில்

மீட்டெடுத்து அக்கினி சிறகாய் நீ இருந்து
 பல அற்புத சாதனை படைத்தவனே

நானிலம் போற்றும் நல்லவனே
 முதல் குடிமகன் ஆனபோதும் முறை

தவறா தூயவரே தலை முறை கடந்த தலைமகனே

உன் தடங்களை தொடரும் வெகுசணமே

காசு பணங்கள் சேர்க்காமல் காரணம்

காரியம் தேடாமல் கடமை ஒன்றே என்று

இருந்தாய் கண்ணிய செல்வன் நீதானே

விண்ணுலகம் சென்றாலும் விண்மீனாய்

ஒளி விடுவாய் உன்னை போல்
ஒரு பிறப்பை இவ்வுலகம் இனி அறியா

கண்ணீர் சிந்தி கண்களே அழுதிட

காயங்கள்சொல்லி வார்த்தைகள் கைவிட

உன் பாதம் பணிந்தமென்று

உன் பாதையில் பயணிக்கின்றோம்....
 

ரா .சகுந்தலா.
உதவி பேராசிரியர்

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி ,

ராஜபாளையம்.

 

122.

இளைஞர்களின் தலைவன்

சிலை வடிக்கும் உளியாய் //

இளைஞர்களை செதுக்கும் சிற்பியே//

விண்ணில் பறக்கும் பறவையைக்//

கண்டு வானளந்த விஞ்ஞானியே//

இராமேஸ்வரத்தில் மீனவக் குடும்பத்தில்//

அவதரித்த எளிமையின் ஆளுமையே//

அக்னிச்சிறகாய் விண்ணிலும் மண்ணிலும்//

தடம் பதித்த நாயகனே//

உறங்கி கனவு கண்ட//

இளைஞனை விழிப்படையச் செய்தோனே//

மாணவர்களின் ஏட்டுக் கல்வியினை //

அறிவியலாக கற்பித்த ஆசானே//

பதினோறாம் குடியரசுத் தலைவராய்//

மக்களின் மனதை கொள்ளை யடித்தோனே//

சோதனையை சாதனையாக மாற்றி//

அயலாரையும்  அஞ்ச வைத்த தலைவனே//

- திருமதி ச.மீனாட்சி,
தமிழ்த்துறை,
உதவிப்பேராசிரியர்,
தி ஸ்டாண்டர் ஃபயர் ஒர்க்ஸ்

இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.

 

123.

உள்ளம் கவர்ந்த அணு நாயகன்

அணுவைத் துளைத்த குறள்வழி
நின்றவர் அணுகுண்டும் ஆக்கி புகழ்
பெற்றவர்

அக்கினிச் சிறகுகளால் உலகை வலம்வருபவர்                

அன்னை நாட்டின் பெருமையை
உயர்த்தியவர்

அரசியலில் ஈடுபடா அறிவியல்
அறிஞர் ஆனாலும் அரசுத் தலைமகன் ஆனவர்

எளியோர்க் கிரங்கி எடைகுறை
கருவிகண்டவர் இளையோரைக் கனவு காணச்
சொன்னவர்

எம்மதமும் சம்மதமே இவர் கொள்கை
மும்மலம் ஒழித்த முதலாம் இவர்

இந்திய நாட்டின் நலனுக்காய்த் தன்
இல்லற வாழ்வைத்  துறந்தவ ரிவர்

இவர் பிறப்பொரு சம்பவமே ஆனாலும்
இவரிறப்பு  என்பது சரித்திரம் ஆனதுவே

 கு்னறிமணி யளவு நேர்மை குன்றாதவர்
பொன்றுந் துணையும் புகழுடை
அப்துல்கலாம்!

சே. முத்துவிநாயகம் பி. காம், எம்ஏ.
அரசுப்பணி நிறைவு.
திருநெல்வேலி.

124.

அப்துல்  கலாம்...


கனவுகளின் நாயகன்
காலம்வென்ற  காவியன்

இளைஞரின்  இதயம்
இந்தியாவின் உதயம்

முயற்சியின் பிறப்பிடம்
முயல்பவரின் புகலிடம்

கடற்கரையின்  தென்றல்
கனவுகளின்  பிறப்பிடம் 

ஏவுகணையை ஏந்திய
ஏழ்மையின் நாயகன்

வறுமையைக் காக்க
வைத்திட்ட  அறிவியலாளன்

புனிதத்தின் இருப்பிடம்
உந்தன் பிறப்பிடம்

புதுவகைக்   கனவுக்கு
புரட்சிமிகு  ஆசிரியரே

உழைப்பின் உறவினரே
திட்டங்களின் இயக்குனரே

ஏவுகணையின் நாயகன்
அறிவியலின்  காவலன்

வல்லரசு   நாடாக
வழிகளைச் சொன்னவர்

வரலாறும் மறக்காத
வாழ்வைத்  தந்தவர்

ஏழைக்குடியின் அரசே
எங்களின்  குடியரசே

மாநிலத்தின் தலைவரே
மாணவரின் இளைஞரே

ஆசிரியாராய் வந்தார்
ஆலமரமாய்  நின்றார்

நிழல்களின்  வழியே
இளைப்பாரியது அறிவியலே

சோதனைகளைத் தாங்கிய
சோதனையின் நாயகன்

உந்தன் பிறந்தநாளே
உலகமாணவர்  நாளே

பாரதரத்னாவே பாரின்
எங்கள் பத்மபூசனே

நீங்கலில்லா நாங்கள்
வேரில்லா மரங்களே...

