நல்மேய்ப்பர்..! 027

சிந்தனைச் சிற்பி சிறுகதைப் போட்டி விருது

நல்மேய்ப்பர்..! 027

நல்ல மேய்ப்பன் 


ஒரு சிறு கிராமத்தில் குப்பையா என்று மேய்ப்பன் இருந்தால் அவன் 50 மாடுகளை வளர்த்து வந்தான். 50 மாடுகளுக்கும் செல்லப் பெயர் வைத்து அன்போடு அழைப்பான் அவைகளுக்கு மெய்ப்பனின் குரல் நன்றாக தெரியும் அவன் பேசுவது இந்த மாடுகளுக்கு நன்றாக புரியும் அவைகளைப் பட்டியலடைத்து பத்திரமாக பாதுகாத்து வளர்த்து வந்தான் தினமும் அதிகாலை நேரத்தில் மாடுகளை பட்டியிலிருந்து வெளியே கொண்டு வந்து தீவனம் தண்ணீரையும் வைகோலையும் உணவாக கொடுப்பான், பிறகு மாடுகளுடன் சிறிது நேரம் பேசுவான்ஒவ்வொரு மாடுகளுக்கு உண்டான பெயர் சொல்லி அழைத்து அவர்களுடன் பேசி விளையாடுவான்.
இந்த மாடுகளில் இரண்டு கன்று குட்டிகள் மேய்ப்பனிகுரலுக்கு  கீழ்ப்படிவது கிடையாது இவைகளின் பெயர் ராமு சோமு தினமும் மதிய வேளையில் 50 மாடுகளையும் அழைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு செல்வான் நல்ல புல்லுள்ள இடங்கள் தண்ணீரில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வான்மாடுகளும் மேற்பனின் பின் சென்று அந்த இடங்களில் பொற்களையும் தண்ணீரையும் சாப்பிட்டு ஓய்வெடுக்கும் மாடுகளுக்கு ஒரு பழக்கம் உண்டு.
 ஓய்வாய் இருக்கும் இடையில் சாப்பிட்ட உணவுகளை மீண்டும் அசை போடும் மாடுகள் ஓய்வெடுக்கும் நேரத்தில் சற்று தூரம் சென்று மெய்ப்படும் படுத்து ஓய்வெடுப்பான் அதில் அடங்காத இரண்டு கன்று குட்டிகள் அங்கும் இங்குமாக ஓடும் அவைகள் ஓடாமல் இருப்பதற்காக காலும் தலையும் சேர்த்தவாறு ஒரு கைரினால் கட்டி வைத்து இருப்பான் இதை பார்த்த மற்ற கன்று குட்டிகள் கிண்டல் பண்ணி சிரிக்க ஆரம்பித்தனர் . ராமு சோமு அம்மா மாடுகளுக்கு மிகவும் மனக்கவலை இரண்டு அம்மா மாடுகளும் சேர்ந்து ஒரு ஆலோசனை செய்தார்கள் மெய்ப்பனுக்கு தெரியாமல் ஒரு நாள் தன் பிள்ளைகளின் கட்டுகளை அவிழ்த்து விட வேண்டும் என்று அந்தி சாயும் நேரத்தில் மேய்ப்பன் மாடுகளை அழைத்தான் மேய்ப்பனின் குரல் கேட்டுமாடுகள் அவனின் பின் சென்றன, அவைகளை அழைத்து வந்து பட்டியல் அடைத்தான் அடைவதற்கு முன் ஒவ்வொன்றாக எண்ணுவான் அது அவனின் வழக்கம் ஐம்பது மாடுகள் இருப்பது தெரிந்தவுடன் பட்டியல் அடைத்து விட்டு நிம்மதையாய் போய் உறங்குவான் . அடுத்த நாள் அதிகாலை வேளையில் மாடுகளை அழைத்து அவர்களுக்கு உணவு கொடுத்து , அவனின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மீண்டும் மதிய வேளையில் மாடுகளை அழைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்றான் இன்று மேய்ச்சலுக்காக சென்ற இடம் மிக செழிப்பான பகுதி நீர் உள்ள இடம் மகிழ்ச்சியாய் தன் மாடுகளை விட்டு விட்டு சற்று தூரம் போய் ஓய்வு எடுத்தான் இதுதான் நல்ல நேரம் என்று எண்ணி ராமு சோமுவின் அம்மாக்கள் தன் பிள்ளைகளின் கால் கட்டுகளை