காஞ்சியிலே ஒரு புத்தன் ..! 047

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

காஞ்சியிலே ஒரு புத்தன் ..! 047

காஞ்சியிலே ஒரு புத்தன்

மக்களை மக்களாக மதிக்க வேண்டும்!அதற்கு மாநிலத்தில் சுய ஆட்சி மலரச்  செய்து!

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை 
எண்வகை மார்க்கமாக மக்களை ஏற்கச் செய்து!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற கொள்கை மக்கள் மனதில் மலரச் செய்து!

பகுத்தறிவைப்
பார் முழுவதும் பரவ வழிவகை செய்து! 

அதற்கு பகுத்தறிவாளரின் வழிகாட்டுதலை பெற்றிடச் செய்து!

கல்லாமையே இல்லாமையாய் ஆக்க வேண்டும் !

அதற்கு கல்வியில் பல புரட்சிகள் செய்து!

சமூகத்தில் சீர்திருத்த மலர வேண்டும் !

அதற்கு சமூக நலச் சீர்திருத்தவாதிகள் உருவாகச் செய்து!

பெண்ணடிமை போன்ற பெருங்குற்றம் நீங்க வேண்டும்!

அதற்கு பெரியாரின் சிந்தனைகள்  பரவச் என்ன செய்து!

அடிமை விலங்குதனை அகற்ற வேண்டும்!

அதற்கு அரசியல் உரிமையைதனை நிலைநாட்டச் செய்து!

மாற்று மொழிக்கு மதிப்பளிக்க வேண்டும்!

வேற்று மொழியைத்(இந்தி) திணித்தால் -அதை வெட்டி எறியச் செய்து!

எதிரிகளை எதிர்க்கும் ஆயுதம் வேண்டும்!

அது எப்போதும் அழகிய பேச்சாற்றலாய் இருக்கக் செய்து!

சுயமரியாதை என்னும் சுதந்திர வேண்டும்!

அதற்கு சுறுசுறுப்பாய் நம்மை உழைக்கச் செய்து!

உலகத்து உயிர்களெல்லாம் ஒன்று என மதிக்க வேண்டும்!

ஒற்றுமை தன்னை நிலை நாட்டச் செய்து!

நேபாளத்தின் லும்பினியில்  பிறந்த புத்தன் கொள்கைகளை!

தந்தை பெரியாரின் தாரக மந்திரமாய்க் கொண்டு!

திராவிடத்தின் சித்தாந்தத்தை திக்கெல்லாம் பரவச் செய்து!

பொடி வைத்துப் பேசி பல பொறுப்புகளைப் பெற்று!

வெறுப்பின்றி அரசியல் செய்து வெகுஜன மக்களின் தலைவனாய்!

தமிழக முதல்வர் என்ற அரியணையில் ஏறி!

தரணிக்கே அடையாளமாய் அரசியல் செய்து!

மண்ணுயிரை எல்லாம் இன்னுயிராய் நினைத்த புத்தன் போல்

மானிடர் மேன்மைக்காக வாழ்நாளையே அர்ப்பணித்து

அண்ணா என்ற அடைமொழியில் அனைவரின் உள்ளத்தில் வாழும் காஞ்சியில் பிறந்த வரும். 

 எங்கள் 'புத்தன்' தான்.

க.நவநீதக்கண்ணன்
சங்கு பட்டி
திருவேங்கடம் (அ),(த),
தென்காசி(மா).