கவிதாயினி. பா. ஜெயபிருந்தா,
முதுகலைக் கணினி அறிவியல் துறை, 
பாவை பொறியியல் கல்லூரி,
நாமக்கல் மாவட்டம் - 637 409.

 

125.

என்னை மாற்றிய நாயகனே 


நல்லதை நினைத்து 
நல்ல எண்ணங்களை வளர்த்து
நல்ல நடத்தைகளை  பின்பற்றி நல்ல செயல்களை நான்  செய்வதற்கு காரணம் நீங்களே 


என்னைப் பற்றி எனக்குப் புரிய வைத்து என்னை மாற்றிய அன்பு நாயகனே


உங்களின் சிந்தனைகளையும் உங்களின் செயல்களையும் கண்டு நான் நேர்வழியில் செய்யல்ல முயற்சி செய்கிறேன்

உங்களின் உரைய கேட்டு என்னை உந்து தள்ளுகிறது என் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு 


உங்களால் தான் என் கனவை நினைவாக்க நான் அதிகமாக உழைக்கிறேன்

உங்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தேன் அதை பின்பற்றி என் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகம் படிக்க நான் கண்டிப்பாக உழைப்பேன் 

 தே.விக்னேஷ் 

கள்ளக்குறிச்சி.

 

126.

*ஏவுகணை நாயகன்*

அக்டோபரில் உதித்திட்ட அறிவியல் ஆதவன்
அக்னிச்சிறகுகள் விரித்திட்ட ஏவுகணை நாயகன்

ஆஷியம்மா ஜைனுலாப்தீனின் அருந்தவப் புதல்வன்
ஆகாயத்தில் விந்தைகள் நிகழ்த்திய வித்தகர்

இளைஞர்களை எழுப்பிய கனவுத் தோழர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முதல்வர்

ஈதல் குணம்நிறை இணையில்லா வள்ளல்
ஈடில்லாப் புகழ்மிகு எளிய வேந்தர்

உள்ளம் கவர்ந்திட்ட உயர்ந்த மனிதர்
உலகே வியந்திடும் உன்னத அறிவியலார்

ஊக்கமிகு உரையாற்றும் அற்புதப் பேச்சாளர்
ஊருக்கு உழைத்திட்ட பொதுநலப் பற்றாளர்

எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்
எழுச்சி தீபங்கள் ஏற்றிய விஞ்ஞானி

ஏழ்மை நிலையிலும் சாதனைகள் புரிந்தவர்
ஏவுகணை கனவை நனவாக்கிய விடியல்


ஓயாது தொடரும் கலாமின் அலைகள்
வணங்கிப் போற்றுவோம் கலாமின் நினைவுகள்


செவிலியசகோதரி
இர.பாக்யலட்சுமிசுந்தரம்
கோவை.

127.

காலங்கள் ஓடின ! நேரங்கள் ஓடின!.                                                              கனவு மட்டும் சென்றது! நினைவு இங்கு வரவில்லை!

தாளங்கள் கொட்டின!   தனித்துவமும் வந்தது!                
தலைமையும் பெற்றது! எண்ணங்கள் மட்டும் முயற்சியாகவில்லை

அறிவியல் மலர்ந்தது!
ஆக்கமும் செயல்பெற்றது!.
அக்னி சிறகாய் பறந்தும் தனக்கென்று எதுவும் தேடவில்லை !

சரித்திரம் பேசியது !
பொது நலம் கொட்டியது!
இப்படிபட்ட கலாம் வாழ்க! - காலங்கள் முற்றும் எம்மையே!


செ.ஜெகதீஸ்குமார்,
உதவி பேராசிரியர்,
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரி,
பேரூர்,கோவை - 10.

 

128..

 

இளைஞர்களின் விதை கலாம்...

தென்கோடியில் பிறந்த கடைக்குட்டி சிங்கமே!
அகிலம் போற்றும் அற்புத சிகரமே!
மாணவர்கள் கொண்டாடும் அறிவுக் களஞ்சியமே!
அறிவியல் உலகின் ஏவுகணை நாயகனே!
இளைஞர்களின் அறிவைத் தூண்டிய ஒளிவிளக்கே!
அணு ஆராய்ச்சியின் முடிசூட்டிய மன்னனே!
அக்னிச் சிறகை தந்தருளிய அன்னையே!
விந்தை உலகின் அதிசய வித்தகனே!
பொன்மொழி உளியால் மக்களை செதுக்கியவனே!
சாதி மதம் கடந்த தூயவனே!
மனித நேயம் மாறாத எளிமையானவனே!
தன்னடக்கத்தோடு தன்னம்பிக்கையால் உச்சம் கொண்டவனே!
விண்மீனாய் ஒளிர்ந்திடும் விலைமதிப்பற்ற வைரமே!
 கனவு காணுங்கள் என்ற விடியல்வெள்ளியே!
நாட்டிற்காக ‌   இல்லறவாழ்க்கையை துறந்த மென்மையானவனே!
தாய்மொழிக்கு தலைவணங்கிய மூத்த குடிமகனே!
கறைபடியாத நேர்மை உள்ளம் கொண்டவனே!
 அணுகுண்டு சோதனையின் அடித்தளம் ஆனவனே!
நன்றி மறவாத  நல்லுள்ளம் உடையவனே!
மழலைபேச்சால் எங்களை சிறகடிக்க வைத்தாயே!
எங்களின் வழிகாட்டியாக வாழ்ந்த ஆசிரியரே!
விடியலை காட்டிவிட்டு விண்ணுலகம் போனதேன்!
விதையாய் வீழ்ந்து மரமாய் எழுவாய் 'ஐயா'!

