வாக்தேவியை வணங்கிடு...

சரஸ்வதி பூஜை கவிதை

வாக்தேவியை வணங்கிடு...

வாக்தேவியை வணங்கிடு...

பேச்சுக்கலையின் தேவதை, 
கல்விக் கடவுள் ,
கலைகளின் தலைவி ,
அறியாமை இருளை நீக்குபவள்,
பெயரிலே ராகமானவளாம்
சரஸ்வதியை வணங்கிடு!

சரஸ் - பொய்கை
வதி - வசிப்பவளை,
பேச்சு திறனின்றி பிரம்மன் 
படைத்தவர்களை பேச அருள்
செய்த *ஞான*  வடிவமானவளை,
கற்றவர்/கௌரவமானவரணியும்
வானவில்லின் 7  வண்ணங்களில்
சேராத வெள்ளை ஆடை தரித்த
வெண்தாமரையில் அமர்ந்த
வாக்தேவியை வணங்கிடு!

அனைத்து உயிரினங்களின்
நாவில் ஈரத்தன்மை கொண்டவளை,
சைவ/வைணவ/சாக்தம், காணாத்தியம்/சௌரம் வழிபாட்டில் கலைமகளாக இருப்பவளை,
சுருதி தேவி/ஐஸ்வர்யா/ஜினவாணி என *சமண* மதத்தில் அழைக்கப்பட்ட,
ஆபுத்திரனுக்கு அட்சயப்பாத்திரம்
அளித்து/மகா சரஸ்வதி/ ஆரிய சரஸ்வதி /வஜ்ரவீணா சரஸ்வதி, 
வஜ்ர சரஸ்வதி/வஜ்ர சாரதா என *பௌத்த*  மதத்தால் அழைக்கப்பட்ட
*உ.வே.சாமிநாதய்யரின்*  சமயங்
கடந்த தெய்வத்தை வணங்கிடு!

அழுக்கற்ற கல்வி கற்க 
வேண்டுமென உணர்த்திட
ஒளி ஊடுருவும் நிற 
ஸ்படிக மாலை தரித்தவளை,
நீர்/பால் பிரித்து,
தீயவை நீக்கி நல்லவை எடுக்க
உணர்த்தும் *அன்னவாகினியை* ,
மொழி விவாதமிடத்து ஆசனத்தில்
*சாரதா த்வஜம்*  கொடியானவளை
ஓம் சரஸ்வதியே நம!
என 108 முறை சொல்லி வணங்கிடு!

சோழ மன்னன் மகள் அமராவதி,
கம்பர் மகன் அம்பிகாபதி காதலை
ஒட்டக்கூத்தர் பிரிக்க நினைத்து
விருந்து படைத்த ஏற்பாட்டினில்,
"இட்ட அடி நோக/எடுத்த அடி
கொப்பளிக்க வட்டில் சுமந்து
மடந்தை அசைய" என அம்பிகாபதி
காதலியின் உணவெடுத்து வர பாட,
மன்னன் கோபத்தை மாற்ற/கம்பர்
"கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று
கூவுவாள் தந் நாவில் வழங்கோசை
வையம் பெறும்" என சரஸ்வதி
நினைந்து பாட/அன்னையும்
கம்பரின் தமிழுக்கு அடிபணிந்து,
கொடிக் கிழங்குடன் காலில் 
கொப்பளத்துடன் வயோதிகத்
தாயாக வீதியில் வந்து/கம்பரின்
மகனைக் காத்தவளை வணங்கிடு!

நான்முகனுடன் வாதம் செய்து,
பூமியில் ஊமையாக பிறந்து,
வாணியாக யாழிசைத்து வளர்ந்து,
சிவனருளால் நாத்திறன் கிட்டி,
சாபவிமோசனம் பெற்று,
பிரம்மனின் வேள்வியில் பங்கேற்ற
*வாணியம்மைபாடி*   ஆனவளை,
"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே
காமரூபிணி/வித்யாரம்பம் கரிஸ்யாமி
சித்திர் பவதுமே சதா" எனும்
ஸ்லோகம் உச்சரித்து வணங்கிடு!

