சுதந்திர காற்றை சுவாசிப்போம்..24

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்..24

தலைப்பு

 *சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்* 

இந்திய தேசம் விடுதலையால் சுதந்திர தேசமானது! 

உயிர் தியாகத்தாலும் வீரத்தாலும் விளைந்த சுதந்திர தேசமானது!

நாம் இன்று சுவாசிப்பது சுதந்திரக் காற்று!

சோதனைகளை சாதனைகளாக்கிப் பெற்றது! 

அடிமைத்தனத்தை அடியோடொழித்து அகிம்சையால் பெற்றது!

செந்நீரும் கண்ணீரும் சிந்திப் பெற்ற சுதந்திரக்காற்று!

ஆங்கிலேயரின் அடக்குமுறையை அகற்றிப் பெற்றது..!!

தேசம் காத்து உயிர் நீத்த தியாகிகள் பெற்றுத்தந்தது..!!

எண்ணங்களை நம் மனதின் வண்ணங்களாக்கிய சுதந்திரக்காற்று! 

மூவண்ணக் கொடியைக் காக்க மூச்சை விட்ட தியாகிகளின் சுதந்திரக்காற்று!

வீரமங்கைகள் விதைத்துச் சென்ற சுதந்திரக்காற்று! 

பெண்மையை புகழ்ந்து போற்றும் இந்திய தேசத்தில்!

வீரர்கள் செந்நீர் ஊற்றி வளர்த்த சுதந்திரக்காற்று! 

செந்நீரால் பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்போம்!

அநீதிகளை களைந்து நீதியை நிலைநாட்டுவோம்!

சுதந்திரக் காற்றை உயிர் மூச்சாய் நினைத்து சுவாசிப்போம்! 

முனைவர் 
ச.செல்விசேகர்,கரூர்.