பாரதியை போற்றுவோம்...! 057

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியை போற்றுவோம்...! 057

பாரதியை...போற்றுவோம்..
உன்னைபாட
சொல் கேட்டேன்
கங்கு தந்தது தமிழ்
எங்கு நோக்கினும்
தீமையின் இருள்
என்ன செய்வது
வேர்றுக்க வேறுவழியில்லை
உன் பெயர் ஒன்றே நானறிந்த வீரம்
முண்டாசில் வலம் வந்த சூரியனே
உன் முறுக்கு மீசையே
ஆண்மையின் உண்மை
உன் முகவரியே
முழு பாரதம்
உன் காதல் மொழியே
கண்ணம்மாவின் ஏக்கம்
காக்கை குருவியை
மானுடத்தின் சாதி என்றாய்
முற்றத்தில் நீ  அழைத்துக்கொடுத்த தானியமே
கருணைக்கு அடையாளம்
சிந்து நதியும்
சேர நாடும் 
நின்  கொஞ்சல் மொழி
நந்தலாலவின் அழகு காதல் மொழி ஆலாபனை
தீக்குள் விரலை
விட்டு காதலை தீண்டிய கண்ணன் நீ
உச்சிமீது வானிடிந்து விழுவதற்கு அச்சப்பட்டது
உன் கர்ஜனை
அன்னியர்க்கு உன் பெயரே சிம்மம்
செல்லம்மாவின் ரகசிய காதலனே
எங்கள் மணித்திரு நாட்டில் நாயகனே
மூப்பெய்தா மரணம்
உன்னை அடைந்து முக்தி அடைந்தது
நித்தம் உன் திரு நாமம் சொல்லி
என் தேசம் சக்தி அடைந்தது
பாரத மணித்திரு நாடு இனி பாரதி மணித்திரு நாடென போற்றுவோம்
வாருங்கள் நித்தம் அவனை வாழ்த்துவோம்
     -பாபு-
கவிதா விலாசம்
சென்னை .