ந.மோகனா,
காயல்பட்டினம் ,
தூத்துக்குடி..

 

129..

*இருளில்  ஓர் ஒளி..

இருளில் இருந்த ராமேஸ்வரத்துக்கே ஒளிச் சுடர் வீசும் தீபமாய் பிறந்தாரே

 ஸைனுலாப்தீன் மற்றும்  ஆசியம்மாள் அவர்களுக்கோ பிறந்த முத்தே

 ஆளுமையின் தலைவர் மரகத வைர கிரீடம் அப்துல் கலாம் ஐயாவே

ஏழ்மையின் கொடுமையாலே குடும்பத்தை  கட்டிகாக்கவே பத்திரிகை  விற்றே
குடும்ப தலைவரானாரே

வறுமையாலே தன் கல்வியை ராமேசுவர அரச தொடக்க பள்ளியில்  படித்தாரே

கல்லூரி படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றே

 இயற்பியல் இளங்கலை  சிறப்பு சான்றோர்கள் சான்றிதழ் பெற்றாரே

விண்வெளி  பொறியியல் படிப்பை சிறப்பாக பயின்றே

 முதுகலைப் வெற்றி சான்றிதழ்  பட்டம் பெற்றவரே 

 சாதனைகளை படைத்த சாதனை மன்னனே

வீரனாய் வீறு கொண்டு எழுந்தே

 ஆராய்ச்சிப்பணியில் செவ்வனே தொடர்ந்தாரே 

அதன் முதல் படியாய் துணைகோல் ஏவுகணை குழுவில் செயற்கை கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினாரே

 அதன் விளைவாலே வந்ததே ரோகினி எனும் அற்புத துணைக்கோலே

அதை வெற்றிகரமாய் விண்வெளியில் ஏவசெய்தே

 பத்ம பூசனம் எனும் வெற்றி மகுடம் சூடினாரே 

பத்ம விபூசன் பாரத ரத்னா தேசிய ஒருங்கிணை  இந்திரா காந்தி என்றே 

பற்பல சாதனை விருதுகள் பெற்றே

வெற்றி வாகை சூடியே

தன்னை மட்டும் இன்றி தன் நாட்டுக்குமே எட்டுத்திசைக்கும் புகழ் வரச்செய்தவரே

மதி மயக்கும் மகா சதனை வீரரே நம் அப்துல் கலாம்  ஐயாவே

          கவிஞர் ஜஸுரா ஜலீல்

 

130.

 

கனவு நாயகன்
சரித்திரத்தில் சாதனை படைத்தவனே! 
சாதனை படைத்தும் சாதாரணமாய் விளங்குபவனே!
அறிவியல் உலகின் ஆசானே!
ஆழ் கடலின் அரிய பொக்கிஷமே!
இளைஞர்களின் எழுச்சி நாயகனே! 
ஈடு இணையில்லா விஞ்ஞான தலைவனே! 
உனக்கென எதையும் எண்ணாமல் ,
ஊருக்காக உழைத்த கனவு நாயகனே!
எளிமையும் பொறுமையும் உடையவனே! 
ஏவுகணை நாயகனே !
ஐயம் இன்றி உழைத்தவனே! 
ஒளிவிளக்காய் விளங்கிய விஞ்ஞான தலைவனே! 
ஓசை இன்றி சாதனை படைத்தவனே! 
இன்னும் சில காலம்  வாழ்ந்திருக்கலாம், 
ஆனால் வாழ்கிறாய் 
சாதனையாளர்களின் வடிவில், 
நம் மனதில் என்றும் மலரட்டும் உம் புகழ்.


-முனைவர் சு.சாந்தி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, 
வேல்ஸ் பல்கலைக்கழகம் ,பல்லாவரம், சென்னை.
 

131.

தலைப்பு: அப்துல்கலாமின் பெருமைகள் 

தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி பயின்றவரே.

அறிவியல் வளர்ச்சியில் முழுமையாக அர்ப்பணித்தவரே.

அறிவியல் துறையில் அளப்பரிய சாதனைகளை அரங்கேற்றியவரே.

அக்னிச் சிறகுகள்  சுயசரிதையாக வெளிவந்ததே.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் கவிதைகளை எழுதியவரே.

திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரே.

கனவு காணுங்கள் என்று சொல்லியவரே

கனவு மெய்ப்பட வழிவகைகள் கூறியவரே.

எளிமையின் உறைவிடமே. கண்ணியத்தின் மறுரூபமே.

தன்னம்பிக்கை, தன்னடக்கத்தின் தனிச் சிகரமே.

நன்றி மறவாதவரே. நகைச்சுவை உணர்வுடையவரே.

இளைய சமுதாயத்தின் உன்னதமான பதிலே.

வீணை வாசிக்கும் இசையின் நாயகனே.

பொக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்த்தியவரே.

ஏவுகணைகளின் நாயகனாக ஏற்றம் பெற்றவரே.

எளிதில் அணுகும் தலைவராக விளங்கியவரே.

என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பவரே.

க.ஹெலன்
காயல்பட்டணம்

 

132.

