பேரறிஞர் அண்ணா...! 043

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி

பேரறிஞர் அண்ணா...! 043

பேரறிஞர் அண்ணா

ஒரு அன்னை வயிற்றில் 
 ஒட்டிப் பிறக்கவில்லை எனினும்;
  இவர் எங்கள்  அண்ணா தான்..!
 
 கொஞ்சும் பட்டாடை
  காஞ்சிபுரம் பெற்றாளே  
  பேச்சாற்றாலின் பிஞ்சை..! 

 தாய் மொழித் தமிழுக்கு மட்டும்  
  தன் வாய் பொழிந்திட..! 
 
 பிற பொய் மொழிகள்  
   ஆளப் பொறுத்திடுவாரோ...?
 
வெண்ணாடை
  வேட்டிச்சட்டை உடுத்தியவர்.!
 பொன்னாடை 
  பெட்டிப் பணக்கட்டை வெறுத்தவர்..!

  யோசித்துப் பேசி
  தழைத்தவரும் இல்லை.;
   அண்ணாவை; 
  சோதிக்கப் பேசி
   பிழைத்தவரும் இல்லை..
   
  பேரறிஞர் பெயருக்கு 
   பொறுத்தமான பெரியவர் தான்..! 
    பேசியப் பேச்சுக்குத் 
     தேசியமும் முதல்வராக்கிய 
      தமிழுக்குத் தலைவர்  தான். !

   தமிழ்நாடு எனப் பெயர் தந்து
     தாயுக்குப் பெயரிட்டப் பேரறிஞரே..! 
 
   கர கரத்தக் குரலுரைத்தக்
      கட்டையும் கரை ஒதுங்கி 
          கோட்டையாய் ஒளிர்ந்ததே...!
 
 உயிர் போன 
   உன் மேனிச் சுமக்க 
மெரினாவும் மடி விரித்ததே ..! 

 தொன் மொழியாம்
     தென்தமிழுக்கு அண்ணாவின் 
         பொன்மொழிகளோ ஆயிரம்...!

-கவிஞர் கு அழகர்சாமி,பரமக்குடி,இராமநாதபுரம் மாவட்டம்.