வீடு

புதுக்கவிதை

வீடு

வீடு

தலையணைக்கு 
இலவம் பஞ்சு

உள்ளறைக்கு
 பதப்படுத்தப்பட்ட
வைக்கோல்

வாசலுக்கு 
சிறிது காய்ந்த சுள்ளிகள்

ஒரு வீட்டு முற்றமோ
சர விளக்கு தொங்க விடும் 
இரும்பு கொக்கியோ
கொசுவலைக்குள் சாத்தியிருக்கும்
ஒரு சன்னல் கதவோ
சுருட்டப்பட்ட இரண்டு குரோட்டன்ஸ் இலைகளோ போதும்

அழியால் இரும்பு கம்பி 
கிராதிகள் இல்லை
சுற்றுச்சுவரில் 
உடைந்த பீங்கான் 
துண்டுகள் பதிக்கவில்லை

திண்டுக்கல்
 இரட்டைப் பூட்டுக்கள்
எதுவுமில்லை

வாஸ்து பார்க்கவில்லை
பூமி பூசை இல்லை

கடவுள்  மனிதம் 
நம்பிக்கையில்லை

தொங்கும் தேனடை வடிவம்
மனதில்  இருக்கும் கூட்டை
அது கட்டி முடித்துவிட்டது
தன்னியல்பில்

தங்கேஸ்