"களம் வகுத்த கலாம் "

விதைக்கப்பட்ட கனவுகள் 
விடியலைத் தேடி 
வியாப்பித்து இருக்கும் விருட்சங்கள்...
விண்வெளிக்காய் விதைக்கப்பட்ட வித்தகர்கள்...
முன்னேற்றத்தின் முகவரிகள் முத்தாய்ப்பாய்...
முடுக்கிவிடப்பட்ட முத்திரைகள்...
கலாம் வகுத்துச் சென்ற கனவுகள் 
களைகட்டின...
வளரும் இந்தியா 2020 
2023 - இல் நினைவாய்...
நிரந்தரமாய்...
ஜகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தன...
சின்ன சின்ன அதிர்வலைகள்...
திடீரெனப் பூகம்பமாய்...
பூவுலகினின்று  புதிதாய்ப் புறப்பட்ட 
சரித்திரம் படைத்த 
சந்திரயான் 
சரித்திரத்தையே 
புரட்டிப் போட்டது...
தரித்திரம் எல்லாம் 
தடம் மாறிப் போயின...
நிலுவையிலுள்ள கனவுகள் வலுவாயின...
விழித்தெழச் செய்த 
கனவுகள் சக்தியாய் - நல்
வித்தையாய்...
மிளிரும் இந்தியாவில்
களிக்கும் கலாமின் 
முகம் கண்களுக்குக் கவினாய்...
கருத்துக்குப் பெரு  விருந்தாய்...
வரமாய் வந்துதித்து
வாழ்விக்க வந்தாய்...
வள்ளலாய் விதைத்த வியூகங்கள் விசித்திரமாயின...
விண்ணை முட்டும்
வியாபகமாயின...
சிரத்தையாய்ச் சிரம் கொண்டு
கரம் கோத்து
களம் அமைத்தவை 
வெட்ட வெளியில் 
வெளிச்சமிட்டன...
பொட்டல் வெளியும் 
பூங்காவாய்ப் பூத்துக்  குலுங்கின...
சாதனைகள் மலர 
சாதகமான காலம் 
கனிந்தது...
சாதகமாக்கிய சாதகர்...
ஆம் !
சிந்தனையை
விண்ணளவு 
சிகரம் தொட வைத்த  விந்தையர்...
அவர் வகுத்தபாதை
 பல்லூழி கடந்தும் 
பதியமாய்... 
பத்திரமாய்...
விதைக்கப்பட்ட விதை...
விதைத்ததே முளைத்தது முத்திரை பதித்தது...
சலிப்பின்றி மூழ்கிடுவோம்...
நித்தம் நித்தம் 
புத்துலகைக் காத்திடுவோம்...

படைப்பு உருவாக்கம் : முனைவர் க. அன்புக்கோகிலா 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குருநானக்கல்லூரி, வேளச்சேரி.

 

133.

அப்துல் கலாம் கவிதை

 தென்கோடி தமிழகத்தில் பிறந்த கடைக்குட்டியே.....
 ஏவுகணை நாயகனே அக்னி சிறகில் உயர பறந்தவரே,
கனவு காண சொன்ன இளைஞர் நாயகனே....
 எட்ட முடியாத சாதனைகள் புரிந்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தவரே.......
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.....
 ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்,
என்று சொன்னதோடு அதனை சாதித்துக் காட்டிய சகாப்தமே அறிவாற்றல் அறிவியலாளற்றல் எழுத்தாற்றல் சொல்லாற்றல் செயலாற்றல் இவற்றின் முழு உருவமும் நீங்கள் தான்
பறக்கலாம் ஜெயிக்கலாம் சாதிக்கலாம் என்று சக்தியை கொடுத்த எங்கள் அன்பு கலாமே காலம் உங்களுக்கு என்றென்றும் சலாம் போடும்......

 முனைவர். சி. தனலட்சுமி
Asst. Prof.
DMI கல்வியியல் கல்லூரி.

 

134.

அமுல் செல்வராஜ்
*************************
விண்ணளந்த மண்ணின் மைந்தன்
*************************

கடல்சூழ் நகரத்தில் தோன்றிய கலாமே /

இளைய சமுதாயத்தின் இனிய சலாமே /

இயற்பியல் துறையில் கல்விப் பயிற்சி /

விண்வெளித் துறையில் வியத்தகுப் புரட்சி /

அறிவினில் தேனீ அறிவியல் ஞானி /

அஞ்ஞானம் அகற்றிய விஞ்ஞானத் தோணி /

மெய்ஞானம் உணர்த்திட்ட மேலான   ஏணி /

பட்டம் பலபெற்ற பாரத ரத்னா அவரன்றோ /

குடியரசுத் தலைவராய் குவலயம் வியந்திட /

எளிமையின் சிகரமாய் வாழ்வினில் விளங்கிட /

எழுச்சியைத் தந்தார் இளைஞர்கள் சிறந்திட /

பயிற்சியும் தந்தார் பாமரர் உயர்ந்திட  /

கனவுகள் நனவாகும் காலத்தின் விதியாகும் /

காணுங்கள் கனவுகள் காரியம் கைகூட /

ஊழல் ஒழிப்பைக் கருத்தாய் கொண்டு /

இயன்றதைச் செய்தார் சிறப்பாய் தொண்டு /

நாளைய பாரதம் வல்லரசு என்று /

நமது கலாமும் சொன்னார் அன்று /

அக்கினிச் சிறகினை விரித்து வென்றார் /

அன்பால் மக்கள் மனதில் நின்றார். /


அமுல். செல்வராஜ்
த/பெ அமுல்ராஜ்
62, காந்திநகர்,
கோவில்பட்டி சாலை
மணப்பாறை.
திருச்சி மாவட்டம்.
அஞ்சல் குறியீடு-621 306.
தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு)
.

135.

