அண்ணா என்னும் ஆகாயம் ...! 060

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும்  ஆகாயம் ...! 060

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்


சாதாரண மனிதன்
      சாதனை படைத்தவர்
வரலாறு கொண்டது
    வலுவாகச் சொன்னது

காஞ்சியில் தவழ்ந்து
      கல்வியும் கற்று
பச்சையப்பாவில் பயின்று
       பறந்தார் புகழில்

ஆசிரியப் பணியில்
      ஆரம்பித்த வாழ்க்கை
அடுக்கடுக்காகச் சிகரம்
     ஆவலாய்த் தாவினார்

பத்திரிக்கை ஆளனும்
     அதற்கு உதவியாசிரினனும்
புதுப் பத்திரிகை
      ஆசிரியராகவும் எழுதினார்

பேனா எழுதியது
    பேராளும் சொற்களை
திராவிடக் கட்சியின்
    கொள்கை நியமங்கள்

எழுத்திலும் மேடை
     எழுச்சிப் பேச்சிலும்
சர்க்கரைப் பந்தலில்
      தேன்மாறிப் பொழிந்தார்

நாடகங்கள் கட்டுரைகள்
     திரைப்பட வசனங்கள்
கதைகள் கருத்துகள்
      எழுதிக் குவித்தார்

கடமை கண்ணியம்
     கட்டுப்பாடு காத்தார்
மாற்றான் தோட்டத்து
       மல்லிகையும் மணக்குமென்றார்

அடுத்தவர் மனதை
  அல்லல் செய்ததில்லை
மாற்றாளர் கருத்தும்
     மதித்திடல் நன்றென்றார்

திராவிட முன்னேற்றக்
     கழகம் துவக்கி
ஆட்சியைப் பிடித்து
     காங்கிரசைத் தோற்கடித்தார்

அழகான மொழியாம்
      தமிழும் நாட்டின்
பெயரில் வந்திட
   தமிழ்நாடு பெயரிட்டார்

ஆட்சியில் இருந்தது
     குறுகியக் காலம்
மக்கள் மனத்தில்
      நிறைந்த ஆட்சியாம்

ஆங்கிலப் பேச்சிலும்
     இருமொழிக் கொள்கையிலும்
திடமாக இருந்தார்
       புற்றுநோயில் மறைந்தார்

புறஉடம்பு மறைந்தாலும்
      மக்கள் மனதில்
நீங்காத இடத்தைப்
       பிடித்து வாழ்கிறார்

மெரினா என்றதும்
       கடற்கரை ஞாபகம்
அண்ணாவிற்கு அடுத்ததே
        மனதில் எழுந்திடும்.

- முனைவர் கு.கதிரேசன்
திருச்சி.