காவியமான கண்ணதாசன்...!

கண்ணதாசன் கவிதை

காவியமான கண்ணதாசன்...!

 காவியமான கண்ணதாசன்...!

கண்ணதாசா...
நீ கவியுலகின் விஷ்வகர்மா...! 

எத்தனை எத்தனை நிலைக்  கண்டாய்...!

அத்தனையையும் தத்துவமாய்.... காதலாய்....
நீ தந்தாய்...!

பாடலில்  வறுமைக்குள் அன்பை வைத்து...!

உயர் பணத்திற்குள் பகையை வைத்து...!

தனி திறமைக்குள் சோகம் வைத்து...!

உரிமைக்கும் ஏற்றம் தந்தாய் பாடலில்...!

நீ நல்லுறவுக்கும் பிரிவு என்றாய்...!

இருக்கும்  போது தேடிவரும் எதுவும்...!

 நம்மிடம் இல்லை என்றால் ஓடிவிடும்...!

படுக்கும் நேரம் வந்து விட்டால்...!

விரிக்கும் பாயும் தன்னை பாயும் (பகையாகும்) என்றாய்...!

விண்ணுக்கும் மண்ணுக்கும் கவியமைத்து தந்தவனே...!

வீழ்ந்தவனை நீ எழச் செய்தாய்...!

பொன்னை விரும்பும் இப்பூமியிலே...!

மண்ணை நினைக்க
நீ வைத்தாய்...!

அதில் பாசம் பொங்க மகிழ வைத்தாய்...!

இருப்பவருக்கு வருந்தாதே இறந்தவருக்கும் வருந்தாதே...!

இருப்பது நிலையில்லை இது உனக்குத் தெரியாதா...!

போனால் போகட்டும் போடானு 
முதல்வரியிலேயே...!

முத்தாய்ப்பாக 
நிலையாமையை மறப்பவருக்கு நினைவு படுத்தி நின்றாய்...!

கன்னி மனம் படும் பாடு எண்ணி...!

வரும் நாட்களுக்குள் மன்னவன் வரவு காண...!

பின்னி வரும் நடையழகை பேச ஒரு வார்த்தையில்லை...!

எண்ணி நினைத்திருக்க
உன் ஏகாந்த கவிதையிலே...!

வண்ண நிலவு மட்டும் விடியும் வரை காத்திருக்க...!

சொல்லாமல் கொள்ளாமல் சேவலது கூவையிலே...!

மன்னவன் இல்லாமல் இருக்கும் போது, விடிவதில்லை பொழுது கூட...!

கூட இருக்கும்  பொழுது இரவை,  இருக்க விடுவதில்லை சேவல் கூட...!

சேவலைக்  கூவச் சொல்லி அவள் சிணுங்கும்  குரல் படைக்க...!

படிக்க ஆவலைத்  தூண்டுவது கண்ணதாசா உன் கவிதையிலே...!

ஏற்றம் ஒன்றிருந்தால் இறக்கம் ஒன்றிருக்கும்...!

மலர் வாசம் கண்ட பின் தான் நல்ல வண்டு  தேனெடுக்கும்...!

வீட்டில், அண்ணன் தம்பி
வஞ்சகத்தில் இமயமடா...!

அவசரமான உலகில்,
வாடும் இதயத்திற்கு
 நீ மறுவாழ்வு தந்த கவிஞனடா...!

நீங்கா நினைவில் இருப்போருக்கு இல்லை மறதி...!

இதை உணர்ந்தவர்
உள்ளத்தில் இருப்பது நீ உறுதி...!

கவியரசு கண்ணதாசன் அவர்களின் படைப்புகளை...!

அவரின் பிறந்த நாளில்  நினைவு கூர்வோம்...!

வாழ்க தமிழ்...!
வளர்க கவியரசு புகழ்...!

முனைவர்                        
ம.ப.சாந்தி சங்கரி,
புதுச்சேரி.