தலைப்பு ....விண்மீன் விதை

அரசுப் பள்ளிச் சிறுவன் நீ
 
அரசாங்க ஆளுமையின் தலைமை நீ

 இந்திய பெருங்கடலின்  தொடக்கப்புள்ளியில் தோற்றம் பெற்றாய் நீ 

 இந்தியா பெயரை விண்வெளியில் ஏற்றம் பெறச்செய்த விந்தை நீ


 அக்கினி சிறகுகளின் ஆழமான இறகு நீ

 மெய்ப்படச் செய்யும் கனவுகளின் கதாநாயகன் நீ

 செய்தித்தாள் விற்றவன் நீயே செயற்கைக்கோளைகற்றவன் நீயே

 விண்ணைக் கண்டாலும் மண்ணை மறவா  மைந்தன் நீ 

அறம் செய்ய விரும்பி மரம் நடச் செய்த மறம் நீ

 எதிர்காலத் தூண்களை  அணு அணுவாய் செதுக்கிய அற்புதம் நீ

 மாணவர்களை கேள்வி கேட்கச் செய்த வேள்வி நீ

 விடை கொடுக்கும் போதே விடையும் பெற்ற தேடல் நீ

 மாணவர்களின் வையம் நீ 
ஐயம் நீக்கும் மையம் நீ

 மழலைகளின் வளர்ச்சி நீ
 இளைஞர்களின் எழுச்சி  நீ

கனவு நாயகனின் கனவைக் கண்டோம் சந்திராயனில் 

முதல் குடிமகனாய் முன் வைத்த வல்லரசின் வளர்ச்சி நீ

 விண்மீன் விதையை விருட்சமாக்கும் வெற்றித் துளிகளின் தூரல் தூவானமாகும் விரைவில்.,.......


ஜீ.கலைச்செல்வி தாரமங்கலம்

 

136.

அறிவியல்  ஆசான் அப்துல்கலாம்.
&&&&&&&&&&&&&&&&&&
அறிவின் சிகரமாய்
அன்பின் உச்சமாய் /
எளிமையின் வடிவமாய்
பண்பின் உறைவிடமாய்/
பாசத்தின் இலக்கணமாய்
பாரதத்தின் மணிமகுடமாய்/
அறிவியல் உலகின்
ஆசானாய் 
மேன்மைமிகு அப்துல்கலாம்/
இனிய பேச்சால்
இதயம் தொட்டார்/
இளைய சமுதாயத்தின்
மதிப்பைப் பெற்றார் /
இயற்பில் இளங்கலைப்
பட்டம் பெற்று விண்வெளிப் பொறியியல் முதுகலை முடித்தார் /
ஏவுகணை நுட்பத்தில்
ஏற்றம் பெறவே /,
முயற்சியை விதைத்து 
முத்திரை பதித்தார் /
குடியரசுத் தலைவராகிக்
குடிமக்கள் நலன் காத்தார்/
அக்னிச்சிறகுகளை
விரித்து 
அகிலத்தில் சிறந்தார்/
கனவுகள் மெய்ப்பட
இளைய சமுதாயத்தை/ 
பேரன்புடன்
ஊக்குவித்தார்
நல்லரசு
 வல்லரசாகிட வே/
அறிவியல் பணியில்
ஆய்வுகள் சிறந்திட/
ஓய்வினை மறந்தார்
உள்ளத்தில் நிறைந்தார்/
தணியாத தாகம்
தமிழில் கொண்டு /
தவறாது திருக்குறளை
படிப்பதும் உண்டு/
அறம் போற்றிய
அவர் பெற்றோர் /
அவனி சிறக்க
அளித்த அன்புப் பரிசு/
நாட்டின் வல்லமை
கூடிடும் என்றே/
கணித்துச் சொன்னார்
கலாமும் அன்றே//
அறிவியல் ஞானி அவர் புகழ் பாடுதல் நன்றே /


கோபால் - விஜயா -
சமூக சேவகி-மக்கள் சேவா சங்கம்-
முகாம்-
.(தே.கல்லுப்பட்டி மதுரை மாவட்டம்) - 

 

137.

தலைப்பு  :

டாக்டர் அப்துல்கலாம் 


இந்தியாவின் தவப்புதல்வன் டாக்டர் அப்துல்கலாம்

இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியாவின் 11வது குடியரசு தலைவர்

இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் ஜனாதிபதி

தொலைநோக்குப் பார்வையும் தொலைநோக்குப் சிந்தனையும்

ஒன்றிணைந்த அக்னி ஏவுகணை நாயகன்

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கிட 

இளைஞர் சமுதாயத்தை எழுச்சியை  ஏற்படுத்தியவர்

தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இருந்தவர்

தன்இலட்சியத்தில் தளராத உறுதி கொண்டவர்

இந்தியாவின் பாரதரத்னா விருதைப் பெற்றவர்

ஆடம்பரத்தை விரும்பாத  சரித்திர நாயகன்

தனது வாழ்வில் எதிர்நீச்சல் போட்டவர் 

மாணவ சமுதாயத்தின் கனவு நாயகன்

நேற்றும் இன்றும் விண்வெளி  ஆராய்ச்சியின்

தத்துவத்தின் சிற்பி டாக்டர் அப்துல்கலாம் 


கவிஞர் கணுவாய் கிருஷ்ணமூர்த்தி
கோயம்புத்தூர் மாவட்டம்.

 

138.

பிறப்பு சம்பவம்
இறப்பு சரித்திரம் என்று வாழ்ந்து சென்ற மாமனிதனே அப்துல் கலாம் அவர்களே ...

