வெட்கம்

காதல் கவிதை

வெட்கம்

உன் இடையை மூடிக்கொள்!
என் ! இமைகள் இடைவிடாது விழித்திருக்கும்!

நீ வெட்கி சொக்கி நிற்காதே!
நின் நாணம் கண்டு!
என் விழிகள் மோகம் கொண்டு பூத்திருக்கும்!!

இடையை காற்று வாங்க!! கலைந்தாயோ சேலையை!!
இருக்கின்ற மலர்களெல்லாம்
இடைதழுவ விட்டுவருகிறது அந்த சோலையை!!

கேசங்கள்
நெளிந்து
வெண்சாமரம்
வீசும் வண்ணம்!!
உன் தேகம் தழுவி மோகம் கொண்டே வளர்கிறதோ!

வெட்கமழை பொழியாதே!
தேன்பொழிகிறதென
வண்டினங்கள்
வரிசையில் நிற்கும்!

வெட்க மழை பொழிய
வெள்ளகட்டிகளென
எறும்புகளும்
ஏங்கி தவம் கிடக்கும்

கவிதை மாணிக்கம்