அவிழ்த்து விட்டனர் நேரம் சென்றது மேய்ப்பன்எழுந்தான். மாடுகளை அழைத்து வந்தான் வழக்கம் போல் பட்டியல் அடைத்தான் மாடுகளில் எண்ணினான் இரண்டு குறைகிறது யார் என்று பார்த்தால் இராமு சோமு கன்று குட்டிகள் மேய்ப்பன் பயந்து போய் மீண்டும் மீண்டும் எண்ணினான் இரண்டு குறைந்தது அவை அடங்காத இரண்டு கன்று குட்டிகள் என்று தெரிந்து கொண்டு பட்டியை மூடி விட்டு மேய்ச்சலுக்காக மாடுகளை அழைத்துச் சென்ற இடத்திற்கு ஓடினான் அங்கு சென்று அவர்களின் பெயரைச் சொல்லிக் கத்தினான் அழவே தொடங்கி விட்டான் ராமு சோமு என்று மீண்டும் மீண்டும் கத்தினான் ரோட்டோரம் சென்றவர்களை விசாரிக்க ஆரம்பித்தான் இங்கு இரண்டு கன்றுகுட்டிகளை பார்த்தீர்களா என்று கேட்டான் அதில் ஒருவர் ரோட்டோரத்தில் ஒரு கன்றுக்குட்டி அடிபட்டு கிடப்பதை கண்டேன் போய் பாருங்கள் என்று சொன்னார் ஓடி சென்று பார்த்தான் அது இராமு அழுது கொண்டு இரத்த வள்த்தில் கிடந்தது ராமுவை துடைத்து தூக்கி முத்தமிட்டான், அப்போது தான் பார்க்கிறான் அது தலையும் காலும் சேர்த்து கட்டின கயிறு காணவில்லை அவிழ்க்கப்பட்டிருப்பதை உணர்ந்தான் ராமு கிடைத்துவிட்டான் சோமு எங்கே தேடத் தொடங்கினார் சோமு சோமு என்று கத்தி அழைத்தான் மேய்ப்பனின் குரல் கேட்டு திரும்பி குரல் கொடுத்தது ஓடி சென்று பார்த்தான் முற்காலியில் சிக்கி உடல் முழுவதும் கீரல் இரத்தம் அழிந்திருந்து இருந்தது முற்களை விலக்கி கன்று குட்டிய தூக்கி முத்தமிட்டான் தோளில் ஒன்றும் மார்பில் ஒன்றும் சுமந்தவாறு மகிழ்ச்சியாய் பட்டியை நோக்கி கடந்து சென்றான் பட்டியில் இரண்டு கன்று குட்டிகளும் மறந்து போச்சு படுக்க செய்தான் இதை பார்த்த இராமு சோமுவின்அம்மாக்கள் தன் பிள்ளைகளின் கயிறை அவிழ்த்து விட்டதுதான் இந்த நிலை என்று எண்ணி தவறை உணர்ந்தனர் ஆராயவும் சோமுவும் நாம் மேய்ப்பனின் குரலுக்கு கீழ்ப்படிந்திருந்தால் இந்த நிலை நமக்கு இல்லை என்று எண்ணி திருந்தி விட்டனர். பயத்துடன் அன்று இரவு கடந்து சென்றது அன்பு மாணவர் செல்வங்களே இதிலிருந்து என்ன புரிகிறது உங்களுக்கு மெய்ப்பன் என்பவன், ஆசிரியர் ஆசிரியருக்கு கீழ்ப்படிகிற மாணவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி அடைந்து உயிர்வார்கள். கீழ் படாத மாணவர்கள் இரண்டு கன்று குட்டிகள் படுகிற கஷ்டம் போல் பல துன்பங்களுக்கு ஆளாகி விடுவீர்கள் அதனால் ஆசிரியர்கள் பெரியவர்கள் முதியவர்கள் பேச்சைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் பெற்றோர்கள் தன் பிள்ளைகள் தவறு செய்யும்போது ஆசிரியர்கள் கண்டித்து திருத்துவார்கள் ஆசிரியர்கள் கண்டிக்கிறார்களே அடிக்கிறார்கள் என்று ஆசிரியர்கள் மீது நீங்கள் கோபப்படக்கூடாது அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை


ஆக்கம்:REV த.வெண்மதி வசந்தி
TT.C T.T.C BTh.MTH
நெய்வேலி.