 

புண்ணிய ஸ்தலத்தில் பிறந்த அறிஞரே

மாணவர்களை கனவு காணுங்கள் என்று

புரட்சியை ஏற்படுத்தியவரே

அக்னி சிறகுகள் எனும் சுய சரிதை 

நூலை  வெளியிட்டவரே

தன்னடக்கத்தில் உச்சமாக. திகழ்ந்தவரே

பணிவான மனிதன் என்று உலகத்தலைவர்களே

வியக்க வைத்தவரே

அன்பு அமைதி என்ற பாதையில்

இறுதிவரை விலகாமல் சென்றவரே

நீ முயன்றால் நட்சத்திரங்களையும்

பிடிக்கலாம் என்று அடிக்கடி கூறியவரே

வீணையை வாசித்து ரசிப்பவரே

இந்தியா அணுகுண்டு  சோதனை நடத்தி 

உலக  அரங்கில் வல்லரசு அறிவித்தவரே

இந்தியாவுக்காக கண்ட வீட்டு பாயும்

ஏவுகணைகளை உருவாக்கியவரே

போலியா நோயாளிகளுக்கு எடை

குறைந்த ஊன்றுகோலே படைத்தவரே

இருதய நோயாளிக்கான ஸ்டெண்டு"

கருவியை  கண்டுபிடித்தவரே

சுறுசுறுப்பாக இருப்பதே பழக்கமாகக் கொண்டவரே

உதவி செய்தவர்களே நன்றி மறக்காமல்

அடிக்கடி அவர்களை நினைவூட்டி பேசியவரே

நகைச்சுவை உணர்வை அதிகம்  வெளிப்படுத்தியவரே

இந்தியாவில் உள்ள இளைஞர்கள்

அனைவருக்கும் ராணுவ பயிற்சி

அளிக்க வேண்டும் என்றவரே

இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்

என்று விரும்பியவரே

இந்திய ராணுவத்தில்  திட்ட

இயக்குனராக ஏவுகணைகளை 
வடிவமைத்தவரே 

தீய பழக்கங்களை கைவிட சபதம்

எடுக்க வேண்டும் என்று  அறிவுருத்தியவரே

பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு

ஏற்றுமதி செய்வதை தடுத்தவரே

அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக 
ஈடுபடுத்தியவரே

வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும்

காந்திய கொள்கைகளை 
பிரதிபலித்தவரே

மாணவர்களுக்கு நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவரே

பல்கலைக்கழகங்களில் பல  பட்டங்களை பெற்றவரே

பாரத் ரத்னா விருதுக்கு சொந்தக்காரரே

பாம்பன் பாலம் போன்று  மக்கள் மனதில்

என்றும்  நிலைத்து நிற்கின்றவரே...!

 

- கவிஞர் சைலஜா கணேசன்,

கோவில்பட்டி,,

தூத்துக்குடி மாவட்டம்.. 

139.

கனவுகளின் நாயகன் அப்துல் கலாம்!

1931 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள்
15 ஆம் தேதி
இராமேஸ்வரத்தில் பிறந்து
உலகமெங்கும் இந்தியாவின் பெருமையை

பேச செய்த அணுவிஞ்ஞானியே!

நீ பள்ளிப் படிப்பில் சராசரி மாணவனாய்!
கல்லூரியில் இயற்பியல் துறையில்
வள்ளுவனாய்!
“விண்வெளி பொறியியலில்”
முதுகலைப் பட்டத்தையும் பெற்றவனாய்!
இளைய தலைமுறையினரை
கனவு காண வலியுறுத்தி !
காணும் கனவுக்கு உயிர் கொடுத்த
ஏவுகணை நாயகனே!

பின்னாளில் இந்தியாவின்

குடியரசு தலைவராக உயர்ந்து....
இந்தியா
 உலக அரங்கில் தலைசிறந்த நாடாக மாற கனா கண்டு...
செயற்கை கோளான Slv 3 இனை

ஏவுவதில் முக்கிய பங்கேற்று.....
“பத்ம பூசன்” விருது பெற்று இந்தியாவை

பெருமையடையச் செய்து.....
 "அக்னி பிரித்வி ஆகாஸ்”  ஏவுகணை

திட்டங்களில் முக்கிய பங்காற்றியவரே!

கண்டம்விட்டு கண்டம் தாண்டும்

ஏவுகணைகளை உருவாக்கி!
இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற

கனவை மக்கள் மனதில் பதிய வைத்து!
ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களை

சந்தித்து உரையாற்றி!
“அக்னி சிறகுகள், இந்தியா 2020,

எழுச்சி தீபங்கள்” உள்ளிட்ட நூல்களையும் எழுதி!

இந்தியாவின் இளைஞர்களின் மனதில் புது ஒளியை பாய்ச்சி!
 இந்த தலைமுறையின் மிகச்சிறந்த தலைவர் நீரே!

“கஷ்டம் வரும் போது கண்களை மூடாதே

அது உனை கொன்று விடும் கண்ணை

திறந்து பார் அதை நீ வென்று விடுவாய்” என்று கூறி வழிகாட்டியவரே!

பல்வேறு விருதுகளை பெற்று மக்கள்

மனதில் நீங்காத இடம் பிடித்து மக்களுக்காகவே வாழ்ந்து
"மக்களின் ஜனாதிபதி" என்று அன்புடன் அழைக்கப்பட்டவரே!

