பெண்ணடிமை..!

புதுக் கவிதை

பெண்ணடிமை..!

பெண்ணடிமை!

பாரதிபாடிய புதுமை பெண்ணை!
பாரில் சிலர்பாடாய் படுத்துவது,! அவலம்செய்வது தமிழ் மண்ணை!

பாரதிதாசன் போற்றிப்பாடிய தமிழ்பெண்ணை!

பூப்போன்ற பூவையை !புறந்தள்ளி புழுதியில் போட்டு மிதிப்பது
ஆணுக்குவீரமில்லை!

பூலோகத்தைபோலபொறுமைகொண்ட
பாவையை!

பூமியில் சிறப்பித்துபாடாத
கவிஞர் யாரும்உளரோ!

குடும்பத்தின் குத்து விளக்கை கொலை அறுப்பது முறையோ

அத்துணை உயிர்களுக்கும் அகமகிழ்வோடு அதிகாலை எழுந்து அமுதபடைத்து அழகூட்டும்!!

அழகோவியத்தை காலால் உதைப்பது! வதைப்பது! முறையோ!

தன் உயிர் துளியை உருவமாக்கி! தன்உதிரத்தை பாலாக்கி !

பூமியில் உயிரோவியங்களை படைக்கும் படைப்பாளியை சிதைப்பது சரியோ!

தன் உறவுகளை விட்டு வந்து தன் உடமைகளை விட்டு வந்து

உன் குடும்பச் சுமை தாங்க !உன்னிடம் உதை படுத்துவது கொடுமையிலும் கொடுமை!

பாரதியும், பாரதிதாசனும்!!
உன்னை போன்ற சிலரை கண்டிருந்தால்!

கொடுவாள்கொண்டு கூறு போட்டிருப்பார்கள்!

-கவிதை மாணிக்கம்.