தமிழரின் பெருமை...! 014

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமை...! 014

தமிழரின் பெருமைகள்.

முன்னுரை

*கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது சங்க இலக்கியப் பாடல் - தமிழர்கள் அன்று முதல் இன்று வரை நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர் தமிழரின் பெருமைகள் பற்றி இனி அறியலாம்

தமிழரின் சிறப்புகள்:

“தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்று கூறினார்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள். தமிழர்க்கு என்றே தனிச்சிறப்பு உண்டு. யாருக்கும் அஞ்சாமல் வாழ்பவர்கள் தமிழர்கள் வந்தவர்களை வாழ வைப்பவுர்கள் தமிழர்கள், ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கருதியவர்கள் இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை

*ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 

  உயிரினும் ஓம்பப் படும்" என்றார்

உடுத்திய ஆடை கிழிந்து போனாலும், நல் உணவு இன்றி உடல் தளர்ந்து போன நிலையிலும் ஒழுக்கம் தவற மாட்டார்கள். எப்படி?

சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாதே அது போல

 மானம் அழிந்தபின் உயிர் வாழாமை இனிது" என்கிறது இனியவை நாற்பது சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை சிறையில் துன்பமுற்ற போதும் கூட, நாவறண்டும் உயிர்போகும் தருவாயில் பகைவன் கையில் இருந்து தண்ணீர் கூட குடிக்காது சிறைச்சாலையில் உயிர்விட்டான்.

மயிர் நீர்பின் வாழா கவரிமான் பரம்பரையை சேர்ந்தவர்கள் தமிழர்கள் மானம் வரின் உயிர்துறப்பர்.

தமிழரின் குணநலன்கள்

பெருந்தன்மை, இளகியமனம், நல்லொழுக்கம், விருந்தோம்புதல்  குணம், விட்டுக் கொடுக்கும் தன்மை, பிறரை உபசரிக்கும் தன்மை ஆகிய உயரிய குணங்களில் சிறந்து விளங்குவர்

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு

என்று பாடியவர்

நாமக்கல் கவிஞர் விருந்தோம்புதல் பண்பாடு தமிழர்க்கே உரிய தனிச்சிறந்த பண்பாடு. பெரியோரைக் கண்டால் வணக்கம் சொல்லி வரவேற்று எழுந்து நிற்பர் விருந்தினரை அகமும் முகமும் மலர வரவேற்று விருந்து உபசரிப்பர் அவர்கள் செல்லும்போது தாமும் உடன் சென்று வழி அனுப்பிவைப்பர், இதனை வள்ளுவப் பெருந்தகை அவர்கள்,

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 

நல்விருந்து வானத் தவர்க்கு”         என்று கூறியுள்ளார்.

தமிழரின் பெருமைகள் :

விழாக்கள்:

தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் விழாக்களில் மிகவும் 'சிறப்பு வாய்ந்த விழா  தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் விழா, இவ்விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும் முதல் நாள்   போகி  இரண்டாம் நாள் சூரிய பொங்கல், மூன்றாம் நாள் மாட்டு பொங்கல், நான்காம் நாள்  காணும் பொங்கல் என்று மகிழ்ச்சியாக கொண்டாடி மகழ்வர்.

கலைகள்:

ஆயக் கலைகள் 64. அவற்றுள் வில்லுப்பாட்டு. கரகாட்டம், கோலாட்டம் கும்மி, நாட்டுப் புறப் பாடல்கள், குத்துச்சண்டை, பொய்க்கால் குதிரை,பொம்மலாட்டம், ஆகியவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர் "ஜல்லிக்கட்டு" தமிழர்களின் பாரம்பரியத்தை நிலை நாட்டுகிறது.

கோயில்கள்:

தஞ்சாவூர் பிரகதீஸ்வர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம். மாமல்லபுரம் சிற்பங்கள், குடை வரைக் கோயில்கள், ஆசியாவிலேயே மிகவும் உயர்ந்த கோபுரமாக கருதப்படும் ஸ்ரீரங்கம் கோயில், சமயபுரம் மாரியம்மன் முதலான கோயில்கள் பிரசித்திப் பெற்றவை. கடவுள் மீது முழு நம்பிக்கைக் கொண்டவர்கள் தமிழர்கள் சிற்பகலையில் கைதேர்ந்தவர்கள்

தொழில்கள்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார், பாரதி உழவையும், நெசவையும்" தமிழர்கள் இருகண்களாகப் போற்றினர் உழவர்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பது பழமொழி மானம் காக்க நெசவுத்தொழில் ஆடை நெய்தல், காந்தியடிகள் தாமே இராட்டினம் சுற்றி நூல் நூற்று அனைவரையும் கதராடை அணியச் செய்தார் தமிழ்நாட்டில் ஆண்கள் வேட்டியும் பெண்கள் சேலையம் உடுத்தி பாரம்பரியத்தை பறைசாற்றுகிறார்கள் வேளாண்மையை முதன்மைத் தொழிலாக கருதுவர் இரவு பகல் பாராது உழைப்பர் வாணிபம் செய்து பொருள் ஈட்டுவர் மற்றவர்களுக்கும் கொடுத்தும் மகிழ்வர்

மொழிச்சிறப்பு:

தமிழர்களின் தாய்மொழி தமிழ் அமிழ்தினினம் இனிய நம் செந்தமிழ் மொழியையும், வாழும் தாய் நாட்டையும் 'தமிழ்மொழி இகழ்த்தவளை தாய்தடுத்தாலும் விட்டேன் என்று கூறிய பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்ப்பற்று பறைசாற்றும் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் என்பார் 'தமிழே என் பேச்சு, தமிழை என் மூச்சு” என்பார் பாரதிதாசன் மற்ற மொழிகளுக்கெல்லாம் முதன்மையான மொழி, மூலமொழி, பழமையான மொழி இனிமையான மொழி எங்கள் தமிழ்மொழி இதனை,

தொன்று நிகழ்ந்தது அனைத்தும்

உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும்

இவள் என்று பிறந்தவர் என்றுணராத  -

 இயல்பினளாம் எங்கள் தாய்" என்றார் பாரதியார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருந்தாலும் இன்று தோன்றிய மொழியாகவே விளங்கி வருகிறத

 

நாட்டுப்பற்று:

செந்தமிழ் நாடெனும் போதினிலே 

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்று பாடியவர் பைந்தமிழ்ப் புலவர் பாரதியார். நம் பாரதநாடு பழம்பெரும் நாடு நாம் அதன் புதல்வர் இது நமது

 

நாட்டின் பொன்மொழி

 

  "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 

   இருந்ததும் இந்நாடே அதன்

 முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

 முடிந்ததும் இந்நாடே" என்ற பாடல்

 

தமிழ் நாட்டின் பெருமையை பறைசாற்றுகிறது.

முடிவுரை

நமது நாட்டில் கலைநயம் மிருந்த கட்டிடங்கள், விண்ணை முட்டும் கோபுரங்கள், காலத்திற்கேற்ப ஆடை, அணிகலன்கள், நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் மாற்றம் அடைந்துள்ளனர். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இம் மண்ணின் மைந்தர்களாய் வாழ்வதில் பெருமை அடைவோம் 

   

  "தமிழால் ஒன்று படுவோம்

       தமிழனாய் வாழ்வதில் என்றும்

       பெருமிதம் கொள்வோம்...

 

- ந.மலர்க்கொடி

         தலைமை ஆசிரியர்

               கரு பொய்யூர்.