"கனவு காணுங்கள் வெற்றி பெறுவீர்கள்’

என்ற பொன்னெழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்!

2015 அன்று  சில்லாங்கில் மாணவர்களிடையே

உரையாற்றுகையில் மயங்கி விழுந்து மறைந்தவரே!....

 “கனவு காணுங்கள்” என்ற தங்களளின்

வரிகளைச் சுமந்து வல்லரசு என்ற

இலக்கை நோக்கிப் பயணிப்போம் !.

- திருமதி  ச. இராமலக்ஷ்மி

ராஜபாளையம்

சின்மயா வித்யாலயா

ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள்

மழலையர் மற்றும் துவக்கபள்ளி

விருதுநகர்.

 

140.

காலம் கடந்தும் மனதில் நிற்கும் கலாம்...

இராமேஸ்வரத்தில் பிறந்த
இந்தியத்தாயின் தவப்புதல்வர்...

வறுமையில் பிறந்து வறுமையில் வளர்ந்து
விஞ்ஞானியாக உயர்ந்தவர்...

விண்வெளி ஆராய்ச்சியில்
விண்ணிலும் தடம் பதித்தவர்...

கனவுகளின் நாயகர்
ஏவுகணைகளின் தலைவர் அவர்...

அக்னிச்சிறகு தந்தவர்
அறிவியல் மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்...

கஷ்டத்திலும் கண்ணை மூடாதே என்று
கண்ணைத் திறந்து பார்க்கச் செய்தவர்...

இளைஞர்களின் வழிகாட்டி
இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன்...

வாசிப்பை நேசிப்பவர் எண்ணற்ற
விருதுகளுக்குச் சொந்தக்காரர்...

தன்னடக்கத்தின் உச்சம் அவர்
தான் என்ற அகந்தை அற்றவர்...

பன்முகத்திறமை வாய்ந்த
பரந்த மனப்பான்மை கொண்டவர்...

காலம் தட்டிப் பறித்துக் கொண்ட
கலாமே... நாங்கள் உங்களை வணங்குகின்றோம்..

முனைவர்.திருமதி.ஜெ.வித்யா M.A.,M.phil.,B.ed., ph.d
இடைநிலை ஆசிரியை
சின்மயா வித்யாலயா பள்ளி
இராஜபாளையம்.

 

141.

கவிதையின் தலைப்பு.. ஏவுகணை நாயகன்..

ஏவுகணை நாயகனே! எங்கள் அப்துல் கலாம் ஐயா..

வீசும் காற்றும் உங்கள் புகழைப் பேசும்..

இந்த நாடே உங்களால் பெருமை கொள்கிறது..

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்..

அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்..

கல்வியைப் பற்றி கனவு காணுங்கள்..

அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் என்று கூறியவரே..

அக்னி சிறகு என்னும் வரலாற்றை எழுதிய நாயகனே..

ஆகாயத்தில் பறந்த ஏவுகணை நாயகனே..

வானியல் பற்றிய புத்தகங்களில்

விண்வெளி மண்டலங்களை அறிய வைத்தாய்..

தன்னம்பிக்கையை மாணவர்களின் மத்தியில் விதைத்தவர்..

யாராக இருந்தாலும் வானத்து

உச்சியை எட்ட முடியும் என்று கூறியவரே..

நீங்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து இருக்கணும்..

நீங்கள் இருந்து இருந்தால் வானியலில்

பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்..

மீண்டும் ஒரு பிறவி இருந்தால்

இம்மண்ணில் பிறந்து வாருங்கள் ஐயா..

       கு. சாந்திகுமார் B.A
      சபரி கார்டன் சூலூர்..

 

142.

ஏவுகணை  நாயகன்..

எங்கள் இந்திய ஏவுகணை நாயகனே
ஒரு தந்தை தன் குழந்தையை தோளிலே

சுமந்து உலகைச் சுற்றிக் காட்டுவான் - ஆனால்
நீங்கள் அதற்கும் மேல் வானத்திற்குச் சென்று

பார்க்க SLV இராக்கெட்டை கண்டுபிடித்த

விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையே
பத்ம பூஷன், பத்ம விபூஷன்,

பாரத ரத்னா போன்ற விருதுகளை வென்ற இரத்தினமே
அக்னி சிறகுகள், இந்தியா 2020,

எழுச்சி தீபம் எழுதி அணையா விளக்காய்

அனைவரின் உள்ளத்திலும் இருக்கும் சுடர்மிகு சூரியனே
இராமேஸ்வர கடல் காற்று உப்பாய்

இருப்பதனால் கடவுள் மனமிறங்கி

அமிர்தத்திற்கு அப்துல் கலாம் என்று பெயர் சூட்டி

இப்பூமிக்கு உங்களை அனுப்பினானோ

காவிய நாயகனே உண்மையில்

மாவீரனே கண்களுக்கு விளைத்த

மாங்கனியே அறிவியலில் மலர்ந்த பூங்கொடியே

உங்கள் பிறந்தநாளை புனித நாளாக

போற்றுவதில் பெருமிதம் அடைகிறேன்...

  கவிஞர் மு.ஷமீமா,
  வந்தவாசி.

 

143.

