சுதந்திர காற்றை சுவாசிப்போம் 13.

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம் 13.

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.. 

சுதந்திர இந்தியாவில்
வாழ வந்த வீரர்களை
ஆளவிட்டு பார்த்தே
அவதிப்பட்டோம் அன்று.. 
வாழ்ந்தாலும் முப்பது கோடி
வீழ்ந்தாலும் முப்பது கோடியென
வீர முழக்கமிட்டார் முறுக்குமீசை பாரதி....

ஆம்... வந்தேமாதரம் என்பதே
நம் தாரக மந்திரம் என்றானது
தியாக தீபமாய் சுடர்விட்டார்
திருப்பூர் குமரன்...
தூக்குக்கயிற்றை துச்சமதை
முத்தமிட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்...

விடுதலைக்காக ஏங்கிய தாய்நாட்டை
வீரத்தால் வென்றிடவே
படுதுயர் நீக்கிட பாடுபட்ட
பல தலைவர்களை நினைவுகூறும்
நன்னாள் இப்பொன்னாள்..
இந்திய தேசம் சுதந்திர காற்றை
சுகமாய் சுவாசித்த சுபமான நாள்
சுதந்திரக் காற்றினை சுகமாய் சுவாசிக்க
பாடுபட்ட தலைவர்கள் வாழிய வாழியவே... 

கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.