அறிவுச்சுடர் அண்ணா...! 061

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அறிவுச்சுடர் அண்ணா...! 061

அறிவுச்சுடர் அண்ணா

காஞ்சிபுரத்து 
நாயகரே
காலத்தின் அறிஞரே
திராவிடத்தின் முன்னோடியே
தொண்டர்களின் உயிர் நாடியே
பெரியாரின் ஊன்றுகோலே
அனைவரின் தூண்டுகோலே
மேடை பேச்சின் வித்தகரே
பொறுமையை உற்றத் துணையாகக்
கொண்டவரே
எள்ளி நகையாடினாலும்
எண்ணமும் செயலும் ஒன்றே என்பவரே
காலம் கருதி காலன் பறித்தாலும்
பச்சைக்குத்தி சென்று விட்டீர்கள் போலும்
அனைவரின் மனதிலும் அறிஞர் அண்ணா என்று
இடர்பாடுகள் பல வந்தாலும்  இன்னல்கள் பல கடந்தாலும் ஒன்றே குலம் ஒருவனே தேவன்
சாகும் வரை சாமானியனாய் 
கண்ணியமாய் வாழ்ந்த அறிஞரே
எல்லோர் எண்ண ஓட்டத்திலும் நிலைத்து நிற்பீர் 
அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா என்று...

- முனைவர் ம.மகாலட்சுமி
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர்.