சுதந்திர காற்றை சுவாசிப்போம்...10

சுதந்திர தினம் கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...10

75 ஆவது சுதந்திர தினம் அமுதப் பெருவிழா என அகமகிழ கொண்டாடும் தருணத்தில் 

"சுதந்திர காற்றைச்   சுவாசிப்போம்"


பார் போற்றும் பாரதம் என்று மார்தட்டிக்கொள்ளும் வேளையில்!
 
யார் அறிவார் அன்னைப் பாரதம் அடிமைப்பட்டுக் கொண்டது அரசியல் என்னும்  போர்வையில்!

அந்நியரிடம் பெற்ற விடுதலையை அரசியல்வாதியிடம் அடகு வைத்தோம்!

வரி என்ற பெயரில் வறியவர்களை வதைக்கும் வன்கொடுமைக்கு ஆளானோம்!

தறி கெட்ட மாந்தரின் தன்னலப் போக்கால் இயற்கையை இழந்து இன்னலுக்கு இரையானோம்!

வீட்டுக்கு வரி சுடுகாட்டுக்கும் வரி படிக்கும் ஏட்டுக்கும் வரி பாட குறிப்பேடுக்கும் வரி!

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கத்தை
அடைந்து விட்டோம்!

சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதை இழந்துவிட்டோம்!

மக்கள் பணி என்று கூறி மாய வார்த்தைகள் பல சொல்லி 
பணம் கொடுத்து பெறுகின்றார் வாக்கை!

அந்த வஞ்சகரின் செயல் அறிந்து வகையறிந்து மாற்ற வேண்டும் அவர் போக்கை!

பாடுபட்ட சுதந்திரம் சீர்கெட்டு போகிறது கேடுகெட்ட மனிதர்களால்!

பார்ப்பதற்குப் பசுவாய்
பாய்வதிலே புலியாய்
வேசம் பல காட்டுகிறார்
வேடிக்கையான செயலால்!

மதத்தின் பெயரால்
கலவரமூட்டி மகிழ்ச்சி காண்கிறார் சிலர்!- அந்த

மாயவலையில் சிக்கிய
மனவேதனையடைந்து மாண்டு போகிறார் பலர்!

தியாகிகளின் படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்தி !

தீயினும் கொடியவரின் செயல் அறுப்போம் மனதில் அதை நிறுத்தி!

காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கவிதை பாடி!

காலம் கடந்தும் பாடி
திரிந்தோம் களிப்புடனே கூடி!

வல்லரசு என்ற சொல்லி வாயில் வடை சுட்டார்!

வறுமை தானே சூழ விட்டு வாய்க்கு அரிசி மோட்டார்!

ஏழைகளின் பெருமூச்சால் சூடாகும் காற்று!

நாம் எப்படித்தான் சுவாசிப்போம் சுதந்திர காற்று!

பொதுநலத்தில் வாழ்ந்திடுவோம் சுயநலத்தை விடுத்து!

பொறுப்புடனே கடமை செய்தால் சுவாசிக்கலாம் சுதந்திர காற்றை கொடுத்து

-நவநீத கண்ணன்.
 சங்கபட்டி.