கலாம்

சிறுவயதிலேயே விவேகமுள்ளவர்கள் நட்பினைப்  பெற்றவராம்

செய்தித்தாள் விநியோகம் முதல் சம்பாத்தியமாம்

ராமகிருஷ்ணஐயரிடம் பிரம்பால் அடிபட்டு பாராட்டப்பட்டவராம்

இந்துமுஸ்லிம்  ஒற்றுமையைப் பிரதிபலித்த உத்தமராம்

மாணவர்களுக்குய் வழிகாட்டியாக முதன்மையாக விளங்கியவராம்

தாய்த்திருநாட்டிற்கே  உலக அரங்கில் பெருமைசேர்த்தவராம்

விஞ்ஞான உலகில் முடிசூடா மன்னவராம்

எதுஉனது பாதை  அதைநோக்கியே சென்றிடுவாயாம்

ஏவுகணை அறிவியலுக்குப் புத்துயிர் ஊட்டியவராம்

சாராபாய் இழப்பு பேரிழப்பு என்றெண்ணியவராம்

அக்னி ஏவுகணையின் வெற்றி நாயகனாம்

அறிவும் முயற்சியும் ஆக்கத்திற்கே என்றவராம்

சொந்தக் காலில் நிற்பதே சுயமரியாதையாம்

மனமொன்றிப் பிரார்த்தனை நமக்கு உதவுமாம்

 குறிக்கோளில்  ஒருமுனைப்போடு  இருத்தல் வேண்டுமாம்

இந்தியக் குடியரசின் தலைவராக வலம்வந்தவராம்

எளிமையின் நேர்மையின் சிகரமாகத்  திகழ்ந்தவராம்

எதையும் அப்போதே செய்து முடிக்கணும்

அபாரமான ஞாபகசக்தி கொண்ட தலைவராம்

இயற்கையை நேசிக்கும் குணம் கொண்டவராம்

 வித்தியாசமான அரசியல் தலைவராகத் திகழ்ந்தவராம்

இந்தியா வல்லரசாக வேண்டுமென்பது கனவாகும் 

இளைஞர்களே கனவு காணுங்கள் என்றவராம்

வாழ்க்கையைத் தன்னம்பிக்கையோடு  எதிர்கொள்ள வேண்டும்

தலைசிறந்த தலைமைப் பண்பு உடையவராம்

சமூக அக்கறை கொண்ட பண்பாளராம்

முயன்றால் கலாம் போல ஆகலாம்

கவிஞர் ச.சுதாராணி
தலைமை ஆசிரியை
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி

பூலப்பாளையம் பவானி ஒன்றியம்,

ஈரோடு மாவட்டம்.

 

144.

கனவு பலமுறை வரும்போது "இலட்சியம்" என்று பெயர் பெரும்....!

நம்பிக்கையுடன் இருங்கள்.
அப்போது தான்
யார் முன்னும்
மண்டியிட மாட்டீர்கள்

அழகு கனவு
கடைமையை பாழாக்கும்.
ஆராய்ச்சிக் கனவு
அழகாக்கும் வாழ்க்கையை.

தூங்க விடாது உங்களின்
இலட்சியக் கனவு
எண்ணங்கள் செயல்வடிவம்
பெரும் வரை.

கஷ்டமென்று
கண்ணை மூடாதே
கற்பனை செய்
கஷ்டமும் வெற்றிகளையே தரும்.

அன்பான குணம் அழகு
சாந்தமான மனம் அழகு
அப்துல் கலாமின் அறிவு அழகு
வரலாற்றின் பக்கங்கள் அழகு
படிப்பது நம் அனைவருக்கும் அழகு
கேள்வி கேட்பதே பதிலுக்கு அழகு

அனைவரும் கேளுங்கள்
அப்துல் கலாமின் ஆராய்ச்சி சொற்களை..
 
நா. ஜானகி,
ஆசிரியர்,
மேற்கு மாம்பலம் சென்னை.

145.

அப்துல் கலாம் போற்றும் விதமாக விருப்ப தலைப்பிட்டு கவிதை
    
தலைப்பு
 
வீசும் காற்றும் உன் புகழைப் பேசும்
 
ஏவுகணை நாயகனே காலமும் சலாம் போடும் காலம் ஐயா
 
வீசும் காற்றும் உன் புகழைப் பேசும்
 
பெருமை கொள்கிறது நம்முடைய தேசம்
 
 இளைஞர்களின்எழுச்சியே ஒன்று இருக்கிறது
 
அதில் உந்தன் பேரை ஒழிக்கிறது கலாம்!! கலாம்!!
 
விஞ்ஞான புறா அக்கினி சிறகோடு பறக்கிறது

உந்தன் மனிதநேயம் கண்டு மேகமும் மெய்சிலிர்க்கிறதே
 
உயரம் தொட்டும் உலகம் சுற்றியும் எளிமை மாறவில்லை
 
உங்களைப் போல் உலகில்   
உலகில் யாரும்  மில்லை
 
சோதனை உன்னை சோதித்து நின்றதும்
 
உந்தன் அறிவால் சாதித்து வென்றதும்
 
சரித்திரம் சொல்கிறதே கலாம் ஐயா சரித்திரம் சொல்கிறதே
 
அக்டோபர் 15 விஞ்ஞான உலகத்திற்கு வந்த வரப் பிரசாதம்
 
ராமேஸ்வரத்தில் பிறந்து விஸ்வரூபம் எடுத்த மா மனிதர்
 
Dr.APJ அப்துல் கலாம் ஐயா
 
ஆயிரம் வருடம் ஆனாலும் உங்கள் வரலாறு மறையப் போவதில்லை...
 
கனவு காணுங்கள் என்று கூறிய கதாநாயகனே
 
என்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் உங்களுக்கு பெரிய இடம் உண்டு
 

கவிஞர் நா. அமுதா பிஎஸ்சி, கோவை.

146.