வறுமை நிலையால்/ குளத்தில்
தற்கொலை செய்ய மூழ்க/சிவன்
 சகோதர வாஞ்சையுடன் அளித்த
*கச்சபி*  வீணையுடன் தரிசனத்தை,
ஸ்ரீராகவேந்திரருக்கருளிய,
நீர்/ஒளியை தங்கு தடையின்றி
தரும் கலைவாணியை வணங்கிடு!

மகிஷாசுரனை சக்தி வதம் செய்த
நவராத்திரி நாட்களின் இறுதி
3 நாட்கள் வழிபடும் நாயகியை,
பேச்சாற்றல்/எழுத்தாற்றல்/புத்தி
கூர்மை/நினைவாற்றல்/காரிய
வெற்றி பெற தாழம்பூ/ரோஜா,
தாமரை மலர்களால் அலங்கரித்து,
பேரிச்சை/திராட்சை/நாவல்,
எலுமிச்சை,பால் சாதம்/அக்கார
வடிசலுடன் நைவேத்தியம் படைத்து,
வீடுகளில் மகிழ்வு/இன்பம் கிட்ட
*ஜடாதேவி* யாக /கல்வி,கலை
சிறக்க *பாரதி* யாக வணங்கிடு!

வேதகால ஆறு வடிவில்
*ஆற்று தெய்வமாக*  இருப்பவளை,
கேட்டை/ரேவதி/ஆயில்யம் 
நட்சத்திரக்காரர்கள்
கல்வி நிலை மேம்படுவதற்கும்,
அவிட்டம்/சித்திரை/மிருகசிருசம்
நட்சத்திரக்காரர்கள்
தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறவும்,
விசாகம்/பூரட்டாதி/புனர்பூசம்
நட்சத்திரத்தாரர்கள்
பூரண ஷேமம் பெறவும்,
மூல நட்சத்திர வடிவமான,
அங்குசம் ஏந்தியவளை வணங்கிடு!

அறிவை வழங்கும் 
ஏட்டுச்சுவடி ஏந்தியவளை,
சரஸ்வதி அந்தாதி எழுதி கம்பரும்
சகலகலாவல்லிமாலை அளித்து
குமரகுருபரரும் வணங்கிய,
வீணையின்றி வேதாரண்யத்தில்
கோவில் கொண்டவளை,
"ஆற்றங்கரை சொற்கிழத்தி"என
தமிழ் நூல்கள் புகழ்பவளை,
விநாயகன் வணங்கிய கூத்தனூர்,
கம்பர் வழிபட்ட பத்மநாபபுரம்,
பிரம்மன் உறை திருக்கண்டியூர்,
காஞ்சி கச்சபேஸ்வரர் தலங்களிலே
*சியாமளாதேவி* யாக  வணங்கிடு!

உயிர்களை படைப்பவனைக்
காட்டிலும் இலக்கியம் படைப்பவனே
உயர்ந்தவனென குமரகுருபரர்
வாக்கு உணர்த்துகின்ற,
"கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் மலரவன் 
வண்டமிழோர்க்கு ஒவ்வான்" எனும் *நீதிநெறி விளக்கம்* பாடல் நினைந்து 
மஞ்சள் நிற மலர்களால அலங்கரித்து,
பூந்தி நிவேதனம் செய்து,
புத்தகம்/பேனா வைத்து,
சந்தியா காலங்களில் 
கிழக்கு நோக்கி அமர்ந்து,
51 சமஸ்கிருத எழுத்துகள் குறிக்கும்
*அட்சமாலை* கையிலேந்திய,
காயத்திரி தேவியாக வணங்கிடு!
வாக்தேவியின் அருளை பெற்றிடு!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.